3/27/2009

மாப்பு மாடசிங்கமே, ஏன்டா உனக்கு இந்த காந்தல்?

நம்ம மாப்பிள்ளை மாடசிங்கம் இருக்கானே, நொம்ப நல்ல பையன்! என்ன, அப்பப்ப அவனுக்கு திரி அவுஞ்சி போயிரும். ஆமுங்க, காரசாரமாப் பேசிப் பத்த வெச்சி விடணும். ஆங்கில மொழிக்கு பரிஞ்சு பேசியும், தமிழை நொந்துகிட்டும் பிராணானை வாங்குவான். போன வாரத்துல Montrealல்ல இருக்குற சிநேகிதனைப் பத்திப் பேசுனமுங்களா?! இவன் அவன் இல்லீங்க. இவன் இப்ப பெங்களூர்ல குப்பை கொட்டிட்டு இருக்கான். கெட்டிக்காரப் பைய. இவன் எப்பவும் அறிவியல்ல சத(100%)ந்தான்.

அப்படித்தாங்க ஒரு நாள் இவன், நாங்க படிச்ச பாடத்துல இருந்து சில சொல்லுகளைச் சொல்லி, இதுகளுக்கெல்லாம் தமிழ்ல என்னன்னு கேட்டுப் பிராணனை வாங்கினான். இப்பவே, எனக்கு அறிவுங்றது நெம்பக் குறைச்சல். அப்ப, எம்புட்டு இருந்திருக்கும்ன்னு நீங்களே யூகம் பண்ணிகிடுங்க. சரி, இவனுக்கு இப்ப பதில் சொல்லிப் பழைய கடனைத் தீர்த்துகிடலாம் வாங்க!

தமிழ்லயும், 'இப்ரூ'வுலயுந்தான் எதையும் நுணுக்கமாச் சொல்ல முடியுன்னு ஆராய்ச்சி செய்து, பெரியவங்க சொல்லி இருக்காங்க. Tamil is the far most sensitive language in which one could express as it is! இந்த வாசகம் நான் சமீபத்துல படிச்சது. இது வெறும் ஏட்டளவுலதானே இருக்கு? கி.பி 1820ல அகில உலக தமிழர் மக்கள் தொகை, ஒரு கோடின்னும் அதே புத்தகத்துல சொல்லி இருக்காங்க. இன்னைக்கு ஒரு கோடி, ஆறு கோடிக்கு மேல ஆயிடுச்சி. இங்கதாங்க எனக்கு பெரிய வியப்பு?! 2000 ஆண்டுகளுக்கு முன்னாடி, தமிழர்களோட மக்கள் தொகை என்ன?? ஒரு சில இலட்சங்கள்தானா??

அந்த ஒரு சில இலட்சம் மக்களை வெச்சிட்டு, ஒரு மொழியை உண்டாக்கி, அதைப் பேணிப் பாதுகாத்தாங்களா? இல்லை, இடையில எதோ காரணங்களால மக்கள் தொகை அருகி, மறுபடியும் பெருகி இருக்கா?? இந்த மாதிரி நிறையக் கேள்விகள்! அலசிட்டு இருக்கேன். தெரிஞ்சவங்க சொல்லிட்டுப் போங்க.

அதைவிடுங்க, இந்த நூற்றாண்டுல தமிழ், தமிழ் வளர்ச்சின்னு சொல்லுறவங்க தமிழர்களுக்கும், தமிழ் வளர்ச்சிக்கும் செஞ்சது என்ன? வீழ்ச்சிக்கு அடிகோலினது மற்றவங்களா? கிடையவே கிடையாது! தேர்தல் நேரம்!! இதுகளைப் பேசி பலன் ஒன்னுங் கிடையாது. வாங்க, நம்ம விபரத்துக்கு வருவோம்.

மாப்பு மாடசிங்கமே, நீர் கேட்டது spinning, rotating, revolving, whirl, curl இவைகளுக்கான தமிழ்ச் சொற்கள்தானே? இதோ, அதை விடவும் நுணுக்கமாய்!

ஆமாங்க, வட்டமாச் சுத்துறதுல என்ன நுணுக்கம் இருந்திட முடியும்? சுத்துது, சுழலுதுன்னு மேம்போக்காச் சொல்லிட்டிப் போறோம் நாம?! ஆனாப் பெரியவிங்க எப்படியெல்லாம் நுணுக்கமாச் சொல்லி இருக்காங்கன்னு அலசித் துவைச்சிக் காயப் போடலாம் வாங்க!

சுழல்தல்: எதோ ஒன்னு, ஒரு மையப் புள்ளியில நின்னுட்டு சுத்துறதுங்க (spin) இது. பூமி தன்னைத் தானே சுழலுது.

சுற்றுதல்: ஒரு மையப் புள்ளியில நிக்காம, எதோ ஒன்னைச் சுத்தி வர்றது சுற்றுதல்(rotate). பூமி, சூரியனை மையமா வெச்சி சுத்துது.

உருளுதல்: படுகிடையாப் படுத்துட்டு சுத்துறது, உருளுதல் (roll-in). கோவிலில் உருண்டு வலம் வந்தான்.

புரளுதல்: நெடுகிடையா விழுந்து சுத்துறது புரளுதல்(to tumble over). உயர வாக்குல சுத்துறது.

உழல்தல்: வட்டமாச் சுழலுலறதுல, ஒரு பகுதி மாத்திரம். வட்டப் பாதையில போவதும், வருவதும் உழல்தல்(oscillation), இதை ஊசல்ன்னும் சொல்லுறோம். இது நெடு(vertical movement)வாக்குல நடக்குற அசைவு. கடிகார ஊசல்.

உளர்தல்: சுழலும்போது, தொய்வடைஞ்சா மாதிரி, வலுவில்லாமச் சுழலுறது. உளர்ந்த பம்பரம் போலானான்(whiffle).

சுலவுதல்: எதோ ஒன்னைச் சுத்தி நெட்டுக்குத்தலா, வளைஞ்சி வளைஞ்சி சுத்துறது, coil around. தென்னையைச் சுலவிய கொடி.

சிலுப்புதல்: இதுவும் உழல்தல் மாதிரிதான், ஆனா படுகிடையா (horizontal) நடக்குற அசைவு. தலையைச் சிலுப்பினான்.

சுரிதல்: படுகிடையா, வளைஞ்சி வளைஞ்சி சுத்துறது (spiral around).

சுழங்குதல்: சுற்றிகிட்டே (toss) மேல கீழ அசையுறது. துடுப்பாட்ட மைதானத்தில், நாணயம் சுழங்க இரு அணித் தலைவர்களும் வெளிப்படுகிறார்கள்.

இந்த மாதிரி இன்னும் கொஞ்சம் சொற்கள், சூர்தல், சொரிதல், முறுகுதல், துடித்தல், விசிறுதல், அலமருதல், ஆவர்த்தித்தல்ன்னு இருக்குங்க. காந்தலான மாடசிங்கம், இதைப் படிச்சதும் சாந்தமாயிடுவான். ஆனா, இதுக்கு மேலயும் நீட்டி முழக்கினா, படிக்கிற நீங்க காந்தல் ஆயிடுவீங்க! அதான், இதோட முடிச்சிகிடுறேன்!! இஃகிஃகி!!!

27 comments:

  1. வணக்கம்ணா... அட்டெண்டன்ஸ் போட்டுக்கறேன் :)

    ReplyDelete
  2. நல்லா பதிவுங்கண்ணா. சுத்து சுழட்டீங்கண்ணா.

    ReplyDelete
  3. எந்தலை இப்ப சுத்துதா, சுழலுதா, சுழங்குதா... ஒன்ணுமே புரியலயே?

    ReplyDelete
  4. சுத்தி சுத்தி தமிழைக் காதலிக்க வச்சுட்டீங்கண்ணே :)

    ReplyDelete
  5. //வருங்கால முதல்வர் said...
    நல்லா பதிவுங்கண்ணா. சுத்து சுழட்டீங்கண்ணா.
    //

    வருங்கால முதல்வரே, கொஞ்சம் நீங்க வந்தாச்சும் எதனா பாத்து செய்யுங்க...

    ReplyDelete
  6. //Mahesh said...
    எந்தலை இப்ப சுத்துதா, சுழலுதா, சுழங்குதா... ஒன்ணுமே புரியலயே?
    //

    இஃகிஃகி!!

    ReplyDelete
  7. உளர்தல் - க்கு அப்புறம் ஒண்ணுமே புரியல... 'தமிழ்' எவ்வளவு அழகுன்னு புரியுது. ஆனா எனக்கு அதுல இவ்வளவு மோசமான அறிவு இருக்குதேன்னு நினைக்கும்போதுதான் மனசுக்கு வருத்தமா இருக்கு. ஏதோ உங்களை மாதி்ரி நாலு பேரு இருந்தா என்னை மாதிரி ஆளுங்க எல்லாம் தமிழ் ஞானத்தை வளர்த்துப்போம்.

    ReplyDelete
  8. ரொம்ப அருமையான பதிவு! அலமருதல், ஆவர்த்திதல் புதுசா இருக்கே!! என்ன பொருள் அதுக்கெல்லாம்..

    ReplyDelete
  9. //
    சுழல்தல்: எதோ ஒன்னு, ஒரு மையப் புள்ளியில நின்னுட்டு சுத்துறதுங்க (spin) இது. பூமி தன்னைத் தானே சுழலுது.
    //

    அதாவது பம்பரம் சுத்துற மாதிரி...

    //
    சுற்றுதல்: ஒரு மையப் புள்ளியில நிக்காம, எதோ ஒன்னைச் சுத்தி வர்றது சுற்றுதல்(rotate). பூமி, சூரியனை மையமா வெச்சி சுத்துது.
    //

    செக்கு மாடு சுத்தி வர்ற மாதிரி...

    நல்ல பதிவு..

    ReplyDelete
  10. //எம்.எம்.அப்துல்லா said...
    சுத்தி சுத்தி தமிழைக் காதலிக்க வச்சுட்டீங்கண்ணே :)
    //

    மிக்க மகிழ்ச்சிங்க அண்ணே!

    ReplyDelete
  11. ரெம்ப அருமையா இருக்கு.. நல்லா சுத்தி சுத்தி அடிங்க

    ReplyDelete
  12. ரொம்ப தான் சிளுபுரிங்க

    வில்லன் விமர்சன குழு

    ReplyDelete
  13. //அந்த ஒரு சில இலட்சம் மக்களை வெச்சிட்டு, ஒரு மொழியை உண்டாக்கி, அதைப் பேணிப் பாதுகாத்தாங்களா? இல்லை, இடையில எதோ காரணங்களால மக்கள் தொகை அருகி, மறுபடியும் பெருகி இருக்கா?? இந்த மாதிரி நிறையக் கேள்விகள்! அலசிட்டு இருக்கேன். தெரிஞ்சவங்க சொல்லிட்டுப் போங்க.//

    ரொம்ப சிம்பிள். உங்களுக்கு எத்தன கொழந்தை? உங்க அப்பாவுக்கு? உங்க தாதாவுக்கு?. கண்டிப்பா கோரஞ்சிட்டே வந்துருக்கும். அதான் கணக்கு..........

    வில்லன் விமர்சன குழு

    ReplyDelete
  14. //வில்லன் said...
    //அந்த ஒரு சில இலட்சம் மக்களை வெச்சிட்டு, ஒரு மொழியை உண்டாக்கி, அதைப் பேணிப் பாதுகாத்தாங்களா? இல்லை, இடையில எதோ காரணங்களால மக்கள் தொகை அருகி, மறுபடியும் பெருகி இருக்கா?? இந்த மாதிரி நிறையக் கேள்விகள்! அலசிட்டு இருக்கேன். தெரிஞ்சவங்க சொல்லிட்டுப் போங்க.//

    ரொம்ப சிம்பிள். உங்களுக்கு எத்தன கொழந்தை? உங்க அப்பாவுக்கு? உங்க தாதாவுக்கு?. கண்டிப்பா கோரஞ்சிட்டே வந்துருக்கும். அதான் கணக்கு..........

    வில்லன் விமர்சன குழு
    //

    அண்ணாச்சி... என்ன சொல்லுதீக! எனக்கு ஒன்னே ஒன்னு! நாங்க அண்ணந் தம்பிக மூணு பேரு!! எங்கப்பா கூடப் பொறந்தது ஆறு பேரு! எங்க அப்பிச்சி கூடப் பொறந்தது எட்டு பேரு. அமிச்சியவிங்க வீட்ல 12 பேரு. அப்படிப் பாத்தா, நிறைய இருந்து, இப்பக் குறைஞ்சி அல்ல இருக்கணும்?

    அவ்வ்வ்வ்வ்....

    விகடன், ச்சீ, வில்லன் விமர்சனக் குழுவே, ஐயம் நிவர்த்தி செய்!

    ReplyDelete
  15. //அந்த ஒரு சில இலட்சம் மக்களை வெச்சிட்டு, ஒரு மொழியை உண்டாக்கி, அதைப் பேணிப் பாதுகாத்தாங்களா? இல்லை, இடையில எதோ காரணங்களால மக்கள் தொகை அருகி, மறுபடியும் பெருகி இருக்கா?? இந்த மாதிரி நிறையக் கேள்விகள்! அலசிட்டு இருக்கேன். தெரிஞ்சவங்க சொல்லிட்டுப் போங்க.//
    நாம சில லட்சங்கள்தான்னு இருக்கும்போது, மற்ற மொழிக்காரர்களும் தனித்தனியாக அதே அளவில்தானே இருந்திருப்பார்கள்? அதாவது உலக ஜனத்தொகையில் நமது சதவிகிதக் கணக்கு கிட்டத்தட்ட நிலையாகத்தானே இருந்திருக்கும்.
    வேறுவிதமாக விளக்குகிறேன்.
    1930-களில் அரிசி விலை ஒரு ரூபாய்க்கு 16 கிலோ. ஆனால் அந்த விலை கொடுக்கக் கூட சக்தியில்லாது ஜனங்கள் அக்காலங்களில் தவித்தனர்.

    இதையெல்லாம் கேட்டுட்டு இப்ப தலை சுத்துதா, சுழலுதா, சுழங்குதா... ஒண்ணுமே புரியலயேன்னெல்லாம் சொல்லப்படாது.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  16. //dondu(#11168674346665545885) said...
    இதையெல்லாம் கேட்டுட்டு இப்ப தலை சுத்துதா, சுழலுதா, சுழங்குதா... ஒண்ணுமே புரியலயேன்னெல்லாம் சொல்லப்படாது.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்
    //

    வாங்க ஐயா! வணக்கங்க!! நீங்க சொல்லுறது புரியுதுங்க ஐயா!! ஆனாலும், குறுகின தொகை இருந்தப்ப இருந்த மொழி, இப்ப இல்லீங்களே? அதான் ஒரு ஆதங்கம்....

    ReplyDelete
  17. பட்டைய கிளப்புறீங்க போங்க....

    ReplyDelete
  18. பயன்பாடு இல்லாம நிறைய சொற்கள் இப்படி தெரியாமலே போய்விட்டது. நம்ம ஊர்ல ப்லசருகாருன்னு சொல்றத ஈழத் தமிழ்ல மகிழ்வூர்தின்னு அழகா பயன்படுத்தறாங்க. உலங்கூர்தி(ஹெலிகாப்டர்)ஒலியூர்தி(ஹைட்ரொசொனிக் ப்ளேன்)புகையிரதம்(ரயில்),கதிரை(நாற்காலி) இப்படி காலத்துக்கு ஏற்பவும், இன்னும் பழைய சொற்களையும் அவங்களவுக்கு நாம பயன்படுத்தறதில்லை. பங்களிப்பு(participation), சமூகமளிப்பு (attendance), கையளிப்பு (handover) இப்படி தினசரி பேச்சுவழக்கிலேயே அந்த தமிழ் நல்லா வளருது. நாம தான் இப்படி ஆய்ட்டோம்.

    ReplyDelete
  19. எனக்கு தலை சுத்துதா?சுழல்தல்??

    ReplyDelete
  20. எனக்கு தலை சுத்துதா?சுழல்தல்??

    ReplyDelete
  21. //பாலா... said...
    பயன்பாடு இல்லாம நிறைய சொற்கள் இப்படி தெரியாமலே போய்விட்டது. நம்ம ஊர்ல ப்லசருகாருன்னு சொல்றத ஈழத் தமிழ்ல மகிழ்வூர்தின்னு அழகா பயன்படுத்தறாங்க. உலங்கூர்தி(ஹெலிகாப்டர்)ஒலியூர்தி(ஹைட்ரொசொனிக் ப்ளேன்)புகையிரதம்(ரயில்),கதிரை(நாற்காலி) இப்படி காலத்துக்கு ஏற்பவும், இன்னும் பழைய சொற்களையும் அவங்களவுக்கு நாம பயன்படுத்தறதில்லை. பங்களிப்பு(participation), சமூகமளிப்பு (attendance), கையளிப்பு (handover) இப்படி தினசரி பேச்சுவழக்கிலேயே அந்த தமிழ் நல்லா வளருது. நாம தான் இப்படி ஆய்ட்டோம்.
    //

    மயிலைக் காண்பித்து காசு பார்த்தவர்கள், அந்த மயிலையே விற்கத் துணிந்ததுதான் இந்த நிலைக்குக் காரணம்!

    ReplyDelete
  22. எந்த மொழியாச்சும் ஒழுங்காத்தெரியுமான்னு கேட்டா
    இனி தமிழ்ன்னு கூட சொல்லிக்கறது சரியில்லைங்கறீங்க :))

    ReplyDelete
  23. //மயிலைக் காண்பித்து காசு பார்த்தவர்கள், அந்த மயிலையே விற்கத் துணிந்ததுதான் இந்த நிலைக்குக் காரணம்!//

    சரியாச்சொன்னீங்க‌

    ReplyDelete
  24. வந்திருந்து கருத்துரைத்த உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி!

    ReplyDelete
  25. இன்றுதான் உங்கள் பதிவுக்கு வந்தேன்.நல்ல தமிழ் கற்றேன்.நன்றி,பழமை பேசி.

    ReplyDelete
  26. //ஷண்முகப்ரியன் said...
    இன்றுதான் உங்கள் பதிவுக்கு வந்தேன்.நல்ல தமிழ் கற்றேன்.நன்றி,பழமை பேசி.
    //

    நன்றிங்க ஐயா!

    ReplyDelete