10/04/2009

பள்ளயம் 10/04/2009

வணக்கம்! பள்ள(ளை)யம் தொடரில் மீண்டும் உங்களை எல்லாம் சந்திப்பதில் பெருமகிழ்வு கொள்கிறேன். பள்ளயம் என்பதின் பொருள் அறிய விழைவோர், எமது இந்த முந்தைய இடுகையினைப் பார்த்துத் தெரிந்து கொள்ளவும்.

---------------------------

நான் எப்படியும் தினம் ஒரு முறையாவது கூகுள் மடல் பேழைக்கு வர்றது உண்டு. வரும் போது, மின்னாடல்த் தெரிநிலையில, இருப்பைக் காண்பிச்சுக்க மாட்டேன்; மாறா உள்ளிரு(invisible)ப்பா இருக்குறதுதான் வழக்கம்! எப்பவாவது ஒருவாட்டி பச்சை வண்ணம் மிளிர விடுவேன். அப்படிதாங்க, நேற்றைக்கு ஒளிரவிட்ட மறு வினாடியே, ‘ப்ளுக்’னு மின்னாடல் பெட்டி மேலெழும்புச்சு!

“நீங்களும் கதிரும் சொந்தக்காரங்களா?”

“ஆமாங்க!”

“எப்படி சொந்தம்?”

“தூரத்து சொந்தம்!”

“அப்படின்னா?”

“அவர் ஈரோட்டுல இருக்காரு; நான், சார்லட், அமெரிக்கால இருக்கேன்!”


அவ்வளவுதான், ஆளே காணோம்! என்னங்யா இது? முன்பின் அறிமுகம் செய்துக்காம உள்ள வந்து கேள்வி கேட்பீங்க...அப்புறம் போயிடுவீங்க... குறைந்தபட்சம் வணக்கமாவது சொல்லிப் பழகுங்கய்யா!


---------------------------

அப்படித்தான் பாருங்க, போன வாரம் வாசிங்டன் போயிருந்தப்ப ஆசான், உயர்திரு. கொழந்தைவேல் இராமசாமி ஐயா அருமையான ஒரு பற்றியம் சொன்னாரு. பொதுவா, இது இந்தியர்களுக்கே உண்டான பழக்கந்தான்.

சக ஊழியர்கள்கிட்டவோ, உயரதிகாரிகள்கிட்டவோ ஒன்னை செய்யச் சொல்லும் போது, ஆங்கிலத்துல ‘Please'ங்ற பதத்தை நாம பாவிப்போம். Kindly do the needfulன்னுவோம். அந்த பதத்தைத் தட்டும் போதே, மனசுல தயவு கூர்வது மாதிரியான ஒரு பணிவு மனசுல தோணுதுதான். அதே நெனப்புல மடலையும் தட்டி வுடுறோம்.

ஆனா, மறுபக்கம் அவன் அதை எப்படி எடுத்துக்குறான்? அது அவனோட பதவியின் நிலையப் பொறுத்து மாறுபடுது. சக நிலையில் இருப்பவனோ, அல்லது கீழ இருக்குறவனோ ஆயிருந்தா பரவாயில்லை. அதே, ஒரு உயரதிகாரியா இருந்தா அதனோட தொனி மாறுபடும். அது உங்களுக்குத் தெரியுமா? உதாரணம்: Please approve my vacation!

தூக்கிவாரிப் போடுதுல்ல? நீங்க என்னதான் ‘please'னு பரிஞ்சி எழுதினாலும், அது அவனை, அதைச் செய்ங்ற தொனியிலதான் இருக்கு! It's more of a direct and demanding. Rather, say, "Will you please approve my vacation when you get a chance?".

”தயவு கூர்ந்து செய்யவும்!” இது நேரிடையா இருக்காம்; ஆகவே மக்கா, ”தங்களுக்கு கால அவகாசம் இருக்கும் போது தயவு கூர்ந்து இதைச் செய்ய முடியுமா?” அப்படீன்னு குழையத் தெரிஞ்சுக்குங்க!

நான் போயி, என்னோட சகாவான Quient Pieskyகிட்ட இதைப் பத்திப் பேசவும், அவன், yeah, we, buggers overused it in America; because of that, you got to work around! but you are alright!! அப்படீன்னான். இஃகிஃகி!!


---------------------------

காத்துல வெண்ணெய் எடுக்குற பய அவன்!
வெறுங் கையில மொழம் போடுற பய அவன்!
ஒன்னுக்கு ஊத்தி மீன் புடிக்கிற பய அவன்!
கோழி மொட்டுக்கு சுருக்கு வெக்கிற பய அவன்!
மொட்டத் தலைக்கு குடுமி வெக்கிற பய அவன்!
காத்துல காப்பி ஆத்துற பய அவன்!
எச்சிக் கையால காக்கா ஓட்டாத பய அவன!
பழசையெல்லாம் இடுகையாக்குற பய அவன்!
- - - - - - - - - - - - - - - - -
- - - - - - - - - - - - - - - - -
- - - - - - - - - - - - - - - - -

(மக்களே! எங்க, உங்களுக்கு தெரிஞ்சதை எடுத்து வுடுங்க பாக்கலாம்!)

---------------------------

ஆசானும் அண்ணனுமான, உயர்திரு நாஞ்சில் பீற்றர் ஐயா அவர்கள்கிட்ட இருந்து, நிறைய தெரிஞ்சிகிட்டேன். அதுகெல்லாம் பிரத்தியேக இடுகையா போடணும். அதுல ஒன்னை இன்னைக்குப் பார்க்கலாம். அவர் சொன்ன பின்னாடிதான், கனடாவுல நடந்த ஒரு நிகழ்ச்சி நினைவுக்கு வந்தது.

ஃபிரான்சிஸ் பெர்னாண்டஸ்னு ஒரு நண்பன், யார்க் பல்கலைக் கழகத்துல என்னோட படிச்சான், நெருங்கிய நண்பன், கோவக்காரன் அல்ல; அவன் கோவாக்காரன். நான் படிப்பை முடிச்ச கையோட அமெரிக்காவுக்குள்ள வந்துட்டேன். அவன், கனடிய நடுவண் அரசுக்கு வேலை பாக்கப் போயிட்டான். இன்னும் அங்கதான் வேலை!

வேலை பார்க்குற எடத்துல பாதுகாப்புக் கெடுபிடிகள் அதிகம். இவனுக்கு அலுவலகத்துகுள்ள நுழையும் போதெல்லாம் அடிக்கடி பிரத்தியேக சோதனை; ஆய்வு, இப்படியான சிரமங்கள். காரணத்தை ஆய்ஞ்சி பார்த்ததுல தெரிஞ்சது, அவனோட உடல் தோற்றமும் அடையாள அட்டையில இருக்குற பேரும் பொருந்திப் போகாததுதான் பிரச்சினைன்னு. அப்புறம், ஃபிரான்சிஸ் குமார் பெர்னாண்டஸ் ஆயிட்டான். இப்ப, எந்த பிரச்சினையும் வர்றதில்லையாம்!

ஆக, ஒருத்தனுக்கு பூர்வீக அடையாளம் முக்கியம் மக்கா! கூடவே, கடந்து வந்த வரலாறும் முக்கியம்!! அதைப் போயிச் சிதைக்கலாமா? சிதைக்கலாமா?? நாம், நாமாக இருக்கிற வரையிலும், நமது நமக்கே!

29 comments:

  1. காத்துல காப்பி ஆத்துர பய அவன்
    எச்சல் கையால் காக்க ஓட்டாத பய அவன்

    பழமை... எதுக்கும் இதெல்லாம் பார்த்து போடுங்க... யாராவது வந்து
    பழசையே பதிவா போடுர பய அவன் (இப்ப ஒரே மீள் பதிவு காலம்ன்னு கேள்விபட்டேன்)-னு சொல்லிட போராங்க.

    எப்படி இருக்கீங்க அய்யா? அவன் கோவாக்காரனா இருந்தா என்ன நீங்கதான் கோவை-க்காரனாச்சே!!!

    ReplyDelete
  2. //
    காத்துல வெண்ணெய் எடுக்குற பய அவன்!
    வெறுங் கையில மொழம் போடுற பய அவன்!
    ஒன்னுக்கு ஊத்தி மீன் புடிக்கிற பய அவன்!
    கோழி மொட்டுக்கு சுருக்கு வெக்கிற பய அவன்!
    மொட்டத் தலைக்கு குடுமி வெக்கிற பய அவன்!
    //

    வெறும் பழமொழி தான...என்னிய வச்சி காமெடி கீமெடி பண்ணலையே??

    ReplyDelete
  3. //ஆக, ஒருத்தனுக்கு பூர்வீக அடையாளம் முக்கியம் மக்கா! //

    நல்லாச்சொன்னீங்க. நான் பேரைக்கொஞ்சம் சுருக்கிட்டேன். என் முழுப்பேரையும் சொல்லறதுக்குள்ள இவங்க பல் சுளுக்கீரும்.

    ReplyDelete
  4. @@அரசூரான்

    வாங்க இராசா, நீங்க நல்லா இருக்கீயளா? அந்த புன்சிரிப்பே போதுமே? அதான்யா உமக்கு சொத்து!!

    நாங்க எதோ உங்கட மாதிரி ஆட்களால இருக்கோம்.... படிச்ச கதியில, சுதி மாறாம மறுமொழி அட்டகாசமாப் போட்டுத் தாக்கிட்டீகளே? நன்னியய்யா, நன்னி!

    ReplyDelete
  5. @@அது சரி

    இஃகிஃகி, ஒப்புதல் வாக்குமூலம் தாறதுக்குன்னே ஆட்கள் இருக்காங்கப்பா!!

    ReplyDelete
  6. @@சின்ன அம்மிணி

    வாங்க, வாங், நம்மூர் அம்மிணி! இப்பென்னானு கூப்புடுதாக? சின்ன, சின்னன்னா கூப்புடுதாக??

    hi sinna, hi sinna.... ச்சும்மா, கூப்புட்டுப் பாத்தனுங்....

    ReplyDelete
  7. //“அவர் ஈரோட்டுல இருக்காரு; நான், சார்லட், அமெரிக்கால இருக்கேன்!”//

    லொள்ளு...

    ஒரு மனிசன் விசயத்தை தெரிஞ்சுக்கலாமேன்னு வந்து கேட்டா, இப்பிடியா கேலி பண்ணி பதுல் சொல்றது...

    (சும்மா, லுல்லலாயுக்கு)

    ReplyDelete
  8. பள்ளயம் எழுதற பாசக்கார பய அவன்...

    ReplyDelete
  9. அச்சச்சோ! வணக்கம் சொல்ல மறந்துட்டேன்...

    வணக்கம்...

    இஃகி! இஃகி!!

    ReplyDelete
  10. //தூக்கிவாரிப் போடுதுல்ல? நீங்க என்னதான் ‘please'னு பரிஞ்சி எழுதினாலும், அது அவனை, அதைச் செய்ங்ற தொனியிலதான் இருக்கு! It's more of a direct and demanding. Rather, say, "Will you please approve my vacation when you get a chance?".//

    சரியா சொன்னிங்க. Could you please கூட யூஸ் பண்ணலாம்.

    ReplyDelete
  11. //“அவர் ஈரோட்டுல இருக்காரு; நான், சார்லட், அமெரிக்கால இருக்கேன்!”//
    இந்த நக்கல்லையே மிரண்டிருப்பருன்னு நினைக்கிறேன்...

    //because of that, you got to work around! but you are alright!! //

    ரொம்பவும் சரி...

    //(மக்களே! எங்க, உங்களுக்கு தெரிஞ்சதை எடுத்து வுடுங்க பாக்கலாம்!) //

    வக்கீலுக்கே ஜாமீன் கொடுக்கிற பய அவன்...

    பழ்மைபேசி கிட்டயே கவிதை சொல்ற பய அவன்...

    டாஸ்மார்க்குக்கே ஊறுகாய் கொடுக்குற பய அவன்...

    // நாம், நாமாக இருக்கிற வரையிலும், நமது நமக்கே!//

    முத்தாய்ப்பான வரிகள்...

    பிரபாகர்.

    ReplyDelete
  12. பள்ளயமாம் பள்ளயம்
    பட்டையக் கிளப்பும் பள்ளயம்

    :)

    ReplyDelete
  13. விலை மோரில வெண்ணெய் எடுக்குற பய அவன்
    பொறுப்பியவே பிரபல இடுகையாக்குற பய அவன்
    இஃகி
    நம்ம ஆபீசுல ஒரு காலத்துல and oblige போடலைன்னா லீவ் லெட்டர் திருப்பி குடுத்துடுவாங்க. அப்புடின்னா என்னாங்கன்னு கேட்டுப் பார்த்தேன். போடணும்னா போடு கேள்வி கேக்காதன்னாங்க. லீவ் வேணாம் போடான்னு இருந்தேன் கொஞ்ச வருசம்.

    ReplyDelete
  14. //”தயவு கூர்ந்து செய்யவும்!” இது நேரிடையா இருக்காம்; ஆகவே மக்கா, ”தங்களுக்கு கால அவகாசம் இருக்கும் போது தயவு கூர்ந்து இதைச் செய்ய முடியுமா?” அப்படீன்னு குழையத் தெரிஞ்சுக்குங்க!//

    `தயவுசெய்து' என்பதனை `அன்புகூர்ந்து' என்று சொல்வது நல்லது.

    ReplyDelete
  15. வணக்கம்....:-)

    பள்ளயம் லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்துருக்குது!! :))

    ReplyDelete
  16. //“தூரத்து சொந்தம்!”//

    தூரத்த்த்த்த்த்த்த்த்த்த்த்த்து சொந்தம்னுல சொல்லியிருக்கோணும் மாப்பு

    தயவுசெய்து நாம என்ன சொந்தம்னு சொல்லிப்போடுங்க ஆமா..இல்லீனா...அது சுத்தப்படாது


    வந்த வரலாறு மிக முக்கியம்

    பள்ளயம் பட்டையக் கிளப்புதுங்க மாப்பு

    ReplyDelete
  17. பள்ளயம் அருமை!

    எனக்குத்தெரிஞ்ச சில கொங்கு மக்களை கேட்டேன். யாருக்கும் பள்ளயம்னா என்னான்னு தெரியல!இதுதான் நம்ம மக்கள் பூர்வீகத்தை காப்பாத்துற வகைப்போல!

    ReplyDelete
  18. //ஆக, ஒருத்தனுக்கு பூர்வீக அடையாளம் முக்கியம் மக்கா! கூடவே, கடந்து வந்த வரலாறும் முக்கியம்!! அதைப் போயிச் சிதைக்கலாமா? சிதைக்கலாமா?//


    அய்யோ சாமி நீங்களுமா? இப்பத்தான் எனக்குள்ற ஒருத்தன், அவனுக்குள்ற ஒருத்தன்ன்னு இந்த சண்ட முடிஞ்சிருக்கு,

    ஒத்த செருப்பு போட்ட பய
    ஒடியாடி திரிஞ்ச பய
    ரெண்டாமாட்டம் பார்த்த பய...
    உபயம்:பருத்திவீரன்

    ReplyDelete
  19. //அப்பாவி முரு said...
    //“அவர் ஈரோட்டுல இருக்காரு; நான், சார்லட், அமெரிக்கால இருக்கேன்!”//

    லொள்ளு...

    ஒரு மனிசன் விசயத்தை தெரிஞ்சுக்கலாமேன்னு வந்து கேட்டா, இப்பிடியா கேலி பண்ணி பதுல் சொல்றது...

    //

    எனக்கு உங்க மேலயும், அண்ணன் குடுகுடுப்பையார் மேலயுந்தான் ஒரு சந்தேகம்.... ஆனா, அண்ணன் வேலையில முசுவா இருக்காரு... ஆக, மாறு வேசத்துல வந்தது நீங்கதானா? அல்லது, நீங்கதான் மாறு வேசத்துல வந்தனீங்களா??

    எதுக்கும் அறிமுகம் செய்துட்டுப் பேசுங்க போலிப் பெயர்லயாவது... அதான் இது மூலியமா சொல்ல வந்தது.... message.... (அதே லுலுலாய்க்குதான்) இஃகி!

    ReplyDelete
  20. அந்த பைனல் டச் அற்புதம்........

    ReplyDelete
  21. //ஆக, ஒருத்தனுக்கு பூர்வீக அடையாளம் முக்கியம் மக்கா! கூடவே, கடந்து வந்த வரலாறும் முக்கியம்!! அதைப் போயிச் சிதைக்கலாமா? சிதைக்கலாமா?? நாம், நாமாக இருக்கிற வரையிலும், நமது நமக்கே!//

    ரொம்ப நல்லா இருக்கு.
    நன்றி

    அஷ்வின்ஜி
    www.vedantavaibhavam.blogspot.com

    ReplyDelete
  22. // ச்சின்னப் பையன் said...
    பள்ளயம் எழுதற பாசக்கார பய அவன்...
    //

    வணக்கங் அண்ணா, வாங்ணா, ஊர்ல இருந்து வந்தாச்சுங்களா? பயணம் எல்லாம் எப்படி இருந்துச்சுங்க??

    //முகிலன் said... //

    நன்றிங்க முகிலன்!

    @@பிரபாகர்

    நன்றீங்கோ!

    @@வானம்பாடிகள்

    நன்றிங்க பாலாண்ணே!

    //எம்.எம்.அப்துல்லா said...
    பள்ளயமாம் பள்ளயம்
    பட்டையக் கிளப்பும் பள்ளயம்

    :)
    //

    ஆகா, அண்ணன் பாட்டை மறக்காம வெச்சிருக்காரு...நன்றிங்க அண்ணே!

    @@அ. நம்பி

    சரியான தகவலுக்கு நன்றிங்க!

    //சந்தனமுல்லை said...
    வணக்கம்....:-)
    //

    அது! நன்றிங்க!!

    //பள்ளயம் பட்டையக் கிளப்புதுங்க மாப்பு//

    நன்றிங்க மாப்பு!

    //தமிழ் நாடன் said...
    பள்ளயம் அருமை!

    எனக்குத்தெரிஞ்ச சில கொங்கு மக்களை கேட்டேன். யாருக்கும் பள்ளயம்னா என்னான்னு தெரியல!இதுதான் நம்ம மக்கள் பூர்வீகத்தை காப்பாத்துற வகைப்போல!
    //

    கொங்கு வட்டாரச் சொல் அல்லங்க... நல்ல தமிழ்ச் சொல்தான் இது! சிவனடியார்கள் பெருமானுக்கு பள்ளையம் படைப்பது வாடிக்கை!

    @@ஆரூரன் விசுவநாதன்

    எங்க, ஆளே காணோம்?

    ReplyDelete
  23. //செந்தழல் ரவி said...
    அந்த பைனல் டச் அற்புதம்........
    //

    நன்றிங்க இளைய குத்தூசி!

    @@Ashwinji

    மிக்க நன்றி!!

    ReplyDelete
  24. //ஒன்னுக்கு ஊத்தி மீன் புடிக்கிற பய அவன்!//

    ஹ ஹ ஹா,,,,,

    ஐயா இதுக்குமேல என்னால சிரிப்ப அடக்கமுடியாது,,,

    வழக்கம்போல பின்னி பெடலெடுக்குறீங்க

    ReplyDelete
  25. Good One!

    dont think bugger is an american word. An american wud hv used someding like "bastard" if it was a friendlier convo..

    ReplyDelete
  26. @@LinuxAddict

    Exactly... you caught me out.... I just reworded it bit as my wife reads my blog often... seriously...

    ReplyDelete
  27. why cant we say "Peter" as "Peter" in Tamil?. Neenga solradhu, "peetrikkolgiravar" pola irukku!

    ReplyDelete
  28. அன்புள்ள ஜெய்:

    உங்கள் விமரினத்துக்கு நன்றி.

    'பீற்றர்' என்று எழுதுவது நமது தாய்மொழியின் ஒலியோசைக்கு வளம் சேர்ப்பதை தவிர வேறு காரணம் எதுவும் கிடையாது. 'பற்றற்றரவர்' 'கற்றவர்' போன்ற ஒலியோசையில் வரும். Peter என்பதை 'இராயப்பன்' என்று தமிழில் மொழியாக்கம் பண்ணப்பட்டுள்ளது.

    'பீட்டர்' என்றால் அது தமிழில் ஒட்டாது. நானோ, தம்பி மணியோ எப்போதும் எங்கும் பீத்தியது கிடையாது. நாங்கள் தமிழடிமைகள்.

    நன்றி
    அன்புடன் அண்ணன்
    நாஞ்சில் பீற்றர்.

    ReplyDelete