7/08/2009

Fetna .. தமிழ்த் திருவிழா.... நண்ணலுரை!

முத்தமிழ் மேல் நான் கொண்ட ஆர்வம் தன்னை,
முதலீடாய் வைத்து, வினா-விடையில் முதல் வர
முடிவு செய்து,"வெகுளியாய்" கலந்து கொண்ட என்னை,

ஆதரித்து,அரவணைத்து ,என் "அச்சத்தை" போக்கி- ஒரு
குழந்தையை போல் எனை அன்புடன் வழிநடத்திய அணித் தலைவர்
'குழந்தை' ராமசாமி அய்யாவையும்,

ஊக்கமளித்து,உற்சாகாப்படுத்தி - உயரிய எண்ணங்களையும்
உன்னத அனுபவங்களயும் பகிர்ந்து கொண்ட என் அணி
உறுப்பினர்களயும் கண்டு "வியப்பு" கொண்டேன்.

மேடையில் பேசிய பேச்சாளர்களின் பேச்சிலும் சரி,
நடனம் ஆடிய நங்கையரின் நடன அசைவிலும் சரி,
"அருவருப்பு" ஏதும் இல்லாதது கண்டு "உவகை" உற்றேன்.

அற்புதமாய் நடித்து காட்டப்பட்ட ஈழ அவலம்-நம்
அனைவரின் மனதுக்குள் "அழுகையை" வரவழைத்தாலும் ,கவிஞர்களின்
நகைச்சுவை பேச்சு இடைஇடையே நம்மை "நகைக்கவும்" வைத்தது.

இப்படி எண் சுவைகளையும்,
அல்ல அல்ல எட்டு "மெய்ப்பாடுகள்"
அனைத்தயும் ஒருங்கே வெளிப்படுத்த
ஏதுவாக அமைந்த ஃபெட்னா விழாவுக்கும், இதை ஏற்படுத்திய
தமிழ் ஆர்வலர்களுக்கும் நண்ணுவது நானாவேன்!!!!


இப்படிக்கு
செந்தாமரை பிரபாகர்,
எழில் தமிழ் பண்பாட்டு குழு,
சார்லத், வட கரோலினா.

5 comments:

  1. ரௌத்திரம் பழக இடந்தராத தமிழ்விழா !!

    இனி தமிழும் விழாது.. தமிழரும் விழார் !!

    ReplyDelete
  2. // Mahesh said...
    ரௌத்திரம் பழக இடந்தராத தமிழ்விழா !!

    இனி தமிழும் விழாது.. தமிழரும் விழார் !!
    //

    அண்ணே வணக்கம்! உங்கள் வாக்கு மெய்ப்பட வேண்டும்!!

    ReplyDelete
  3. பின்றீங்க பாஸ்.. பின்றீங்க..

    ReplyDelete
  4. அண்ணே! உங்களுடைய fetna பதிவுகள் அருமை! நல்ல தமிழ் ஆர்வம் உள்ள ஒருவராலேயே இது போல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவும், பதிவுகளை எழுதவும் முடியும்!

    அமெரிக்காவில் இதெல்லாம் நடக்கிறதே! நம்ம ஊரில் இது போல நடந்திருக்கா?

    உடுமலைல வேண்டாம், கோவைலயாவது நடந்திருக்கா?

    ReplyDelete
  5. Hi

    உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

    உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

    நட்புடன்
    செய்திவளையம் குழுவிநர்

    ReplyDelete