5/20/2009

முட்டாள் ஆவதின் நிமித்தமும், ஆக்குவதின் காரணமும்...

வணக்கம் அன்பர்களே! நாம விடுப்புல இருக்கிறதின் நிமித்தம், நெடு நாட்களுக்கு அப்புறமா இன்னைக்குதான் உள்ளூர் நண்பர்களைப் பார்த்துப் பேசுற வாய்ப்பு கிடைச்சது. அப்படியே எங்க பேச்சும் ஊருப் பக்கம் திரும்புச்சுங்க. கூட இருந்த ஜனநாயகக் கட்சியோட அபிமானியான வெள்ளைச்சாமி, என்னடா நடக்குது உங்க ஊர்ல? இல்லைங்றான் ஒருத்தன், இருக்குறாருங்றான் ஒருத்தன், இதுக்கு நடுவுல இங்கத்த ஆட்களும் சும்மா இருக்காங்க. ஒன்னுமே புரியலையேன்னான்.

அது சரி, இருக்குற புடுங்கல்கள்ல அவங்களுக்கு இந்த கூத்து எல்லாம் பாக்க நேரம் ஏது? உசேன் ஐயா, நல்லபடியா வெச்சிப் பரிபாலனம் செய்துகிட்டு இருந்தாரு. வெற்றி, வெற்றின்னு உள்ள போயிட்டு, வெளில வரத் தெரியாம அவிங்க அந்தலை சிந்தலை ஆயிட்டு இருக்காங்க. அங்ககூட கருப்புக் குதிரைக இன்னைக்கு வேலையக் காமிச்சிட்டாங்களாம். அட ஆமாங்க, நம்ப ஊர்ல புலின்னா, வளைகுடாவுல அராபியக் குதிரைகதானே?! இதுகளை கருங்குதிரைகள்ன்னு வெச்சிக்கலாம், இப்ப என்ன?!

அங்க நெலமை அப்படியின்னா, இந்துகுசு மலையில செவ்வெலி புடிக்கப் போன எடத்துல, அதனோட வங்குக்குள்ள புகையுட்டு அடக்கப் பாத்தா, பக்கத்து வங்குல வெள்ளெலி வேலையக் காமிக்குதாம் இப்ப. குதிரைகபாடு சிறுபாடுன்னா, எலிகபாடு பெரும்பாடா இருக்காம். இதுல அவங்களுக்கு நம்மூர்க் கதையப் பாக்க நேரம் இல்லீங்களாம். ஆனாலும், சனங்களை நெனச்சு வருத்தப்படுறாங்களாம். ஆறுதல் சொன்னாரு, நாமளும் நன்றி சொல்லிகிட்டோம்.

முட்டாள் ஆகுறதோட நிமித்தம் என்னவா இருக்கும்? ஆமாங்க, சொல்லுறதையும், பசப்புறதையும் அப்படி அப்படியே எடுத்துகிட்டா நாம முட்டாள்தான். சித்த மெனக்கெட்டு யோசிச்சு பாத்தா அதுல இருந்து, அதாங்க, முட்டாள் ஆவுறதுல இருந்து தப்பிக்கலாம் போலத் தோணுது. சரி, ஆக்குறதுக்கு உண்டான காரணம்? பின்னாடி என்ன நடக்கும்ங்றதைப் பத்தி யோசிக்காம, அடுத்தவனை முட்டாள் ஆக்கி, உடனடிப் பலன் அனுபவிக்கிறதுதான் காரணம்.

கெடக்கிறதெல்லாங் கெடக்கட்டும், கெழவியத் தூக்கி மனையில வையுங்றது ஊர்மொழி! அந்த மாதர, நாம கொஞ்சம் இந்த ’நிமித்தம்’ ’காரணம்’, இதுக ரெண்டையும் அலசித் தொவச்சிக் காயப்போடலாம் வாங்க சித்த!

ம்ம், தமிழுக்கு வந்த சோதனை, என்ன சொல்ல? நாம பத்தாம் வகுப்பு படிக்கிறப்ப, நாங்க தமிழ்லயே ஆங்கிலம் படிச்சோம். இப்ப ஆங்கிலத்துலதானே, தமிழ் படிக்க வேண்டியதா இருக்கு?

The reason for something happening is why something happens. The cause for something happening is the factor that results in something happening. திடீர்ன்னு ஊரு எல்லையில இருந்த மரம் கீழ சாஞ்சிடுச்சு. சாஞ்சதனோட காரணம்(reason) என்னவா இருக்கும்? போதுமான வலு இல்லாதது. சாஞ்சதின் நிமித்தம்(cause), அடிச்ச சூறாவளிக் காத்தா இருக்கலாம்.

பணி நிமித்தம் காரணமாக வந்தேன்ன்னு சொல்லலாமா? பணி நிமித்தமாக வந்தேன், அதன் காரணமாகவே உங்களைச் சந்திக்க நேர்ந்ததுன்னு சொல்வது சரியா இருக்கும் இல்லீங்களா?! என்ன குழம்பிட்டீங்களா?? அப்ப சரி, என்னோட வேலை முடிஞ்சது, போயி உங்க வேலையப் பாருங்க, ஆனா மறுக்காவும் வந்து போகணும், செரியா?!


15 comments:

  1. பணிநிமித்தம் நான் கிளம்பவேண்டி இருக்கு அதன் காரணமா நான் இப்ப போய்ட்டு அப்புறமா வர்றேன்.

    :))

    ReplyDelete
  2. Thideernu ooru ellaiyil iruntha maram saanchiruchu-reasons for it are good.

    ReplyDelete
  3. இந்தப் பொடி வெச்சிப் பேசுறதப் பத்தி ஒரு இடுகை போடுங்க தம்பி.:P

    ReplyDelete
  4. //பாலா... said...
    இந்தப் பொடி வெச்சிப் பேசுறதப் பத்தி ஒரு இடுகை போடுங்க தம்பி.:P//

    ஹா... ஹா... சரிதான்!

    ReplyDelete
  5. பணியின் காரணமாக நான் செல்லவேண்டி இருக்கு நண்பா, அப்பரமா வரேனுங்க..

    ReplyDelete
  6. மணி ,பனி நிமித்தமாக பிணி உற்றதால் சனி யன்று பணி க்கு வர வில்லை.,

    ReplyDelete
  7. பணி நிமித்தமாக நீங்க இவ்வளவு நாள் பதிவு போடாததன் காரணங்களையும், பயண நிமித்தமாக நான் பின்னூட்டம் போட முடியாத காரணங்களையும், விதி நிமித்தமாக மக்கள அவைகளை படிக்க முடியாத காரணத்தாலும்.... அம்மாடி... ஆளை விடுங்க !!

    ReplyDelete
  8. எல்லாரையும் இப்படி பணி நிமித்தம்னு ஓட ஓட விரட்டறீங்களே

    ReplyDelete
  9. //எம்.எம்.அப்துல்லா said...
    பணிநிமித்தம் நான் கிளம்பவேண்டி இருக்கு அதன் காரணமா நான் இப்ப போய்ட்டு அப்புறமா வர்றேன்.

    :))
    //

    அஃகஃகா, அண்ணே, கிளப்புறீங்க!!


    //Muniappan Pakkangal said...
    Thideernu ooru ellaiyil iruntha maram saanchiruchu-reasons for it are good.
    //

    thanks buddy!!!

    //ஆ.ஞானசேகரன் said...
    பணியின் காரணமாக நான் செல்லவேண்டி இருக்கு நண்பா, அப்பரமா வரேனுங்க..
    //

    சரிங்க தோழரே!!!

    //தேனீ - சுந்தர் said...
    மணி ,பனி நிமித்தமாக பிணி உற்றதால் சனி யன்று பணி க்கு வர வில்லை.,
    //

    அஃகஃகா, வெகு நேர்த்தியா சொல்லிட்டீங்க... இந்த வெக்கையிலும் பனியா? இஃகிஃகி!!

    // சின்ன அம்மிணி said...
    எல்லாரையும் இப்படி பணி நிமித்தம்னு ஓட ஓட விரட்டறீங்களே
    //

    இஃகிஃகி! டமாசு!! டமாசு!!!

    ReplyDelete
  10. //பாலா... said...
    இந்தப் பொடி வெச்சிப் பேசுறதப் பத்தி ஒரு இடுகை போடுங்க தம்பி.:P
    //

    //குடந்தை அன்புமணி said...
    //பாலா... said...
    இந்தப் பொடி வெச்சிப் பேசுறதப் பத்தி ஒரு இடுகை போடுங்க தம்பி.:P//

    ஹா... ஹா... சரிதான்!
    //

    பாலாண்ணே, குடந்தையார்,

    வணக்கம்! அதெல்லாம் போட்டு நெம்ப நாள் ஆச்சுதுங்ளே...

    பொடி வெச்சுப் பேசுறதுன்னா என்ன?

    ReplyDelete
  11. // Mahesh said...
    பணி நிமித்தமாக நீங்க இவ்வளவு நாள் பதிவு போடாததன் காரணங்களையும், பயண நிமித்தமாக நான் பின்னூட்டம் போட முடியாத காரணங்களையும், விதி நிமித்தமாக மக்கள அவைகளை படிக்க முடியாத காரணத்தாலும்.... அம்மாடி... ஆளை விடுங்க !!
    //

    அண்ணா, நல்லபடியா ஊர் போயிச் சேந்தீங்ளா? அனுப்புன படமெல்லாம் நெம்ப நல்லா இருந்துச்சுங்...

    அது நிமித்தமா, வெகு நன்றிகள் உரித்தாக்குறேனுங்!

    ReplyDelete
  12. இதுக்கு தான் நான் பணிக்கே செல்வது இல்லை

    ReplyDelete
  13. //நசரேயன் said...
    இதுக்கு தான் நான் பணிக்கே செல்வது இல்லை
    //

    அப்புறம் என்ன செய்யுறீங்க தளபதி?

    ReplyDelete
  14. நிமித்தம் என்பதற்கு இப்பதாங்க பொருள் தெரிந்தது. நன்றிங்க. உணவு உட்கொள்ள வேண்டியதன் நிமித்தமா நான் இப்ப கிளம்புறேனுங்க.

    ReplyDelete
  15. //குறும்பன் said...
    நிமித்தம் என்பதற்கு இப்பதாங்க பொருள் தெரிந்தது. நன்றிங்க. உணவு உட்கொள்ள வேண்டியதன் நிமித்தமா நான் இப்ப கிளம்புறேனுங்க.
    //

    இஃகிஃகி, நாந்தான் நன்றி சொல்லோணும்!

    ReplyDelete