6/12/2009

தட்டச்சு எழுத்துக காத்திருக்கு!

வேலூரு சிந்திலுப்பு
அணிக்கடவு பெதப்பம்பட்டி
புக்குளத்து ரோட்டுவழி
ஒய்யாரமா உடுமலை வந்துசேர
மாரியம்மன்கோயல் வீதிவழி
அலுங்காம அன்னநடை நடந்துவர
காது லோலாக்கு குலுங்கிவர
தாவணிக்கங்கு அசைஞ்சுவர
ஊர்க்கண்ணு மொய்யுதுன்னு
குனிஞ்சதலை நிமுராம
வாறவளோட அந்த பிஞ்சுவிரலுக
பட்டுச் சொகங்கொள்ள,
தட்டச்சு எழுத்துக காத்திருக்கு!
கூட அந்த அல்லப்பார்வைக்கு இந்த
பூத்துப்போன கண்ணுகளும் பாவிமனசும்!!

27 comments:

  1. //குனிஞ்சதலை நிமுராம
    வாறவளோட அந்த பிஞ்சுவிரலுக
    படுறதுல சொகங்கொள்ள
    தட்டச்சு எழுத்துக காத்திருக்கு!//

    யாரு இந்த காலத்துல குனிஞ்ச தல நிமிராம வாராக நம்மதான் தலய குனிஞ்சுட்டு போக வேண்டியிருக்கு

    ReplyDelete
  2. //பிரியமுடன்.........வசந்த் said...
    யாரு இந்த காலத்துல குனிஞ்ச தல நிமிராம வாராக நம்மதான் தலய குனிஞ்சுட்டு போக வேண்டியிருக்கு
    //

    அஃகஃகா, அதுவுஞ் சரிதான்!

    ReplyDelete
  3. கிராமத்து பாட்டு நல்லா இருக்கு
    எப்படித்தான் யோசிப்பீங்களோ :)

    ReplyDelete
  4. //குனிஞ்சதலை நிமுராம
    வாறவளோட அந்த பிஞ்சுவிரலுக
    படுறதுல சொகங்கொள்ள
    தட்டச்சு எழுத்துக காத்திருக்கு!//

    இன்னும் நிமிராம இருக்கவங்களும் இருக்காங்களே!

    அது எங்கேன்னு எனக்கு தெரியுமே!

    அண்ணா எப்படி சிரிப்பீங்க?

    இஃகிஃகி சரிதானே ?

    ReplyDelete
  5. //RAMYA said...
    கிராமத்து பாட்டு நல்லா இருக்கு
    எப்படித்தான் யோசிப்பீங்களோ :)
    //

    சகோதரி வாங்க, நல்லா இருக்கீங்களா?

    ReplyDelete
  6. //RAMYA said...
    இன்னும் நிமிராம இருக்கவங்களும் இருக்காங்களே!

    அது எங்கேன்னு எனக்கு தெரியுமே!

    அண்ணா எப்படி சிரிப்பீங்க?

    இஃகிஃகி சரிதானே ?
    //

    இஃகிஃகி... அவுக இப்ப நெம்ப மாறிப் போனாங்க சகோதரி!

    ReplyDelete
  7. நான் எதோ பழைய நெனப்புல காலத்தை ஓட்டிட்டு இருக்கேன்... அவ்வ்வ்வ்.......

    ReplyDelete
  8. நாங்க படிக்கற காலத்திலேயே உடுமலை united states of udumalai ஆகியிருந்தது தல...,

    ReplyDelete
  9. //தாவணிக்கங்கு அசைஞ்சுவர//
    அடடா.... அடடா....

    அருமைங்கோ....

    ReplyDelete
  10. கலக்கல் சார் !! - செந்தில், தாராபுரம்

    ReplyDelete
  11. நண்பா, இப்பெல்லாம் தட்டச்சு பயிற்சி நிலையம் இருக்கா என்று தெரியவில்லையே? அப்படியே இருந்தாலும் குனிந்த தலையை நான் பார்க்கவில்லை.......

    ReplyDelete
  12. அண்ணே படத்திலே இருக்கிறது புதுசா மாட்டி இருக்கா

    ReplyDelete
  13. @@SUREஷ் (பழனியிலிருந்து)
    @@கதிர்
    @@பாவக்காய்
    @@ஆ.ஞானசேகரன்
    @@நசரேயன்



    வாழ்ந்துவந்த சுவடுகள் மட்டுமே வாழ்வின் எச்சங்கள்!
    மற்றன யாவும் இறுதியில் வெறும் துச்சங்கள்!!

    அந்த வகையில நினைவுகளை அசை போடுவதில் பங்கு கொண்ட உங்களுக்கு நன்றி! நன்றி!! நன்றி!!!

    ReplyDelete
  14. தல சத்தியமா ஒண்ணுமே புரியல... ஒழுங்கா தமிழ்ல எழுதுங்க.... ஹி ஹி ஹி

    ReplyDelete
  15. பழைய நினைவுகள் - அமசமா இருக்குங்க... நடக்கட்டும்...

    ReplyDelete
  16. //இராகவன் நைஜிரியா said...
    பழைய நினைவுகள் - அமசமா இருக்குங்க... நடக்கட்டும்...
    //

    இஃகிஃகி! நன்றிங்க!!

    //வில்லன் said...
    தல சத்தியமா ஒண்ணுமே புரியல... ஒழுங்கா தமிழ்ல
    //

    அவ்வ்வ்வ்வ்....

    ReplyDelete
  17. பாட்டு நல்லா இருக்கு...

    ReplyDelete
  18. தட்டச்சு எழுத்துக காத்திருக்கு!
    கூட அந்த அல்லப்பார்வைக்கு இந்த
    பூத்துப்போன கண்ணுகளும் பாவிமனசும்!! //

    வாங்க இளைய தொல்காப்பியரே!!

    ReplyDelete
  19. பழமைபேசி,
    பெயருக்கேற்றபடி எழுதியிருக்கிறீர்கள். தட்டச்சுப் பழக என்றாலே அதன் காலம் நம்மால் உணர முடிகிறது.

    //ஊர்க்கண்ணு மொய்யுதுன்னு
    குனிஞ்சதலை நிமுராம//

    நடப்பதை உணர்ந்தே தலை நிமிராமல் வருவதைக் கூறும் இந்த வரிகளை மிகவும் ரசித்தேன்.

    ‘அகநாழிகை‘
    பொன்.வாசுதேவன்

    ReplyDelete
  20. //பிஞ்சுவிரலுக
    படுறதுல சொகங்கொள்ள
    தட்டச்சு எழுத்துக காத்திருக்கு!//
    அடா அடா அடா .ஆட்டோகிராப் மாதிரி தோணுதே,என்ன விஷயம்?

    ReplyDelete
  21. கலக்கல் பழமைபேசியாரே..

    ReplyDelete
  22. //அப்பாவி முரு said...
    பாட்டு நல்லா இருக்கு...
    //

    நன்றிங்கோ!

    ReplyDelete
  23. //அகநாழிகை" said...
    பழமைபேசி,
    பெயருக்கேற்றபடி எழுதியிருக்கிறீர்கள். தட்டச்சுப் பழக என்றாலே அதன் காலம் நம்மால் உணர முடிகிறது.
    //

    நன்றிங்க நண்பரே! ஆனால் என்னுடைய பெயரின் விளக்கம் எனது விபரப்பட்டை அல்லது http://maniyinpakkam.blogspot.com/2009/06/blog-post_05.html இந்த இடுகையில் விபரமாகத் தரப்பட்டுள்ளது.

    // எம்.எம்.அப்துல்லா said...
    :)
    //

    அண்ணனுக்கு ஒரே சிரிப்பு!

    //ஸ்ரீதர் said... //

    இஃகிஃகி!

    //தீப்பெட்டி said...
    கலக்கல் பழமைபேசியாரே..
    //

    நன்றிங்க தீப்பெட்டியார்!

    ReplyDelete
  24. //கூட அந்த அல்லப்பார்வைக்கு இந்த
    பூத்துப்போன கண்ணுகளும் பாவிமனசும்!//

    ஐயா, பழைய நினைவுகளைக் கிளறி விட்டுட்டீங்க.. எங்கிருந்தாலும் வாழ்க !!

    நம்ம ஆளுங்க எங்கெங்கியோ இருக்காளுங்க.. நம்மளைப் பத்தி ஒரு மனசுக்குள்ள ஒரு ஓரமாவாவது நினைச்சிக்கிட்டிருப்பாங்க..

    கலங்காதீங்க தலைவா!!

    வாழ்த்துக்கள் !!

    ReplyDelete
  25. ஐய்ய்ய்ய்......... நம்ம சுப்பிரமணியபுர சுருதி....!!! செம பிகரு சார்.....!!!!!!

    ReplyDelete
  26. நீங்க கவிதைலாம் எழுதுவீங்களா!!! :)


    *** பிரியமுடன்.........வசந்த் said...
    //குனிஞ்சதலை நிமுராம
    வாறவளோட அந்த பிஞ்சுவிரலுக
    படுறதுல சொகங்கொள்ள
    தட்டச்சு எழுத்துக காத்திருக்கு!//

    யாரு இந்த காலத்துல குனிஞ்ச தல நிமிராம வாராக நம்மதான் தலய குனிஞ்சுட்டு போக வேண்டியிருக்கு***

    ஆமா அவங்களும் காலங்காலமா குனிஞ்சிட்டாங்க. இப்போ குனியுறது நம்ம "டேர்ன்" இல்லையா? :)

    ReplyDelete
  27. //Seemachu said...
    //கூட அந்த அல்லப்பார்வைக்கு இந்த
    பூத்துப்போன கண்ணுகளும் பாவிமனசும்!//

    ஐயா, பழைய நினைவுகளைக் கிளறி விட்டுட்டீங்க.. எங்கிருந்தாலும் வாழ்க !!

    நம்ம ஆளுங்க எங்கெங்கியோ இருக்காளுங்க.. நம்மளைப் பத்தி ஒரு மனசுக்குள்ள ஒரு ஓரமாவாவது நினைச்சிக்கிட்டிருப்பாங்க..

    கலங்காதீங்க தலைவா!!
    //

    அண்ணே.... ஒத்தையில இருக்கோம்... இப்ப்டியெல்லாம் கிளறி வுடுறீங்களே? அவ்வ்வ்.......

    ReplyDelete