7/19/2009

யாது உம்மூரே? யாவர் உம் கேளிர்??

"அடேய் இது புது யுகம்டா... பொருளாதாரமயமாக்கல், தாராளமயமாக்கல்ன்னு படிப்படியா வந்து உலகமயமாக்கல்ல வந்து நிக்கிறோம்ல... அதனால, கனியன் பூங்குன்றனார் சொன்னா மாதிரி யாதும் ஊரே, யாவரும் கேளிர்ன்னு சொல்ணும்டா....”

“அட ச்சீ நிறுத்து... ஊடகங்களுக்கு பல் இளிச்சி, பல் இளிச்சி, யாது உம்மூரே? யாவர் உம் கேளிர்??ன்னு கேக்குற நெலமைக்கு கொண்டு வந்து நிறுத்திட்டமேடா?!”

”ப்ச், ஆமா இல்லை?”

“ஆமாம் மட்டுந்தான்டா மாப்பு!”

“இவனுங்களை இன்னும் நம்பிக் குதிரை ஏறினமுன்ன வெச்சுக்க, பாரி மகளிர் பாடின பாட்டை நாம அல்லாரும் பாட வேண்டி வருமுடோய்....”

“அதென்னடா பாரி மகளிர் பாட்டு?”

”அற்றைத் திங்கள் அவ்வெண் நிலவில்
எந்தையும் உடையேம் எம் குன்றும் பிறர் கொளார்;
இற்றைத் திங்கள் இவ்வெண் நிலவில்
வென்று ஏறி முரசின் வேந்தர் எம்
குன்றும் கொண்டார்; யாம் எந்தையும் இலமே!”


”என்ன இழவுடா இது?”

“உன்னோட தமிழை வெச்சு ஒன்னு கெடக்க ஒன்னு எழுதி உனக்கே அதை வித்து, நம்ப வெச்சுக் கழுத்தறுத்து, உன்னோட கோவணத்தைக் கூட உருவிட்டு அப்பனாத்தா யாரும் இல்லாம நடுத்தெருவுல உட்ருவாங்கன்னு 2000 வருசங்களுக்கு முன்னாடியே சொல்லிட்டு போயிருக்காங்கன்னாப் பார்த்துக்கோவேன்...”

“ஓ அப்பிடியா.... செரி வா, மொதல்ல போயி ஒரு வாய்ச் சோறு உண்ட்டு வந்துறலாம்!”

படைப்பின் மூலம்: தமிழ்த் திருவிழா

13 comments:

  1. பழம, நீங்களே நம்பிக்கைய வுட்டுப்புடலாமா ... சித்த நம்பிக்கையா இருங்கோ.

    ReplyDelete
  2. “ஓ அப்பிடியா.... செரி வா, மொதல்ல போயி ஒரு வாய்ச் சோறு உண்ட்டு வந்துறலாம்!”

    ReplyDelete
  3. சரியாச் சொன்னீங்க. பெருசுங்க சொன்ன நல்லதெல்லாம் நடக்குதோ இல்லையோ இதெல்லாம் தப்பாம நடக்குது.

    ReplyDelete
  4. //ப்ச், ஆமா இல்லை?”//

    nijama........

    ReplyDelete
  5. //Thekkikattan|தெகா said...
    பழம, நீங்களே நம்பிக்கைய வுட்டுப்புடலாமா ... சித்த நம்பிக்கையா இருங்கோ.
    //

    நம்பிக்கை எப்பிடிங்க தலை வரும்.... ஊடகத்துக்காரன் சொன்னதுதான் நெசமுங்றாங்களே? அவ்வ்வ்.....

    ReplyDelete
  6. எனக்கு விசயம் தெளிவா புரியல இருந்தாலும் என்னுடைய வருத்தங்கள்.

    ஜூனியர் விகடனைப் படித்தால் ஒருவேளை புரியுமோ!

    ReplyDelete
  7. //ஊர்சுற்றி said...
    எனக்கு விசயம் தெளிவா புரியல இருந்தாலும் என்னுடைய வருத்தங்கள்.

    ஜூனியர் விகடனைப் படித்தால் ஒருவேளை புரியுமோ!//

    repeatteyy...

    ReplyDelete
  8. //“உன்னோட தமிழை வெச்சு ஒன்னு கெடக்க ஒன்னு எழுதி உனக்கே அதை வித்து, நம்ப வெச்சுக் கழுத்தறுத்து, உன்னோட கோவணத்தைக் கூட உருவிட்டு அப்பனாத்தா யாரும் இல்லாம நடுத்தெருவுல உட்ருவாங்கன்னு 2000 வருசங்களுக்கு முன்னாடியே சொல்லிட்டு போயிருக்காங்கன்னாப் பார்த்துக்கோவேன்...”//


    அண்ணா.........................................

    ReplyDelete
  9. \\
    நம்பிக்கை எப்பிடிங்க தலை வரும்.... ஊடகத்துக்காரன் சொன்னதுதான் நெசமுங்றாங்களே? அவ்வ்வ்.....\\

    நாட்டுநிலை அ(இ)ப்படிதாங்க இருக்கு...

    ReplyDelete
  10. த‌ங்க‌ளுக்கு சுவையார்வ பதிவு/பதிவர் விருது கொடுத்துள்ளேன்.

    http://sinekithan.blogspot.com/2009/07/blog-post_20.html

    ஏற்றுக்கொள்ள‌வும்.

    ReplyDelete
  11. :(

    //யாது உம்மூரே? யாவர் உம் கேளிர்??ன்னு கேக்குற நெலமைக்கு//

    avvvv!!

    ReplyDelete
  12. ஒண்ணுமே பிரியலை உலகத்திலே... என்னன்னமோ நடக்குது மர்மா இருக்குது...

    ReplyDelete
  13. எல்லோருக்கும் நன்றிங்கோ... அக்பர் உங்களுடைய விருதுக்கும் சேர்த்து...

    ReplyDelete