2/06/2010

விடுதலை யாதெனில்...

சதா அதையே
நினைந்து நினைந்து
மனதுள்ப் புழுங்கியவனாய்
சூறாவளி தாக்கியவனாய்
சூழ்ச்சிச்சுழலுள் அகப்பட்டவனாய்
உணர்ந்து உணர்ந்து அவன்!

கண்ணூ வுடு
அந்த நெனப்ப‌ எல்லாத்தையும்
தூக்கிப் போட்டுட்டு
பாடு பழமையப்
பாரு போ என்றது
அருகிருந்த நாட்டுப்புறம்!!

அதையே இலக்கியவான்
இலக்கியப்படுத்துகிறான்
விடுதலை யாதெனில்
தன்னுள் நிகழும்
மறுமலர்ச்சியும்
மையத்துள் எழும்
எழுச்சியுமே!

16 comments:

  1. அடடா, அருமையான பார்வைங்க அண்ணா விடுதலையைப் பற்றி!!

    ReplyDelete
  2. //அந்த நெனப்ப‌ எல்லாத்தையும்
    தூக்கிப் போட்டுட்டு
    பாடு பழமையப்//
    விடுதலை ! விடுதலை ! விடுதலை !!!

    அருமை.. அருமை.

    ReplyDelete
  3. //
    விடுதலை யாதெனில்
    தன்னுள் நிகழும்
    மறுமலர்ச்சியும்
    மையத்துள் எழும்
    எழுச்சியுமே!
    //

    ம்ம்ம்...அது ஒரு தேடலின் ஆரம்பம் என்று வேண்டுமானால் சொல்லலாம்...விடுதலை??? செல்ல வேண்டியது வெகு தூரம்...மலர்ச்சி என்பதையும் தாண்டி என்றைக்கு மனம் நின்று போகிறதோ அன்று சொல்லலாம் விடுதலை...ஆனால் மனம் நிற்பதற்குள் உடல் நிற்பதற்கான கால சாத்தியங்களே அதிகம்...

    ReplyDelete
  4. @@அது சரி

    ஆகா, வாங்க அது சரி அண்ணாச்சி! நிறைய சிந்திக்க வெச்சுட்டீங்க...

    //ஆனால் மனம் நிற்பதற்குள் உடல் நிற்பதற்கான கால சாத்தியங்களே அதிகம்...//

    அவ்வ்வ்வ்வ்........

    ReplyDelete
  5. @@ ச.செந்தில்வேலன்
    @@- இரவீ -

    நன்றிங்க...

    ReplyDelete
  6. //கண்ணூ வுடு
    அந்த நெனப்ப‌ எல்லாத்தையும்
    தூக்கிப் போட்டுட்டு
    பாடு பழமையப்
    பாரு போ என்றது
    அருகிருந்த நாட்டுப்புறம்!!//

    சரியாத்தான் சொல்லியிருக்கறீங்க....

    ReplyDelete
  7. இப்பிடியெல்லாம் யோசிக்க நம்மால முடியாது.. எழுதினத படிச்சி ரசிச்சிக்க வேண்டியதுதான்.. :)

    ReplyDelete
  8. ம்ம்ம்...அது ஒரு தேடலின் ஆரம்பம் என்று வேண்டுமானால் சொல்லலாம்...விடுதலை??? செல்ல வேண்டியது வெகு தூரம்...மலர்ச்சி என்பதையும் தாண்டி என்றைக்கு மனம் நின்று போகிறதோ அன்று சொல்லலாம் விடுதலை...ஆனால் மனம் நிற்பதற்குள் உடல் நிற்பதற்கான கால சாத்தியங்களே அதிகம்//

    அதுசரி .. அற்புதம் ..:))

    ReplyDelete
  9. //விடுதலை யாதெனில்
    தன்னுள் நிகழும்
    மறுமலர்ச்சியும்
    மையத்துள் எழும்
    எழுச்சியுமே! //

    ம்ம்ம்ம் ஆமாம் பழம

    ReplyDelete
  10. கடைசி ஐந்து வரிகளில் கணம் தெரிகிறது. தலைப்பை,
    விடுதலை யாதெனில் என்று வைத்திருக்கலாம்.

    ReplyDelete
  11. @@Sangkavi
    @@முகிலன்
    @@ஷங்கர்..
    @@ஆரூரன் விசுவநாதன்
    @@வானம்பாடிகள்
    @@ஆ.ஞானசேகரன்

    மிக்க நன்றிங்க....

    @@ஜெரி ஈசானந்தா.

    தலைமையாரே.... அழகான பின்னூட்டு...அப்படியே செய்தேன்....

    ReplyDelete
  12. என்னமோ சொல்ல வர்ரிங்க, எனக்குதான் ஒன்னும் புரியல..

    ReplyDelete
  13. //திருஞானசம்பத்(பட்டிக்காட்டான்). said...
    என்னமோ சொல்ல வர்ரிங்க, எனக்குதான் ஒன்னும் புரியல//

    போச்சாதுங்க அப்புனு...

    ReplyDelete
  14. அந்த நெனப்ப‌ எல்லாத்தையும்
    தூக்கிப் போட்டுட்டு
    எப்படி முடியும்.

    ReplyDelete