7/06/2009

Fetna தமிழ்த் திருவிழாச் சிதறல்கள் - 1

வணக்கம் மக்களே வணக்கம்! இப்பெல்லாம் ஒக்காந்து எழுத ஆரம்பிச்சாலே, ஒரே செந்தமிழாக் கொட்டுது. கடினப்பட்டு இப்ப பழைய நடைக்கு திரும்பிட்டு இருக்கேன். ஏன்னு கேக்குறீங்களா? ஆமா, கொடுந்தமிழுக்குத் திரும்பாட்டி கடை காத்து வாங்க ஆரம்பிச்சுடுமே?! இஃகிஃகி!

ரெண்டரை நாள் திருவிழாங்க, மொத நாள் 15 மணி நேரம், ரெண்டா நாள் 18 மணி நேரம், மூனா நாள் ஒரு 4 மணி நேரம், ஆக மொத்தம் 37 மணி நேரத் திருவிழால எக்கச் சக்கமான விசயம் கெடைச்சிருக்கு போங்க. இன்னும் ஒரு மாசத்துக்கு சிந்திக்கத் தேவையே இல்லை. குறிப்பைப் பாத்தாச்சுதுன்னா இடுகைதான்.... இஃகிஃகி!!

ஒரு நாள் அந்த திரைப்பட இயக்குனரு வந்து, மே மாசத்துக்குள்ள படம் முடிக்கணுமே, என்னையா செய்துட்டு இருக்கீங்க? இன்னும் பாட்டே எழுதி முடிக்கலை. மே மொதல் வாரத்துல எல்லாப் பாட்டும் பதிஞ்சி, வெளிப்பொறம் போயாணுமே... மே ரெண்டாவது வாரத்துல மொத சுத்துப் பாட்டுகளை எல்லாம் படம் புடிச்சிரோணுமே... இப்படி ’மே’, ‘மே’ன்னு கத்திக் கத்திக் பொறுமை இழந்து வெறியாட்டம் போட்டாராம் அந்த அவன்தான் மனிதன் பட இயக்குனர்.

இதையெல்லாம் பார்த்த கவியரசு கண்ணதாசன், ‘யோவ், அந்த ஆள் என்னையா, மே மேன்னு கத்திகிட்டே இருக்காரு. இந்தா இந்தப் பாட்டை எடுத்துட்டுப் போயி இசை போடுங்க போயி’ன்னு சொல்லி, மே மேன்னே முடியற மாதர எழுத ஆரம்பிச்சாராம். அதாங்க இந்த பாட்டு:

அன்பு நடமாடும் கலை கூடமே
ஆசை மழை மேகமே
கண்ணில் விளையாடும் எழில் வண்ணமே
கன்னி தமிழ் மன்றமே

மாதவி கொடிப் பூவின் இதழோரமே
மயக்கும் மதுச் சாரமே
மஞ்சள் வெயில் போலும் மலர் வண்ண முகமே
மன்னர் குலத் தங்கமே
பச்சை மலைத் தோட்ட மணியாரமே
பாடும் புது ராகமே

வெள்ளலைக் கடலாடும் பொன்னோடமே
விளக்கின் ஒளி வெள்ளமே
செல்லும் இடம்தோறும் புகழ் சேர்க்கும் மனமே
தென்னர் குல மன்னனே
இன்று கவி பாடும் என் செல்வமே
என்றும் என் தெய்வமே

மானிலம் எல்லாமும் நம் இல்லமே
மக்கள் நம் சொந்தமே
காணும் நிலம் எங்கும் கவி பாடும் மனமே
உலகம் நமதாகுமே
அன்று கவி வேந்தன் சொல் வண்ணமே
யாவும் உறவாகுமே

அன்பு நடமாடும் கலை கூடமே
ஆசை மழை மேகமே
கண்ணில் விளையாடும் எழில் வண்ணமே
கன்னி தமிழ் மன்றமே

மாதவி கொடிப் பூவின் இதழோரமே
மயக்கும் மதுச் சாரமே
மஞ்சள் வெயில் போலும் மலர் வண்ண முகமே
மன்னர் குலத் தங்கமே
பச்சை மலைத் தோட்ட மணியாரமே
பாடும் புது ராகமே

வெள்ளலைக் கடலாடும் பொன்னோடமே
விளக்கின் ஒளி வெள்ளமே
செல்லும் இடம்தோறும் புகழ் சேர்க்கும் மனமே
தென்னர் குல மன்னனே
இன்று கவி பாடும் என் செல்வமே
என்றும் என் தெய்வமே

மானிலம் எல்லாமும் நம் இல்லமே
மக்கள் நம் சொந்தமே
காணும் நிலம் எங்கும் கவி பாடும் மனமே
உலகம் நமதாகுமே
அன்று கவி வேந்தன் சொல் வண்ணமே
யாவும் உறவாகுமே

உபயம்: கவிஞர் செயபாசுகரன்

நாலா பொறத்துல இருந்தும் காத்து வீசுது. தெக்க இருந்து வீசுறது தென்றல்ன்னு தெரியும். மத்ததெல்லாம்?

வடக்கு - வாடை
தெற்கு - தென்றல்
மேற்கு - கோடை
கிழக்கு - கொண்டல்


உபயம்: கவிப்பேரரசு வைரமுத்து

(விழா பற்றிய முந்தைய இடுகைகளுக்கு, தமிழ்விழா(Fetna) எனும் வகைப்பாட்டுச்(label) சுட்டியைச் சொடுக்கவும்!)

20 comments:

  1. பகிர்வுக்கு நன்றி நண்பா

    ReplyDelete
  2. பழமைக்கு மாறிட்டீங்க
    ஒரே நாள்ல படிக்க முடியல, மொதுவா படிச்சிடறேன், மத்த பதிவுகளை.

    ReplyDelete
  3. மறக்க முடியாத பாடல்.

    ReplyDelete
  4. மறக்க முடியுமா????

    ReplyDelete
  5. அருமையான பாடல், அருமையான் தொகுப்பு.

    சொன்ன மாதிரி இன்னும் ரெண்டு மாசத்துக்கு ஓட்டிடுவீங்க.

    ReplyDelete
  6. அடச் சே, கிரமமா உக்காந்து குறிப்பெடுத்து இடுகைகளாப் போடுறானே, பலருக்கும் போயிச் செரட்டும்னு ஒரு அக்கறை? அக்கறை இருந்த ஓட்டுகள் விழுந்திருக்கணுமே? அவ்வ்வ்....

    ReplyDelete
  7. பழமைபேசி, சந்தித்ததில் மகிழ்ச்சி. அருமையாக எழுதியிருக்கிறீர்கள். இப்பதிவுகளையெல்லாம் தொகுத்து ஒரு புத்தகமாக்கலாம். பேரவையின் மூலம் முயற்சி எடுப்போம். நன்றி!

    ReplyDelete
  8. //சுந்தரவடிவேல் said...
    பழமைபேசி, சந்தித்ததில் மகிழ்ச்சி. அருமையாக எழுதியிருக்கிறீர்கள். இப்பதிவுகளையெல்லாம் தொகுத்து ஒரு புத்தகமாக்கலாம். பேரவையின் மூலம் முயற்சி எடுப்போம். நன்றி!
    //

    நன்றிங்க, மிக்க மகிழ்ச்சி!

    ReplyDelete
  9. பகிர்வுக்கு நன்றி தோழரே. பழமையிலேயே கலக்குங்க.வடக்கு வாடை இந்தியா முழுக்க வீசுது...

    ReplyDelete
  10. Just a clarification - from the Atlanta side, the event was planned, organized and executed by ATVOC (Atlanta Tamil Vizha Organizing Committee) which is independent of GATS (Greater Atlanta Tamil Sangham). GATS also supported the event. Nandri....

    ReplyDelete
  11. மூன்று நாட்களும் அற்புதமான கவரேஜ்ங்ணா. ஒவ்வொணுக்கும் தனித்தனியா பின்னூட்டம் போட நேரம் இல்ல.. அப்பப்போ வந்து உங்ககூட பேசறேன்..

    ReplyDelete
  12. வெவ்வேறு திசைகளிலிருந்து வரும் காற்றுகளுக்கான பெயர்கள் இலங்கைத் தமிழில் எனது இப்பதிவின் பின்னூட்டத்தில் கூறப்பட்டுல்ளன, பார்க்க: http://dondu.blogspot.com/2005/02/blog-post_16.html

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  13. அன்புள்ள பழமை,

    மிகவும் புதிய வகையில், பேரவையின் விழா நிகழ்ச்சிகளை, முன் கண்டிராத வகையில், வலைப்பதிவின் மூலமாக, அவ்வவப்போது நடந்ததை நேரடியாக வெளி உலகத்திற்கு பரப்புவதோடு மட்டுமல்லாமல் இன்னும் தொடர்ந்து இனிய தமிழில் எழுதிக் கொண்டிருக்கிறீர்கள். உமது தமிழ்ப் பணிக்கு நன்றிகளும் பாராட்டுதல்களும். தொடரட்டும் உமது எழுத்தோட்டம்...

    அன்புடன்
    முத்துவேல் செல்லையா.

    ReplyDelete
  14. //
    வடக்கு - வாடை
    தெற்கு - தென்றல்
    மேற்கு - கோடை
    கிழக்கு - கொண்டல்
    //

    ஒன்பதாம் வகுப்பிலோ அல்லது பத்திலோ படித்த நினவு

    ReplyDelete
  15. //TamilAmerican said...
    அன்புள்ள பழமை,

    மிகவும் புதிய வகையில், பேரவையின் விழா நிகழ்ச்சிகளை, முன் கண்டிராத வகையில், வலைப்பதிவின் மூலமாக, அவ்வவப்போது நடந்ததை நேரடியாக வெளி உலகத்திற்கு பரப்புவதோடு மட்டுமல்லாமல் இன்னும் தொடர்ந்து இனிய தமிழில் எழுதிக் கொண்டிருக்கிறீர்கள். உமது தமிழ்ப் பணிக்கு நன்றிகளும் பாராட்டுதல்களும். தொடரட்டும் உமது எழுத்தோட்டம்...

    அன்புடன்
    முத்துவேல் செல்லையா.
    //

    அண்ணா, நீங்கெல்லாம் மிகவும் கடினப்பட்டு வேலை செய்து, ஆக்கப்பூர்வமா இருக்கீங்க... அதுக்கு முன்னாடி இது சர்வ சாதாரணம்!

    ReplyDelete
  16. //dondu(#11168674346665545885) said...
    வெவ்வேறு திசைகளிலிருந்து வரும் காற்றுகளுக்கான பெயர்கள் இலங்கைத் தமிழில் எனது இப்பதிவின் பின்னூட்டத்தில் கூறப்பட்டுல்ளன, பார்க்க: http://dondu.blogspot.com/2005/02/blog-post_16.html

    அன்புடன்,
    டோண்டு ராகவன்
    //

    நன்றிங்க ஐயா!

    ReplyDelete
  17. //nandu said...
    Just a clarification - from the Atlanta side, the event was planned, organized and executed by ATVOC (Atlanta Tamil Vizha Organizing Committee) which is independent of GATS (Greater Atlanta Tamil Sangham). GATS also supported the event. Nandri....
    //

    thanks buddy!

    ReplyDelete
  18. //நாகா said...
    மூன்று நாட்களும் அற்புதமான கவரேஜ்ங்ணா. ஒவ்வொணுக்கும் தனித்தனியா பின்னூட்டம் போட நேரம் இல்ல.. அப்பப்போ வந்து உங்ககூட பேசறேன்..
    //

    நன்றிங்க தம்பி!

    //குடந்தை அன்புமணி said...
    பகிர்வுக்கு நன்றி தோழரே. பழமையிலேயே கலக்குங்க.வடக்கு வாடை இந்தியா முழுக்க வீசுது...
    //

    இஃகி!

    ReplyDelete
  19. பழமைபேசி,

    அமெரிக்காவில் இருந்தபோது பல FETNA விழாக்களுக்கு சென்று இருக்கிறேன்.

    தங்களுடைய FETNA-2009 விழா பதிவுகளை படித்தவுடன் FETNA விழாவை நேரில் பார்த்ததது போன்று இருந்தது.

    வாழ்த்துக்கள்!

    அன்புடன்,
    -ரவிச்சந்திரன்

    ReplyDelete