12/20/2009

ஈரோடு வலைப்பதிவர் ஆரவாரம் - குறுந்தகவல்

வணக்கம் மக்களே, வணக்கம்! ஈரோடு வலைஞர்களும், பதிவர்களும், வாசகர்களுமாய்ச் சேர்ந்து ஒரு முன்னுதாரணத்தை உண்டு செய்து விட்டார்கள் என்றே சொல்ல வேண்டும். குறித்த நேரத்திற்கு தேநீர் மற்றும் கொங்கு நாட்டிற்கே உரித்தான விருந்தோம்பலுடன் துவங்கியது ஆரவாரம்.

பின்னர், விழா தொகுப்பாளர் கதிர்‍‍‍‍‍ ஈரோடு அவர்கள் நிகழ்ச்சியை தமிழ் வணக்கமுடன் முன்னுரைக்க, ஆருரன் விசுவநாதன் அவர்கள் தொகுத்தளிக்கப் பணிக்கப்பட்டார்.

பின்னர் பதிவர்கள் மற்றும் விழாவிற்கு வாழ்த்துரைக்க வந்த விருந்தினர்கள் எனப் பலரும் சிறப்பாகப் பேசினர். கிட்டத்தட்ட 100 பேர் பங்கேற்றனர். இது குறித்த‌ விளக்கமான இடுகை விரைவில் இடம் பெறும்.

சமூகத்திற்கு உகந்த ஒரு நிகழ்ச்சியை நடத்திய ஈரோடு வலைப்பதிவர் குழுமம் மற்றும் தமிழ்மணம் திரட்டிக்குத் தமிழ்ச்சமுதாயம் மிகவும் நன்றிக் கடமைப்பட்டிருக்கிறது என்று சொன்னால் மிகையாகாது!

http://picasaweb.google.com/nandhuu/121#5417378768878384114

ஈரோடு ஆரவாரம்: மேலதிகப் படங்கள்

32 comments:

  1. // கிட்டத்தட்ட 100 பேர் பங்கேற்றனர். இது குறித்த‌ விளக்கமான இடுகை விரைவில் இடம் பெறும்.//

    எதிர்பார்க்கிறோம்

    ReplyDelete
  2. மணீண்ணா

    கோயந்த்தூர்லே நீங்க ஏன் ஒரு சந்திப்பு நடத்தக்கூடாது.

    ReplyDelete
  3. செம பாஸ்ட் மாமா. மான் வேகம் மயில் வேகம் மனோவேகம் தான்

    ReplyDelete
  4. 100 பேரா..?!!!

    அத்தனையும் பதிவர்கள்தானா..?

    இல்லை திருச்செந்தூர், வந்தவாசிக்கு கள்ள ஓட்டு போட போன லாரியை மடக்கி ஈரோட்டுக்கு திருப்பிட்டீங்களா..?

    ReplyDelete
  5. மின்னல்வேகச் செய்திக்கு நன்றி! உங்களுடைய பார்வையில் பதிவர் சங்கமத்தைப் பற்றி என்ன சொல்லப் போகிறீர்கள் என்பதை அறிய ஆவலோடு இருக்கிறேன்!

    ReplyDelete
  6. ஆஹா! அருமை. விவரங்களுக்காக காத்திருக்கிறேன்...

    பிரபாகர்.

    ReplyDelete
  7. ஐயா... சுடச் சுட செய்திகளை முந்திக் கொண்டு கொடுத்துவிட்டீர்கள்.

    மேலும் எதிர்ப்பார்க்கின்றேன்.

    ReplyDelete
  8. ஒரு அருமையான நிகழ்வில் கலந்துகொள்ள முடியாத வருத்தம் உங்கள் பதிவிலிருந்தே தொடங்கிவிட்டது. விரைவில் முழுமையான பகிர்வை எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
  9. மிக்க சந்தோசம்!வாழ்த்துக்கள்.அப்ப நாளை நிறைய நண்பர்களின் முகம் பார்க்க வாய்க்கும் ..intresting..waiting.

    ReplyDelete
  10. புகைப்படங்களையும்,மேலதிகத் தகவல்களையும் எதிர்பார்த்து காத்திருக்கிறோம் நண்பரே.

    ReplyDelete
  11. ஆரவாரத்தின் மிக முக்கிய வெற்றியில் உங்களுக்கும் முக்கிய பங்குண்டு

    ReplyDelete
  12. thank you for giving the updates, right away.

    ReplyDelete
  13. கொங்கு நாட்டிற்கே உரித்தான விருந்தோம்பலுடன் நன்றி நனறி நனறி,,,

    ReplyDelete
  14. தங்களை நேரில் சந்தித்ததில் மகிழ்ச்சி.

    ReplyDelete
  15. பகிர்வுக்கு நன்றியும் பாராட்டுகளும்

    ReplyDelete
  16. மகிழ்ச்சி. சென்னையிலிருந்து கூட சில நண்பர்கள் வந்ததாக அறிகிறேன் இன்னொரு சந்தர்பத்தில் உங்கள் அனைவரையும் காண விருப்பம்.

    மோகன் குமார்
    http://veeduthirumbal.blogspot.com

    ReplyDelete
  17. உங்க பழமை ரொம்ப நல்லாருந்துங்க :-))

    ReplyDelete
  18. This comment has been removed by the author.

    ReplyDelete
  19. யப்பா! அதுக்குள்ளே இடுகை போட்டுடீங்களா:)

    உங்கள் அனைவரையும் சந்தித்த மகிழ்ச்சியில் இருந்து நான்
    இன்னும் வெளியே வரவில்லை:(

    என்னை அழைத்து மேடையில் அமரச்செய்து, என்னையும் திடீரென்று பேசவைத்ததிற்கு என்ன சொல்ல! சொல்வதிற்கு என்னிடம் வார்த்தைகளே இல்லை...

    மிக்க நன்றி அண்ணா!

    சகோதரர் சீமாச்சுவிடம் கூறிவிட்டீர்களா??

    நன்றி நன்றி நன்றி!!!

    ReplyDelete
  20. /சமூகத்திற்கு உகந்த ஒரு நிகழ்ச்சியை நடத்திய ஈரோடு வலைப்பதிவர் குழுமம் மற்றும் தமிழ்மணம் திரட்டிக்குத் தமிழ்ச்சமுதாயம் மிகவும் நன்றிக் கடமைப்பட்டிருக்கிறது என்று சொன்னால் மிகையாகாது! //

    மிகச் சரியாகச் சொன்னீர்கள் பழமை

    ReplyDelete
  21. உங்கள் வருகையும், பேச்சும் தான் இந்த பதிவர் சந்திப்பின் சிறப்பம்சம்....
    உங்களை சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சி.

    நிறைய எழுதவும், பேசவும் தோன்றுகிறது. வார்த்தைகள் ஒன்று சேர மறுக்கின்றன.......

    நண்பர் கதிரின் கடுமையான உழைப்பு, உங்களைப் போன்ற நண்பர்களின் வழிகாட்டல், இவைதான் இந்த வெற்றிக்கு அடித்தளம்.

    நண்பர் கதிரைப் பணியை பார்க்கும் பொழுது நெஞ்சம் நெகிழ்கிறது...


    இங்கிவனை, யான் பெறவே, என்ன தவம் செய்துவிட்டேன்........

    ReplyDelete
  22. உங்கள் வருகை எங்களை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியது!

    ReplyDelete
  23. //ஈரோடு கதிர் said...
    ஆரவாரத்தின் மிக முக்கிய வெற்றியில் உங்களுக்கும் முக்கிய பங்குண்டு//

    அதே...அதே....

    ReplyDelete
  24. அனைவருக்கும் மிக்க நன்றி!

    ReplyDelete
  25. உங்களைச் சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சி பழமை.

    ReplyDelete
  26. நேரில் பார்த்தது ரொம்ப சந்தோசம் நண்பரே, சும்மா அப்பிடியே "ஹாலிவூட் ஹீரோ மாதி இருக்கீங்க அப்பு."

    ReplyDelete
  27. //வால்பையன் said...
    உங்கள் வருகை எங்களை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியது!

    //

    அவர் வந்தது தெரிஞ்ச அளவிற்குத் தெளிவா இருந்திருக்கீங்க. அதுவே என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்துகின்றது :))

    ReplyDelete
  28. பழமைபேசி உள்ளிட்ட அன்பு நண்பர்களே,

    உண்மையிலேயே மறக்க முடியாத சந்திப்புத்தான் ஈரோட்டில் நேற்று நடந்தது. நீண்ட பதிவெழுத நேரம் வாய்க்கவில்லை இப்போது. உங்கள் அனைவரின் திட்டமிடல், நிர்வகிப்பு, பெரும்போக்கு, அன்பு, கூட்டுழைப்பு அத்தனையையும் பார்த்து வியக்கிறேன். ’ஈரோடு தமிழ் வலைப்பதிவர் குழுமம்’ ஆல்போல் தழைத்து அருகுபோல் வேரோட வாழ்த்துகள்.

    ReplyDelete
  29. ரம்மியமான சந்திப்பு வாழ்துக்கள் பழமைபேசி.. சூப்பர் படதொகுப்பு..

    http:niroodai.blogspot.com

    ReplyDelete
  30. // அவர் வந்தது தெரிஞ்ச அளவிற்குத் தெளிவா இருந்திருக்கீங்க. அதுவே என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்துகின்றது :))//

    :-))

    ReplyDelete