3/03/2010

மகாதேவனும், மதனமோகினியும்!!


அடர்ந்த கானகம்! ககன மார்க்கத்தில் பேரிரைச்சலுடன் கூடிய காரின் சீற்றம்!! சீற்றத்தில் சிக்குண்ட மரங்களின் கிளைகள் அல்லாடிச் சிலிர்த்தன. காரின் சீற்றத்துக்கு ஓடோடி வந்து திரண்டன கருமுகில்கள்.

ஓவெனப் பெய்தது பெருமழை. வளைத்து வளைத்து அடித்த மழையில், மரங்கள் நனைந்து, கீழே படர்ந்திருந்த புற்கள் நனைந்து, அதன் பதர்களையும் ஊடுருவிச் சென்றது மழைதேவனின் ஆனந்தக் கண்ணீர் சொரிவுகள். கூடவே மரத்தில் இருந்த மந்தி மகாதேவனும் துப்புரவாக நனைந்தான்.

மகாதேவன் நனைந்து நனைந்து, கடும் குளிரெடுத்து நடுநடுங்கிப் போனான். அதேவேளையில், தான்கட்டி எழுப்பிய கோட்டையில் இதமாகப் படுத்துறங்கியபடி இருந்தாள் மதனமோகினி. தூக்கணாங்குருவிக் கூடு என உலகமே சிலாகித்துப் பேசுவதன் பெருமை அதற்கு!

”மந்தி மகாதேவா, மந்திப் பரம்பரையில் நீங்கள் ஏன் கூடு கட்டிக் கொள்வதே இல்லை? இருக்க உறைவிடம் என ஒன்று வேண்டாமா?”, வினவினாள் மதனமோகினி.

“ஆம் மதனா, நீ சொல்வது சரிதான்!”, அந்தக் குளிரிலும் செவிமடுத்தான் மகாதேவன்.

”நன்றாக யோசித்துச் செயல்பட வேண்டும்; இல்லாவிட்டால் இப்படித்தான் குளிரில் நடுங்கிச் சாக வேண்டும். நன்றாக யோசி! எங்களைப்பார், எப்படி கூடு கட்டி இருக்கிறோம்!!”, அறிவுரை வழங்கினாள் சிட்டு மதனமோகினி.

“ஓகோ, நீர் பெரிய அறிவாளி என்ற நினைப்போ?”, சீறிச் சின்னபின்னமாக்கினான் மதனாவின் அந்த அழகிய குடிலை! மதனாவும் நனைந்து தொலைத்தாள், தான் அறிவுரை வழங்கிப் பேசியமைக்காக!!

Good reasons said, and ill understood, are roses thrown to hogs, and not so good!

பொறுப்பி: ’குரங்குக்கு தூக்கணாங்குருவி சொன்னதைப் போல’ எனும் மரபுத்தொடரின் பின்னணியில் தோய்ந்த புனைவே இது!

27 comments:

  1. :)). யப்பா சாமி:)).

    ReplyDelete
  2. நான் எழுதின பதிவுக்குப் பின்னூட்டம் போட்டவங்களத்தான சொல்றீங்க..

    நல்லாச் சொல்லுங்க.. அப்பவாவது புத்தி வருதாப் பாப்போம்.. இஃகி இஃகி இஃகி

    ReplyDelete
  3. ”ஆனவனுக்கு புத்தி சொன்ன அறுவுமுண்டு நெனவுமுண்டு...

    ஈனவனுக்கு புத்தி சொன்ன இல்லெடமும் தோக்கோனும்...”

    ...செரிங்ளா மாப்பு

    ReplyDelete
  4. குரங்கு கைல கிடைச்ச மாலை போல் என்று ஒரு பழமொழி உண்டு. இது "குரங்கு கைல கிடைச்ச தூக்கணாங்குருவி கூடு" அல்லது "மகாதேவனுக்கு அறிவுரை சொல்லிய மதனமோகினியின் நிலை". இஃகிஃகி

    நித்தா கதைய வைச்சி ஏதும் உள் குத்து இல்லையே?

    ReplyDelete
  5. //
    குறும்பன் said...
    குரங்கு கைல கிடைச்ச மாலை போல் என்று ஒரு பழமொழி உண்டு. இது "குரங்கு கைல கிடைச்ச தூக்கணாங்குருவி கூடு" அல்லது "மகாதேவனுக்கு அறிவுரை சொல்லிய மதனமோகினியின் நிலை". இஃகிஃகி

    நித்தா கதைய வைச்சி ஏதும் உள் குத்து இல்லையே?

    March 3, 2010 //

    இது வெறும் புனைவுங்க.... அய்யோ...வர வர, நம்பாளுங்க உள்குத்துக்கே அடிமையாயிட்டாங்க போல.... அவ்வ்வ்வ்வ்வ்.....

    ReplyDelete
  6. சொல்ல வந்தது தெளிவா புரியுது!!
    //
    ஈரோடு கதிர் said...

    ”ஆனவனுக்கு புத்தி சொன்ன அறுவுமுண்டு நெனவுமுண்டு...

    ஈனவனுக்கு புத்தி சொன்ன இல்லெடமும் தோக்கோனும்...”

    ...செரிங்ளா மாப்பு

    //
    க‌திர், ஆனா இது யாருக்குன்னு தான் புரிய‌ல‌! உங்க‌ளுக்கு தெரிஞ்சா என‌க்கு ம‌ட்டும் சொல்லுங்க‌!

    ReplyDelete
  7. நீங்க சொன்னா சரிதான்

    ReplyDelete
  8. அறிவுறை கூட எல்லாருக்கும் சொல்லாதேன்னு சொல்றீங்க , கரெக்ட்டுதானுங்க

    ReplyDelete
  9. //சின்ன அம்மிணி said...
    அறிவுறை கூட எல்லாருக்கும் சொல்லாதேன்னு சொல்றீங்க , கரெக்ட்டுதானுங்க
    //

    ஆகா, நீங்கதான் நாஞ்சொல்ல வந்ததைச் சரியாப் பிடிச்ச முத ஆள்!

    ReplyDelete
  10. எப்படி இப்படி எல்லாம்..... கலக்கல் நண்பரே...

    ReplyDelete
  11. போங்க தம்பி.. உங்க ஒட்டத்திற்கு என்னால பின்னால கூட வர முடியலை..மூச்சு வாங்குது.

    ReplyDelete
  12. //கயல் said...
    க‌திர், ஆனா இது யாருக்குன்னு தான் புரிய‌ல‌! உங்க‌ளுக்கு தெரிஞ்சா என‌க்கு ம‌ட்டும் சொல்லுங்க‌!//

    இது எங்க பாட்டி ஊர்ல சொல்றதுங்க....

    அம்புட்டுதேன்

    ReplyDelete
  13. //பழமைபேசி said...
    //சின்ன அம்மிணி said...
    அறிவுறை கூட எல்லாருக்கும் சொல்லாதேன்னு சொல்றீங்க , கரெக்ட்டுதானுங்க
    //
    ஆகா, நீங்கதான் நாஞ்சொல்ல வந்ததைச் சரியாப் பிடிச்ச முத ஆள்!//

    அதுசரி... இந்த அறிவுரை யாருக்குங்க தலைவரே...

    நான் படிக்கிறப்பவே இரண்டுநாளா இங்க நடந்துகிட்டு இருக்கிறத நெனச்சிதான் படிச்சேன்....

    ReplyDelete
  14. எங்கூர்ல ஒரு புத்திமதி சொல்லுவாங்க... எத்த சொல்லி ஏத ஒரைச்சாலும் கந்தனுக்கு புத்தி கவட்டியிலத்தான்னு....

    ReplyDelete
  15. இந்தக் கதையை நான் ஏற்கனவே கேட்டிருக்கிறேனே பழமைபேசி. நீங்கள் குரங்குக்கும் குருவிக்கும் பெயர் வைத்திருக்கின்றீர்கள்.

    ReplyDelete
  16. எல்லாருக்கும் அறிவுரை சொல்லக்கூடாதுன்னு நீங்க அறிவுரை சொல்றீங்களா?:-) ஒரே சிப்பு சிப்பா வருது.

    ReplyDelete
  17. எல்லாருக்கும் அறிவுரை சொல்லக்கூடாதுன்னு நீங்க அறிவுரை சொல்றீங்களா?:-) ஒரே சிப்பு சிப்பா வருது.

    ReplyDelete
  18. //கபீஷ் said...
    எல்லாருக்கும் அறிவுரை சொல்லக்கூடாதுன்னு நீங்க அறிவுரை சொல்றீங்களா?:-) ஒரே சிப்பு சிப்பா வருது.
    //

    அய்ய, நாஞ்சொன்னது பழங்கதை... அதுவும் யாரோ சொன்னது.... நிலையில நிக்குற தேரை இழுத்துத் தெருவுல வுடுறதே இலண்டன்காரங்களுக்கு வேலையாப் போச்சி!

    ReplyDelete
  19. ஹி ஹி தேர் தெருவுக்கு வந்து ரொம்ப நாளாச்சு :-):-)

    ReplyDelete
  20. மந்தியளக் கண்டு வருந்தி எங்கள மாதிரி குருவியளுக்குச் சொல்லாம விட்டுடாதீங்க :)

    ReplyDelete
  21. நான் "பொறுப்பி"-ய மட்டுந்தான் படிசேன்.
    பி.கு:இது பொறுப்பிக்கான பின்னூட்டம் மட்டுமே.

    ReplyDelete
  22. @@வானம்பாடிகள்
    @@முகிலன்
    @@ஈரோடு கதிர்
    @@கயல்
    @@நசரேயன்
    @@butterfly Surya
    @@சின்ன அம்மிணி
    @@Sangkavi
    @@தாராபுரத்தான்
    @@க.பாலாசி
    @@ராஜ நடராஜன்
    @@சுல்தான்
    @@எல் போர்ட்.. பீ சீரியஸ்..
    @@அரசூரான்

    நன்றி!நன்றி!!

    ReplyDelete
  23. எனக்கு நன்றி சொல்லல

    ReplyDelete
  24. //கபீஷ் said...
    எனக்கு நன்றி சொல்லல
    //

    அஃகஃகா,,,, நன்றி, நன்றி, நன்றி... போதுமா, போதுமா?? சனங்க இதையெல்லாமா பாப்பாய்ங்க?? இஃகிஃகி!

    ReplyDelete
  25. துப்புரவாக நனைந்தான்
    //

    துப்புரவாக என்பதை அதிகம் பயன்படுத்து பார்த்தது இல்லை

    சுத்தமாக , அல்லது தொப்பலாக நனைந்து விட்டதாக சொல்வோம்
    (சுத்தம் - தமிழ்தானுங்களே , தொப்பல் -அப்படினா என்னங்க)

    ReplyDelete