1/23/2010

அவர் சொல்வாரு!

நவீனம் எங்கும் படர்ந்து
வாங்குதிறன் கூடிய
மக்களைக் கண்டோம்!
அழகிய மாடங்கள்
அடுக்ககங்கள விண்முட்டுவது
வியந்து கண்டோம்!!
நான்குவழிச் சாலைகள்
ஆறுவழிச் சாலைகள்
நீண்டுள்ளது கண்டோம்!
காலத்தைக் காவுவாங்கும்
இடத்தில் மேல்நிமிர்ந்த
பாலங்கள் பல கண்டோம்!!
பாசமிகு பதிவர்கள்
ஆங்காங்கே அன்பாய்ப்
பரிவுடன் பழகியது கண்டோம்!
செம்மொழி மாநாட்டுக்கு
ஏதுவாய் நடக்கும் பல
பணிகள் கண்டோம்!!
உற்றார் உறவினர்
நட்பினர் சுற்றத்தினர்சூழ
வலம் வந்தோம்! வலம் வந்தோம்!
அந்த நாளும் வந்தே வந்தது!!
கோவைவிமான நிலையம்
கலங்கிய கண்கள்!
மெளனமே நெஞ்சமாய்
உற்றார் உறவினர்!!
டேய் அப்பப்ப வந்து போடா!
ஆமா, இந்த ஆறேழு வாரமும்
எப்படிக் கலகலன்னு இருந்துச்சு?
ஆமா, போய்ட்டு மறுபடியும் எப்ப??
அவனை என்னக்கா கேக்குறது?
கோலங்கள் ஆரம்பிச்சப்ப வந்துட்டுப் போனவன்
இப்பதான் வந்துட்டுப் போறான்!
அது முடிஞ்சி
மாதவி ஆரம்பிச்சிருக்கு இப்ப, ஆக
அந்த டைரக்டரைக் கேளு சொல்வாரு! ஆமா,
திருச்செல்வனைக் கேளு சொல்வாரு!!

18 comments:

  1. வந்தோம்,
    கண்டோம்,
    சென்றோம்,
    நீங்கன்னாலே சமூகம் சொல்றீங்களா? :-)

    ReplyDelete
  2. அழகாய் நிகழ்வுகளைச் சொல்லிவிட்டு நாசூக்காய் ஒரு குட்டும்....அருமை

    ReplyDelete
  3. நல்ல நினைவோடைகள்.... வணக்கம் நண்பா..

    ReplyDelete
  4. கவலையே படாதீங்க, டி.ஆர்.பி ல மாதவிய கவுத்துவிட்டுட்டு அண்ணன சீக்கிரம் வர வெச்சிடறோம்...

    உறவு, சொந்தம், நட்பு.... என்ன ஒரு அருமாயான விஷயங்கள் நம் வாழ்வில்!

    பிரபாகர்.

    ReplyDelete
  5. அட அடா.....இதுதான்பழமைபேசியின் தனித்துவ நடை( இங்கீலீஸ்லே ஸ்டையிலுங்க) வருசத்துக்கு ஒருமுறையாவத் தாய் மண்ண வந்து பார்த்திட்டுப்போங்க முடியுமானால்)

    ReplyDelete
  6. பாசமிகு பதிவர்கள்
    ஆங்காங்கே அன்பாய்ப்
    பரிவுடன் பழகியது கண்டோம்!
    .////

    ம்ம்ம்ம்ம்

    ReplyDelete
  7. மாதவி ஆரம்பிச்சிருக்கு இப்ப, ஆக
    அந்த டைரக்டரைக் கேளு சொல்வாரு! ஆமா,
    திருச்செல்வனைக் கேளு சொல்வாரு!!
    ////

    இன்னும் 10 வருசம் ஆகும்

    ReplyDelete
  8. //கோலங்கள் ஆரம்பிச்சப்ப வந்துட்டுப் போனவன்
    இப்பதான் வந்துட்டுப் போறான்!
    அது முடிஞ்சி
    மாதவி ஆரம்பிச்சிருக்கு இப்ப, ஆக
    அந்த டைரக்டரைக் கேளு சொல்வாரு! ஆமா,
    திருச்செல்வனைக் கேளு சொல்வாரு!! //

    நகைச்சுவையாய் இறக்கி வைத்த மனச்சுமை. நல்லா இருக்கு! ‘மாதவி’யை சீக்கிரமே முடிக்கட்டும் திருச்செல்வன்:)!

    ReplyDelete
  9. நம்ம மண்ணுக்கு வந்து மண்வாசம் பட்டதால் புத்துணர்ச்சியுடன் கெளம்பீட்டிங்க போல...

    ReplyDelete
  10. ம்ம்ம் புரியுது...மனக்கஷ்டத்திலேயும் ஜோக்கா?

    ReplyDelete
  11. நறுக்குனு சொன்னீங்க

    ReplyDelete
  12. Vஉங்கள் உணர்வுகளின் வலியை உணர முடிகிறது.

    ReplyDelete
  13. கலக்கலா இருக்கு உணர்வுக்கள். (நான் சோகத்தில இருக்கேன். இதுல என்ன கலக்கல்னு கேக்காதீங்க :))

    ReplyDelete
  14. ஊருக்கு சென்று வந்த பின்பு பதிவுகளில் கொஞ்சம் (கோவை) குசும்பு கூடியிருக்கிறது நல்லாவே தெரியிது...

    மா-தவி முடியனுமா? பதிவா படிச்சா... பெத்தவங்களுக்கும் மத்தவங்களுக்கும்தான் பெரிய(மா)-தவி(ப்பா) இருக்க போகுதுதப்பு.

    ReplyDelete
  15. //கபீஷ் said...
    blogger to .com congrats
    //


    Thank You!

    @ஆரூரன் விசுவநாதன்
    @@ஆ.ஞானசேகரன்
    @@பிரபாகர்
    @@கண்ணகி
    @@பிரியமுடன் பிரபு
    @@வானம்பாடிகள்
    @@ராமலக்ஷ்மி
    @@ Sangkavi
    @@அன்புடன் அருணா
    @@அண்ணாமலையான்
    @@ஈரோடு கதிர்
    @@கயல்
    @@சின்ன அம்மிணி

    நன்றிங்க மக்களே!

    //அரசூரான் said...
    ஊருக்கு சென்று வந்த பின்பு பதிவுகளில் கொஞ்சம் (கோவை) குசும்பு கூடியிருக்கிறது நல்லாவே தெரியிது... //

    இஃகி!

    //மா-தவி முடியனுமா? பதிவா படிச்சா... பெத்தவங்களுக்கும் மத்தவங்களுக்கும்தான் பெரிய(மா)-தவி(ப்பா) இருக்க போகுதுதப்பு.
    //

    ஆகா...

    நன்றிங்க!

    ReplyDelete