6/26/2009

பிரபலப் பதிவரும், நாடகமும்!

தனிமனித வாழ்க்கையில இடம்பெறுகிற நாடகத்தன்மை நல்லதா, தீமையானதா? இந்த ஒத்தைச் சொற்றொடர்லயே வில்லங்கம் ஆரம்பிச்சிடுச்சு. என்னன்னு கேக்குறீங்களா? வழக்கத்துல இதை பெரும்பாலானவங்க எப்படிக் கேப்பாங்க?? நல்லதா, கெட்டதா? கெட்டதான்னு எப்படிக் கேட்க முடியும்? கெட்டதுன்னா, கெட்டுப்போனதான்னு கேக்குற மாதிரி ஆகாதா?

ஆக, நல்லதா கெடுதியானதான்னு கேட்கலாம். அல்லது, தீமையானதான்னு கேட்குறதுதான் சரியா இருக்கும். அடுத்து நாடகத் தன்மை?! இதுக்கு உண்டான அர்த்தமே அனர்த்தமாயி, ஒரு தலைப்பு! நாடகத்தன்மை என்பது வாழ்க்கைக்குத் தேவையா? தேவையற்றதா??

என்னங்க ஐயா இது? திடீர்ன்னு ஒரு பெரியவர் வர்றாரு. அதைக் கண்டதும், இவன் எழுந்து நின்னு அடக்கமானவனா இருக்குறது போல பாசாங்கு காமிக்கிறான். இது நாடகமா?

மகனோ, மகளோ எதோ ஒரு தவறான காரியத்தை செய்துடறாங்க. தகப்பன் வந்து கேட்கும் போது, தாயானவ பெற்ற மகனையோ மகளையோ விட்டுக் கொடுக்காம சாக்கு போக்குச் சொல்லி திசை திருப்புறாங்க. இது நாடகமா?

வீதியில அவனோட அம்மணி வர்றதைப் பார்த்ததும், கையிலிருந்த வெண்குழலை வீசிட்டு சிட்டுக் குருவிய வேடிக்கை பாக்குற மாதிரி ஒரு கண்டுபாவனை. இது நாடகமா?

இந்த மாதிரி லெளகீகத்துல நிறைய சின்னச் சின்ன நிகழ்வுகள். இதெல்லாம் நாடகமா? அந்த சின்னச் சின்ன பாவனைகளும், பாசாங்குகளும் நாடகத்தன்மையா?? என்னங்க ஐயா கொடுமையா இருக்கு?? கழிப்பிடத்துக்கு போறான் ஒருத்தன். போகும் போது வெளிய போய்ட்டு கால் கழுவிட்டு வர்றேங்கறான். அப்படி அமங்கலகரமான ஒன்னைச் சொல்லாம, இங்கிதமா மங்கலச் சொல்லைப் பாவிக்கிறான். அது நாடகத்தன்மை ஆயிடுமா??

ஆகாது! ஆகாது!! ஆகாது!!! ஏன்னா நாடகம்ங்ற சொல்லுக்குண்டான பொருளையே குனிய வெச்சுக் கும்மியடிக்கிறமே, அதனாலதான்! பாசாங்கும், கண்டுபாவனையும் வாழ்க்கைக்குத் தேவையானதான்னு விவாதிக்கிறதுதான் சரியானதா இருக்கும்.

அப்ப நாடகம்ன்னா என்ன? குறித்த கால வரையறைக்குள், முதல் நிலையிலிருந்து கடை நிலை வரையிலான அத்தனை நிகழ்வுகளும், காட்சியமைப்புக்கான இலக்கணங்களை உள்ளடக்கி, தேவைப்பட்ட ரூபகங்களின் மேல் ஏற்றிச் செயல்படுத்துவது நாடகம்.

உதாரணமா சொல்லணும்ன்னா, வேலைக்காரி நாடகம். அதற்குண்டான வசனம், காட்சியமைப்பு, ரூபகங்கள் (தோற்றம்) முதலான எல்லாமே முன்கூட்டியே தீர்மானம் செய்தபடி செயல்படுத்துற ஒரு நிகழ்வு. பெரியவர் வர்றதுங்றது, எதிர்பாராத நிகழ்வு. அவரைக் கண்டவுடனே இவன் எழுந்து நிக்கிறது ஒரு பாசாங்கு, அவ்வளவுதான்!

அப்ப, அம்மா வந்த உடனே ஒருத்தன் வயித்து வலி வந்த மாதிரி நடிக்கிறானே? அது கபடநாடகம் ஆகாதா?? முன்கூட்டியே திட்டமிட்டுச் செய்திருந்தா, அது நாடகந்தான். ச்சும்மா, பாத்த உடனே இயல்பா அவன் அப்படிச் செய்திருந்தா அது பாசாங்கு காட்டி நடிக்கிற கண்டுபாவனை. அதே போல, போலியா போடுற வணக்கமும் ஒரு கண்டுபாவனைதான்!

”ஆகவே, முன்கூட்டியே திட்டமிட்டுத் தவறான தகவலை வெளிப்படுத்தும் நாடகம் போன்ற செயல் வாழ்க்கைக்குத் தேவையற்றது. இங்கிதம் கடைபிடிப்பது நாகரிகம். போலிப் பாசாங்கும், கண்டுபாவனையும் வாழ்க்கைக்கு அனாவசியமானது” அப்படீன்னு சொல்றதுதான் சரியா இருக்கும்.

ஏகத்துக்கு எல்லாத்தையும் நாடகத்தன்மைன்னு சொல்லிக் கவுத்துட முடியாது இராசா! இலக்கணமும் தோற்றமும் கலந்து வெளிப்படுத்துறது பத்து வகையான நாடகம். அதெல்லாம் என்னென்ன?? இதெல்லாம் கருவின் தன்மையப் பொறுத்தது. செறிவு, தெளிவு, சமநிலை, இன்பம், ஒழுகிசை, உதாரம், உய்த்தலில் பொருண்மை, காந்தம். வலி, சமாதிங்ற அமைதின்னு பத்து வகையான குணங்களை வெச்சி சொல்றது.

ஆமா, இங்கெங்க பிரபலப் பதிவர் வந்தாரு? எனக்கு மனநிறைவில்லாத, உடன்பாடில்லாத இடுகைகள் நிறைய இட்டிருக்காருதான்! ஆனாலும், இந்த போலிப் பாசாங்கு, கண்டுபாவனை இல்லாம மனுசன் பொளந்து கட்டுறாரே? அதெல்லாம் அவர்கிட்ட இருக்குற மாதிரித் தெரியலை. இன்னைக்கு காலையில CNN பார்த்திட்டு இருக்கும் போது, அவரோட நினைவு வந்தது, அதான் இந்த பழமை... மத்தபடி நான் யாரோ! அவர் யாரோ!! அவரோட மனவலிமையப் பார்த்துக் காதுல புகைவிட்டுக்க வேண்டியதுதான் மிச்சம்!!

30 comments:

  1. நீங்க என்னை சொல்லவில்லை என்று புரிகிறது.

    செந்தழல் ரவியை சொல்கிறீர்கள் என்றும் புரிகிறது.

    ReplyDelete
  2. நாடகம் அழகு.... கண்டுபாவனை அறுவறுப்பு

    ReplyDelete
  3. //இங்கிதம் கடைபிடிப்பது நாகரிகம்//

    :-)

    ReplyDelete
  4. /*இதெல்லாம் கருவின் தன்மையப் பொறுத்தது. செறிவு, தெளிவு, சமநிலை, இன்பம், ஒழுகிசை, உதாரம், உய்த்தலில் பொருண்மை, காந்தம். வலி, சமாதிங்ற அமைதின்னு பத்து வகையான குணங்களை வெச்சி சொல்றது.*/

    அவ்வ்வ்வ்வ்... தமிழ் அகராதி எந்தக் கடையில் கிடைக்கும்?

    ரவி ராக்ஸ்.. :-)

    ReplyDelete
  5. அருமையான விளக்கம்.... :)

    ReplyDelete
  6. அய்யய்யோ... நானும் "பிரபல" பதிவராச்சே... என்னை சொல்லியிருப்பாரோ? அவ்வ்வ்வ்வ்....

    ReplyDelete
  7. //பெரியவர் வர்றதுங்றது, எதிர்பாராத நிகழ்வு. அவரைக் கண்டவுடனே இவன் எழுந்து நிக்கிறது ஒரு பாசாங்கு, அவ்வளவுதான்!//

    நீங்க சொன்னா சரிதான் பழம

    ReplyDelete
  8. //குடுகுடுப்பை said...
    நீங்க என்னை சொல்லவில்லை என்று புரிகிறது.

    செந்தழல் ரவியை சொல்கிறீர்கள் என்றும் புரிகிறது.//

    ??????????????????????????????

    ReplyDelete
  9. இப்பத்தான் நாடகம் ஒண்ணு எழுதினேன். ஆனா நான் பிரபல பதிவர் கிடையாது...

    ஹையா... இது நானில்லை.....

    :-)))))))))))))

    ReplyDelete
  10. @@குடுகுடுப்பை

    பின்னாடி வர்றவங்களை சுத்தல்ல விடணும்ங்ற பொறுப்புணர்வு இல்லையா உங்களுக்கு? அவ்வ்வ்வ்வ்வ்......

    ReplyDelete
  11. //கதிர் said...
    நாடகம் அழகு.... கண்டுபாவனை அறுவறுப்பு
    //

    நம்மூர்க்காரவுக வெட்டு ஒன்னு, துண்டு ரெண்டுன்னு நறுக்குறாங்க பாருங்க....

    ReplyDelete
  12. //தீப்பெட்டி said...
    //இங்கிதம் கடைபிடிப்பது நாகரிகம்//

    :-)
    //

    இஃகிஃகி!

    ReplyDelete
  13. //♫சோம்பேறி♫ said...
    அவ்வ்வ்வ்வ்... தமிழ் அகராதி எந்தக் கடையில் கிடைக்கும்?

    ரவி ராக்ஸ்.. :-)
    //

    அண்ணே. என்னாண்ணே இப்பிடிக் கேக்குறீங்க.... அடுத்ததரம் எளிமையான சொல்லுல சொல்லிடிவோம்...இஃகிஃகி!

    ReplyDelete
  14. //ஆகாய நதி said...
    அருமையான விளக்கம்.... :)
    //

    நன்றிங்கோ!

    ReplyDelete
  15. //Mahesh said...
    அய்யய்யோ... நானும் "பிரபல" பதிவராச்சே... என்னை சொல்லியிருப்பாரோ? அவ்வ்வ்வ்வ்....
    //

    நீங்கதான் எனக்குப் பிரபலம். அதுல வேற சந்தேகமா?

    ReplyDelete
  16. //ஆ.ஞானசேகரன் said...
    //பெரியவர் வர்றதுங்றது, எதிர்பாராத நிகழ்வு. அவரைக் கண்டவுடனே இவன் எழுந்து நிக்கிறது ஒரு பாசாங்கு, அவ்வளவுதான்!//

    நீங்க சொன்னா சரிதான் பழம
    //

    இஃகிஃகி, என்னைக் கவுக்குறதுல என்னா ஒரு திருப்தி?!

    ReplyDelete
  17. //குடந்தை அன்புமணி said... //

    குடுகுடு வந்து குடந்தைக்கு பதில் சொல்லும்யா!

    ReplyDelete
  18. //ச்சின்னப் பையன் said...
    இப்பத்தான் நாடகம் ஒண்ணு எழுதினேன். ஆனா நான் பிரபல பதிவர் கிடையாது...

    ஹையா... இது நானில்லை.....

    :-)))))))))))))
    //

    இஃகிஃகி!

    ReplyDelete
  19. அப்போ அது நான் இல்லியா??
    அவ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  20. ///குடுகுடுப்பை said...

    நீங்க என்னை சொல்லவில்லை என்று புரிகிறது.

    செந்தழல் ரவியை சொல்கிறீர்கள் என்றும் புரிகிறது.///

    உங்கள சொல்லாததுக்கும், அவர சொன்னதுக்கும் ஆமா இதுல எதுனா உள்குத்து இல்லனா சைடுகுத்து இருக்கா???

    ReplyDelete
  21. ரொம்ப நாள் கழிச்சு இங்க வந்துருக்கேன்.. ஒரு குவளை தேனீர் கிடைக்குமா அண்னே??

    ReplyDelete
  22. வாங்க மலைக்கோட்டையார்!

    ReplyDelete
  23. இன்னாங்கோ நடக்குது இங்கே?

    ReplyDelete
  24. //ராஜ நடராஜன் said...
    இன்னாங்கோ நடக்குது இங்கே?
    //

    வாங்ண்ணா, வாங்க! நீங்கதாஞ் சொல்லோணும்!!

    ReplyDelete
  25. இன்னா சாமி... நம்ம கடைப் பக்கம் காங்கறதில்லை? :(

    ReplyDelete
  26. கவுண்டர்: அய்யா அப்போ நாங்க இல்லை...
    ரிஷி மூலம் நதி மூலம் பார்க்க கூடாது என்பார்கள் அது போலவே நாடகமும்..

    ReplyDelete
  27. //குறை ஒன்றும் இல்லை !!! said...
    கவுண்டர்: அய்யா அப்போ நாங்க இல்லை...
    ரிஷி மூலம் நதி மூலம் பார்க்க கூடாது என்பார்கள் அது போலவே நாடகமும்..
    //

    இஃகிஃகி...டமாசு...

    ReplyDelete
  28. வீதியில அவனோட அம்மணி வர்றதைப் பார்த்ததும், கையிலிருந்த வெண்குழலை வீசிட்டு சிட்டுக் குருவிய வேடிக்கை பாக்குற மாதிரி ஒரு கண்டுபாவனை. இது நாடகமா?
    //////////

    அதுதானே????????????
    (எனக்கு பழக்கமில்லை(வெண்குழல்))

    முதலில் வெண்குழல் என்று படிட்த்ததும் புரியவில்லை பிறகு மீண்டும் படித்ததுமே புரிந்தது

    ReplyDelete
  29. //பிரியமுடன் பிரபு said... //

    நல்லதுங்க பிரபு நல்லதுங்க!

    ReplyDelete