4/29/2009

360 பாகையில்!

வணக்கம் அன்பர்காள்! வாழ்க்கையில் பணிச்சுமை கூடுவதும் குறைவதும் இயல்புதானே? அதற்காக சளைத்து விட முடியுமா என்ன?!

யோகாசனப் பயிற்சியில் அந்த 95 வயதுப் பெரியவர் வெகு சிரத்தையாக ஈடுபட்டிருந்த நேரத்தில், அந்த வழியாக சென்ற ஒரு இளைஞன்,

“தாத்தா, எதுக்கு இந்த வயசுல முடிஞ்சும் முடியாம இதெல்லாம் செய்துட்டு இருக்கீங்க?”

“எனக்காகதாம்ப்பா செய்துட்டு இருக்கேன்!”

“?!?!”

அதே போல, நேற்றைக்கு இங்கு Buffalo, NYல் அலுவலகத்தில் இருக்கும்போது, சக அமெரிக்க நண்பரான Don Russell, வேறொரு இந்திய நண்பரைப் பார்த்து,

“Hey Sunil, in which room are we suppossed to meet?"

"One thousand thirty five!"

"wwwwwhat?"

"One Thousand... Thirty Five!"

உரத்த குரலில் "wwwwhat??"


எனக்கா சிரிப்புத்தாங்க முடியவில்லை, அதே வேளையில் இதையெல்லாம் அவதானித்துக் கொண்டிருந்த Mike Tirone என்பவர் சொல்கிறார்,

“See Don, this is Globalization age, we should think in 360 degrees man.... he means Ten Thirty Five, you know?!"

பின் உரையாடல் இது குறித்துத் தொடரவே, இறுதியில் “Knowledge doesn't matter anymore, it is just that one should have ability to think in 360 degrees and adopt to the circumstance!" என்ற கருத்தோடு நிறைவுற்றது.

அபிமானத் தலைவன் சொல்வது வேதவாக்கு, பிடித்த எழுத்தாளர் எழுதுவதே எழுத்து என்று இருந்தால், "நமக்கு வாய்ப்பது எத்தனை பாகை?" என்று எனக்குள் யோசிக்க முயலுகிறேன்....


16 comments:

  1. //“எனக்காகதாம்ப்பா செய்துட்டு இருக்கேன்!”

    “?!?!”//

    நானும் இதையே போட்டுக்கறேன்:)

    ReplyDelete
  2. உரையாடலின் கருத்து மட்டுமே புரிந்தது.

    ஆனா 1035 அறை எண்ணா?

    ஓ!இந்த 5 நட்சத்திர விடுதிகளில் ஒரு தளத்தில முதல் இரண்டு இலக்கம் விட்டு 35ம் ரூம் நம்பர்ங்கிற மாதிரியா?

    ReplyDelete
  3. //உரையாடலின் கருத்து மட்டுமே புரிந்தது.

    ஆனா 1035 அறை எண்ணா?
    //

    ஆமாங்க அண்ணா!

    ReplyDelete
  4. உள்ளேன் போட்டு புதுசா ஆரம்பிக்கிறேன்

    ReplyDelete
  5. ஹும்ம்.. விளக்கம் நல்லா இருக்கு

    ReplyDelete
  6. //"நமக்கு வாய்ப்பது எத்தனை பாகை?"//

    ஒரே பாகை
    ’தலை’ப் பாகையோ?

    ReplyDelete
  7. ஐ .....!! நானுமும் உங்க பதிவ 360 டிகிரீல படுச்சு பாத்தனுங்கோ....!! நெம்ப அருமையா இருந்துது.......!!!

    ReplyDelete
  8. //அபிமானத் தலைவன் சொல்வது வேதவாக்கு, பிடித்த எழுத்தாளர் எழுதுவதே எழுத்து என்று இருந்தால், "நமக்கு வாய்ப்பது எத்தனை பாகை?"//

    சுயமாக சிந்தித்தால் 360 பாகை, இல்லாட்டி 0 (360 ம் தலைவனுக்கும் அல்லது எழுத்தாளனுக்குமே).

    ஏதோ புரிஞ்சமாதிரி எழுதியிருக்கேன் புரியலைன்னாலும் கடினபட்டு புரிஞ்சுக்குங்க :-)))

    ReplyDelete
  9. //குறும்பன் said...
    ஏதோ புரிஞ்சமாதிரி எழுதியிருக்கேன் புரியலைன்னாலும் கடினபட்டு புரிஞ்சுக்குங்க :-)))//

    நேர்த்தியா எழுதிட்டு, அவையடக்கம்?! இஃகிஃகி!!

    ReplyDelete
  10. //நசரேயன் said...
    உள்ளேன் போட்டு புதுசா ஆரம்பிக்கிறேன்
    //

    ஆமா, எங்க ஆளே காணோம் இவ்ளோ நாளா?

    ReplyDelete
  11. //பாலா... said...
    //"நமக்கு வாய்ப்பது எத்தனை பாகை?"//

    ஒரே பாகை
    ’தலை’ப் பாகையோ?
    //

    இஃகிஃகி!!

    ReplyDelete
  12. //லவ்டேல் மேடி said...
    ஐ .....!! நானுமும் உங்க பதிவ 360 டிகிரீல படுச்சு பாத்தனுங்கோ....!! நெம்ப அருமையா இருந்துது.......!!!
    //

    நன்றீங்கோ....

    ReplyDelete
  13. கழுத்து சுளுக்கிடுச்சு :)))))))))

    ReplyDelete
  14. கடைசி வரிகள் சிந்திக்க வைக்கிறது அண்ணே...

    ReplyDelete
  15. //Mahesh said...
    கழுத்து சுளுக்கிடுச்சு :)))))))))
    //

    360ல யோசிக்கச் சொன்னா, அதுலயும் யாரோ சொன்னாங்கன்னு 360ல பாக்குறீங்களே?! அப்ப திருகுவலி வரத்தான செய்யும்?! இஃகிஃகி!!!

    ReplyDelete
  16. //Sriram said...
    கடைசி வரிகள் சிந்திக்க வைக்கிறது அண்ணே...
    //

    நன்றிங்க தம்பி!

    ReplyDelete