4/07/2009

பாமா இயம்பினதும், பழமைபேசி பம்புனதும்!!!

நேற்றைக்கு அறைகுறைன்னா என்னன்னு அப்பிச்சி விளக்கங் கொடுத்தாரு. அப்ப அறைதல்ங்ற சொல்லே பேசுறதுதானேன்னு, கனவில் கவி காளமேகம் தொடர் இடுகைக்கு மூலகர்த்தாவான மகேசு அண்ணன் சொன்னாரு. அதான் இன்னைக்கு எப்பிடியெல்லாம், பேசுறதை, தமிழ் வகைப்படுத்தி இருக்குன்னு ஒரு அலசல்! இஃகிஃகி!!


அசைத்தல்: அடுத்தவங்களை நோகடிக்கிற மாதிரி சொல்றது
அறைதல்: வெட்டொன்னு துண்டு ரெண்டுன்னு கண்டிப்பா சொல்றது
அதிர்த்தல்: அரற்றுதல்ன்னும் சொல்றது, மிரளவைக்குற மாதிரி சொல்றது

அளவளாவுதல்: சாவகாசமா, பலதும் பகிர்ந்துகிறமா மாதிரிச் சொல்லாடுறது.
இசைத்தல்: இசைவு, சம்மதங்ற மாதிரி சொல்றது
இறுத்தல்: பதில் சொல்றது
இயம்புதல்: உடனே, டகால்ன்னும் துரிதமாவும் சொல்றது
உரைத்தல்: நெடுநேரம் தொடர்ந்து சொல்லிட்டு இருக்குறது.
உளறுதல்: ஒன்னுக்கொன்னு தொடர்பில்லாம சொல்றது.
ஓதுதல்: அறிவிப்புகளையும், பாடல்களையும் சொல்றது.
மொழிதல்: சொல்ல வேண்டியதை, முறைப்படி சொல்றது.
யாத்தல்: கணக்கு, சூத்திரம், இலக்கணங்களை கோரிவையா சொல்றது.
வசனித்தல்: உரையை, ஏற்ற இறக்கத்தோடயும் அங்க அசைவுகளோடயும் சொல்றது.
விடு(த்)தல்: முறைப்படி அழைப்பைச் சொல்றது.
விள்ளுதல்: முறைச்சிப் பகைக்கிறா மாதிரி எதனா சொல்றது.
விளம்புதல்: வெளிப்படையா ஒன்னைச் சொல்றது.
விளித்தல்: முறையா ஒருத்தரை, முறை வெச்சி சொல்றது.
கதைத்தல்: கோர்வையா சொல்றது.
கழறுதல்: உறுதியா சொல்றது.
கிளத்துதல்: புரியும்படியா சொல்றது.
கூறுதல்: கூற்றுகளைச் சொல்றது.
சாற்றுதல்: வெளியுலகத்துக்கு திறந்த மனதாச் சொல்றது.
செப்புதல்: ஒருத்தர் பேசினதுக்கு மறுமொழி சொல்றது.
சொல்லுதல்: சொற்களை உச்சரிக்கிறது.
நவிலுதல்: மனமுருகி, வாஞ்சையோட சொல்றது.
நுவலுதல்: மரியாதையும் பணிவும் கலந்து சொல்றது.
நுதலுதல்: ஒன்னைக் குறிச்சி சொல்றது.
நொடித்தல்: கீழயும் மேலயும் எக்குத்தப்பாச் சொல்றது.
பறைதல்: ஏகத்துக்கும் தொடர்பில்லாமச் சொல்றது.
பகருதல்: முத்தாய்ப்பாச் சொல்றது.
பிதற்றுதல்: தன்னை உயர்த்திச் சொல்றது.
பினாத்துதல்: முட்டாள்தனமா சொல்றது.
பீற்றுதல்: வீம்புக்குன்னே சொல்றது.
புலம்புதல்: துயரமா, தொடர்ந்து சோர்ந்து போய்ச் சொல்றது.
பேசுதல்: மனசுல தோணுறதை மத்தவங்களுக்கு சொல்றது.

ஏசுதல்: மத்தவங்களை குறைபாடாச் சொல்றது.
பொழிதல்: சரமாரியாத் தொடர்ந்து சொல்றது.
போற்றுதல்: புகழ்ந்து சொல்றது.
முழங்குதல்: உயர்ந்த குரல்ல, உறுமுற மாதிரிச் சொல்றது.



அதென்ன பாமா இயம்பினதும், பழமைபேசி பம்புனதும்? அது ஒன்னும் இல்லைங்க, நான் ஒரு நாள் ஆடி மாசம் தூரி ஆடுறதுக்கு ஆலமரத்தடிக்கு போயிருந்தேன். அந்த இடத்துல வெச்சி, பாமா படக்குனு, எனக்கு உன்னைப் பிடிச்சிருக்குன்னு இயம்ப, நான் பம்பு பம்புன்னு பம்ப, ஒரே களேபராமப் போச்சுங்க. அது இனி எந்த ஊர்ல இருக்கோ, என்னவோ?! யாருக்குத் தெரியும்...


32 comments:

  1. //அந்த இடத்துல வெச்சி, பாமா படக்குனு, எனக்கு உன்னைப் பிடிச்சிருக்குன்னு இயம்ப, நான் பம்பு பம்புன்னு பம்ப, ஒரே களேபராமப் போச்சுங்க. அது இனி எந்த ஊர்ல இருக்கோ, என்னவோ?! யாருக்குத் தெரியும்...//

    அண்ணே சின்ன வயசுல நடந்ததை அப்பிடியே, மனசுல வச்சிருக்கீங்களே பரவாயில்லை.

    அப்பிடியே அண்ணியோட மெயில் ஐ. டி குடுத்திங்கன்னா...

    போட்டுகுடேய்ய்ய்ய்ய்...

    ReplyDelete
  2. //அது இனி எந்த ஊர்ல இருக்கோ, என்னவோ?! //

    உங்குத்தமா.. எங்குத்தமா.. யாரெ நானும் குத்தஞ்சொல்ல...

    அழகி பாட்டு எங்கியோ கேக்குற மாதிரியில்ல..

    உங்க வூட்டுக்காரங்களுக்குப் போன் போடலாமின்னு இருக்கேன்.. வெளியிலே பேசித் தீத்துக்கலாமா?

    சீமாச்சு...

    ReplyDelete
  3. ஒரு ச‌ந்தேக‌ம் ந‌ண்ப‌ரே.....ப‌ள‌மை பேசுத‌ல் ன்னு ஒரு வார்த்தை இருக்குங்க‌ளே..அதுக்கு அர்த்த‌ம் chatting தானேங்க‌

    ReplyDelete
  4. நீங்க வடிவாக் கதைச்சி மொழியறதுக்கு நன்றி நவிலுறதா நுவலுறதா தெரியல. நன்றி(போற்றிட்டேன்)

    ReplyDelete
  5. சும்மா! அதிருதுங்கோ!! மிரள வைக்குது உங்க தமிழ் சொல் வகைப்பாடு!!

    ReplyDelete
  6. அப்போ "அரைகுறை" நா என்ன அண்ணாச்சி? "அறைகுறை" என்பது சரியா!! விளக்கவும்.

    ReplyDelete
  7. உங்களுக்கு அழைப்பு விடுக்கிறேன். எனது வலைக்கு... விடுகதைக்கு விடை தருக!

    ReplyDelete
  8. நன்றி மணியாரே... தமிழ் எவ்வளவு அழகு !!!

    ReplyDelete
  9. //அப்பாவி முரு said...
    //அந்த இடத்துல வெச்சி, பாமா படக்குனு, எனக்கு உன்னைப் பிடிச்சிருக்குன்னு இயம்ப, நான் பம்பு பம்புன்னு பம்ப, ஒரே களேபராமப் போச்சுங்க. அது இனி எந்த ஊர்ல இருக்கோ, என்னவோ?! யாருக்குத் தெரியும்...//

    அண்ணே சின்ன வயசுல நடந்ததை அப்பிடியே, மனசுல வச்சிருக்கீங்களே பரவாயில்லை.

    அப்பிடியே அண்ணியோட மெயில் ஐ. டி குடுத்திங்கன்னா...

    போட்டுகுடேய்ய்ய்ய்ய்...
    //

    அட...தம்பி மொகத்துல என்னா மகிழ்ச்சி?!

    ReplyDelete
  10. //Seemachu said...
    //அது இனி எந்த ஊர்ல இருக்கோ, என்னவோ?! //

    உங்குத்தமா.. எங்குத்தமா.. யாரெ நானும் குத்தஞ்சொல்ல...

    அழகி பாட்டு எங்கியோ கேக்குற மாதிரியில்ல..

    உங்க வூட்டுக்காரங்களுக்குப் போன் போடலாமின்னு இருக்கேன்.. வெளியிலே பேசித் தீத்துக்கலாமா?

    சீமாச்சு...
    //

    அண்ணே...வெளிலயே வெச்சிக்கிடலாம்... அவிங்க அம்மா, மகள்ன்னு கூட்டமா வேற இருக்காங்க? இந்த நேரத்துல வேணாம்ண்ணே?! இஃகிஃகி!!

    ReplyDelete
  11. // இய‌ற்கை said...
    ஒரு ச‌ந்தேக‌ம் ந‌ண்ப‌ரே.....ப‌ள‌மை பேசுத‌ல் ன்னு ஒரு வார்த்தை இருக்குங்க‌ளே..அதுக்கு அர்த்த‌ம் chatting தானேங்க‌
    //

    ஆமாங்க, என்னோட பெயர் கூட அதான், பழமைபேசி. என்னோட விபரப்பட்டைக்கு(profile), போயிப் பாருங்க... வெவரம் ஏற்கனவே பதிஞ்சி வெச்சிருக்கேன்...

    ReplyDelete
  12. //பாலா... said...
    நீங்க வடிவாக் கதைச்சி மொழியறதுக்கு நன்றி நவிலுறதா நுவலுறதா தெரியல. நன்றி(போற்றிட்டேன்)
    //

    அண்ணே, நன்றிங்க அண்ணே!

    ReplyDelete
  13. //கயல் said...
    சும்மா! அதிருதுங்கோ!! மிரள வைக்குது உங்க தமிழ் சொல் வகைப்பாடு!!
    //

    வாங்க கயல்... எல்லாப் புகழும் தமிழுக்கே!!

    ReplyDelete
  14. //எட்வின் said...
    அப்போ "அரைகுறை" நா என்ன அண்ணாச்சி? "அறைகுறை" என்பது சரியா!! விளக்கவும்.
    //

    வாங்க எட்வின்... கொஞ்சம் இதுக்கு முன்னாடி இடுகையப் படிச்சுப் பாருங்களேன்.... நன்றிங்க!

    ReplyDelete
  15. //குடந்தைஅன்புமணி said...
    உங்களுக்கு அழைப்பு விடுக்கிறேன். எனது வலைக்கு... விடுகதைக்கு விடை தருக!
    //

    எதோ எனக்குத் தோணினதை மறுமொழி இட்டாச்சுங்க...

    ReplyDelete
  16. //Mahesh said...
    நன்றி மணியாரே... தமிழ் எவ்வளவு அழகு !!!
    //

    ஆமாங்க, ஆமாங்க...

    ReplyDelete
  17. // இய‌ற்கை said...
    ஒரு ச‌ந்தேக‌ம் ந‌ண்ப‌ரே.....ப‌ள‌மை பேசுத‌ல் ன்னு ஒரு வார்த்தை இருக்குங்க‌ளே..அதுக்கு அர்த்த‌ம் chatting தானேங்க‌
    //

    ஆமாங்க, என்னோட பெயர் கூட அதான், பழமைபேசி. என்னோட விபரப்பட்டைக்கு(profile), போயிப் பாருங்க... வெவரம் ஏற்கனவே பதிஞ்சி வெச்சிருக்கேன்...

    //
    அதுக்கு "ழ‌" வ‌ருங்க‌ளா? இல்ல‌ "ள‌" வா?

    ReplyDelete
  18. //அவிங்க அம்மா, மகள்ன்னு கூட்டமா வேற இருக்காங்க? இந்த நேரத்துல வேணாம்ண்ணே?! //

    இப்போ புரியுது. வாரம் தப்பாம பொட்டி தட்ட கிளம்பறது ஏன்னு.

    //தூரி ஆடுறதுக்கு ஆலமரத்தடிக்கு போயிருந்தேன். அந்த இடத்துல வெச்சி, பாமா படக்குனு, எனக்கு உன்னைப் பிடிச்சிருக்குன்னு இயம்ப, நான் பம்பு பம்புன்னு பம்ப, ஒரே களேபராமப் போச்சுங்க. //

    தூரி ஆடுற வயசுல பாமா சொன்னத இப்போ இப்பிடி பிட்ட போட்டாலும் உங்க தப்புத்தான், இல்ல பம்முற வயசுலதான் சொன்னாங்கன்னா அந்த வயசுல தூரி ஆடப் போனதும் உங்க தப்புத்தான்.

    ReplyDelete
  19. //தூரி ஆடுற வயசுல பாமா சொன்னத இப்போ இப்பிடி பிட்ட போட்டாலும் உங்க தப்புத்தான், இல்ல பம்முற வயசுலதான் சொன்னாங்கன்னா அந்த வயசுல தூரி ஆடப் போனதும் உங்க தப்புத்தான்.//

    பாமா வுக்காக.. ஒரு பாலா வந்து புடிச்சிட்டாரு பாருங்க..

    சீமாச்சு..

    ReplyDelete
  20. அண்ணே கிளப்புங்க

    ReplyDelete
  21. //அதென்ன பாமா இயம்பினதும், பழமைபேசி பம்புனதும்? அது ஒன்னும் இல்லைங்க, //

    அது யாரு பாமா..... எங்க "தலைய" பம்மா வைக்குறது... என்ன சார் லவ் பண்ணுற பொண்ணா எனக்கு மட்டும் சொலிருங்க

    ReplyDelete
  22. //நான் ஒரு நாள் ஆடி மாசம் தூரி ஆடுறதுக்கு ஆலமரத்தடிக்கு போயிருந்தேன். //

    தூரி ஆடுறதுன்னா என்ன தல!!!!!!!!!!!!!

    ReplyDelete
  23. ஒழுங்கா தமிழ்ல பதிவு போடுங்க

    தூரி தும்மல் அப்படின்ன்னு. ஒழுங்கா ஊஞ்சல்னு அழகா தமிழ்ல எழுதலாம்ல.

    அதுபோல இயம்ப இமையம்னு..... ஒழுங்கா சொன்னான்னு தமிழ்ல எழுதலாம்ல.....

    திருதிகுங்க இல்ல திருத்த வைப்போம்.......

    ReplyDelete
  24. //அது இனி எந்த ஊர்ல இருக்கோ, என்னவோ?! //

    ஞாபகம் வருதே ஞாபகம் வருதே ஞாபகம் வருதே!!!!!

    முதல் முதலாக அடித்த காதல்............... ஹி ஹி ஹி

    ReplyDelete
  25. //இய‌ற்கை said...
    அதுக்கு "ழ‌" வ‌ருங்க‌ளா? இல்ல‌ "ள‌" வா?
    //

    பழமைதாங்க....

    ReplyDelete
  26. திண்ணைக்கு வந்த உங்க எல்லாருக்கும் நன்றிங்கோ!!!

    ReplyDelete
  27. எனக்கு என்னமோ சந்தேகம்.. எங்க பழமை இந்த தமிழ் புதையலை கண்டு பிடிச்சிங்க.. பேசாம மொத்தமா ஒரு பிரதி எடுத்து விற்கலாமே.. (பின்னூட்டம் இடுபவர்களுக்கு ஒரு பிரதி இலவசம்..)

    ReplyDelete
  28. //கலகலப்ரியா said...
    எனக்கு என்னமோ சந்தேகம்.. எங்க பழமை இந்த தமிழ் புதையலை கண்டு பிடிச்சிங்க.. பேசாம மொத்தமா ஒரு பிரதி எடுத்து விற்கலாமே.. (பின்னூட்டம் இடுபவர்களுக்கு ஒரு பிரதி இலவசம்..)
    //

    அஃகஃகா! ஒரு பிரதியா இருந்தா நானே சொல்லிடுவேன்....இந்த புத்தகம்ன்னு... பல புத்தகங்கள் + கொஞ்சமா ஊர் நினைவுகள்

    ReplyDelete
  29. நல்லதா போச்சி.. எல்லாத்தையும் கோர்த்து ஒரு நூல் வெளியிடுங்க.. ஆக்கம் தொலைபேசின்னு.. அவ்வ்.. மன்னிக்கவும்.. பழமைபேசின்னு போடுங்க.. நாம book review ல.. இந்த பழமை பேசிய blog காலத்தில இருந்தே நமக்கு தெரியும்னு பெருமைப் பட்டுக்கலாம்ல..

    ReplyDelete
  30. // கலகலப்ரியா said...
    நல்லதா போச்சி.. எல்லாத்தையும் கோர்த்து ஒரு நூல் வெளியிடுங்க.. ஆக்கம் தொலைபேசின்னு.. அவ்வ்.. மன்னிக்கவும்.. பழமைபேசின்னு போடுங்க.. நாம book review ல.. இந்த பழமை பேசிய blog காலத்தில இருந்தே நமக்கு தெரியும்னு பெருமைப் பட்டுக்கலாம்ல..
    //

    அதுக்கெல்லாம் ஆதரவு வேணும்... திரட்டுற திராணி நம்மகிட்ட இல்லீங்களே? அதான்...வலைப்பதிவுல, அப்படியே எழுதி காலத்தை ஓட்டிட்டு, அப்படியே மண்டையப் போட வேண்டியதுதான்....

    ReplyDelete
  31. ம்ம்ம்முயற்சி திருவினையாக்கும்..!

    ReplyDelete
  32. //கலகலப்ரியா said...
    ம்ம்ம்முயற்சி திருவினையாக்கும்..!
    //

    நன்றிங்க!

    ReplyDelete