12/24/2009

பள்ளயம் - டிச 24, 2009


எமக்குப் பிரத்தியேகமாகக் கையளிக்கப்பட்ட ஒட்டு வில்லை. இனிதான் நாம உலா வர்ற வண்டியில ஒட்டணும். எல்லாம் கிட்ட இருக்குற கழகப் புள்ளிகளோட கைங்கர்யந்தான்! இஃகி!!

==================================


இது நம்ம டோண்டு ஐயா அவர்களுக்கான சிறப்புப் படம். ஆமாங்க, படத்துல இருக்குற இவர்தான் நாம எழுதின சிறுகதைத் தொகுப்புல வந்த பேச்சியோட வழித் தோன்றல்!

==================================



சார்லட்ல, எனக்கு அருகண்மையில இருக்குற சகபதிவர் கல்விமான் சீமாச்சு, ஒரு பள்ளிக்கூடத்தை மேம்படுத்துறதுக்கு ஐந்து கோடின்னு ஒரு இலக்கை வெச்சி, செயல்பட்டுட்டு இருக்காரு. முழுக்க முழுக்க சமுதாய மேன்மைக்காக மட்டுமே நடத்தப்படுகிற காரியம் அது.

இங்க வந்தா, அன்பரும் சகபதிவருமான ஆருரன் அவர்களும் அதையேதான் செய்துட்டு இருக்காரு. அவங்க பள்ளியப் பார்த்தே ஆகணும்னு அடம் புடிச்சிப் பார்த்துட்டு வந்தேன். வாழ்க பதிவர்கள்! வளர்க அவர்கள்தம் தொண்டு!!

==================================

நேற்றைக்கு வீட்டுக்கு தெரிஞ்சவங்க வந்திட்டு இருக்காங்கன்னு சொன்னவுடனே, எத்தனை பேர் வர்றாங்கன்னு கேட்டோம். அவரும், அவரோட பொண்டாட்டி ரெண்டு பேரும் வர்றாங்கன்னு பதில் வந்துச்சு. நாமளும் மேலதிகமா மூனு இருக்கைகளை எடுத்துப் போட்டோம்.

“இப்ப எதுக்கு இங்க எச்சா ஒரு இருக்கையப் போட்டு இருக்கீங்க?”

”அவரும், அவர் பொண்டாட்டி ரெண்டு பேர்னு சொன்னீங்களே?”

”அடக் கடவுளே! அவரும் அவர் பொண்டாட்டியுமா மொத்தம் ரெண்டு பேர் வர்றாங்கன்னு சொன்னேன்! அவர் ஒன்ன வெச்சிட்டே படாத பாடு பட்டுட்டு இருக்காரு பாவம், நீங்க வேற!”


“இஃகி!”

==================================

படிச்சவங்ககூட, தான் பிறந்த தேதிய சர்வ சாதரணமா சொல்றாய்ங்க ஊர்ல... பிறந்த தேதி என்பது பேணிப் பாதுக்காக்க வேண்டிய தகவல்னு யாருக்கும் தெரியுறதே இல்ல. கணினி யுகத்துல இது அதிமுக்கியமான தகவல்யா.... அல்லாங்காட்டி, உங்களைப் பற்றின தகவல்கள் திருடு போக வாய்ப்பு இருக்கு!

அடுத்தது, குடும்பத்தாரோட நிழல்படங்கள், குறிப்பா குழந்தைகளோட படங்களை சரளமா இணையத்துல வுடுறாங்க; பதிவுல போடுறாங்க! மக்களே, சமூக விரோதிகளுக்கு ஏன் நீங்களே வாரி வழங்குறீங்க?! கணினிப் பயன்பாடு பற்றின விழிப்புணர்வு நெம்பக் கம்மி நாட்டுல!!

==================================


அன்பர்களுக்கு, நத்தார் தின நல்வாழ்த்துகள்!

27 comments:

  1. //வாழ்க பதிவர்கள்! வளர்க அவர்கள்தம் தொண்டு!!
    //

    மீண்டும் ஒலிக்கிறோம்

    ReplyDelete
  2. இரட்டை சதத்திற்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. ஓ.... ஒட்டு வில்லை இப்பவே கொடுத்திட்டாங்களா...

    என்ன ரேட்டுங்க இது...

    -------
    வாழ்க ஆரூரன்

    -------
    //ங்கொய்யால... //
    பேசறப்பவும் அடிக்கடி வருதுங்க மாப்பு
    --------

    ReplyDelete
  4. //வாழ்க பதிவர்கள்! வளர்க அவர்கள்தம் தொண்டு!!//

    வழிமொழிகிறேன்.

    குழந்தைகள் படம் மட்டும் இல்ல வீடடுப்பெண்கள் படங்கள்கூட வருகிறது. இணைய விழிப்புணர்வு குறைவாகவே நம்மக்களுக்கு இருக்கிறது.

    ReplyDelete
  5. நத்தார் தின நல்வாழ்த்துகள்

    appadinaa????????

    ReplyDelete
  6. சரி எதுக்கும் நானும் வாழ்த்து சொல்லிகிறேன்

    ReplyDelete
  7. வாழ்த்துக்கள்........

    ReplyDelete
  8. //அடுத்தது, குடும்பத்தாரோட நிழல்படங்கள், குறிப்பா குழந்தைகளோட படங்களை சரளமா இணையத்துல வுடுறாங்க; பதிவுல போடுறாங்க! மக்களே, சமூக விரோதிகளுக்கு ஏன் நீங்களே வாரி வழங்குறீங்க?! கணினிப் பயன்பாடு பற்றின விழிப்புணர்வு நெம்பக் கம்மி நாட்டுல!!//

    உண்மை
    நிச்சயம் தவிர்க்க வேண்டிய ஒன்று. பதிவர் சங்கமத்தில் பேசியிருக்கலாம்.

    அன்புடன்

    ReplyDelete
  9. // அவர் ஒன்ன வெச்சிட்டே படாத பாடு பட்டுட்டு இருக்காரு பாவம், நீங்க வேற!”//

    அதானே...

    //குடும்பத்தாரோட நிழல்படங்கள், குறிப்பா குழந்தைகளோட படங்களை சரளமா இணையத்துல வுடுறாங்க; பதிவுல போடுறாங்க! மக்களே, சமூக விரோதிகளுக்கு ஏன் நீங்களே வாரி வழங்குறீங்க?//

    ம்ம்ம்...தவிர்க்கவேண்டிய செயல்தான்.

    ReplyDelete
  10. மின்னஞ்சல் முகவரியும் அலைபேசி நம்பரும் எவ்வளவு சத்தமா முடியுமோ அப்புடி கத்துறது பொதுவிடத்துல. சரியாச் சொன்னீங்க. சூதானமா இல்லாட்டி என்னல்லாம் வில்லங்கம் வருமோ.

    ReplyDelete
  11. பழமையண்ணா!எப்படியிருக்கீங்க?முன்பெல்லாம் அரண்மனை மாதிரி பலகையிலான அரண்களை கோவையில் தி.மு.க மாநாடு போன்ற நிகழ்வுகளுக்கு கட்டமைக்கும் போது குற்றம் சொல்ல ஆள் இல்லாமல் அரங்க அமைப்புக்களை மட்டுமே பார்த்து பிரமிப்பு வரும்.

    எதற்கு உலகத்தமிழர் மாநாடு தேவையோ அதற்கான அஸ்திவாரமே தகர்ந்த பின் விமர்சனத்திற்குமிடையிலும்,தனி மனித வழிபாட்டுக்கான காட்சிப் பொருளாக மட்டும் உலா வரப் போகும் மாநாடு இது.

    இருந்தும் உங்களைப் போன்ற தமிழ் ஆவலர்கள் இணைவதற்கான வாய்ப்பான காரணத்தால் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  12. ஏழைக் குழந்தைகள் பால் உங்கள் அக்கரையும்,அதன் பொருட்டு தாங்கள் செய்த, செய்து கொண்டிருக்கின்ற உதவிகளையும் பார்த்து மனம் நெகிழ்கின்றது.

    உங்கள் அன்பிற்கும், நல்ல உள்ளத்திற்கும் (நன்றி என்ற) மூன்றெழுத்துச் சொல் பத்தாது....




    என்றென்றும் அன்புடன்
    ஆரூரன்.

    ReplyDelete
  13. இந்த மாதர ஏதாவது பாஸு கீஸு எங்களுக்கும் அனுப்புங்ணா......

    ReplyDelete
  14. நத்தார் தின வாழ்த்துகள்!

    ReplyDelete
  15. ஆரூரன் பற்றிய தகவலுக்கு நன்றிங்க... உங்களுடனான நட்ப நினச்சி ரொம்ப பெருமையா இருக்கு...

    பிரபாகர்.

    ReplyDelete
  16. கணினிப் பயன்பாடு பற்றிய அறி்வைப் பற்றிச் சரியாகச் சொல்லி்யிருக்கிறீர்கள்!
    விழிப்புணர்வு தேவை!

    ReplyDelete
  17. அல்லாங்காட்டி,படித்தேன்..ங்க

    ReplyDelete
  18. //அவரும் அவர் பொண்டாட்டியுமா மொத்தம் ரெண்டு பேர் வர்றாங்கன்னு சொன்னேன்! அவர் ஒன்ன வெச்சிட்டே படாத பாடு பட்டுட்டு இருக்காரு பாவம், நீங்க வேற!”//

    :))

    இந்தியா வந்ததும் எழுத்தே மாறிடுச்சு.
    பழையபடி எழுதுங்க பழமைபேசி.

    ReplyDelete
  19. கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்!

    சீமாச்சு,ஆரூரன் பற்றிய தகவல்களுக்கு நன்றி.

    ReplyDelete
  20. //அடுத்தது, குடும்பத்தாரோட நிழல்படங்கள், குறிப்பா குழந்தைகளோட படங்களை சரளமா இணையத்துல வுடுறாங்க; பதிவுல போடுறாங்க! மக்களே, சமூக விரோதிகளுக்கு ஏன் நீங்களே வாரி வழங்குறீங்க?! கணினிப் பயன்பாடு பற்றின விழிப்புணர்வு நெம்பக் கம்மி நாட்டுல!!//

    ஆமாங்க....! :(

    ReplyDelete
  21. // படிச்சவங்ககூட, தான் பிறந்த தேதிய சர்வ சாதரணமா சொல்றாய்ங்க ஊர்ல... பிறந்த தேதி என்பது பேணிப் பாதுக்காக்க வேண்டிய தகவல்னு யாருக்கும் தெரியுறதே இல்ல. கணினி யுகத்துல இது அதிமுக்கியமான தகவல்யா.... அல்லாங்காட்டி, உங்களைப் பற்றின தகவல்கள் திருடு போக வாய்ப்பு இருக்கு!

    அடுத்தது, குடும்பத்தாரோட நிழல்படங்கள், குறிப்பா குழந்தைகளோட படங்களை சரளமா இணையத்துல வுடுறாங்க; பதிவுல போடுறாங்க! மக்களே, சமூக விரோதிகளுக்கு ஏன் நீங்களே வாரி வழங்குறீங்க?! கணினிப் பயன்பாடு பற்றின விழிப்புணர்வு நெம்பக் கம்மி நாட்டுல!!//

    சரியாச் சொன்னீங்க.

    ReplyDelete
  22. விடுமுறை தின வாழ்த்துகள். விடுமுறையை குடும்பத்தாரோடு அனுபவிக்கவும்

    சிறியவன்
    குகு

    ReplyDelete
  23. //
    அடுத்தது, குடும்பத்தாரோட நிழல்படங்கள், குறிப்பா குழந்தைகளோட படங்களை சரளமா இணையத்துல வுடுறாங்க; பதிவுல போடுறாங்க! மக்களே, சமூக விரோதிகளுக்கு ஏன் நீங்களே வாரி வழங்குறீங்க?! கணினிப் பயன்பாடு பற்றின விழிப்புணர்வு நெம்பக் கம்மி நாட்டுல!!
    //

    ஆமாம் அண்ணா சரியா சொல்லி இருக்கீங்க!

    இது யோசிக்க வேண்டிய விஷயம்:(

    ReplyDelete
  24. நத்தார் தின வாழ்த்துகள்!!!

    ReplyDelete
  25. வயல் நாய் பேச்சியின் வழித்தோன்றலின் படம் போட்டதற்கு மிக்க நன்றி. என் பெரியப்பா வீட்டில் வளர்ந்த பிரௌனியின் ஞாபகம்தான் எனக்கு பேச்சி பற்றி படிக்கும்போது வந்தது. அவனும் விஷமக்காரன், பேச்சி போலவே.

    அந்த “ப்ளொள்” என்ற குறைத்தல் எனக்கு மறக்காது.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  26. //இனிதான் நாம உலா வர்ற வண்டியில ஒட்டணும். எல்லாம் கிட்ட இருக்குற கழகப் புள்ளிகளோட கைங்கர்யந்தான்! இஃகி!!//

    ஒரு வில்லைதானா இல்ல ஏகப்பட்ட வில்லைகளா? வண்டி முழுக்க ஒட்டி அழிச்சாட்டியம் பண்ணாதீங்க இஃகிஃகி

    சீமாச்சு, ஆருரன் செயல்களை பாராட்ட வேணும்.

    //அடுத்தது, குடும்பத்தாரோட நிழல்படங்கள், குறிப்பா குழந்தைகளோட படங்களை சரளமா இணையத்துல வுடுறாங்க; பதிவுல போடுறாங்க! மக்களே, சமூக விரோதிகளுக்கு ஏன் நீங்களே வாரி வழங்குறீங்க?! கணினிப் பயன்பாடு பற்றின விழிப்புணர்வு நெம்பக் கம்மி நாட்டுல!!\\
    உண்மை.

    ReplyDelete