11/01/2009

அரைலூசு யார்?

திருப்பதி:திருமலை திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில், இலங்கை அதிபர் ராஜபக்ஷே, தன் மனைவிவுடன் நேற்று சுவாமி தரிசனம் செய்தார்.நேபாள பயணம் மேற்கொண்டிருந்த அதிபர் ராஜபக்ஷே, அங்கிருந்து சிறப்பு விமானம் மூலம் திருப்பதி வந்தார். அவருடன் அவரது மனைவி ஷிராந்தி மற்றும் 80 பேர் அடங்கிய குழுவினரும் வந்தனர்.

ரேணிகுண்டா விமான நிலையத்தில், அவர்களை ஆந்திர போக்குவரத்துத் துறை அமைச்சர் காலா அருணாகுமாரி வரவேற்றார். அங்கிருந்து கார் மூலம் திருமலைக்கு சென்ற ராஜபக்ஷே, அங்கு வெங்கடாஜலபதியை தரிசித்தார். இலங்கை அதிபராக பொறுப்பேற்ற பின் இரண்டாவது முறையாக திருமலைக்கு வந்துள்ளார் ராஜபக்ஷே.


http://www.dinamalar.com/General_detail.asp?news_id=18394

மனசு ரொம்ப வலிக்கிறது சார். பல நாட்கள் விரதம் இருந்து பாத யாத்திரையாக கீழ் திருப்பதியில் இருந்து திருமலை வரை நடந்து வந்து தரிசனம் செய்யும் பக்த்தர்களுக்கு கூட கருட ஸ்தம்பத்தை அருகில் சென்று பார்க்க அனுமதி தராத திருமலை தேவஸ்தானம், ஈழத்தில் படுகொலைகள் செய்து ஒரு இனத்தையே அழித்த படு பாவிக்கு அந்த கருட ஸ்தம்பத்தை தொட்டு கும்பிட அனுமதி அளித்ததை யாராலும் ஏற்க முடியாது.

by RL VENKATESH,India 11/1/2009 12:28:25 PM IST


தெற்காசியாவில் பிறந்த எளியவனும், மெலிந்தவனும் அழ மட்டுமே பிறந்தவன். அங்கு இனியும் அறத்தை எதிர் நோக்குபவன் ஒரு முட்டாள்! அறத்துக்கு வால் பிடிப்பவன் ஒரு கோமாளி, அல்லது தீவிரவாதி!!

20 comments:

  1. ஐயா! திருப்பதி ஏழுமலையான் என்ன தமிழ்க்கடவுளா?

    "ஏண்டா! எங்க இனத்தை அழிச்சிட்டு என்னையே பார்க்க வரேன்"னு உதைக்கிறதுக்கு!

    அடப் போங்க சார்! பழனிக்கே ராஜபக்ஷே வந்தா கூட முருகனும் கை குடுத்து பேசிகிட்டிருந்தாலும் ஆச்சரியப் படுறதுக்கில்லே!
    நாமதான் அவர்(ன்!?)கிட்டே பகைமை பாராட்டிகிட்டு கருப்பு கொடி காட்டிகிட்டு இருக்கோம்!

    நம்மாளு மீன் பிடிக்க போனா சுட்டுக் கொல்லுறான்! அவங்க ஆளு வசதியா வந்து சாமி தரிசனம் பண்ணிட்டு போறான்!

    அரை லூசுன்னு தப்பா எடை போடாதீங்க! முழு லூசும் நாமதான்!

    ReplyDelete
  2. வந்தவனை செருப்பால அடிச்சி விரட்டாம வரவேற்று உபசரிக்குது பாருங்க நம்ம பாரத அரசு! அதனாலதான் தமிழன் என்றால் எந்த நாதியும் கேட்பதற்கில்லாத அற்பப்பிறவிகள் என்ற இளக்காரம் எல்லாருக்கும்!

    ReplyDelete
  3. /அங்கு இனியும் அறத்தை எதிர் நோக்குபவன் ஒரு முட்டாள்! அறத்துக்கு வால் பிடிப்பவன் ஒரு கோமாளி, அல்லது தீவிரவாதி!!/

    அறமே பிறழ்ந்த பிறகு என்ன எதிர் நோக்குவது? அரைலூசா இருந்து இப்படி முடியாம சாவுறதை விட முழுலூசா இருந்துட்டா மேல்.

    ReplyDelete
  4. கண்ணாடில பாத்துக்கோங் சாமியோவ்....

    இந்த அரசுக்கு ஓட்டுப் போட்ட நாமதான்.... சந்தெகம் வேறயா??

    ReplyDelete
  5. என்ன சொல்றதுனு தெரியல.. நம்ம தான் கிறுக்கனுக..

    ReplyDelete
  6. லூசை விட சொரணைகெட்டவன் என்ற பெயர் நல்லாருக்கில்ல ?

    ReplyDelete
  7. "செந்தழல் ரவி said...
    லூசை விட சொரணைகெட்டவன் என்ற பெயர் நல்லாருக்கில்ல ?"

    வழி மொழிகிறேன்.

    லூஸு என்பதைவிட நாம் சொரணை கெட்டவர்கள் அதை விட நாம் சூடு சொரணை அறவே இழந்தவர்கள் அதாவது சங்கமங்கி (புதுச்சேரியின் நடைமுறை பாஷையில்)

    ReplyDelete
  8. இன்னோன்னும் சொல்லலாம் மானம் சூடு சொரணை எதுவுமே இல்லாதவன்னு அவனையில்ல நம்மளை...

    ReplyDelete
  9. இந்திய அரசின் உதவியோடுதான் இந்த அளவிற்கு வெறியாட்டம் ஆட முடிந்தது. தமிழக ஆளும் கட்சியின் மௌனத்தால்தான் இந்த அளவிற்கு ஒரு அரக்கத்தனத்தை அரங்கேற்ற முடிந்தது. தமிழக தலைவர் நாத்திகர். இல்லையென்றால் திருப்பதிக்கு சால்வைகளோடு அமைச்சர்களை அனுப்பியிருப்பார். வெக்கங்கெட்ட நாய்கள்.

    சாரிங்க, கொதிப்பாயிருக்கு.

    பிரபாகர்.

    ReplyDelete
  10. ராஜீவ் காந்தியை கொன்னவங்களை தலையில் தூக்கிவைச்சு ஆடுறவங்களும் அரை லூசா? முழு லூசா?
    வன்முறை என்பது இருபக்கமும் கூரான ஆயுதம்... இருபக்கத்தையும் தாக்கும் ...
    இது புரியாமல்..புலிகளுக்கு வால் பிடித்ததாலேயே இவ்வளவு அழிவும்...
    இனியாவது ஒருவரை மட்டுமே குறை காணாமல்.. நடக்க வேண்டியதை பார்க்க வேண்டியது தான்....

    சண்டை வேண்டாம் என்று சொன்ன காந்தியையே எவ்வளவு கேவலமாக விமர்சிக்கிறார்கள் ...

    ReplyDelete
  11. என்னத்த சொல்ல .... நாமக்கல் சிபி சொல்வதை போல நாம முழு லூசுதான்...

    ReplyDelete
  12. //அறத்தை எதிர் நோக்குபவன் ஒரு முட்டாள்! அறத்துக்கு வால் பிடிப்பவன் ஒரு கோமாளி, அல்லது தீவிரவாதி!! //

    அறம் பற்றி பேசினால் அது இறையாண்மையைக் கூட பாதிக்கும்...

    ReplyDelete
  13. "அரைலூசு யார்?"

    நீ, நான் என்றால் உதடுகள் ஒட்டாது,


    நாம் என்றால் தான் உதடுகள் கூட ஒட்டும்

    - தானைத் தலைவர் டாக்டர். மு. கருணாநிதி.

    ReplyDelete
  14. //ராஜீவ் காந்தியை கொன்னவங்களை தலையில் தூக்கிவைச்சு ஆடுறவங்களும் அரை லூசா? முழு லூசா?
    வன்முறை என்பது இருபக்கமும் கூரான ஆயுதம்... இருபக்கத்தையும் தாக்கும் ...
    இது புரியாமல்..புலிகளுக்கு வால் பிடித்ததாலேயே இவ்வளவு அழிவும்...
    இனியாவது ஒருவரை மட்டுமே குறை காணாமல்.. நடக்க வேண்டியதை பார்க்க வேண்டியது தான்....

    சண்டை வேண்டாம் என்று சொன்ன காந்தியையே எவ்வளவு கேவலமாக விமர்சிக்கிறார்கள் ...//

    வந்துட்டாங்கப்பா ராசீவ்காந்தியை ஞாபகப் படுத்த!

    அமைதி ஏற்படுத்தன்னு அனுப்புன உங்க அமைதிப்படைக் காரங்க நம்ம ஊரு பொண்ணுங்களையெல்லாம் மானபங்கப் படுத்தறாங்க, தாலியறுக்குறாங்க, தயவுசெய்து அவங்களை வாபஸ் வாங்கிக்குங்கன்னு கடிதங்கள் எழுதி கூட 'அமைதி' காத்த ராசீவ்காந்தி மேல அவங்களுக்கு கோவம் வந்ததென்னவோ தப்புதான்! அதுக்காக ஒட்டுமொத்த தமிழினத்தையே போட்டுத் தள்ளுங்கடா! அவனுகளுக்கு ஒண்ணுன்னா கேக்க இங்க நாதியில்லைன்னு நம்ம அரசாங்கமும் சப்போர்ட் பண்ணினதும், போட்டுத் தள்ளிட்டியா ராசா, அப்படியே வந்து ஏழுமலையான் தரிசனம் பண்ணி நல்ல செல்வச் செழிப்போட இருக்கனும்னு வரம் வாங்கிட்டுப் போன்னு வரவேற்று உபசரிக்கிறதும் தப்பில்லைதான்!

    ReplyDelete
  15. //அறத்தை எதிர் நோக்குபவன் ஒரு முட்டாள்! அறத்துக்கு வால் பிடிப்பவன் ஒரு கோமாளி, அல்லது தீவிரவாதி!! //

    பணமும் புகழும் இருந்தால் சமுதாயம் வளைந்து கொடுக்கும், இது ஒரு இயற்கை விதி

    பங்காளி

    நாடு என்கிற எல்லை மனிதன் போட்டது, இயற்கை போட்டதல்ல

    நிச்சயம் அறம் வெல்லும், பொறுமை, பொறுமை

    ReplyDelete
  16. ஒட்டாரர்பின் சென்றொருவன் ஒருவன் வாழ்தலின் அந்நிலையெ கெட்டான் எனப்படுதல் நன்று -குறள் 967
    மருத்துவர் லையின் சாண்டர் நேற்று, வதைமுகாம்களில் நம் இனத்துவர் படும் அவதிகளை டெலவயர் பெருநில தமிழ்ச் சங்க விழாவில் தெளிவாக எடுத்துக் கூறினார்கள்.

    ReplyDelete
  17. திருமலையான் தான் கேக்கனும். வேற ஒன்னும் சொல்லறதுக்கு இல்ல.

    ReplyDelete
  18. என்ன சொல்வதென்று தெரியவில்லை....

    இழந்ததை நினைத்து அழுவதா?
    இயலாமையை நினைத்து அழுவதா?

    ReplyDelete
  19. பொத்தம் பொதுவாக பார்க்கும் போது உங்கள் முடிவு எழுத்து இது குறித்து மற்ற எழுத்துக்களை விட மேம்பட்டு உணர்வுத் தமிழாக வந்துள்ளது.

    ஆனால் சிவா சொல்லும் கட்சி தான் காட்சியாக இறுதியில் நமக்கு பல விசயங்கள் உணர்த்தும்.

    மொத்தமாக அழிந்தாலும் பராவாயில்லை. ஜி ராமநாதன் உருவாக்கிய பாதை, பிரபாகரன் வாழ வேண்டும் என்று காட்டிய பாதை, டக்ளஸ் கருணா உணர்ந்த பாதை அத்தனையும் பெஜ்ஜிங் ல் புதிய சாலை நிர்மாணம் செய்யும் போதெல்லாம் மாண்ட்ரீன் மொழியில் சாய் என்று எழுதி வைத்து இருந்தால் அந்த கட்டிடம் கேள்வி கேட்பார் அற்று அடுத்த நாள் இடிக்கப்படும் அர்த்தம் என்பது போல் இந்த தமிழனத்தை துடைத்து துவைத்தாலாவது மொத்த தமிழனுக்கும் ஒரு புத்தியாவது உருவாகட்டும் என்ற பார்வையில் ஏற்கனவே எழுதி வைத்துள்ள ராஜபக்சே ரொம்ப நல்லவரு தான்.

    ReplyDelete