10/25/2009

எத்தனை எத்தனை உயிர்களடா?

எத்தனை எத்தனை உயிர்களடா?
அரும்பும் மொட்டுகளாய்
பிஞ்சுக் குழந்தைகளாய்
தவழும் மழலைகளாய்
எத்தனை எத்தனை உயிர்களடா??

வாழப்பிறந்த மாந்தர் வாழ்ந்திடல் ஆகாதோ
இறைவா எமக்கு ஏனிந்தத் துயரடா?
அமைதியும் அன்பும் துளிர்த்திடத்
துணிந்திட மாட்டாயோ??
தாயகம் காப்பது குற்றமெனச் சொல்வாயோ?

எத்தனை எத்தனை உயிர்களடா?
அரும்பும் மொட்டுகளாய்
பிஞ்சுக் குழந்தைகளாய்
தவழும் மழலைகளாய்
எத்தனை எத்தனை உயிர்களடா??

புவியே எம்புன்னகைக்கு வழிவகை
வகுத்திட மாட்டாயோ?
அமைதியைத் தந்திட குரல்
கொடுத்திட மாட்டீரோ??

அம்மையும் அப்பனும் முள்வேலியிலடா
உம்பிறப்பு அதை ஆமோதித்திடத்தானா
புவியில் வாழும் மானிட குலத்தோனே
தட்டிக் கேட்டிட மாட்டீரோ மாந்தர்காள்??

எத்தனை எத்தனை உயிர்களடா?
அரும்பும் மொட்டுகளாய்
பிஞ்சுக் குழந்தைகளாய்
தவழும் மழலைகளாய்
எத்தனை எத்தனை உயிர்களடா??





This song is written &sung by Mathurini Yogendran, a girl born and brought up in UK.

17 comments:

  1. இமைகளின் மயிரின் நுனியில் சொட்டும்
    கண்ணீர் துளியின் வெம்மை
    அனலாய் மனதில்...

    ReplyDelete
  2. //புவியே எம்புன்னகைக்கு வழிவகை
    வகுத்திட மாட்டாயோ?
    அமைதியைத் தந்திட குரல்
    கொடுத்திட மாட்டீரோ??//

    பழமைபேசியாரே உரத்து பேசும் வழி மறந்தோமே..

    உணர்வைத் தொலைக்க வழி கண்டோமே..

    முனங்கி முனங்கி உயிர் தேய்ந்தோமே..

    உலகம் செவிடா? தமிழன் ஊமையா?
    நாளைய உலகம் பட்டிமன்றம் நடத்தும்..

    ReplyDelete
  3. மனிதம் மறத்து போனது...

    இதில் உலக தமிழ் மாநாடாம்..??

    ReplyDelete
  4. தம்பி மணிவாசகம்

    அருமையாக தமிழாக்கம் செய்திருக்கிறீர்கள். நல்ல தமிழ்ப்பணி.
    பாடலும் கேட்பதற்கு இனிமையாக உள்ளது.
    வளர வாழ்த்துக்கள்.

    அன்புடன்
    அண்ணன் நாஞ்சில் பீற்றர்

    ReplyDelete
  5. எப்பிடி இருந்த நாம,

    இப்பிடி ஆகிட்டோமே...

    :((

    ReplyDelete
  6. தமிழகத்தில் ஈழத்தை அரசியல் செய்யும் கயவர்கள் இதை பார்த்து தொலைக்கட்டும்...

    பிரபாகர்.

    ReplyDelete
  7. படித்தறிவு கொண்டதும் பொய்!

    பகுத்தறிவு கொண்டதும் பொய்!!!


    காட்டுமிராண்டிகள் நாமென்பதே மெய்!!!

    ReplyDelete
  8. எல்லாம் செவிடனும் குருடனுமாயிருக்கானுங்களே பழமை. கண்ணிவெடி எடுக்கணும்னா வாங்கடா வந்து எடுத்துக் குடுங்கன்னு விடலாம்ல. அந்த ஃபொன்சேகா அங்க வருதாம். ப்ரூஸ் ஃபேய்ன்கு சொல்லி புடிச்சி உள்ள போடுங்க சித்த. அருமையான கவிதைக்கும், அழவைக்கும் பாடலுக்கும் நன்றி.

    ReplyDelete
  9. அவர்களின் குரல் அலட்சியபடுத்த படுகிறது அல்லது அமைதியாய் கடந்து செல்லப்படுகிறது.மதூரினி எட்டிய வரை எட்டட்டும் என முயற்சித்துள்ளார்.
    வலைஉலகத்திற்கு மொழிபெயர்த்த உங்களுக்கு நன்றி.

    எனது பங்கு 'ஒழிந்து போகட்டும்' படித்து விட்டு சொல்லுங்கள்.

    jeyaperikai.blogspot.com

    ReplyDelete
  10. இறைவா எமக்கு ஏனிந்தத் துயரடா?
    அமைதியும் அன்பும் துளிர்த்திடத்
    துணிந்திட மாட்டாயோ??

    ReplyDelete
  11. நெஞ்சைப் பிழியும் பாடலும், காட்சியும்.
    நன்றி பழமைபேசி!

    நன்றி - சொ.சங்கரபாண்டி

    ReplyDelete
  12. //எத்தனை எத்தனை உயிர்களடா?
    அரும்பும் மொட்டுகளாய்
    பிஞ்சுக் குழந்தைகளாய்
    தவழும் மழலைகளாய்
    எத்தனை எத்தனை உயிர்களடா??//

    கவிதையும் காணோளியும் மனதை கனக்க செய்கின்றது நண்பா

    ReplyDelete
  13. கையாலாகாத கண்ணிர்த்துளிகளுடன் மவுனமாக பார்ப்பதைதவிர ஒன்றும் செய்ய முடியவில்லையே

    ReplyDelete
  14. //எத்தனை எத்தனை உயிர்களடா?//

    மற்றுமொரு கண்ணீர்த்துளி உங்களிடமிருந்தும்...

    ReplyDelete
  15. மணியண்ணா!போரின் தோல்வியைக் கூட தாங்கிக் கொள்ளலாம் போல இருக்கிறது.ஆனால் முட்வேலி மக்களின் அவலங்கள் அது சார்ந்த மௌனங்கள்,அதிகாரம் உள்ளவர்களின் திசை திருப்புதல்,அரசியல் சூழ்ச்சிகள் இதனோடு ஒத்துப்பாடவென்றும் சில தமிழ் மக்கள் முக்கியமாக ஈழத்தில்.பிரபாகரனின் போராட்ட காலங்களில் விமர்சனத்திற்குரியவைகளாய் இருந்தவை கூட இன்று "பிரபாகரா!நீ செய்தவை அத்தனையும் சரியென சரித்திரம் எழுதிக் கொண்டிருக்கிறது.இன்னும் எழுதி வைக்கப் போகிறது".

    ReplyDelete
  16. நல்ல தமிழ் ஆக்கம்...மனம் பாரமாக உள்ளது....

    மயிலாடுதுறை சிவா..

    ReplyDelete