7/11/2009

திரும்பிப் பார்த்து மகிழ்வதில் இருக்கும் சுகமே சுகம்!


கடுமையாக உழைத்து ஒன்றை வெற்றிகரமாக நடத்திக் காட்டிய நிகழ்ச்சி எதுவானாலும் சரி, அதைத் திரும்பப் பார்க்கும் போது கிடைக்கிற மகிழ்ச்சிக்கு அளவே கிடையாது. அது உடன்பிறந்தோரின் திருமணமாக இருக்கலாம், ஒரு விளையாட்டு நிகழ்ச்சியாக இருக்கலாம், ஒரு சுற்றுலாப் பயணமாக இருக்கலாம், எத்வாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

அந்த வகையில அட்லாண்டாவில் நடந்த வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் 22வது ஆண்டு தமிழ்த் திருவிழா என்பது என்னுடைய வாழ்க்கையில மறக்க முடியாத அந்த மூன்று நாட்கள். அதுவும் ஒவ்வொரு மணித் துளியையும் இதழியலாளனாக, அவதானித்து, உள்வாங்கி உலகெங்கும் வியாபித்திருக்கிற வாசகர்களுக்கு அளித்ததென்பது ஒரு நல்ல அனுபவம்.

பார்வையாளனாக இருந்து, நடந்தவற்றை கண்டு எழுதிய எனக்கே இவ்வளவு பெருமிதம் என்றால், விழாவை நல்லதொரு விருந்தோம்பலுடன் ஒருங்கிணைத்து நடத்தி முடித்தவர்களுக்கு எப்படி இருக்கும்? அவர்கள் சொன்னதைச் செய்து காட்டியவர்கள், இதோ அதற்கு இந்தக் காணொளியே சான்று!



நிழல்படங்களைப் பார்க்க இங்கே சொடுக்கவும்-1:


(விழா பற்றிய மற்ற இடுகைகளுக்கு தமிழ்விழா(Fetna) எனும் வகைப்பாட்டுச் சுட்டியைச் சொடுக்கவும்)

9 comments:

  1. //கடுமையாக உழைத்து ஒன்றை வெற்றிகரமாக நடத்திக் காட்டிய நிகழ்ச்சி எதுவானாலும் சரி, அதைத் திரும்பப் பார்க்கும் போது கிடைக்கிற மகிழ்ச்சிக்கு அளவே கிடையாது.//

    உண்மைதான் நண்பா

    ReplyDelete
  2. பாராட்டுக்கள் விழா நடத்தியவர்களுக்கு

    ReplyDelete
  3. வெற்றியின் மகிழ்ச்சியில் உள்ள உங்களுக்கும் , உங்கள் சக தோழர்களுக்கும் , என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...!!!


    வாழ்க வளமுடன்....!!!

    ReplyDelete
  4. 2009ம் வருசத்தை திரும்பிப் பார்க்கிறது மணியண்ணனுக்கு பலவிசயங்களில் சந்தோசத்தை தரும் வருசம் தானே.

    ReplyDelete
  5. பழமை கடுமையான
    வேலைப்பளுவின்
    காரணமாக
    தமிழ் விழா குறித்த
    அனைத்து பதிவுகளையும்
    படிக்க இயலவில்லை...

    ஆனாலும் ஓரளவு படித்தேன்.
    அருமையான, உடனுக்குடனான
    தொகுப்பு

    விழாவில் அமைத்திருந்த
    டீக்கடை புகைப்படத்தை
    அனுப்ப முடியுமா..

    எங்கள் ஊர் புத்தக திருவிழா
    போஸ்டர் இருந்த படம்

    ReplyDelete
  6. //கதிர் said...
    விழாவில் அமைத்திருந்த
    டீக்கடை புகைப்படத்தை
    அனுப்ப முடியுமா..
    //

    உடனே...

    ReplyDelete
  7. அண்ணே விழா நடத்தியவர்களுக்குப் பாராட்டு இருக்கட்டும்.... ஒவ்வோரு நாளும் அதை விரிவாக அழகாக எங்களுக்குத் தெரிவித்த உங்களுக்கு என் இயதப்பூர்வமான நன்றி.

    அப்புறம் இந்த வருஷம் எங்க அனுராதாக்கா பாட வந்துருந்தாங்கலாமே?? மொத்தக் கூட்டத்தையும் ஆட வச்சுருக்குமே எங்க அக்கா!!!

    பாப்போம் வரும் ஆண்டுகள்ல நம்பளையும் கூப்புடுறாங்களான்னு :)

    ReplyDelete
  8. காணொளிப்பிரியரே!!
    நல்ல முறையில்
    நடத்திவிட்டீர்கள்!!
    நான் பெருமைப்படுகிறேன்!!

    ReplyDelete