4/16/2010

அமெரிக்கா: சித்திரைத் திருநாள் விழா அழைப்பு

அமெரிக்கத் தலைநகர் வாசிங்டனில், சிறப்பானதொரு சித்திரைத் திருநாள் விழா வருகிற சனிக்கிழமை, ஏப்ரல் 17ம் திகதி மாலை நடைபெற இருக்கிறது. தமிழர்கள் அனைவரும் வந்திருந்து, தமிழரின் பண்பாடு, கலை, இலக்கியம் நயம்படக் கலந்த இத்திருவிழாவினைச் சிறப்பிக்க வேண்டுமாய் வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்கம் வேண்டுகோள் விடுத்திருக்கிறது.

White Oak Middle School12201
New Hampshire Ave.
Silver Spring , MD 20904

4:15 4:20
தமிழ்த்தாய் வாழ்த்து

4:20 4:25
ஒன்று யாவர்க்கும் ….. (சிறிய குழந்தைகள்)

4:30 5:30
சிறுவர்களுக்கான மாபெரும் திருக்குறள் போட்டி

5:30 5:35
நடனம்: யாக்கை திரி காதல் சுடர் ஜீவன் …

5:35 5:40
நடனம்: காசு மேலே காசு வந்து கொட்டுகிற நேரம் இது..

5:40 5:45
நடனம்: ஓடி ஓடி விளையாட வாடா..

5:40 6:10 சிறுவர்களுக்கான பாட்டுப் போட்டி

6:10 6.45

தலைவர் உரை
பாலகன் ஆறுமுகசாமி,
தமிழ்ச் சங்கத் தலைவர்

சிறப்புரை
திரு. வி. எஸ். செந்தில் I. A. S
(இந்திய தூதரகம்)

சித்திரைத் திருவிழா
வலைப்பதிவர் பழமைபேசி

தமிழ்ச்சங்கத்தின் இன்றைய செயல்பாடுகள்
கல்பனா மெய்யப்பன், செயலாளர்

தென்றல் முல்லை - அறிவிப்பு
ஆசிரியர்: கோபிநாத்

6:45
சிறுவர்களுக்கானப் பரிசளிப்பு

7:45 7:50
துள்ளல் நடனம் (நினைத்தாலே இனிக்கும் ..)

7:50 7:55
பூமியின் அழகே பரிதியின் சுடரே ….. (ஈழத்துக் கவிஞர் சேரன்)

7:55 8:00
கண்டேன் காதலை .. (திரைப் படப்பாடல்)

8:05 8:10
மதுரையை நினைத்தாலே மனம் குளிர்தம்மா ..

8:10 8:15
கோவிந்தன் குழலோசை ..

8:15 8:20
யாதும் ஊரே யாவரும் கேளிர்
புறநானூற்றுப் பாடல் எண் 192

8:20 8:50 தனித் தமிழில் பேச முடியுமா?

9:00 10:00
கருத்தோடு கூடிய நகைசுவைப் பட்டி மன்றம்

இன்றையத் திரைப்படப் பாடல்களால் தமிழ் வளர்ச்சி அடைகிறதா? அல்லது வீழ்ச்சியடைகிறதா??

10:00 நன்றி நவிலல்


18 comments:

  1. அசத்துங்க! வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. விழா சிறப்புற நடைபெற வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. ரெண்டு வருஷத்துக்கு முன்னாடியும் இந்த நிகழ்ச்சிக்கு பேரு சித்திரைத் திருநாள் விழா தானா? இல்லேன்னா என்ன பேருல கொண்டாடினீங்க/கொண்டாடினாங்க?

    ReplyDelete
  4. சித்திரைத் திருநாள் விழா இனிதே நடைபெற வாழ்த்துகள்.

    ReplyDelete
  5. பழைமை பேசி,
    தமிழ் பெயரால் சங்கம் இருந்தால் அது எல்லாத் தமிழர்களுக்கும் பொதுவான ஒன்று சரியா? சமஸ்கிரகத் தமிழ், கிறித்துவத் தமிழ், இஸ்லாமியத் தமிழ் என்று சங்கம் இல்லை இதுவரையில் வாசிங்டன் வட்டாரத்தில் சரியா?

    அப்படி இருக்க....

    1.சித்திரை என்னும் இந்த மாதம் மட்டும் ஏன் இந்த தமிழ்ச்சங்கத்தால் கொண்டாடப்படுகிறது?

    எல்லாத் தமிழர்களும் சாதி/மதம் வேறுபாடு இன்றி இவ்வளவு சிறப்பாக கொண்டாடும் அளவிற்கு என்ன சிறப்பு இந்த மாதத்திற்கு?

    பகிர்ந்து கொண்டால் உலகில் உள்ள எல்லாத் தமிழர்களும் சாதி மத வேறுபாடு இல்லாமல் சித்திரையை தமிழர் பொது விழாவாக அறிவித்து அனைவரும் கொண்டாடலாம். உதவி செய்வீர்களா?

    2.இதே போல் தமிழ்சங்கத்தின் சார்பில் புனித ரமலான் மாதம் , புனித வெள்ளி கொண்டாடப்படுமா?

    3.வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்கத்தில் சித்திரை மாதத்தை கொண்டாடுபவர்கள் தவிர்த்து புனித ரமலான் மாதம் , புனித வெள்ளி யை கொண்டாடக்கூடியவர்கள் உறுப்பினர்களாக உள்ளார்களா? எப்படி அவர்களை பங்கு பெறச்செய்கிறீர்கள்? அதிசியம்.

    நன்று!

    ReplyDelete
  6. சித்திரைத் திருவிழா வெற்றி பெற நல்வாழ்த்துகள் பழமைபேசி

    நட்புடன் சீனா

    ReplyDelete
  7. பழமைபேசி,
    தகவலுக்கு ...
    மதுரையைவிட பெரிய சித்திரைவிழா தமிழ் நாட்டில் வேறு எங்கும் இல்லை.

    மதுரையில் நடக்கும் சித்திரைத் திருவிழா தமிழ‌ர்களின் விழா என்று பொதுப்படுத்த முடியாத ஒன்று.

    முழுக்கவும் 'சனாதன இந்து' மத சாமிகளின் விழா. அதை மதுரைத் தமிழ்சங்கம் நடத்தவில்லை.

    எனவே முச்சங்கம் கண்ட மதுரை செய்யாத ஒன்றை எப்படி இவர்கள்?

    புதிய கொள்கை (Ex:தமிழ் என்றால் சனாதன இந்து மட்டுமே ) இருந்தால் சொல்லுங்கள் சுய பரிசோதனை செய்ய உதவியாய் இருக்கும்.

    .
    **

    உண்மையிலேயே உங்கள் அர்ப்பணிப்பு வியக்க வைக்கிறது. எப்படி எல்லா சாதி/மத மக்களையும் "தமிழ் சங்கம் ‍சித்திரைத் திருநாள் " என்ற ஒரே குடையில் கொண்டுவந்தீர்கள்?

    எனக்குத் தெரிந்து வடக்கு கரோலினாவில் xxxx ஒரு தமிழ்ச்சங்கம் (http://www.tcanc.org)/அப்புறம் yyyy க்கு ஒன்று(http://www.carolinatamilsangam.org/) என்று இரண்டு உள்ளது.
    (அது போல பல இடங்களில்.. சுட்டி இல்லை )

    எப்படி இவர்கள் மட்டும் ?

    .

    ReplyDelete
  8. @@கல்வெட்டு

    அய்யா, நல்லபடியா இருக்கிற அமைப்புக்கு ஏன் கண்ணு வெக்கிறீங்க?

    சரி, சித்திரைத் திருவிழாவுக்கு வருவோம்.....

    அது என்ன ஒரு மதத்துக்கு மட்டுமே உரிய விழாவா?

    கிடையாது!

    மரபின் அடிப்படையில எல்லோராலும் கொண்டாடப்படுகிற விழா அது....

    சிலப்பதிகாரத்தில் புகார் நகரத்தில் வைத்து சித்திரையில் விழாக் கொண்டாடப்பட்டது.... இந்திர விழா என்றும் குறிப்பிடுகிறார்கள். அதற்காக சிலப்பதிகாரம் என்பது ஒரு மதத்திற்கு உரியது என்று சொல்லிவிட முடியுமா? கிடையாது. தமிழின் ஐம்பெருங் காப்பியங்களில் அதுவும் ஒன்று!

    சரி, அக்காப்பியத்தில் ஒரு மதத்தின்பால் எடுக்கப்பட்ட விழா என்று எடுத்துக் கொண்டாலும் கூட, அதிலே விழாவைப் பறைசாற்றுகிறவன் என்ன சொல்கிறான்?

    அனைத்து சம்யவத்தரும் இந்த 28 நாட்களையும், அவரவர் சமயத்திலே இருக்கும் நற்பண்புகளைப் பறைசாற்றுகிற பட்டிமண்டப விழாவாகக் கொண்டாடுங்கள் என்று வள்ளுவனை விட்டு முரசு கொட்டுகிறார்கள்...

    "ஒட்டிய சமயத்து உறுபொருள் வாதிகள்
    பட்டிமண் டபத்துப் பாங்கறிந்து ஏறுமின்!"


    சரி, நடப்பு காலத்துக்கு வருவோம்... விடுதலைச் சிறுத்தையினர் அண்ணல் அம்பேத்காரின் பிறந்த நாளைச் சித்திரைத் திருவிழாவாகக் கொண்டாடுகிறார்கள்...

    கருமத்தம்பட்டியில் மாதாகோவிலில் சித்திரை மாதத்தில் சித்திரைத் திருவிழா கொண்டாடுகிறார்கள்....

    இப்படித்தான், மதுரையிலும், சின்னாளப்பட்டியிலும், இன்னபிற ஊர்களிலும் விழாக்கள் கொண்டாடப்படுகிறது....

    கடுமையான கோடையைக் கழிக்கும் நோக்காகக் கொண்டாடப்பட்ட மரபே தவிர, இதில் வேறொன்றும் இல்லை...

    எனவே, இது பாரம்பரியம் சார்ந்த விழா! மரபு சார்ந்த விழா!! மதம் சார்ந்த விழா அல்ல!!!

    ReplyDelete
  9. //எனவே, இது பாரம்பரியம் சார்ந்த விழா! மரபு சார்ந்த விழா!! மதம் சார்ந்த விழா அல்ல!!! //

    ரொம்ப நன்றிங்க!‌

    ReplyDelete
  10. விழா சிறக்க வாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. It was the usual practice of cleberating Tamil New Year in the month of Chithirai. Since Tamil New Year is cleberated in the month of January with pongal, we are forced to have a function in April 14th. Greater Washington Tamil Sangam (GWTS) member of FeTNA is secular and non-partisan.
    Some events are related to Hindu religion becuase majority of members belongs to Hindu religion.
    But there no is restriction for other religious faith to have program related to their religion.
    GWTS is the only Tamil Sangam in USA, passed a condolence meeting when Tamilselvan was murdered by Srilanka army. Washington Tamil illakiya Aivu Kootam is a sister organization of GWTS. It is a community organization rather than traditonal Tamil Sangams. There is no specific significance for cleberating Chithirai Vizha other than the tradition. No hard and fast rules in GWTS except to keep up the identity of Tamils.

    ReplyDelete
  12. விழா சிறக்க வாழ்த்துகள்.

    கல்வெட்டின் கேள்விகளுக்கு நீங்கள் அளித்த பதில்கள் சிறப்பு!! இருவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  13. மிக்க நன்றி தகவல் பகிர்ந்தமைக்கு... விழா சிறப்படையட்டும்...

    ReplyDelete
  14. விழா சிறப்பாக அமைய என் வாழ்த்துக்கள் நண்பரே !

    ReplyDelete
  15. வாழ்த்துகள். கேள்வியும் பதிலும் அருமை.
    KKPSK

    ReplyDelete
  16. பழமை பேசி,
    உரையாடலாக மட்டுமே ...

    உங்கள் கருத்தில் மற்றும் நம்பிக்கையில் எனக்கு எந்த உடன்பாடும் இல்லை.

    (அது போல உங்களுக்கு எனது கருத்து மூது இருக்கும் உரிமையை மதிக்கிறேன்)



    //சிலப்பதிகாரத்தில் புகார் நகரத்தில் வைத்து சித்திரையில் விழாக் கொண்டாடப்பட்டது.... இந்திர விழா என்றும் குறிப்பிடுகிறார்கள். //

    காவியமோ, கதையோ, புனைவோ... இந்திரன் என்பவன் காமக்கொடூரன். பல பெண்களை ஏமாற்றிப்புணர்ந்தவன். அந்தக் காரணத்திற்காகவே உடல் முழுமைக்கும் யோனிகள் முளைக்க சாபமிடப்பட்டவன்.

    அவனுக்கு ஒரு விழா அல்லது அவன் பெயரில் ஒரு விழா என்பது கேவலம். :-(((

    அழுக்கு மூட்டையை முன்னோர்கள் சுமந்தார்கள் என்பதற்காக நானும் சுமக்க விரும்பவில்லை. உடன் கட்டை ஏறுதல் கூட மரபாகத்தான் இருந்தது. நினைவில் கொள்க.



    //அதற்காக சிலப்பதிகாரம் என்பது ஒரு மதத்திற்கு உரியது என்று சொல்லிவிட முடியுமா? கிடையாது. தமிழின் ஐம்பெருங் காப்பியங்களில் அதுவும் ஒன்று!//

    தமிழில் இருக்கும் பழமையான ஒன்று என்பதற்காக அது மதமற்றது என்று என்னால் சொல்ல முடியாது. மன்னிக்க.

    மேலும் அது நீங்கள் நினைக்கும் சனாதன மதம் அல்ல. சிலப்பதிகாரத்தின் ஆசிரியர் இளங்கோவடிகள் சனாதன மதத்தைச் சார்ந்தவர் அல்ல.

    தவலுக்காக...
    இந்திரவிழா போகியோடு தொடர்புடையது. சித்திரைக்கும் அதற்கும் உள்ள சம்பந்தத்தை தனியா பதிவிடுங்கள். உரையாடலாம்.


    // நடப்பு காலத்துக்கு வருவோம்... விடுதலைச் சிறுத்தையினர் அண்ணல் அம்பேத்காரின் பிறந்த நாளைச் சித்திரைத் திருவிழாவாகக் கொண்டாடுகிறார்கள்...//

    அசிங்கப்படுத்தாதீர்கள் பழமைபேசி.
    மனிதரில் ஒரு பிரிவைத் தீண்டத்தகாதவனாக‌ ஆக்கியதே சனாதன சனாதன இந்துமதம்தான். :-((((


    அம்பேத்கார் பிறந்தநாள் அம்பேத்கார் பிறந்த நாளாகவோ கொண்டாடப்படுகிறது. அதை யாரும் சித்திரைத் திருவிழாவாகக் கொண்டாடுவது இல்லை.

    பனைமரத்து அருகில் இருந்து தண்ணீர் சாப்பிட்ட கதைபோல , உங்களின் "சனாதன சித்திரை" ஏப்ரல் 14 ல் வருவதும் "அம்பேத்காரின் பிறந்த நாள் ஏப்ரல் 14" வருவதும் ... அம்பேத்காரின் பிறந்த நாளைச் சித்திரைத் திருவிழாவாகக் கொண்டாடுகிறார்கள் என்று சொல்லி அசிங்கப்படுத்தாதீர்கள். Please ....

    **

    சித்திரையைக் கொண்டாட ஆயிரம் காரணங்கள் இருக்கலாம் உங்களுக்கு. உங்களுக்கு அது நியாயமாக் இருக்கலாம்.

    அதற்காக அனைத்து தமிழருக்கும் பொதுவிழா என்று மாற்று நம்பிக்கையாள‌ரை அசிங்கப்படுத்தாதீர்கள்.

    **

    ReplyDelete
  17. //அதற்காக அனைத்து தமிழருக்கும் பொதுவிழா என்று மாற்று நம்பிக்கையாள‌ரை அசிங்கப்படுத்தாதீர்கள்.//

    இதையே நானும் மாற்றிப் போட்டுத் திருப்பிச் சொல்லலாம் அல்லவா??

    ”அதற்காக அனைத்து தமிழருக்கும் பொதுவிழா என்று சொல்லும் மாற்று நம்பிக்கையாள‌ரை அசிங்கப்படுத்தாதீர்கள்!”

    ஒரு உரையாடலுக்காகத்தான்! இஃகிஃகி!!

    ReplyDelete