4/09/2009

மூத்த பதிவர், அண்ணன் சீமாச்சு அவர்கட்கு வாழ்த்துகள்!

ஐந்தாண்டு காலமாய், பதிவுலகில் பவனி வரும் அண்ணன் சீமாச்சு அவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாகவும், அவர் இட்ட இடுகைக்கு எதிர் இடுகையாகவும் இடுவது இது.

கேட்டுத் தெரிஞ்சுகிட்டா தப்பில்லை! இது அண்ணன் அவர்கள் சொன்னது. ஆக, சந்தேகம் வருவது இயல்பு. அவன் ஒரு சந்தேகப் பிராணி என்று எதிர்மறை நோக்கில் இகழக் கேட்டு இருப்பீர்கள். ஆனால், அப்படி இகழத் தேவை இல்லை அன்பர்களே!

அடிக்கடி ஐயமுறுபவன், பின்னாளில் அறிவாளி! படிக்கும் குழந்தைகளாகட்டும், பணியிடத்தில் இருக்கும் பணியாளனாகட்டும் ஐயம் மேலிடுவது இயல்பு. அதே வேளையில், நம்பிக்கை இன்றி ஒருவரைக் கூர்ந்து நோக்குங்கால் அது தவறு, அது வாழ்வில் மகிழ்வைக் கொல்லும்.

ஆங்கிலத்திலே சொல்வோமானால், doubt and suspicious are two different elements. தாய்த் தமிழிலும் அதேதான் நண்பர்காள்! வாழ்வில் ஐயமும், அசுகையும் இரு வேறு அம்சங்கள். சந்தேகப் பிராணியாக இருப்பது நன்று! அசுகைப் பிராணியாய் இருப்பது நன்றன்று!!

சரி, இனி இடுகையின் தலைப்புக்கு வருவோம். அண்ணன், விரைவில் பதிவுலகில் ஐந்தாண்டு காலத்தைக் கடக்கப் போகிறார். வாழ்த்துகள்! ஏன், பதிவுகளின் எண்ணிக்கை வெகு குறைவாய் இருக்கிறது. சுவராசியம் கூட்டுவதில் வல்லவரான தாங்கள், பாராமுகமாய் இருந்து, இடுகைகள் இடாமல் இருப்பதற்குக் கண்டனங்கள்!! இனியாவது, அண்ணன் அவ்வப்போது இடுகைகள் இட்டு, பதிவுலகுக்கு பொலிவூட்டுவார் என நம்புவோமாக!!!


கேளும் கிளையுங் கெட்டோர்க்கு இல்லை!

31 comments:

  1. பூச்சுவேல முடியலனு தெரியுது. ஆனாலும் டவுட்ல டவுட் வருது. நல்ல தகவல்.

    ReplyDelete
  2. அசூயைனு சொல்றது அசுகைதானுங்களா?

    ReplyDelete
  3. //பாராமுகமாய் இருந்து, இடுகைகள் இடாமல் இருப்பதற்குக் கண்டனங்கள்!! //


    நானும் தெரிவிக்கிறேன் கண்டனங்களை இப்பொழுது இங்கு...! :))

    ReplyDelete
  4. மொத்தமே 77 இடுகைதான் இருக்கு. இதுல 5 வருசமாம்..

    ஆனாலும் அண்ணன் நூறாயிரம் நண்பர்களை சம்பாதிச்சிருப்பார். என் மனசுக்கு ஒரு நல்ல அண்ணன் கிடைச்சாப்ல. ராஜா நல்லா இருக்கியான்னு கேட்கும்போதே பல கஷ்டம் மறந்து போயிரும்.

    ReplyDelete
  5. நானும் கண்ணடிக்கிறேன்:-))

    ReplyDelete
  6. // பாலா... said...
    அசூயைனு சொல்றது அசுகைதானுங்களா?
    //

    அண்ணே, பிழைத் திருத்தத்துக்கு நன்றி. அசுகையும், அசூயையும் கிட்டத்தட்ட ஒன்னுதான், ஆனா வேற வேற.

    அசுகை - நம்பிக்கை இல்லாம ஒருத்தரைப் பாக்குறது

    அசூயை - நம்பிக்கை இல்லாமலும், குரோதமாவும் பாக்குறது, அசுரப்பார்வை

    சோம்பேறித்தனம் மாதிரி, அசுகைத்தனம்...

    ReplyDelete
  7. சீமாச்சு அவர்கள் பதிவை மிகச் சமீபத்தில்தான் பார்த்தேன், ரசித்தேன்.

    மிக மிக மூத்த பதிவர், பதிவர்களின் பிதாமகர் என்று சொல்லலாம், அவரை வாழ்த்த வயதில்லை, அதனால் வணங்குகின்றேன். (பதிவுலகத்திற்கு நான் சிறியவன் தானே?)

    ReplyDelete
  8. :))

    சீமாச்சு அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். ஞாபகமூட்டியதற்காக பழமைபேசிக்கு நன்றிகள் :-))

    ReplyDelete
  9. சீமாச்சுவை அறிமுகப் படுத்தியதற்கு நன்றி..! (நியாயமா பார்த்தா அண்ணன் சீமாச்சுதான் நன்றி சொல்லணும்.. ஹிஹி..)

    ReplyDelete
  10. நானும் கண்டிக்கிறேன். :-)(சும்மாங்காட்டி)

    ReplyDelete
  11. //அடிக்கடி ஐயமுறுபவன், பின்னாளில் அறிவாளி!//

    ஐய்யா... பின்னாளில் நான் அறிவாளி...

    ReplyDelete
  12. விடுங்க... சீமாச்சு அண்ணன் அவர் சொந்த ஊரான மாயாவரம் வரும்போது மணிசங்கர் அய்யரிடம் புடுச்சுக் குடுத்துருவோம்.

    (இதுக்கு மேல அவருக்கு தண்டனைதர எனக்குத் தெரியவில்லை.

    ReplyDelete
  13. ஒரு மூத்த பதிவாளரை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி!

    அதுச‌ரி!
    //அடிக்கடி ஐயமுறுபவன், பின்னாளில் அறிவாளி!//
    எங்க‌ பாக்க‌முடியுது உங்க‌ள‌ மாதிரி ந‌ல்ல‌வுங்க‌ள‌? இப்ப‌ கூட‌ பாருங்க‌ உங்க‌ளுக்கு தெரியுது, ஆனா ம‌த்த‌வுங்க‌ளுக்கு எப்போதான் புரியுமோ? ம்ம்ம்....

    அப்புற‌ம் ஜீவ‌காரூண்ய‌ம் இது த‌மிழா? இல்லையினா அதுக்கு ச‌ம‌மான‌ த‌மிழ் வார்த்தை என்ன‌ங்க‌?

    ReplyDelete
  14. இராகவ் அண்ணா சீமாச்சு அண்ணா உங்களுக்கு தம்பி:-))

    எனக்கு 1 வருஷம் சீனியர் எங்க மதிப்பிற்கினிய சீமாச்சு அண்ணன்:-))

    ReplyDelete
  15. //கயல் said...
    அப்புற‌ம் ஜீவ‌காரூண்ய‌ம் இது த‌மிழா? இல்லையினா அதுக்கு ச‌ம‌மான‌ த‌மிழ் வார்த்தை என்ன‌ங்க‌?
    //

    நிச்சமயமாத் தமிழ் அல்ல!
    ஆத்மகிருபைங்றது அதுக்கு இணையான தமிழ்ச் சொல்.

    அடுத்து உங்க கேள்வியில, ஒரு பிழை இருக்கு.

    //இல்லையினா அதுக்கு//

    அல்லன்னா, அதுங்றதுதான் சரி.

    என்னோட முந்தைய இடுகைகள்ல எதோ ஒன்னுல இதுக்கான மேலதிகத் தகவல் இருக்கும், பாருங்க.

    சொ. செ. சூ...இஃகிஃகி!

    ReplyDelete
  16. \\ எம்.எம்.அப்துல்லா said...
    விடுங்க... சீமாச்சு அண்ணன் அவர் சொந்த ஊரான மாயாவரம் வரும்போது மணிசங்கர் அய்யரிடம் புடுச்சுக் குடுத்துருவோம்.

    (இதுக்கு மேல அவருக்கு தண்டனைதர எனக்குத் தெரியவில்லை
    \\

    அப்து என்ன இது சின்ன பிள்ளை தனம். ஜஸ்ட் லைக் தட் அவரு எங்க மணிசங்கர் அய்யர் , ராம்குமார் எம் எல் ஏ கிட்ட போன்ல பேசிடுவார். இவங்க எல்லாம் தான் இவருக்கு பயப்படுவாங்க! அய்யரை தான் பிடிச்சு அண்ணாகிட்ட கொடுக்கனும்:-))

    ReplyDelete
  17. ஆங்!! கேட்க‌ ம‌ற‌ந்துட்டேன்! ப‌திவ‌ருக்கும் பதிவாள‌ருக்கும் என்ன‌ங்க‌ வேறுபாடு? வேறுபாடு ஒன்னுமில்ல‌னா விட்டுருங்க‌! இருந்தா போன பின்னூட்ட‌த்தில‌ ப‌திவாள‌ருன்னு போட்ட‌ பிழையை ம‌ன்னிச்சிடுங்கோ!:-)

    ReplyDelete
  18. //அய்யரை தான் பிடிச்சு அண்ணாகிட்ட கொடுக்கனும்:-))

    //

    அடக் கிரகமே...ஹா...ஹா...ஹா..

    ReplyDelete
  19. // அபி அப்பா said...

    இராகவ் அண்ணா சீமாச்சு அண்ணா உங்களுக்கு தம்பி:-))

    எனக்கு 1 வருஷம் சீனியர் எங்க மதிப்பிற்கினிய சீமாச்சு அண்ணன்:-))
    //

    அய்யா அவர் பதிவுகளை மட்டும் தான் படிச்சு இருக்கேன். அது சமீபகாலமாகத்தான் படிக்கின்றேன்.

    வலை உலகத்திற்கு நான் இளையவன் தானே?

    ReplyDelete
  20. \\ அபி அப்பா said...

    \\ எம்.எம்.அப்துல்லா said...
    விடுங்க... சீமாச்சு அண்ணன் அவர் சொந்த ஊரான மாயாவரம் வரும்போது மணிசங்கர் அய்யரிடம் புடுச்சுக் குடுத்துருவோம்.

    (இதுக்கு மேல அவருக்கு தண்டனைதர எனக்குத் தெரியவில்லை
    \\

    அப்து என்ன இது சின்ன பிள்ளை தனம். ஜஸ்ட் லைக் தட் அவரு எங்க மணிசங்கர் அய்யர் , ராம்குமார் எம் எல் ஏ கிட்ட போன்ல பேசிடுவார். இவங்க எல்லாம் தான் இவருக்கு பயப்படுவாங்க! அய்யரை தான் பிடிச்சு அண்ணாகிட்ட கொடுக்கனும்:-))\\

    ஆஹா.. அப்ப நான் சொன்னது சரிதான். பெரியவர் தான் போலிருக்கு. எனக்கு வயதுதான் அதிகம். அவருக்கு அனுபவம் அதிகம்.

    ReplyDelete
  21. மூத்த பதிவர், அண்ணன் சீமாச்சு அவர்கட்கு வாழ்த்துகள்!
    //அடிக்கடி ஐயமுறுபவன், பின்னாளில் அறிவாளி!//
    அடிக்கடி அடிவாங்குறவன், பின்னாளில் ...............

    ReplyDelete
  22. அண்ணனை வாழ்த்தியவர்களுக்கும், இன்னும் நிறைய இடுகைகள் இட வேண்டுமென்கிற வகையில சும்மாவாக கண்டனம் தெரிவித்த நல்ல உள்ளங்களுக்கு மிக்க நன்றி!

    ReplyDelete
  23. ஜீவ‌காரூண்ய‌ம்:

    ஜீவன் என்பது உயிர்
    காருண்யம் என்பது கருணை

    ஜீவகாருண்யம்னா "உயிர்களிடத்தில் கருணை " அப்படின்னு பொருள் கொள்ளலாமா ?!

    பழமைபேசி அண்ணா தான் இந்த ஐயத்தை தீர்த்து வைக்கணும்.

    நல்ல விளக்கம் அசுகைக்கும்...ஐயத்துக்கும்,

    அப்புறம் சீமாச்சு சார் நிறைய பதிவு போடாததுக்கு உங்களோட சேர்ந்து நான் கண்டனம் தெரிவிக்க முடியாது. நிறைய எழுதறதை விட நிறைவா எழுதறது தான் சரின்னு நினைச்சிருக்கலாம்.என்ன இருந்தாலும் சீனியர் ஆச்சே !!! :)

    ReplyDelete
  24. //அப்து என்ன இது சின்ன பிள்ளை தனம். ஜஸ்ட் லைக் தட் அவரு எங்க மணிசங்கர் அய்யர் , ராம்குமார் எம் எல் ஏ கிட்ட போன்ல பேசிடுவார். இவங்க எல்லாம் தான் இவருக்கு பயப்படுவாங்க! அய்யரை தான் பிடிச்சு அண்ணாகிட்ட கொடுக்கனும்:-))//

    // எம்.எம்.அப்துல்லா said...
    //அய்யரை தான் பிடிச்சு அண்ணாகிட்ட கொடுக்கனும்:-))

    //

    அடக் கிரகமே...ஹா...ஹா...ஹா..//

    பிடிச்சிக் கொடுக்க ஐயர் என்ன பூச்சாண்டியா ? இல்ல சீமாச்சு சார் தான் பூச்சாண்டியா? என்னப்பா நடக்குது இங்க? ஹா ...ஹா...ஹா!!!???

    ReplyDelete
  25. அன்பு பழமைபேசி ஐயா, உங்க ஆதரவுக்கு ரொம்ப நன்றி. அபிஅப்பா சொல்லித்தான் இந்தப் பதிவைப பார்த்தேன். உங்கள் அன்பை நினைச்சு பிரமிச்சிப் போயிட்டேன்.

    அடிப்படையில் நான் எழுத்தாளர் கிடையாது. மரத்தடி குழுமத்துல எழுத் ஆரம்பிச்சேன். அப்படியே ப்ளாக்கும் ஆரம்பிச்சி 5 வருஷம் ஆயிடிச்சி.

    இளா தம்பி சொன்ன மாதிரி .. எழுதிப் பழகத் தேவையில்லாததாலும், இந்த 5 வருஷத்தில் நான் சம்பாதிச்ச உறவுகள் அதிகம். எப்பயாவது எழுதறதுதான். இனிமேல் அடிக்கடி எழுத முயற்சி பண்றேன்..

    எல்லாருடைய அன்புக்கும் நன்றி. உங்கள் வாசகர்களுக்கும் என்னை அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி..

    ReplyDelete
  26. ஐந்து ஆண்டுகளாக எழுதிவருகிறாரா? வாழ்த்துகள்!

    ReplyDelete
  27. //வில்லன் said...
    மூத்த பதிவர், அண்ணன் சீமாச்சு அவர்கட்கு வாழ்த்துகள்!
    //அடிக்கடி ஐயமுறுபவன், பின்னாளில் அறிவாளி!//
    அடிக்கடி அடிவாங்குறவன், பின்னாளில் ...............
    //

    வாங்க அண்ணாச்சி.... அடியாத மாடு படியாது!

    ReplyDelete
  28. //கயல் said...
    ஆங்!! கேட்க‌ ம‌ற‌ந்துட்டேன்! ப‌திவ‌ருக்கும் பதிவாள‌ருக்கும் என்ன‌ங்க‌ வேறுபாடு
    //

    பெரியவங்க, Registrar, Bloggerங்றதுக்கு முறையே பதிவாளர், பதிவர்ன்னு சொல்லி வெச்சிருக்காங்க....

    ReplyDelete
  29. //Seemachu said...
    அன்பு பழமைபேசி ஐயா, உங்க ஆதரவுக்கு ரொம்ப நன்றி. அபிஅப்பா சொல்லித்தான் இந்தப் பதிவைப பார்த்தேன்.
    //

    இல்லேண்ணா நம்ம பக்கத்துக்கு வந்திருக்க மாட்டீங்கல்ல? அவ்வ்வ்வ்........

    //அன்பு பழமைபேசி ஐயா,//

    this is three much.... :-o)

    ReplyDelete
  30. //அடிக்கடி ஐயமுறுபவன், பின்னாளில் அறிவாளி!//
    ஆத்தா நான் பாஸாயிட்டேன்..!

    ReplyDelete