3/23/2010

கூவுதல்



பழமை வேறு! பழசு(பழைமை) வேறு!! வேறுபாட்டை அறிஞ்சிக்கணும்!!!
புரட்சி எங்கே? மலர்ச்சி எங்கே?! புரிஞ்சு நீயும் நடந்துக்கணும்!!!


படம்: வண்டிச்சோலை சின்னராசு


பழமை பேசுதல் என்றால், அளவளாவல் எனும் பொருளில் கொங்குச் சீமையில் புழங்குவது வாடிக்கை! ”சித்த இரு, பாடு பழமையப் பேசிட்டு அப்பொறம் போலாம்”, “நெம்ப நல்லாத்தான் இருக்கு உன்ற பழமை”, “அவன் கோயத் திண்ணையில குக்கீட்டு வெட்டிப் பழமை பேசிட்டு இருப்பாம் போயிப் பாரு போ”, என்றெல்லாம் வெகு சரளமாக அன்றாட வாழ்க்கை முறையில் இடம்பெறக் கூடியதுதான் பழமை எனும் சொல்.

பழமை என்றால், பழையது, பழம் போன்றது, பழகப் பாவிப்பது எனப் பலவகையாகப் பாவிக்கலாம். அவ்வகையிலே, பழகப் பாவிக்கும் தனித்தன்மையோடு பேசுதல் என்கிற பாங்கில் கொண்ட புனைபெயரே பழமைபேசி!

13 comments:

  1. பழசை நெனைத்து பழமை பேசுனா தானுங்க ஆனந்தமா இருக்கும்.

    ReplyDelete
  2. இந்த நா(ஞா)யம் போதும். அடுத்த இடுகை எப்போ? நாயம் என்பதையும் பழமைக்கு ஈடாக வாழவந்தி நாட்டு பக்கம் புழங்குவாங்க. ஆறைநாட்டு, மணநாடு, தலையநாட்டு பக்கம் எப்படியோ நமக்கு தெரியாதுங்க.

    ReplyDelete
  3. நல்லாத்தான் பழம பேசுறீங்க :)

    ReplyDelete
  4. அறியாப்புள்ளைக்கு இந்த தெரியா விளக்கத்த சொன்னதுக்கு நன்றிங்க...

    ReplyDelete
  5. //அறியாப்புள்ள//

    புள்ளையின்னா கொங்கு நாட்லதானுங்க பெண்பால்... எங்கூருப்பக்கமெல்லாம் ஆண்பாலுங்க....

    ReplyDelete
  6. இது "கூவுதல்"..
    அடுத்து அறைகூவலா..??

    ReplyDelete
  7. பழமை சொல்லும் பல புதியவைகள்.

    ReplyDelete
  8. அதான பார்த்தேன். என்னாது 'பழைமை'யை 'பழமை'ன்றாரேன்னு பார்த்தேன். இப்பத்தேன் பிரியிது.

    ReplyDelete
  9. "நெம்ப நல்லாத்தான் இருக்கு உன்ற பழமை"

    இந்த பழமதானுங் ரொம்ப பேரு பேசறது.

    ReplyDelete
  10. மட்டுறுத்தல் வெச்சிட்டீங்களே ஏன்?நான் இல்லாத நேரத்துல ஏதாவது எலி வந்து சட்டி முட்டிய உருட்டுச்சா?

    ReplyDelete
  11. @@தாராபுரத்தான்

    சரிங்க அண்ணா, சரிங்க!

    @@குறும்பன்

    ஓரியாட்டத்தைத் தானுங்க அப்படிச் சொல்றது... “டே சின்ராசு, காலீல அவங்கூட என்றா ஒரே நாயம் பேசிட்டு?!” நியாயத்தை வலியுறுத்தும்விதமாப் பேசுறதுங்க...

    @@ நண்டு@நொரண்டு -ஈரோடு said...

    ஆமாங்கோ!

    @@ எல் போர்ட்.. பீ சீரியஸ்...

    அய்ய...ஏமாந்த கோழி! இஃகிஃகி!!

    @@ க.பாலாசி

    இஃகிஃகி!

    @@திருஞானசம்பத்(பட்டிக்காட்டான்).

    இஃகி...

    @@V.Radhakrishnan

    நன்றிங்க!

    @@சுல்தான்

    வணக்கம் ஐயா!

    //ராஜ நடராஜன் said...
    மட்டுறுத்தல் வெச்சிட்டீங்களே ஏன்?நான் இல்லாத நேரத்துல ஏதாவது எலி வந்து சட்டி முட்டிய உருட்டுச்சா?

    March 24, 2010 8:20 AM//

    அப்பப்ப, கொசுக்கடி இருந்துட்டேதானுங்க இருக்கு!

    @@அக்பர்

    அதேதானுங்க தம்பி!

    ReplyDelete