7/25/2009

FeTNA: தலைமை குறித்த ஓர் நையாண்டி!

ஓட்டி ஓட்டி மிளகு அரைக்க பாட்டி வந்தாளாம்!
பையனுக்குச் சோறு போட குட்டி வந்தாளாம்!!

ஆமாங்க மக்களே! காலம் முச்சூடும் பேரவையைக் கட்டிக் காப்பாத்தி, திட்டம் போட்டு, காசு பணம் செலவழிச்சு, ஓய்வு ஒழிவில்லாம வேலை பார்த்து ஒரு நிகழ்ச்சிய நடத்திக் காட்டுறது முன்னணியில இருக்கிற தலைவர்களும் பெரியவங்களும். ச்சும்மா ஒரு சம்பிரதாயத்துக்கு 75 வெள்ளியக் குடுத்துட்டு, நிகழ்ச்சிகளை எல்லாம் ஒன்னு விடாமப் பாக்குறது இவங்க. அதுல இவனுக்கு இதழியல் பிரதிநிதிங்ற பேர்ல வியாக்கியானம் வேற?

இப்படியெல்லாம் நீங்க கேக்குலாம்... சரிதான்... அதுக்காக எங்க வேலைய நாங்க செய்யாம உட்ற முடியுமா? என்ன நாஞ் சொல்றது?? இஃகிஃகி!

நான் நெம்ப முசுவா தமிழ்த் திருவிழா குறிச்சு இடுகைகளை இட்டுட்டு இருந்தம் பாருங்க.. அப்ப, tamil, thamizhங்ற பேர்ல ரெண்டு ஒறம்பரைங்க (உறவின் முறை), தலைவர் வேட்டி சட்டையில வரலை, தலைவர் வேட்டி சட்டையில வரலைன்னு ஒரே குமுறல்... கூச்சல், கலாய்ப்பு... பழைய இடுகைகள்ல நீங்க அதுகளை இப்பக் கூடப் பாக்குலாம்.


//thamizh said...
ennyaa, adhu ennaiyya safe-a americaavil coattuum soottum anindhukkittu ezham pattriyum periyaar pattriyum pesikkondu...//

வாங்க வாங்க.... ஆனா, நீங்க அந்த வேட்டி சட்டைய மட்டும் வுட மாட்டேங்குறீங்க இன்னும்... இஃகிஃகி...

ராமராஜ் வேட்டி துண்டு கடைக்காரர் உங்களுக்கு வேட்டி துண்டு தராம இராமயணத் தட்டு மட்டும் கொடுத்துட்டு போயிட்டாருன்னுதான நீங்க இப்படியெல்லாம் பேசுறீங்க.... இஃகிஃகி!

தவறாம வந்து மறுமொழி இடுவதற்கு நன்றி
...

மேல சொன்ன மறுமொழி அவிங்க இட்டதுல ஒன்னுதாங்க... அப்புறந்தான் எனக்கே உறைச்சது? ஆமாங்க, நானும் ஒரு வேட்டி கூட வெச்சி இல்லை! சரி வேட்டி கட்டுறது எப்படின்னு தெரிஞ்சிக்கலாம்ன்னு பார்த்தா, இந்த இடு காணொளி கிடைச்சது... ஐயகோ, அதுவும் ஒரு வேற்று நாட்டவன் வேட்டி கட்டுதலை விவரணப் படுத்துகிறான்.... அவ்வ்வ்வ்......




(விழா பற்றிய மற்ற இடுகைகளுக்கு தமிழ்விழா(Fetna) எனும் வகைப்பாட்டுச் சுட்டியைச் சொடுக்கவும்)

தலைவர்களே, அடுத்த வருசம் மறக்காம வேட்டி சட்டையில ஒரு தடவையாவது மேடையில் காட்சி தந்திடுங்க... அல்லாங்காட்டி, எம்பாடு அந்தலை சிந்தலை ஆயிடும்... என்ன இருந்தாலும் அது நம்ம உடை, நாம அதை உடுக்க வேணும்ங்றது சரிதானுங்களே?!

22 comments:

  1. கட்டுறது வேட்டிதான்னாலும் ஒவ்வொரு மாநிலத்திலயும் ஒரு மாதிரி எத்தனை வகை? நம்மூரு டப்பா கட்டில நெம்ப சுளுவா முனைய கட்டை விரல்ல ஒரு சொருவு. பார்த்தா நுனி பாதி வெளியதான் நிக்கும். புடிச்சி தொங்கோ தொஙகுன்னு தொங்கினாலும் இருகுமே தவிர உருவாது.

    ReplyDelete
  2. என்னக் கொடுமை சார் இது?

    ReplyDelete
  3. //பாலா... said...
    கட்டுறது வேட்டிதான்னாலும் ஒவ்வொரு மாநிலத்திலயும் ஒரு மாதிரி எத்தனை வகை?
    //

    ஆமாங்க பாலாண்ணே...தமிழ் வேட்டி கட்டுதல்...நீங்க ஒரு கானொளிய இடுங்க...

    ReplyDelete
  4. //அப்பாவி முரு said...
    என்னக் கொடுமை சார் இது?
    //

    ரொம்ப நாளாக் கேட்கணுமின்னு இருந்தேன்.... கொடுமைகள் மொத்தம் எத்தனை? அதனோட பெயர்களை எல்லாம் சொல்ல முடியுமா??

    தெரிஞ்சி வெச்சிகிட்டா, என்ன கொடுமை? என்ன கொடுமைன்னு கேக்கும் போது சொல்ற வசதியா இருக்கும் பாருங்க....

    ReplyDelete
  5. அய்யா உங்களுக்கே வேட்டி கட்டுவது எப்படி என்று மறந்துவிட்டதா...

    எப்படிங்க இப்படியெல்லாம் உங்களாள சிரிக்க வைக்க முடியுது... நாங்க இத நம்பணும், அவ்வள்வுதானே, நம்பிட்டோம்..

    வேட்டி கட்டும்போது இடுப்புல ஒரு பெல்ட் போட்டுகுங்க... மறந்துடாம...

    ReplyDelete
  6. வேட்டி கட்டி பெல்ட் போட்டதான்
    இடுப்புல நிக்குது...!

    ReplyDelete
  7. //ஆ.ஞானசேகரன் said...
    இங்கே சேலை கட்ட சொல்லித்தாராங்க
    //

    ஞானியார், நாங்கெல்லாம் சேலை கட்டவா? ஏன் உங்களுக்கு இந்த விபரீத ஆசை?? அவ்வ்.....

    ReplyDelete
  8. //தமிழ் வெங்கட் said...
    வேட்டி கட்டி பெல்ட் போட்டதான்
    இடுப்புல நிக்குது...!
    //

    அகோ, யாரு ஆத்தாவா பேசறது? நல்லா இருக்கியா கெழவீ?? செரீ, அடுத்த வாரம் உடலப்பேட்டை சந்தையில் அருஞா (அரை ஞாண்) கவுறு நாலு மொழத்துக்கு ஒரு எட்டு மொழமாவே வாங்கி அனுப்பியுடு ஆத்தா!

    ஆமா, மச்சான் தமிழ் வெங்கட்டுக்கு இடுப்பு கூடித்தான் போச்சுதாம்...

    ReplyDelete
  9. My comment regarding dress was directed at all of us including me – more specifically those men who keep harping “Tamil Tamil…Tamil la Pesu” but shows up in a western dress which includes wearing a coat/suit, shirt/pant etc. just shows their double standard.

    ReplyDelete
  10. //Tamil said...
    My comment regarding dress was directed at all of us including me – more specifically those men who keep harping “Tamil Tamil…Tamil la Pesu” but shows up in a western dress which includes wearing a coat/suit, shirt/pant etc. just shows their double standard.
    //

    ஆமாங்க...அதான் நான் ஒத்துகிட்டேன்...இஃகிஃகி.... “அப்புறந்தான் எனக்கே உறைச்சது? ஆமாங்க, நானும் ஒரு வேட்டி கூட வெச்சி இல்லை!”

    அடுத்த வருசம் பாருங்க... வெள்ளை வெளேர்னு வேட்டியில வர்றேனா இல்லையான்னு..... Yes, I will undergo Vigorous training not to lose my vaetti.... இஃகிஃகி...

    ReplyDelete
  11. தமிழர் திருவிழாவில் தலைவர்கள் வேட்டி கட்டி வர வேண்டும் என்பதே என் எண்ணமும்.

    எனக்கு தெரிந்த சிலர் எப்போதும் பட்டு வேட்டில தான் சங்க கூட்டத்துல கலந்துக்குவாங்க.

    இராமராசுல இருந்து மினிசுட்டர் காதி வேட்டி வாங்கி வந்திருக்குமுள்ள...

    ReplyDelete
  12. \\அடுத்த வருசம் பாருங்க... வெள்ளை வெளேர்னு வேட்டியில வர்றேனா இல்லையான்னு..... Yes, I will undergo Vigorous training not to lose my vaetti.... இஃகிஃகி...\\

    ஆனா தொப்பி இல்லாம வந்துடாதிங்க அடையாளம் தெரியாம போயிடும் ;-)

    ReplyDelete
  13. பழமை, பெஃட்னா தலைவர் வேட்டி சட்டையில் வரவில்லை, ஆனா ஜார்ஜியா தமிழ் சங்க தலைவர் சும்மா பட்டு சட்டை & வேட்டியில் வந்து அசத்துனாரே பார்க்கலியா?

    ReplyDelete
  14. //குறும்பன் said...

    ஆனா தொப்பி இல்லாம வந்துடாதிங்க அடையாளம் தெரியாம போயிடும் ;-)
    //

    இது ஞாயமாத்தான் படுதுங்கோய்...

    ReplyDelete
  15. // அரசூரான் said...
    பழமை, பெஃட்னா தலைவர் வேட்டி சட்டையில் வரவில்லை, ஆனா ஜார்ஜியா தமிழ் சங்க தலைவர் சும்மா பட்டு சட்டை & வேட்டியில் வந்து அசத்துனாரே பார்க்கலியா?
    //

    தலை, யாருங்க அவரு? சந்திரசேகர்தானே?! ஆனா, நானும் நீங்களும் அப்படி போகாமே வுட்டமே? அவ்வ்......

    அப்புறம் நீயா நானா படம்...அசத்தலா இருக்கு...பாத்தீகளா?

    ReplyDelete
  16. For some of the things that we are discussing like mixing english and tamil, appropriate clothing etc - my take is, do what is comfortable for you. None of us are perfect and don't expect others to be perfect either. That is why I wanted to point out the double standard. If someone mixes english with Tamil ...so what? None of the people who questioned anuradha are perfect. Fanaticism any any form/fashion is bad.

    When you go to FeTNA next year, wear what is comfortable to you. Stop living for others. If you start living for others then there is no stopping to it. People who start to question others sincerity towards language, dress and culture should stay back in Tamil Nadu and live a True Tamilian there. When you move to America...its all about individual choice, freedom and flexibility.

    Best wishes for 2010 FeTNA. Will there be another FeTNA like Atlanta one? May be PazhamiPesi sir should create another blog discussion for this topic.

    ReplyDelete
  17. //Tamil said... //

    Boss,

    Let's be an optimistic... no one is demanding to have Dhothi and Tamil everywhere and every day... It was just a frinedly request to honour our mother tongue....

    Are we not supposed to be responsible to make next year convention be the success? Come on buddy...

    ReplyDelete
  18. //Let's be an optimistic... no one is demanding to have Dhothi and Tamil everywhere and every day... It was just a frinedly request to honour our mother tongue....//

    Yes we Must honor our mother tongue at all times. I am one of the guys who was wearing dothi!!!! - but bottomline is that let us not judge others based on our value system and intersts. That is what I was trying to say.

    Nxt year convention - sure it must be a success. Hopefully they are motiviated to make it even better. But can they do it is the quesiton.

    ReplyDelete
  19. //Tamil said...
    Hopefully they are motiviated to make it even better. But can they do it is the quesiton.
    //

    _/\_ buddy,

    if you and me contribute our efforts... sure, that will be, must be success one....

    ReplyDelete
  20. All most all the ladies who came to the festival were wearing Saree. Let us talk about the positive thins also.

    ReplyDelete
  21. All most all the ladies who came to the festival were wearing Saree. Let us talk about the positive thins also.

    ReplyDelete