“அக்கா...ங்”ன்னு சொல்ற நம்ம பாண்டுதான் நமக்கு தெரியும்! அதென்னங்க இது புதுசா ஃபாண்டு அப்படின்னு நமக்கு தெரியாததைப் போட்டு உடைச்சோம்
(இல்லேன்னா மட்டும், நமக்குத் தெரியாதுங்ற விசயம் அவங்களுக்குத் தெரியாதாக்கும்?) ஃபாண்டு அப்படின்னா, திராட்சை இரசம், அதாங்க, இந்த வைனோட Cheeseங்ற ஒருவிதமான கொழுப்புக் கட்டியைக் கலந்து, சூடான திரவமாக்கி, அதுல ரொட்டித் துண்டைத் தொட்டுச் சாப்புடுறதுங்க.(இது வலையில சுட்டதுங்க!)
(இதுலதான் நாங்க தொட்டு, சுட்டுத் தின்னதுங்க)
மேல பார்த்த படங்க எல்லாம், நான் என்னோட அலைபேசில பதிஞ்சுகிட்டதுங்க. நல்ல சாப்பாடு மட்டுமல்லங்க; அண்ணன் சீமாச்சு பல சுவாரசியத் தகவல்களையும் கொடுத்தாரு. அதையெல்லாம் வெளியில சொல்லி, நான் சொந்த செலவுல சூன்யம் வெச்சுகுவனா என்ன? ஆம்மா, மறுபடியும் மறுபடியும், பல விருந்துகளுக்கு போக வேண்டி இருக்கல்ல?! இஃகிஃகி!!
நன்றி: ராம் குமார்
=======================
நம்ம நண்பர் ஒருத்தர், அவர் தம்பிக்கு பெண் பார்க்குறாரு, பார்க்குறாரு... பார்த்துட்டே இருக்காருங்க. “என்னடா அப்புனு, உந்தம்பிக்கு இன்னும் ஒன்னும் அமைஞ்சபாடு இல்லையா?”ன்னு கேட்டேன்.
அவர் சொல்றாரு, “அடப் போடா, கல்யாணத் தரகர்கிட்டப் போனா, அங்க 170 பையனுகளோட குறிப்புக்கு, வெறும் 60 பொண்ணுகளோட குறிப்புகதான் இருக்குது. இதுக்கும், அவர்தான் இருக்குற தரகர்லயெல்லாம் வெச்சிப் பெரிய தரகரு!” அப்படின்னு சொல்றாருங்க.
பெண்களோட எண்ணிக்கை குறைவுங்றது தெரியும். அதுக்காக, இவ்வளவு குறைவாவாங்க இருக்குது நம்ம ஊர்ல?!
=======================
பெருக்கினாள்
கழுவினாள்
துடைத்தாள்
துவைத்தாள்
எல்லாமும் தூய்மையாச்சு!
அவன் மனம் மட்டும்?
குப்பையாச்சு!
படங்களை பார்த்தாலே பசி எடுக்கிறது....
ReplyDeleteம்ம்ம்......அண்ணன் சீமாச்சு வாழ்க...
நானும் துண்டு போட்டு வச்சிடறேன்
\\சோறு கண்ட இடமே சொர்க்கம்னு இருக்குறவனுக்கு\\
ReplyDeleteஇஃகி இஃகி நாம தமிழன்னு வேற எப்படி நிரூபிக்கிறதாம்..அவ்வ்வ்....
நாக்கில உமிழ்நீர் ஊறுதுங்க பங்காளி..
அநியாயத்துக்கு நெருக்கமா படம் புடிச்சி போட்டிருக்கீங்க...)))))
கொடுத்து வச்சவங்க - துண்டு போட்டே காலத்த ஓட்டுறீங்க - படமெல்லாம் ச்ஊப்பர் - நாக்கில நீர் ஊறுது
ReplyDeleteமனம் குப்பையானது - ம்ம் - பல முறை படித்ததெனினும் மீண்டும் படித்தேன்
அவங்க வீட்டுல சமைச்சி வெச்சிருந்து பரிமாறினது ஒரு அழகுன்னா.. அதை நீங்க படமெடுத்து எழுதினது ரொம்ப அழகு...
ReplyDeleteஅந்த சிக்கனுக்கு ஆயுசு நூறு.. பதப்படுத்திக் கறியாகி வயத்துக்குள்ள் போனப்புறமும் உங்க பதிவில் வாழுதுங்க பாருங்க.... அததச் சொல்றேன்..
அவிய்ங்க வீட்டுல அடிக்கடி வரச்சொல்லிடிருக்காங்க.. நான் சாப்பிடப்போனால் உங்களையும் அழைச்சிட்டுப் போறேன்..
//சீமாச்சு அண்ணே, நீங்க மயிலாடுதுறைல மட்டும் அல்ல, அகில உலகத்துலயும் பிரபலம்தாங்க!//
ReplyDeleteஅத்த்த்த்த்த்.....து
யாரங்கே... இந்தப் பழமைபேசி ஐயாவுக்கு அந்த ப்ளாரிடா ட்ரிப்புக்கு ஒரு வண்டியிலே ஒரு துண்டு போட்டு வையுங்க...
ஐயா.. மார்ச் 5ந்தேதி ஆஜராயிடுங்க..
வீடியோ அருமை தண்ணீரில் இவ்வளவு அற்புதமாய்??
ReplyDeleteவிட்டால் படமே காண்பிப்பார்கள் போல..:)
பகிர்வுக்கு நன்றி..:))
சுவையான பள்ளயம் :)
ReplyDeleteசாப்பாட்டு ராமன் ரெடி..
ReplyDeleteசீமாச்சு சார் எம்மையும் சேர்த்துக்கொள்ளும்.
// குடுகுடுப்பை said...
ReplyDeleteசாப்பாட்டு ராமன் ரெடி..
சீமாச்சு சார் எம்மையும் சேர்த்துக்கொள்ளும்.//
வேற டைம் ஜோன்ல இருக்குற ஆளுக்கெல்லாம் அனுமதி இல்லை..
ஐயா, நான் ஈஸ்டர்ன் டைம்ல தான் இருக்கேன்.. இஃகி இஃகி..
ஃபாண்டூ பார்த்து நமக்கு காண்டு ஆகிப் போகுது.
ReplyDelete/எல்லாமும் தூய்மையாச்சு!
அவன் மனம் மட்டும்?
குப்பையாச்சு!/
வம்பா இது. கையில இருக்கிறதால அங்கயும் பெருக்கிடப்போவுது அம்முணி.
இந்த தண்ணி ஸ்கிரீன்ல தமிழ்படம் போட்டா திருட்டு டிவிடி அடிக்கமுடியாது போல இருக்கே.
/ Seemachu said...
அந்த சிக்கனுக்கு ஆயுசு நூறு.. பதப்படுத்திக் கறியாகி வயத்துக்குள்ள் போனப்புறமும் //
எங்க தலைவரு...இருங்க இருங்க
/ குடுகுடுப்பை said...
சாப்பாட்டு ராமன் ரெடி..
சீமாச்சு சார் எம்மையும் சேர்த்துக்கொள்ளும்.//
கண்ணுல பட்டான்னு சொல்றதுக்குள்ள வந்துட்டாரு.:))
மாப்பு.... பள்ளயம் வெகு அருமை
ReplyDeleteதண்ணி வெளியில் விளையாடினாலும், உள்ளே(!!!) போய் விளையாடினாலும் கொண்டாட்டம்தான்...
நம்ம ஊரு பக்கம் பொண்ணு கிடைக்காம கேரளாவுல போய் கட்டிக்கிட்டு வர்ற தமாசு இருக்குங்க...
கடைசி கவிதை கலக்கல்!!
ReplyDeleteஇன்னும் கொஞ்சம் நாள் கழித்து Polyandry தான் (ஒரு பெண்ணுடன் பல ஆண்கள் சேர்ந்து வாழ்தல்) நடைமுறையாகியிருக்கும். இது இப்பொழுதே ஹரியான கிராமங்களில் பழக்கமாகியுள்ளது என்பது கூடுதல் செய்து.
பள்ளயம் அருமை :)
பள்ளயம் அருமை. ஆமா சாப்புட்ட அயிட்டத்துல ஏதோ ஒன்னை போட்டோ புடிக்கிலையா? இல்லை பதிவுல ஏத்துலியா. நல்லாஇருங்கப்பு.
ReplyDeleteய்யா... சோறு சோறு..,
ReplyDeleteஅடே..யப்பா...ஐக..ஐல...ஐால வேளையாவுள்ள இருக்குது. யான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகமா?
ReplyDelete@@ஆரூரன் விசுவநாதன்
ReplyDeleteஆமா, வாங்க ஆரூரன்!
@@ நிகழ்காலத்தில்...
இஃகிஃகி!
@@cheena (சீனா)
நன்றிங்க சீனா ஐயா!
@@Seemachu
வந்திடுவோம்; நன்றிங்க ஐயா!
@@ 【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
அதேதானுங்க!
@@எம்.எம்.அப்துல்லா
அண்ணன்டா, நம்ம அண்ணன்டா... அண்ணா வணக்கம்!
@@குடுகுடுப்பை
வாங்க சித்தப்பு!
@@முகிலன்
முகிலனுக்கு பரிந்துரை பார்சல்!
@@வானம்பாடிகள்
என்ன பாலாண்ணே? உள்ளதைச் சொன்னா, அம்மணிக்கு போட்டு குடுக்குறீங்க? அவ்வ்....
//ஈரோடு கதிர் said...
தண்ணி வெளியில் விளையாடினாலும், உள்ளே(!!!) போய் விளையாடினாலும் கொண்டாட்டம்தான்...//
இத பார்றா, எங்க மாப்பு எப்படி அள்ளு வுடுறார்னு?!
@@ச.செந்தில்வேலன்
அப்படிங்களா? இது புதுசா இருக்கு, ஆனா அதிர்ச்சியாவல்ல இருக்கு?!
//தாமோதர் சந்துரு //
ரெண்டே ரெண்டு பாட்லுதானுங்க்...
//பேநா மூடி said...
ய்யா... சோறு சோறு..,
//
இஃகிஃகி!
//தாராபுரத்தான் //
அதேதானுங்கண்ணா!
அறுசுவை இதுதான் ...
ReplyDeleteசரியா .
pizza வுக்கு மேல இருக்கற படத்துல இருக்கறது அவியலா? knowledge base ல் போடறதுக்கு கேட்டேன்
ReplyDelete//நண்டு@நொரண்டு said...
ReplyDeleteஅறுசுவை இதுதான் ...
சரியா .
//
நன்றிங்க!
//கபீஷ் said... //
வாங்க சீமாட்டி, வணக்கம்!
//pizza வுக்கு மேல இருக்கற படத்துல இருக்கறது அவியலா? //
ஆமாம்.
//knowledge base ல் போடறதுக்கு கேட்டேன்
//
note பண்ணுங்கப்பா, note பண்ணுங்கப்பா... சீமாட்டியே ஒத்துகனாங்க, அங்க base கொஞ்சம் கம்மின்னு!
எப்பூடி? இஃகிஃகி!
தெரியலன்னா தெரியலன்னு சொல்லியிருக்கலாம். அத விட்டுப்போட்டு, நோட் பண்ணச் சொல்லி சின்னப்புள்ளயாட்டம் கூவிக்கிட்டு.
ReplyDeleteசரி சரி (உங்களுக்குத்)தெரியாம இருக்கறது ஒண்ணும் தப்பில்ல நான் சீமாச்சு அண்ணன்கிட்ட கேட்டுத் தெரிஞ்சுக்கறேன்
கதிர் சொன்னது உண்மைங்க, நம்மூர்ல பொண்ணு கிடைக்கலைன்னு பொண்ணு பிடிக்க கேரளா போறாங்க.
ReplyDeleteதிரௌபதிகள் நிறைய வந்துருவாங்க போல இருக்கே. பாண்டுக்கள் (ஃபாண்டு அல்ல) பாவம் இஃகி.
அப்ப நீங்க திராட்சை இரசத்த குடிக்காம சாப்பிட்டிங்க. இஃகி சாக்லெட் ஃபாண்ட படம் புடிச்சி போட்டிருக்கீங்க புரியுது புரியுது இஃகிஃகி.
ஃபாண்ட பற்றி அறிந்து கொண்டேன், பகிர்ந்ததுக்கு நன்றி.
ஓ பதில் சொல்லிட்டீங்களா? நான் பார்க்கல அதுக்காக வருந்துகிறேன். மன்னிப்புக் கேட்கிறேன். :-)
ReplyDelete//கபீஷ் said...
ReplyDeleteஓ பதில் சொல்லிட்டீங்களா? நான் பார்க்கல அதுக்காக வருந்துகிறேன். மன்னிப்புக் கேட்கிறேன். :-)
//
அடச் சே! நீங்க தற்செயலாப் பார்க்காம விட்டுட்டீங்கங்றதை புரியாத அளவுக்கு அறிவிலின்னு நினைச்சிட்டீங்க பார்த்தீங்களா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...........
//குறும்பன் said...
ReplyDeleteகதிர் சொன்னது உண்மைங்க, நம்மூர்ல பொண்ணு கிடைக்கலைன்னு பொண்ணு பிடிக்க கேரளா போறாங்க.
//
அப்படிங்களா? ம்ம்....
parthale pasikuthe
ReplyDeleteவயித்தெரிச்சலை கிளப்புறதுக்கு ஒரு பதிவா? நல்லா இருங்க சாமி..
ReplyDeleteசீமாச்சு அண்ணா இந்த மாதிரி சாப்பாடை என் வாழ்நாள்ள பாத்தது இல்ல. தயவு செஞ்சு என்னையும் அந்த வீட்டுக்கு அழைச்சுட்டு போங்க . ப்ளோரிடாவுக்கு எனக்கும் ஒரு துண்டு போடுங்க.
ReplyDelete//ஜாங்கோ ஜக்கு said...
ReplyDeleteசீமாச்சு அண்ணா இந்த மாதிரி சாப்பாடை என் வாழ்நாள்ள பாத்தது இல்ல. தயவு செஞ்சு என்னையும் அந்த வீட்டுக்கு அழைச்சுட்டு போங்க . ப்ளோரிடாவுக்கு எனக்கும் ஒரு துண்டு போடுங்க.//
ஜாங்கோ ஜக்குவே வந்தாச்சா?
வாங்க ஜக்கு சார்.. உங்களுக்கு இல்லாத துண்டா.. போட்டுருவோம்.. நீங்க தான் அங்கேயே வர்றீங்களே.. அங்கேயே சந்திப்போம்..
ராஜா.. உங்களை இங்கே பார்த்தது ரொம்ப சந்தோஷம்..
எங்களை வரவேற்று உபசரித்து வாழ்நாளில் மறக்க முடியாத விருந்தும் போட்ட டாக்டர் ஐயாவும் அவங்க திருமதியும் இந்த இடுகையைப் படிச்சு மகிழ்ந்தாங்க..
ReplyDeleteஅவங்க செஞ்ச எல்லாத்துக்கும் நான் நான் பாராட்டுப்பெற்றால் அது நல்லாருக்காது.. எல்லாப் புகழும் அவங்களுக்கே.. அவங்களுக்கு எங்கள் நன்றிகள்..
சாப்பாட்டுக்கு வர விருப்பம் தெரிவித்த அனைவரையும் அவர்கள் உளமாற வரவேற்கிறாங்க.. இந்தப் பக்கம் சார்லெட் மாநகரத்துக்கு வந்தால் சொல்லுங்க.. அவங்க வீட்டுக்கு அழைச்சிட்டுப் போறேன்.. உங்களைச் சந்திக்க அவங்களுக்கும் விருப்பம்தான்..
டாக்டர் ஐயாவுக்கு (இவரு 'அந்த பாட்டாளிமக்கள் கட்சி டாக்டரில்லே..) நன்றிகள் பல..
வைன் கியின் ன்னு எழுதியிருக்கீங்க, சரக்கு நம்ம ஊர்ல மாதிரி ஏறுதா இல்ல மிதம்தானா? (ஹி ஹி வைன்னு சொன்னா நமக்கு ஒரு லெவல்லதாங்க தின்க் பண்ண முடியும்!)
ReplyDeletehttp://kgjawarlal.wordpress.com
//சோறு கண்ட இடமே சொர்க்கம்னு இருக்குறவனுக்கு, இதுக்கு மேலான அழைப்பு வேற என்னவா இருக்க முடியும்ங்க? உடனே, “அய்ய, நம்ம வாசகர்னு வேற சொல்லிட்டீங்க, அப்ப வந்திட வேண்டியதுதான்!”, அப்படின்னு ஒரு டுமீல்ப் பேச்சோட ஒத்துகிட்டோம் நாமளும்!//
ReplyDelete"சோறு கண்ட இடமே சொர்க்கம்னு இருக்குறவனுக்கு"
அப்படின்னா நீங்களும் அண்ணாச்சி குடுகுடுப்பை இனத்துல சேந்தாச்சா.....ச ஏன்தான் இந்த "சோத்த" கண்டா இப்படி பரகுறின்களோ..... நீங்க கொஞ்சம் விதிவிலக்கு ஏன்னா அண்ணி ஊருல இல்லையே...... காஞ்ச மாடு கம்பன்கொல்லய கண்டா கொஞ்சம் (இல்ல அதிகமாவே) பாயத்தான் செய்யும்......
/ குடுகுடுப்பை said...
ReplyDeleteசாப்பாட்டு ராமன் ரெடி..
சீமாச்சு சார் எம்மையும் சேர்த்துக்கொள்ளும்.//
வந்துட்டாருயா நம்ம ஆளு..... சோறு போடுறாங்கன்னா உடனே கேள்ம்பிடுவாறு......
படத்தை பார்த்ததும் பசிக்கிறது. எங்கள் மனமும் குப்பையாகி போனது. வாழ்த்துக்கள்.
ReplyDelete