11/17/2009

பணிவு என்பது, தாழ்வும் இழிவுமா??





பணிந்து வணக்கம் செலுத்துவதால் ஒருவர் தாழ்ந்தவர் என்றாகி விடுவரோ? பணிந்தவருக்கு அது பெருமையே! ஏசுவோர் ஏசட்டும், பணிந்தவன் மட்டுமல்ல; துணிந்தவனும் நீயே! எளியோர் உள்ளம் வெல்பவனும் நீயே!!

19 comments:

  1. ஐய்யோ இதைப் பத்தி எழுதலாம்ன்னு இருந்தேன்... வடை போச்சே....



    கொரியால இருந்து வந்திருந்த கொரியன், சிங்கபூரில் இருக்கும் கொரியனைப் பார்த்ததும் ரெண்டுபேரும் மட்டையா மடங்கி வணக்கம் வச்சுக்கிட்டாங்க.

    ஆனா, நாமாயிருந்தா ஒருகையை மட்டும் தூக்கி ஸ்டைலா ஹாய் மட்டும் சொல்லியிருப்போம்.


    ஆனாலு்ம், வடை போன வருத்த்ம் போகலை....

    ReplyDelete
  2. இது ரொம்ப நல்லாருக்கு. ஆனா நம்ம ஆளுங்க சாஸ்டாங்கமா விழறது சகிக்கல.

    பிரபாகர்.

    ReplyDelete
  3. அரசியல் வாதிகளை மட்டும் சொன்னேங்க...

    ReplyDelete
  4. பணிவு எனும் பதார்த்தம் நம் வாழ்க்கைக்கு தேவைப்படும் இனிப்பு.

    நல்ல இடுகை....

    ReplyDelete
  5. ஆச்சரியமாய் இருக்கு நண்பரே. பல மணி நேரம் என்னை யோசிக்க வைத்தது பார்த்த போது படித்த போது. வாழ்த்துக்கள். முந்திக்கொண்டு விட்டீர்கள். வாலை விட்ட பிறகு இதில் கவனம் செலுத்த வேண்டும்.

    ReplyDelete
  6. பணியும் என்றும் பெருமை, சிறுமை அணியுமாம் தன்னை வியந்து.

    ReplyDelete
  7. அடுத்தது இப்பிடி செய்திகள் வரலாம்:

    "ஒபாமா தரையில் அமர்ந்தார்... அவர் ஒரு இந்தியர்"

    "ஒபாமா சாப்பிட்டு கையை கழுவினார்... அவர் ஒரு இந்து"

    "ஒபாமா எச்சிலை விழுங்காமல் துப்பினார்... அவர் நோன்பு இருக்கிறாரோ"

    செய்திக்கு காஞ்சு போய் கிடக்காங்க போல....

    அது போக.... அமெரிக்கன் ஸ்டேட் ப்ரோடொகால் என்ன சொல்லுது? இது தப்பா?

    ReplyDelete
  8. பணிவு தாழ்வும் இழிவும் இல்லைதான்.

    ஆனா ரொம்ப குனிய கூடாது. இஃகிஃகி

    இவர் பணிந்த (குனிந்த) போது அடுத்தவரும் பணிய (குனிய) வேண்டும். எனக்கு தெரிந்து அவ்வாறு நடக்கவில்லை. ஒபாமா என்ற தனி நபர் குனிந்து பணிந்து வணக்கம் செலுத்தலாம் தவறில்லை ஆனால் அமெரிக்க குடியரசு தலைவர் (வேறு எந்த நாட்டு தலைவரும்) அவ்வாறு செய்யும் போது வணக்கத்தை ஏற்பவரும் அவ்வாறே பதில் மரியாதை செலுத்த வேண்டும்.

    ReplyDelete
  9. /பணிந்தவருக்கு அது பெருமையே! /

    சரியாச் சொன்னீங்க.

    ReplyDelete
  10. ரோமில் இருக்கும் போது ரோமானியனாக இரு-ன்னு சொல்லுவது வழக்கு. பத்திரிக்கை பரபரப்பிற்க்கு இன்று ஒபாமா ஒரு ஊருகா(ய்), விடுங்க விடுங்க நாலு விசயத்த நக்கி(எழுதி) பிழைத்துக் கொள்ளட்டும்.

    ReplyDelete
  11. அடக்கம் அமரருள் உய்க்கும்

    :)

    ReplyDelete
  12. உள்ளுவ ெதல்லாம் உயா்வுக்கா.

    ReplyDelete
  13. நல்ல பகிர்வு மிக்க நன்றி

    ReplyDelete
  14. @@அப்பாவி முரு

    இஃகிஃகி, நான் முந்திட்டனா அப்ப?

    @@பிரபாகர்

    இங்க ஒரே புலம்பல், அதானுங்க பிரபாகர்!

    @@க.பாலாசி
    நன்றிங்க!

    @@ஜோதிஜி. தேவியர் இல்லம்.
    வணக்கமுங்க!

    //இராகவன் நைஜிரியா said...
    பணியும் என்றும் பெருமை, சிறுமை அணியுமாம் தன்னை வியந்து.
    //

    வருக, வணக்கம்!

    // ஸ்ரீ said...
    நல்ல பதிவு.
    //

    மதுரைக்காரங்க, வாங்க!

    @@Mahesh

    அண்ணே, வணக்கம். இதுல என்னாண்ணே இருக்கு? ஒரு பணிவான வணக்கம், அதுக்கு ஆய் ஊய்ங்கிறாய்ங்க...

    @@குறும்பன்
    இஃகி!

    @@அரசூரான்
    சரியா சொன்னீங்க இராசா, மகராசா!

    @@வானம்பாடிகள்
    பாலாண்ணே, நன்றி!

    @@எம்.எம்.அப்துல்லா
    அண்ணே, எம்புட்டு நாளாச்சு?

    @@அப்பன்
    அதேதானுங்க!

    //ஆ.ஞானசேகரன் said...
    நல்ல பகிர்வு மிக்க நன்றி
    //

    நன்றிங்க ஞானியார்!

    ReplyDelete
  15. //@@எம்.எம்.அப்துல்லா
    அண்ணே, எம்புட்டு நாளாச்சு //

    தெனமும் வருவேன். மணி அடிக்காம வாசல்லேயே நின்னு பார்த்துட்டு ஓடிப்போயிருவேன் :)

    ReplyDelete
  16. பெருக்கத்து வேண்டும் பணிதல் ....
    திருக்குறள் எண்-963

    அன்புடன்
    அண்ணன் நாஞ்சில் பீற்றர்

    ReplyDelete
  17. பணிந்தவர்கள் என்றும் கெடுவதில்லை. பழமை.

    ReplyDelete
  18. அன்பின் பழமைபேசி

    பணிவு என்பது தாழ்மையோ இழிவோ அல்ல - ஆனால் அமெரிக்க நாட்டின் அதிபர் இவ்வாறு குனிய வேண்டுமா / அது சென்ற நாட்டின் பழக்கமா - இருப்பினும் அதிபர்களுக்கென்று ஒரு நடைமுறை உண்டே - அது அனுமதிக்கிறதா - வுடுங்க நமக்கென்ன - நீங்க சொல்றது பொதுவான கருத்து

    நல்வாழ்த்துகள் பழமைபேசி

    ReplyDelete
  19. பணிவது நன்றுதான்.. பணிய வைக்காத வரை..(இவரளவில் இல்லாதது வேறு கதை) :) அருமை சார்..

    ReplyDelete