2/26/2010

கீறல்

விரைவாய்ச் செல்லுகையில்
அன்பாய்
பெயர் சொல்லி
விளித்து
நகையோடு

கை குலுக்கினார்
எதிரில் வந்தவர்!!

பாராட்டுகளைப் பெற்று
உச்சிமுகர்ந்த அளவளாவலும்,
பார்த்ததுல

ரொம்ப மகிழ்ச்சியெனச்
சொல்லிப் பரிவாய்
விடைபெறுதலும்!!

யாரவர்?
பெயரைக் கேட்டு
அவரிடமே
அவர் யாரெனத்
தெரியாதென்று
காண்பித்து

அவர்
மனக்கண்ணாடியில்
மெல்லிய கீறல்
விழுவானேன்?!

10 comments:

  1. /அவர் மனதில்
    மெல்லிய கீறல்
    விழுவானேன்?!/

    ஆகா!

    மாப்பு மாதிரி வில்லங்க வீராச்சாமின்னா நம்ம முழியிலயே கண்டு புடிச்சி நானாரு சொல்லு பாப்பம்னு நம்மள கீறீருவாங்க:))

    ReplyDelete
  2. நாள் முழுசும் அவருதான் நம்ம மனசுல இருந்திட்டிருப்பாரு!

    இது மாதிரியே சாட்ல சில பேருகிட்ட தெரியாம பேசறதுண்டு...கேட்க தயங்கிகிட்டு...

    பிரபாகர்.

    ReplyDelete
  3. எதார்த்தத்தை பளிச்சென்று சொல்லும் கவிதை அருமை
    வாழ்த்துக்கள்
    நிறைய பேசுவோம்
    தொடர்கிறேன்
    http://vittalankavithaigal.blogspot.com/
    vittalan@gmail.com

    ReplyDelete
  4. அதுசரி....இப்டித்தான் பைக்ல போறப்ப ஒருத்தருக்கு நான் எதார்த்தமா கை காட்ட, அவரும் பதார்த்தமா போயிட்டுவரேன் மாமான்னு சொல்ல.... அன்னைக்கு முழுசும் யாரந்த ஆளுன்னு முழிச்சிகிட்டிருந்தேன்....

    ReplyDelete
  5. ரொம்ப நல்லா இருக்குங்க

    ReplyDelete
  6. வயசானா வர்ற மறதி தான், ரொம்ப கவலைப் படாதீங்க :-)

    ReplyDelete
  7. பல நேரம் இப்பிடி நடந்திருக்கு..

    ReplyDelete
  8. //வானம்பாடிகள் said...
    /அவர் மனதில்
    மெல்லிய கீறல்
    விழுவானேன்?!/

    ஆகா!

    மாப்பு மாதிரி வில்லங்க வீராச்சாமின்னா நம்ம முழியிலயே கண்டு புடிச்சி நானாரு சொல்லு பாப்பம்னு நம்மள கீறீருவாங்க:))
    //

    எங்க மாப்புவைக் கண்டு இவ்வளவு பயமாங்க பாலாண்ணே? இஃகி!

    @@பிரபாகர்

    ஆமாங்க பிரபாகர்!

    @@vittalankavithaigal

    நன்றிங்க!

    @@க.பாலாசி

    இது மணிவண்ணனும் சொல்லிட்டாரே படத்துல? இஃகி!

    @@பேநா மூடி
    @@அக்பர்
    @@ஈரோடு கதிர்

    நன்றிங்க!

    //கபீஷ் said...
    வயசானா வர்ற மறதி தான், ரொம்ப கவலைப் படாதீங்க :-)
    //

    அனுபவத்துல சொல்றீங்க; கேட்டுகுறோம்!

    @@முகிலன்

    ஆமாங்க முகிலன்!

    ReplyDelete