7/04/2009

Fetna Live.... தமிழ் விழாத் தகவல்கள்... மாலை ஏழு மணி

மாலை நான்கு மணிக்கெல்லாம் அண்ணா நூற்றாண்டு விவாழினை ஒட்டி, அண்ணாவுடன் செயலாற்றிய அனுபவங்கள் குறித்த உரையை முடித்துக் கொண்டார் VIT வேந்தர், முன்னாள் அமைச்சர் முனைவர் விசுவநாதன் அவர்கள்.

அதற்குப் பின்னர் அமர்க்களமாக மேடையேறினார் மக்கள்க் கலைஞன் பசுபதி. கூத்துப்படறையிலிருந்து நாடகம், நாடகத்திலிருந்து திரைப்படம் என தான் கடந்து வந்த பாதையைப் பற்றிப் பேசினார். பின்னர் அரங்கதினர் கேட்ட கேள்விகளுக்கு எந்த சுற்றி வளைப்பும் இன்றி விடை அளித்து பொழுதை சுவராசியமாக்கினார் என்றே சொல்ல வேண்டும்.

அதற்குப் பின்னர் நிகழ்ந்த நிகழ்ச்சிதான் விழாவினுடைய மகுடத்தின் மற்றுமொரு முத்தானது. வன்னிக்காடுகளில் மருத்துவராகப் பணியாற்றி, தற்போது அமெரிக்க அரசின் கவனத்தை ஈர்க்கும் பல செயற்பாடுகளில் ஈடுபட்டு வரும் அமெரிக்க மருத்துவர் இ. சாண்டா அவர்கள் தொகுத்து வழங்கிய விவரணமும் உரையும்.

அரங்கமே எழுந்து நின்று மரியாதை செலுத்தி ஆர்ப்பரித்தது. ஆனால் தமிழகத்திலி இருந்து வந்த விருந்தினர் இருக்கையில் அமர்ந்தே இருந்தார். அவர் தவிர அரங்கத்தினர் மொத்தமும் எழுந்தது கண்டு, அவரும் எழுந்து நின்றார் வேறு வழியில்லாமல். நான் எதிர்மறையான செய்திகளை இந்த நல்ல விழாவில், சூழலில் இட வாய்ப்பு இருக்காது என்றே நினைத்து இருந்தேன். ஆனாலும் அவரது இந்த செயல் எனக்கு வருத்தமாகவே மேலிட்டது.

பலத்த ஆரவாரத்திற்கிடையே அவர் விடை பெற்றுச் சென்றதும், அதே ஆரவாரத்துடன் மேடைக்கு அழைத்து வரப்பட்டார் கவிப் பேரரசு வைரமுத்து அவர்கள். நல்ல செறிவான இலக்கிய மற்றும் மொழி பற்றிய விபரங்களை சரளமாக வெளிப்படுத்தினார். மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

தீடீரென உள்குத்துப் பேச்சுக்கு மாறினார் அவர். அரங்கில் இருந்த, புலம் பெயர்ந்த மக்களுக்கு அது புரியவே இல்லை. எனக்கோ நெஞ்சில் இடித்தது போன்ற உணர்வு மேலிட்டது. புறங்கூறுதலும், மறதியும் தமிழனுக்கு நேர்ந்த இழிவான குணங்கள் என்றார். கலைஞரை வசைபாடுவோரை நினைத்துச் சொல்லி இருப்பாரா? அது அவருக்கே வெளிச்சம்.

அதற்குப் பின்னாலே, தொழிலாகக் கருதி உரையாற்றும் பேச்சாளர்களை சாடுவது மாதிரியான நான்கு பந்து குட்டிக் கதை ஒன்றைக் கூறினார். தொழில், நட்பு, குடும்பம், உடல் நலம் ஆகிய நான்கு பந்துகளில், தொழில் என்பது இரப்பர் பந்து, மற்றவை கண்ணாடிப் பந்துகள் என்றார். அந்த இரப்பர்ப் பந்துப் பேச்சுகளால், மற்ற கண்ணாடிப் பந்துகளைக் கைவிட்டால் உடைந்து விடும் என்று சொல்லி இரப்பர்ப் பந்து பேச்சாளர்கள், அதாவது நன்றாகப் பேசும் பேச்சாளர்களிடம் கவனமாக இருக்க வேண்டும். அதைவிடுத்து சரியாகப் பேசினாரா என்று மட்டுமே பார்க்க வேண்டும் என்றார்.

நானே கூட இதே கருத்தில் பல இடுகைகளை இட்டு இருக்கிறேன். ஆனால், விழாவில் கலந்து கொண்ட இன்னபிற பேச்சாளரைக் குறி வைத்துப் பேசியதாயின் அது விரும்பத்தக்கது அல்ல. எனக்கு ஏதோ அதில் உள்குத்து இருப்பதாகவே உணர்கிறேன். அவர் உரையாற்றி முடிந்ததும், அவருக்கான நன்றிக் கவிதையுடன் இரவு உணவுக்கான இடைவேளை அறிவிக்கப்பட்டு இருக்கிறது..........

(மீண்டும் விரைவில்.......)

விழா பற்றிய முந்தைய இடுகைகளுக்கு, தமிழ்விழா(Fetna) என்கிற வகைப்பாட்டு(label) சுட்டியைச் சொடுக்கவும்.

6 comments:

  1. பழமை பேசி,

    முதல்ல நன்றி சொல்லிக்கிறேனுங்க :-), உங்களாலதான் நானே அங்கு வருவதற்கு ஒரு வாய்ப்பு கிட்டியது. நானும் முழுமையா விழாவை அனுபவிச்சேன்.

    பழகுவதற்கு ரொம்ப எளிமையான ஆளா இருக்கீங்களே! உங்களப் பத்தியே ஒரு பதிவு போடலாம் போலவே.

    கவிப் பேரரசை, நல்லாவே கவனிச்சிக்கிறீங்க :-)). எனக்கும் அப்படித்தான் தோணுச்சு. நிறைய உள்குத்து... அந்த பிறந்த நாள் விழா வேண்டாமின்னு அந்த மேடையில அறிவிச்சது கூட நீயா நானா, கோபிக்கு பிறகு... :-P.

    ReplyDelete
  2. Hi,

    I was a participant of Neeya Naana(Anuradha).
    Please add the photos/videos of Neeya Naana if you have.

    Anu

    ReplyDelete
  3. @@Thekkikattan|தெகா

    :-(

    @@Anuradha

    Sure, I don't have them right now. I made a request to Fetna already!!

    ReplyDelete
  4. First - apologies for not posting in thamizh.

    July 4th 7.00 PM kku piRagu July 5th kaalai nigazcchikku fast forward paNNitteengaLE? enga isai nigazchchi avvaLavu kEvalamaagavaa irundhadhu? :-) :-)

    Kansas Raja

    ReplyDelete
  5. //Raja said...
    First - apologies for not posting in thamizh.

    July 4th 7.00 PM kku piRagu July 5th kaalai nigazcchikku fast forward paNNitteengaLE? enga isai nigazchchi avvaLavu kEvalamaagavaa irundhadhu? :-) :-)

    Kansas Raja
    //

    Good Evening Raja Sir! The reason is that your program was awesome. I stayed till end and reached hotel around 1.30am or so. And I couldn't find time to post consolidated write-up. However I have mentioned about ypour program some where.... trust me we all enjoyed very well... thank you!!!

    ReplyDelete