4/16/2009

’பேச்சி’யுடன் ஒரு பொழுது!

தனது வயலுக்குள் மகிழ்வாய் நுழைந்த பாலகன் பழமைபேசியைக் கண்டு, கூரைச் சோறு கண்ட காகம் போன்றதொரு விரைவில், அவனது செல்ல நாய் பேச்சி ஓடோடி வந்தது. தன் வயலுக்குள் காலடி வைத்த குதூகலத்துடனும், தன் செல்லத்தைக் காணுகிற மகிழ்வுடனும் பேச்சியை நோக்கி குதியாட்டம் இட்டவாறு ஓடுகிறான் பழமைபேசி.

எதிரில் ஓடி வந்த பேச்சி, வாலை வாலை ஆட்டியவாறு முகமலர்ச்சியாய் வந்த வேகம் குறையாமல் முன்னங் கால்களை முன்னீட்டி, பின்னங் கால்களில் சிறுவன் பழமைபேசியின் உயரத்திற்கு நின்று, தனது முன்னங் கால்கள் இரண்டையும் அவன் மேல் வாஞ்சையாய்ப் பதிக்க, இவன், “என்றா பேச்சி, என்னடா பண்ணிட்டு இருக்கே? அப்பாரோட ஒத்தைச் செருப்பை எங்கடா கொண்டு போயி ஒளிச்சு வெச்சே படுவா ராசுகோலு?” என்றான் சிரித்தபடியே.

பேச்சியும், நாக்கை வெளித் தள்ளிக் கொண்டு, மூச்சிரைத்தவாறு தலையை மேலும் கீழும் சில முறை அசைத்து விட்டு, குடுகுடுவென அருகில் இருந்த கம்பங் காட்டிற்குள் சென்று, கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த ஒத்தைச் செருப்பைக் கவ்வியவாறு வாலை ஆட்டிக் கொண்டு வந்து, குழைந்து நின்றது. இவனுக்கோ அது கண்டு, மட்டில்லாத மகிழ்ச்சி.

“அப்பாரய்யா! அப்பாரய்யா!! காணாமப் போன உங்க செருப்பைக் கொண்டாந்து குடுத்துட்டான் பேச்சி, உங்க செருப்பு கெடச்சிருச்சீ!” என்று கத்தியபடியே, அவனது வயலில் இருக்கும் இரட்டைச் சாய்ப்பு சாளையை நோக்கி ஓடினான். பேச்சியும் அவனுடன் ஓடியது. ஆனால் அங்கு அப்பாரய்யனைக் காணாமல் ஏமாற்றமுற்றான் பாலகன் பழமைபேசி. ”என்றா பேச்சி, அப்பாரய்யனைக் காணம்?” என வினவியபடியே, தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்த வேலனிடம் சென்றான்.

“ஏனுங்க எங்க அப்பாரய்யன்?”

“கண்ணூ, அப்பாரய்யன் சிக்கல்நூத்து போன அப்பத்தாவைக் கூட்டியாறதுக்கு நம்ம சவாரி வண்டீல மயிலைகளைப் பூட்டீட்டி போயிருக்காங்க கண்ணூ. இருட்டு கட்டுறதுக்குள்ள வாறமின்னு சொல்லிட்டுப் போனாங்க!”

“ம்ம்... நேத்தைக்கு ஊருக்குள்ள வந்த அப்பாரய்யன் ஒத்தைச் செருப்பை பேச்சி கொண்டு போய் எங்கயோ போட்டுட்டான்னு சொல்லுச்சு. நாங் கேட்டதுமே, பேச்சி போயிக் காட்டுக்குள்ள இருந்த செருப்பைக் கொண்டாந்து குடுத்துட்டானுங்ண்ணா!”

“அவன் செரியான குறும்பு கண்ணூ, வாய்க்கா மேட்டுல வாறவிங்க போறவிங்களை எல்லாம் கடிச்சிப் போடுறான்!”

“ஏண்டா பேச்சி அப்பிடியெல்லாம் பண்றே?”

“ப்ளொள், ப்ளொள்” என்று செல்லங் கொஞ்சியது பேச்சி.

“செரிச்செரி, வாடா சாளைக்கு போகுலாம்!”

“ப்ளொள்!”

“அண்ணா, நான் சாளைக்கு போயி பேச்சிக்கி சோறு போட்டுட்டு வாறன்!”

“செரி கண்ணூ, பாத்துப் போ, எல்லாம் இப்பத்தான் தண்ணி பாஞ்சி ஈரமாக் கெடக்குது!”


சிறுவன் பழமைபேசியும், செல்லப் பிராணியான பேச்சியும் வயக்காட்டில் இருந்த பொழிகளின் மீது ஓடுவதும், நடப்பதுமாக மீண்டும் சாளைக்கே திரும்பி வந்தார்கள். சாளை இரட்டைச் சாய்ப்பு கொண்டது, பக்கவாட்டில் கால்நடைகளுக்கு என ஒரு ஒத்தைச் சாய்ப்பும் இறக்கப்பட்டு இருக்கும். இவன் முன்வாசலுக்கு சென்று பார்க்கவே, முன்கதவு பூட்டப்பட்டு இருந்த்து. அது கண்டு திண்ணையின் மேல் ஏறி, மேலே உள்ள சட்ட்த்தில் வைக்கப்பட்டு இருந்த சாவியை எடுத்து, கதைவைத் திறந்து கொண்டு சாளைக்குள் சென்றான். ஆனால், பேச்சி மட்டும் வாயிற் படியிலேயே வாஞ்சையுடன் குழைந்து கொண்டு நின்றது.

உள்ளே சென்றவன், பேச்சிக்கென்று வழமையாக வைக்கப்பட்டிருக்கும் தூக்குப் போசியில் ஏதாவது இருக்கிறதா என்று பார்த்தான். அதில், சாமைச் சோறும், மோரும் கலந்த கூழ் இருந்தது கண்டு உற்சாகமடைந்து, தூக்குப் போசியை எடுத்துக் கொண்டு வெளியில் வந்தான். பேச்சியும் அது கண்டு துள்ளிக் குதித்தது. நேராக பக்கவாட்டில் இருந்த சாளைக்குள் சென்று, பேச்சிக்கென வைக்கப்பட்டு இருந்த தட்டில் சாமைக் கூழை ஊற்றி, “பேச்சி வாடா, வா!” என்றழைத்தான். பின், அவனுக்குப் பிடித்த அவனுடைய நுங்கு வண்டி அங்கு இருக்க்க் கண்டு, கவட்டிக் கோலால் அதை உருட்டி விளையாட ஆரம்பித்தான் பழமைபேசி.

பேச்சி, நாக்கால் நக்கி கூழைப் பருகுவதும், வாஞ்சையுடன் எசமானனின் அருகே வந்து வாலை ஆட்டிக் குழைவதும், மீண்டும் வந்து கூழைப் பருகுவதுமென இருந்தது. அதற்குப் பசியாறவும் வேண்டும், அதேவேளையில் வந்த எசமானனும் தோழனுமாய் ஆனவனுடனும் இருக்க வேண்டும் என்கிற கட்டாயம்.

அது கண்டு, “டே பேச்சி, நான் உன்னிய உட்டுப் போட்டு எங்கியியும் போகுலடா, போ, பூராக் கூழும் இருந்து குடிச்சிட்டு வாடா!” என்றான் பழமைபேசி. ஆனாலும், அது இவனிடம் வந்து இரண்டு சுற்று சுற்றுவதும், பிறகு கூழ்க் குடிக்கப் போவதுமாகவே இருந்தது.

இவன் சாளைக்கு முன்னால் இருந்த களத்து மேட்டில், நுங்கு வண்டியை உருட்டி விளையாடுவதில் மும்முரமானான். களத்துமேடும், அதற்கேற்றாற்ப் போல் சாணத்தால் மெழுகி, வெகுசுத்தமாக இருந்தது. மனம் முழுக்க குதூகலமே குடிகொள்ள, தென்னை மற்றும் இலவம்பஞ்சு மரங்கள் அசைந்தாட, தென்றல் தவழ்ந்து வர, இயற்கையின் வெண்சாமர வீசலில் மனம் விட்டு, பாட ஆரம்பித்தான் பாலகன் பழமைபேசி.


வண்டியின்னா வண்டி வேலூரு வண்டி
வெரசக்கூடி வேகம் போற வண்டி

மாமனுக்கு பீடிவாங்கப் போகும் வண்டி
மேடுபள்ளம் கடந்துநல்லாப் போகும் வண்டி
கல்லமுட்டா வாங்கநல்லாப் போகும் வண்டி
கவிட்டியால தள்ளநல்லாப் போகும் வண்டி

வண்டியின்னா வண்டி வேலூரு வண்டி
வெரசக்கூடி வேகம் போற வண்டி

ஆத்தா பலகாரம் சுமக்கும் வண்டி
தோப்பு காயெல்லாம் சுமக்கும் வண்டி
நோம்பிக்கு சிக்கநூத்து போற வண்டி
மயிலைகூடப் போட்டி போடும் வண்டி

வண்டியின்னா வண்டி வேலூரு வண்டி
வெரசக்கூடி வேகம் போற வண்டி

வண்டி ஓட்டியதில் சலித்துப் போன சிறுவன் பழமைபேசி, தாகம் தணிக்க மீண்டும் சாளைக்குள் சென்றான். அவனது அப்பத்தா எப்போதும் வைத்திருக்கும் கம்பங்கூழ்ப் பானையைத் துழாவி, அதில் இருந்து கொஞ்சமாக கம்பந்தண்ணீரைச் சிறுதாழியில் ஊற்றி, அதில் சிறிதளவு உப்பும் கலந்து, பின்னர் திண்ணையில் அமர்ந்து மாந்தினான். பாலகன் பழமைபேசி மாந்தும் அழகினை வாலை ஆட்டியபடியே, கண் பிறழாமல் ஒரு விதமான லயிப்பில் ஆழ்ந்து, நெகிழ்ந்து, இரசித்துக் கொண்டு இருந்தது பேச்சி!

39 comments:

  1. நாந்தான் மொதல்ல! படிச்சுட்டு வர்றேன்!

    ReplyDelete
  2. நாய் லொள்-நு தான குறைக்கும்....உங்க பேச்சி அமெரிக்க பேச்சியோ? ப்ளொள்-நு குறைக்குது?

    ReplyDelete
  3. வழக்கம் போலவே இந்த பகுதியும் மிக மிக‌ அருமை! சாளை,மாந்தினான் இதெல்லாம் புதுசால்ல இருக்கு?

    ReplyDelete
  4. மீண்டும் பழமை பேசும் பழமைபேசி

    ReplyDelete
  5. அண்ணா...

    படிக்க படிக்க ஆசையா இருக்கு...

    கூழுக்கும், நாயிக்கும்...

    நாய் கூட கிடைக்கும்., ஆனால்

    கூழ்?

    ReplyDelete
  6. நல்லா இருக்கு...

    "சாளை" அப்படினா வரப்புங்கலா?

    ReplyDelete
  7. நெம்ப அருமையா இருக்குது ........

    // மாமனுக்கு பீடிவாங்கப் போகும் வண்டி ///


    இதெல்லாம் நெம்ப டூ-மச்...........

    ReplyDelete
  8. நல்லா இருக்குங்க.. அந்த கூழ் எப்டி இருக்கும்னு தெரியாமலே சுவையா இருக்குங்க.. அது எதுக்கு பேச்சின்னு ஆம்பளைக்கு பேரு வைக்கிறது.. :-??

    ReplyDelete
  9. தினமொரு சுவை கூடிட்டே போவுது. அசத்தல்.

    ReplyDelete
  10. அருமையா வந்திருக்குங்க பழமைபேசி..

    //"சாளை" அப்படினா வரப்புங்கலா?//சாளை என்பது தென்னை அல்லது பனை ஓலைகளை வைத்துக் கட்டப்பட்ட வீடு போன்ற ஒரு அமைப்பு.. எங்க ஊர் பக்கம், சில சமயம் சுற்றியிருக்கும் சுவர் கூட ஓலைகளாலேயே பின்னப்பட்டிருக்கும்.. பெரும்பாலும் விவசாய விளை பொருட்களை சேமித்து வைக்க பயன்படும்...

    ReplyDelete
  11. வயக்காட்டுல ஈரமன்னுல
    வெறுங்காலோட நடந்துக்கிட்டு
    பயிர்களை தடவிக்கொடுத்துட்டே ஒரு சுத்து வந்திட்டு
    அப்பிடியே சோக்காளிகளோட
    பம்புசெட்டுல ரவுசு பண்ணி குளிச்சிட்டு
    வவுறு முட்ட ஆளுக்கு ரெண்டு இளனி வெட்டு குடிச்சிட்டு
    சலுப்பு தீர வேப்பமரத்து நிழல்ல கவுத்து கட்டில்ல தூங்கி எந்திருச்சு
    வந்தாமாதிரி இருக்கு.
    "உங்க இடுகை"

    மறந்துபோன பல கொங்கு சொற்களை நினைவூட்டியதற்கு நன்றி!

    ReplyDelete
  12. /அது எதுக்கு பேச்சின்னு ஆம்பளைக்கு பேரு வைக்கிறது/..கலகலப்ரியா

    அட நம்ம பேச்சிமுத்துவ அப்படி சொல்லி இருப்பாங் கலகலப்ரியா.

    ReplyDelete
  13. சாளை cāḷai : (page 1396) சாளை² cāḷai
    , n. < šālā. Hut, hovel; குடிசை. சாளை போட்டான். (சங். அக.).

    மாந்து-தல் māntu- : (page 3160) māntu-
    , 5 v. tr. 1. To eat, feed; உண்ணுதல். மடமந்தி... வாழைத் தீங்கனி மாந்தும் (தேவா. 909, 5). 2. To drink; குடித்தல். தேம்பிழி நறவ மாந்தி (கம்பரா. நாட்டுப். 8).

    பேச்சிபேச்சிமுத்து: பேச்சி
    நாச்சிமுத்து: நாச்சி
    மயில்சாமி: மயிலு
    கனகராசு: கனகு

    இப்பிடி நிறைய....

    ReplyDelete
  14. //நிலாவும் அம்மாவும் said...

    நாய் லொள்-நு தான குறைக்கும்....உங்க பேச்சி அமெரிக்க பேச்சியோ? ப்ளொள்-நு குறைக்குது?///

    அது பழமைபேசி வீட்டு நாய் அப்படிதான் குறைக்கும்..

    ReplyDelete
  15. நல்லா இருக்குண்ணே

    ReplyDelete
  16. // கயல் said...
    நாந்தான் மொதல்ல! படிச்சுட்டு வர்றேன்!
    //

    வாங்க கவி கயல் அவ்ர்களே! நன்றி!!

    ReplyDelete
  17. //நிலாவும் அம்மாவும் said...
    நாய் லொள்-நு தான குறைக்கும்....உங்க பேச்சி அமெரிக்க பேச்சியோ? ப்ளொள்-நு குறைக்குது?
    //

    இஃகிஃகி! வாஞ்சையா கத்துற நாய், வீரியம் இல்லாம ப்ளொள்ன்னுதாங்க எங்க ஊர்ல கத்துறது...

    ReplyDelete
  18. //ஆ.ஞானசேகரன் said...
    மீண்டும் பழமை பேசும் பழமைபேசி
    //

    மீண்டும் அல்ல சிங்கை ஞானியாரே, எப்பவும்!!

    ReplyDelete
  19. //அப்பாவி முரு said...
    நாய் கூட கிடைக்கும்., ஆனால்

    கூழ்?
    //

    இது கேள்வி?! இஃகிஃகி!!

    ReplyDelete
  20. பேச்சி பேச்சி பெருமையுள்ள பேச்சி !!

    ReplyDelete
  21. //தென்னவன். said...
    நல்லா இருக்கு...

    "சாளை" அப்படினா வரப்புங்கலா?
    //

    பதி, பதில் சொல்லிட்டாருங்களே?! நன்றிங்க!!

    ReplyDelete
  22. //லவ்டேல் மேடி said...
    நெம்ப அருமையா இருக்குது ........

    // மாமனுக்கு பீடிவாங்கப் போகும் வண்டி ///

    இதெல்லாம் நெம்ப டூ-மச்...........
    //

    மாமனுக பீடி வாங்கியாறச் சொல்லி அனுப்புறதுதானுங்களே?

    ReplyDelete
  23. //கலகலப்ரியா said...
    நல்லா இருக்குங்க.. அந்த கூழ் எப்டி இருக்கும்னு தெரியாமலே சுவையா இருக்குங்க.. அது எதுக்கு பேச்சின்னு ஆம்பளைக்கு பேரு வைக்கிறது.. :-??
    //

    நன்றிங்க, பாலாண்ணன் பதில் சொல்லிட்டாரு...இஃகிஃகி!

    ReplyDelete
  24. //பாலா... said...
    தினமொரு சுவை கூடிட்டே போவுது. அசத்தல்.
    //

    நன்றிங்கண்ணே!

    ReplyDelete
  25. //பதி said...
    அருமையா வந்திருக்குங்க பழமைபேசி..

    //

    சாளை குறித்த தகவலுக்கும், வருகைக்கும் நன்றிங்க!

    ReplyDelete
  26. //கணினி தேசம் said...
    மறந்துபோன பல கொங்கு சொற்களை நினைவூட்டியதற்கு நன்றி!
    //

    நன்றிங்க இராசு!

    ReplyDelete
  27. //Mahesh said...
    பேச்சி பேச்சி பெருமையுள்ள பேச்சி !!
    //

    வாங்ண்ணா!! வாங்!!

    ReplyDelete
  28. //உருப்புடாதது_அணிமா said...
    நல்லா இருக்குண்ணே
    //

    நன்றிங்க மலைக்கோட்டையார்!

    ReplyDelete
  29. இதைப் படிக்கும் போது சிறு வயதில் என் பாட்டியின் ஊரில் (வாதவநேரி -பரமக்குடி அருகில்) நான் இருந்த நினைவு வருகிறது.

    ReplyDelete
  30. ரொம்ப அருமையா எழுதி இருக்கீங்க அண்ணா!!

    உண்மையாவே பழமைதான் அனைத்தும்.

    ReplyDelete
  31. கூழின் ருசி அப்படியே ருசிக்கத் தூண்டுகின்றது.

    உங்களின் எழுத்தில் இருந்தது.

    ReplyDelete
  32. // ஸ்ரீதர் said...
    இதைப் படிக்கும் போது சிறு வயதில் என் பாட்டியின் ஊரில் (வாதவநேரி -பரமக்குடி அருகில்) நான் இருந்த நினைவு வருகிறது.
    //

    நன்றிங்க, வணக்கமுங்க!!

    ReplyDelete
  33. "’பேச்சி’யுடன் ஒரு பொழுது!"

    நான் புறவால வந்து படிக்கிறேன் சாமி

    ReplyDelete
  34. வழக்கம்போல அசத்தல்ங்க..

    இந்தத் தொடரை கண்டிப்பா பிரதியெடுத்து பாதுகாத்து வைக்கணும்..

    பேச்சி சாப்புடும்போது இடையில திரும்ப வாலாட்டிக்கிட்டு வந்ததை அழகா சொல்லியிருக்கீங்க.. சின்ன செயல்தான்.. ஆனால் அதில் நாயின் நன்றியுணர்வு அருமையாக வெளிப்படுகிறது.. நாங்களும் ‘ஜிம்மி'ன்னு ஒரு நாய் வெச்சிருந்தோம்.. அதோட நன்றியுணர்வும் நம்ம மேல வெச்சிருக்கும் பாசமும் விலைமதிப்பற்றது..

    அசத்தலுங்க..

    ReplyDelete
  35. ஆஹா ஊர் கதை அருமையா இருக்குங்க‌

    ReplyDelete
  36. சாளை cāḷai : (page 1396) சாளை² cāḷai
    , n. < šālā. Hut, hovel; குடிசை. சாளை போட்டான். (சங். அக.).

    நல்ல ஊர் கதை எழுதறீங்க !! நானும் உங்க ஊறி பக்கம் தான் தாராபுரம் !!.
    இந்த தமிழ் dictionary எந்த website-nnu சொல்ரீங்கலா ?

    ReplyDelete
  37. //பாவக்காய் said...
    இந்த தமிழ் dictionary எந்த website-nnu சொல்ரீங்கலா
    //

    நன்றிங்க.

    http://dsal.uchicago.edu/dictionaries/tamil-lex/

    ReplyDelete
  38. கண்ணுக்குளேயே நிக்குது எல்லாம். கலக்குங்க தம்பீ

    ReplyDelete