11/05/2009

அழகிக்கு சக அழகி? சககளத்தி! பதிவனுக்கு சக பதிவன்??

செல்வந்தனுக்கு சக செல்வந்தன்?
மோசடிக்காரன்!

இளைஞனுக்கு சக இளைஞன்?
போட்டியாளன்!

யுவதிக்கு சக யுவதி?
மூளி!

அழகிக்கு சக அழகி?
சககளத்தி!

வாலிபனுக்கு சக வாலிபன்?
மூத்தவன்!

அழகனுக்கு சக அழகன்?
விகாரன்!

வித்தைக்காரனுக்கு சக வித்தைக்காரன்?
ஏமாற்றுக்காரன்!

அரசியல்வாதிக்கு சக அரசியல்வாதி?
ஒரு ஊழல்வாதி!

நடிகனுக்கு சக நடிகன்?
அகங்காரம் புடிச்சவன்!

பத்திரிகைகாரனுக்கு சக பத்திரிகைகாரன்?
யாவாரி!

எழுத்தாளனுக்கு சக எழுத்தாளன்?
குப்பை!

வணிகனுக்கு சக வணிகன்?
கொள்ளைக்காரன்!

வழக்கறிஞனுக்கு சக வழக்கறிஞன்?
எதிரி!

நண்பனுக்கு சக நண்பன்?
நண்பனேதான்!

பதிவனுக்கு?
பதிவனுக்கு சகபதிவன், அதே நண்பந்தான்டா!

ஆம், நண்பனுக்கு மட்டுமே அந்தப் பெருமை இருக்க முடியும். நட்பு பாராட்டும் நண்பர்களே பதிவர்கள். காழ்ப்பு ஒழிய வேண்டும்; பதிவுலகம் வளர வேண்டும்; படைப்பாற்றல் பெருக வேண்டும்; தமிழ் ஓங்க வேண்டும்!


பங்கப் பழனத் துழும் உழவர்
பலவின் கனியைப் பறித்ததென்ற
சங்குஇட் டெறியக் குரங்கிளநீர்
தனைக்கொண் டெறியும் தமிழ்நாடா?!

--புகழேந்திப் புலவர்

பலா மரத்தில் ஒரு குரங்கு, மரத்தில் இருக்கும் பலாப் பழத்தைப் பறிக்கிறது. அதைப் பார்த்த உழவர்களில் ஒருவர் படைச்சாலில் இருந்த சங்கு ஒன்றை அதன்மீது எறிய, அது அருகில் இருந்த தென்னைக்குத் தாவி அதிலிருந்த இளநீர் கொண்ட குரும்பையைக் கொண்டு திருப்பி எறியும் தமிழ்நாடா நம் நாடு? பல்லுக்குப் பல், கண்ணுக்கு கண் என இராமல் நட்பு பாராட்டுவோமாக!!

நரிக்கு நாட்டாமை கொடுத்தா, கிடைக்கு ரெண்டு ஆடு கேக்குமாம்?! இஃகி!!

32 comments:

  1. /பல்லுக்குப் பல், கண்ணுக்கு கண் என இராமல் நட்பு பாராட்டுவோமாக!! /

    வணக்கம் பழமை. இதுதான் இன்றையத் தேவை.

    /நரிக்கு நாட்டாமை கொடுத்தா, கிடைக்கு ரெண்டு ஆடு கேக்குமாம்?! இஃகி!!/

    நரி அயல்நாட்டு நரின்னா குடுத்துடுவோம். தமிழ்நாட்டு நரின்னா கவிழ்த்துடுவோம். இஃகி இஃகி

    ReplyDelete
  2. //நரிக்கு நாட்டாமை கொடுத்தா, கிடைக்கு ரெண்டு ஆடு கேக்குமாம்?! இஃகி!!
    //
    ஒரு இனத்தையே கேக்குதுங்க...

    //ஆம், நண்பனுக்கு மட்டுமே அந்தப் பெருமை இருக்க முடியும். நட்பு பாராட்டும் நண்பர்களே பதிவர்கள். காழ்ப்பு ஒழிய வேண்டும்; பதிவுலகம் வளர வேண்டும்; படைப்பாற்றல் பெருக வேண்டும்; தமிழ் ஓங்க வேண்டும்!//

    எழுதும் அனைவரும் படிக்க வேண்டும். உங்களின் உயர்ந்த எண்ணத்துக்கு வாழ்த்துக்கள்.

    பிரபாகர்.

    ReplyDelete
  3. அருமையாக இருக்கிறது.

    பதிவருக்கு சக பதிவர் நண்பர் என்னும் வாக்கியம் உண்மை..

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. //பதிவனுக்கு?
    பதிவனுக்கு சகபதிவன், அதே நண்பந்தான்டா! //

    இது வரிகளை யாரும் மறுக்க முடியாது என்றாலும் இப்போதுள்ள பதிவுலக சூழ்நிலைக்கு ரொம்ப தேவையான வரிகள்.நாம் நண்பர்கள் என எல்லா பதிவர்களுமே நினைத்துவிட்டால் எவ்வளவு அழகாக இருக்கும்.
    poongundran2010.blogspot.com

    ReplyDelete
  5. //பதிவனுக்கு சகபதிவன், அதே நண்பந்தான்டா!//

    ஆமாண்ணே, அப்படின்னா மட்டும் தான் என்னோட அந்த இடுகை படிச்சீயா, இந்த இடுகை படிச்சீயான்னு கொலையாக் கொள்ள முடியும்...

    ReplyDelete
  6. பலயிது புரிந்தாலும்.. சிலயிது புரியல...

    ReplyDelete
  7. ரூம் போட்டு யோசித்ததா ?? அவ்வ்

    ReplyDelete
  8. சூழ்நிலைக்கேற்ற அவசியமான பதிவு....
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. //பதிவனுக்கு சகபதிவன், அதே நண்பந்தான்டா! //

    நமக்கு... அண்ணன் / தம்பி
    அப்புறம்.....
    அதுக்கும்ம்ம்ம்ம்ம்....
    மேலே மாப்பு!!!

    ReplyDelete
  10. கதிர் - ஈரோடு said...

    /நமக்கு... அண்ணன் / தம்பி
    அப்புறம்.....
    அதுக்கும்ம்ம்ம்ம்ம்....
    மேலே மாப்பு!!!/

    ஏன். அதுக்கு மேல ஒன்னுமேயில்லியோ. ம்+ஆப்பு=மாப்பு. இடுகை நல்லா இருந்தா ’ம்’, கோளாறா இருந்திச்சோ ஆப்பு. இஃகி.

    ReplyDelete
  11. @@ வானம்பாடிகள்

    நன்றிங்க பாலாண்ணே!

    ReplyDelete
  12. //பிரபாகர் said...
    //நரிக்கு நாட்டாமை கொடுத்தா, கிடைக்கு ரெண்டு ஆடு கேக்குமாம்?! இஃகி!!
    //
    ஒரு இனத்தையே கேக்குதுங்க...
    //

    அட, ஆமாங்க பிரபாகர்!

    ReplyDelete
  13. //செந்தழல் ரவி said...
    ரூம் போட்டு யோசித்ததா ?? அவ்வ்
    //

    வாங்க ரவி, அப்படி எல்லாம் இல்லைங்க, இந்த செய்திதான் காரணம்!

    "இன்றைய கிசுகிசு. நேற்று அனைவரிடமிருந்து வாங்கி கட்டிக்கொண்ட மனநோயாளி பதிவர் ஒருவர் தனது பழைய அவதாரத்தை தூசு தட்டி எடுத்திருக்கிறார்"

    ReplyDelete
  14. //யோ வாய்ஸ் (யோகா) said...
    அருமையாக இருக்கிறது.
    //

    நன்றிங்க!

    @@பூங்குன்றன் வேதநாயகம்

    நன்றிங்க பூங்குன்றன்!

    @@Subankan

    நன்றிங்க சுபாங்கன்!

    @@அப்பாவி முரு

    வாங்க தம்பி! Mr.No உங்களைத் தேடிட்டு இருக்காராமே? இஃகி!

    @@Anbu

    நன்றிங்க அன்பு!

    ReplyDelete
  15. //ஆரூரன் விசுவநாதன் said...
    சூழ்நிலைக்கேற்ற அவசியமான பதிவு....
    வாழ்த்துக்கள்
    //

    நன்றிங்க, நன்றிங்க!!

    @@கதிர் - ஈரோடு

    ஆமாங்கோ!

    //வானம்பாடிகள் said...
    கதிர் - ஈரோடு said...

    /நமக்கு... அண்ணன் / தம்பி
    அப்புறம்.....
    அதுக்கும்ம்ம்ம்ம்ம்....
    மேலே மாப்பு!!!/

    ஏன். அதுக்கு மேல ஒன்னுமேயில்லியோ. ம்+ஆப்பு=மாப்பு. இடுகை நல்லா இருந்தா ’ம்’, கோளாறா இருந்திச்சோ ஆப்பு. இஃகி.
    //

    அண்ணே, பிரிச்சி மேயுறீங்க! இஃகி!!

    ReplyDelete
  16. // கிடைக்கு ரெண்டு ஆடு கேக்குமாம்?! //

    அது...!

    ReplyDelete
  17. //ஆ.ஞானசேகரன் said...
    பலயிது புரிந்தாலும்.. சிலயிது புரியல...
    //

    ஞானியார், எதெதுன்னு சொல்லுங்க...

    @@SUREஷ் (பழனியிலிருந்து)

    வாங்க, மருத்துவரே!

    ReplyDelete
  18. நாங்க சக்களத்தி என்று சொல்லுவது தான் வழக்கம்.

    மூளின்னா அழகில்லாதவள் என்றுதானே பொருள்?? அழகிக்கு எப்படி சக்களத்தி புரியலையே.

    \\பதிவனுக்கு?
    பதிவனுக்கு சகபதிவன், அதே நண்பந்தான்டா! \\ சரியா சொன்னீங்க.

    ReplyDelete
  19. மிகவும் தேவையான இடுகைங்கண்ணா..

    ReplyDelete
  20. //குறும்பன் said...
    நாங்க சக்களத்தி என்று சொல்லுவது தான் வழக்கம்.
    //

    ஆமாம்ங்கோ, இது அதற்கும் முந்தைய பரிமானம்!

    //மூளின்னா அழகில்லாதவள் என்றுதானே பொருள்?? அழகிக்கு எப்படி சக்களத்தி புரியலையே. //

    அங்கேதான் வழக்கு நிற்கிறது. இரண்டு பேருமே அழகி என்று அங்கீகரிக்கப்பட்ட பிறகு, இப்படித்தானே சொல்லி ஆக வேண்டும்?

    @@ச.செந்தில்வேலன்(09021262991581433028) said...

    நன்றிங்க தம்பி!

    ReplyDelete
  21. //அழகிக்கு சக அழகி?
    சககளத்தி!//

    சரிண்ணே

    ReplyDelete
  22. //நண்பனுக்கு சக நண்பன்?
    நண்பனேதான்!
    பதிவனுக்கு?
    பதிவனுக்கு சகபதிவன், அதே நண்பந்தான்டா! //

    அதானே...இரண்டு நாளானாலும் தேடி வருகிறோம்.

    இடுகையில் நட்பு இறுகுகிறது.

    ReplyDelete
  23. அட.. சூப்பர்பா..

    ReplyDelete
  24. அடடேடேடேடேடேடே என்று சொல்லிக்கொண்டே இந்த டேயே முடிஞ்சு போச்சுங்கோ..
    சூப்பர்.

    -வித்யா

    ReplyDelete
  25. /வித்தைக்காரனுக்கு சக வித்தைக்காரன்?
    சூதாடி!/

    "ஏமாற்றுக்காரன்" பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன். சூதாடிக்கும் வித்தைக்காரனுக்கும் என்ன தொடர்பு?

    அன்புடன்
    அண்ணன் நாஞ்சில் பீற்றர்

    ReplyDelete
  26. @@நசரேயன்
    @@க.பாலாசி
    @@SanjaiGandhi™
    @@Vidhoosh
    @@ஸ்ரீ

    நன்றிங்க நண்பர்களே!

    @@naanjil
    திருத்தியமைக்கு மிக்க நன்றி அண்ணா!

    ReplyDelete
  27. அன்பின் ப்ழமைபேசி

    பதிவருக்கு சக பதிவர் எப்பொழுதும் நண்பர் தான் - உண்மை நிலை அது தான்

    இணைய நட்பு என்பது உதட்டின் ஓரத்திலிருந்து வரும் சொற்களினால் ஏற்படுவதல்ல - உள்ளத்தின் அடித்தளத்திலிருந்து வரும் அன்பினால் ஏற்படும் நட்பு - உண்மையான நட்பின் இலக்கணம்.

    நல்வாழ்த்துகள் பழமைபேசி

    ReplyDelete
  28. //cheena (சீனா) said...
    அன்பின் ப்ழமைபேசி

    பதிவருக்கு சக பதிவர் எப்பொழுதும் நண்பர் தான் - உண்மை நிலை அது தான்
    //

    தங்கள் ஆசிக்கும் வாழ்த்துக்கும் என்றும் நண்ரி உடையவன் ஆகிறேன்!

    ReplyDelete
  29. அருமையான பதிவு பழமைபேசி!

    ReplyDelete