3/08/2009

சோழியன் குடுமி சும்மா ஆடுமா?

ஒன்றாங் கல்லே ஒருதனி முதல்வன்
இரண்டாங்கல்லே இமையவர் பெருமான்
மூன்றாங் கல்லே முக்கண் மூர்த்தி
நான்காங் கல்லே நஞ்சுண்ட கண்டன்
ஐந்தாங் கல்லே ஐந்து முகத்தோன்
ஆறாங் கல்லே ஆற்றுச் சடையன்
ஏழாங் கல்லே எமனை உதைத்தோன்
எட்டாங் கல்லே எருத்து வாகனன்
ஒன்பதாங் கல்லே உமை ஒரு பாகன்
பத்தாங் கல்லே பத்தர்கட் கபயன்!

மேல சொன்ன பாட்டு, எங்க ஊர்ப் பக்கம் அம்மணிகெல்லாம் பண்ணாங்கல் விளையாடும் போது பாடுற பாட்டு! இஃகிஃகி!!

தேவதாசியின் கட்டளைக் கணக்கு!

ஒரு ஊரிலே ஒரு தேவதாசிக்குத் தினம் ஒரு வராகன் விகிதமாக, அந்தத் தேவதாசிக்குப் பட்டணமாளுகிற இராவினுடைய ஊழியக்காரன் உடன்படிக்கை சொன்னது யாதெனில் ஒரு மாதத்துக்கு முப்பது வராகன் கட்டளையாதலால், என்கையில் ஐந்து மோதிரமிருக்கின்றது. அது முப்பது வராகனெடையிலே செய்தது. மாதம் ஒன்றுக்கு(), நாள் ௩௰(30)க்கு நடந்து கொண்டால், இந்த (5) மோதிரமும் தருகிறேன். அல்லவென்று ஆளும் அரசன் ஒரு வேளையில் தூர தேசங்களுக்குப் பயணம் போகச் சொன்னால், நடந்து கொண்ட நாளைக்கு மோதிரத்திலும் உண்டான வராகன் கணக்குப் பார்த்துக் கொடுத்துப் போகிறேன் என்றான். ஆக, அந்த (ஐந்து) மோதிரம் ஒவ்வொன்றும் எத்தனை வராகன் எடை?

மாம்பழக் கணக்கு

ஒரு அரசன் தோட்டம் வைத்திருந்தான். அந்தத் தோட்டம் பிரபலமானவுடனே, தன் திரளையெல்லாங் கூட்டிக் கொண்டு தோட்டம் பார்க்கப் போனான். அந்தத் தோட்டத்திற்கு பத்துகட்டு வாசலுண்டு. அதிலே முதல் வாசலிலே, பாதித்திரளை நிறுத்தி மீந்த பாதியை இரண்டாங்கட்டில் நிறுத்தி, இந்தப் பிரகாரம் வாசல் தோறும் நின்றதிற்பாதித் திரளை நிறுத்தி, மீந்த திரளை அழைத்துக் கொண்டு தோட்டத்திற்குள்ளே போகையில் தோட்டத்திலே கட்டு மாம்பழம் பழுத்து உதிர் கிடந்தது. அது கண்டு இராசா ஒரு பழமெடுத்துக் கொண்டான். ஊழியக்காரன் இரண்டு பழமெடுத்துக் கொண்டான். அருகைக்காரன் மூன்று பழம், தீவட்டிக்காரன் நாலு பழம், இப்படியாக இராசாவின் பிறகே வந்த திரளெல்லாம் ஒவ்வொரு பழம் அதிகமாக எடுத்துக் கொண்டார்கள். இராசா திரும்பித் திரெளல்லாங் கூட்டிக் கொண்டு வெளியே புறப்பட்டான். வாசலிலிருந்த திரளெல்லாம் இராசாவைக் கண்டு உம்முடைய பிறகே வந்தவர்கள் அவரவர்கள் கையிலே மாம்பழங் கொண்டு போகிறார்கள். எங்களுக்கில்லையே என்று கேட்கையில், அப்போது இராசா தானெடுத்த பழத்தையும் வைத்து, அவரவர்கள் எடுத்து வந்த பழத்தையெல்லாம் வைக்கச் சொல்லித் திரளுக்கெல்லாம் ஒவ்வொரு பழங்கொடுக்கப் பழஞ் சரியாயிருந்தது. ஆனபடியினாலே, இராசாவின் பிறகே வந்த திரளும், அந்த வாசலிலிருந்த திரளும் தோட்டத்துக்குள்ளே போன திரளும் எத்தனை?

சோழியன் குடுமி சும்மாடு ஆகு(டு)மா?

சோழியன் குடுமி சும்மா ஆடுமான்னு வழக்கத்துல சொல்லக் கேட்டு இருப்பீங்க. சும்மா ஆடாட்டிப் போகுது, காசு பணம் குடுத்தா ஆடுமா? ஆடாதில்லை?! அதாங்க, பெரியவிங்க சொல்லுறாங்க அது பிறழ்ந்த வழக்குன்னு. அது, சோழியன் குடுமி சும்மாடு ஆகுமா?ன்னு நாட்டுப் புறத்துல சொல்லுறதாமுங்க. சும்மாடுன்னா, கூடை, குடம்ன்னு தலையில வெச்சி சுமக்கும் போது, தலைக்கு மேல வெக்கிற துணியால சுத்தின ஒரு இடைப் பொருள்ங்க. அதான், எதாவது ஒன்னு தேவைக்கு ஆனதல்லங்றதைச் சுட்டிக் காட்டுறதுக்குச் சொல்லுறது, சோழியன் குடுமி சும்மாடு ஆகுமா?

கொங்கு மலிந்தால் எங்கும் மலியும்!

34 comments:

  1. கொங்கு மலிந்தால் எங்கும் மலியும்!

    மேல சொன்னது சிலேடையான பழமொழிங்க! அதாவது, கொங்குநாட்டோட செழிப்பு மலிந்தால், மத்த இடங்கள்லயும் செழிப்பு மலியுங்றது ஒன்னு.

    அடுத்து, கொங்குன்னு பொன்ங்ற பொருளும் இருக்கு. ஆக, பொன் மலிந்தால், பாரெங்கும் மலியும்ங்றது பழமொழி!!

    நாம, நாளைக்கு புது இடத்துக்கு பொட்டி அடிக்கப் போறமுங்க. அதனால, பதிவுகளும் பின்னூட்டங்களும் கொஞ்சம் வறட்சியாத்தான் இருக்கும். இஃகிஃகி!! உங்களுக்கு ஒரே சிரிப்பு!!

    ReplyDelete
  2. வந்துட்டோம்ல

    ReplyDelete
  3. // மேல சொன்ன பாட்டு, எங்க ஊர்ப் பக்கம் அம்மணிகெல்லாம் பண்ணாங்கல் விளையாடும் போது பாடுற பாட்டு! இஃகிஃகி!! //

    :-)

    ReplyDelete
  4. //
    சோழியன் குடுமி சும்மாடு ஆகு(டு)மா?

    ////

    ஏற்க்கனவே சுகி சிவம் சொல்ல கேட்டுட்ட்டேன்

    ReplyDelete
  5. கணக்குக்கு பயந்து பள்ளிகூடம் போகாதவுக பல பேர்
    இப்படி கணக்கு கேட்டுக்கிட்டே இருந்தேள்.... ஒரு பயலும் உங்க வலைபூ பக்கம் வரம்மாட்டான் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  6. பதிவுக்கு அப்புறமா வாரேன்.அதென்ன உங்க சிரிப்பு ரொம்ப பிரபலமாகுது?தேவன்மயம் வீட்டுக்குப் போனா பழமை மாதிரி சிரிக்கிறீங்கன்னு சிரிச்சிப் பேசிக்கிறாங்க.இஃகி!இஃகி!

    ReplyDelete
  7. அஞ்சும் மூணும் எவ்வளவுடான்னு கேட்டாலே விரல் விட்டு எண்ணுவேன். விடையையும் நீங்களே சொல்லிடுங்க.

    ReplyDelete
  8. சோழியன் குடுமி இருக்கட்டும்...

    ஒண்ணும் ஒன்ணும் எவ்வளவுன்னு கணிணில தட்டி கேட்டுக்கிட்டுருக்கேன்.. நாளைக்குள்ள எப்பிடியும் பதில் குடுத்துடும்னு நினைக்கிறேன்... பிறகு இந்த ரெண்டு கணக்குக்கும் கேட்டு பதில் சொல்றேன்..

    ReplyDelete
  9. //ராஜ நடராஜன் said...
    பதிவுக்கு அப்புறமா வாரேன்.அதென்ன உங்க சிரிப்பு ரொம்ப பிரபலமாகுது?தேவன்மயம் வீட்டுக்குப் போனா பழமை மாதிரி சிரிக்கிறீங்கன்னு சிரிச்சிப் பேசிக்கிறாங்க.இஃகி!இஃகி!
    //

    அண்ணா, வாங்க! தமிழ்ச் சிரிப்பு சிரிக்கறாங்க.... இஃகிஃகி!

    ReplyDelete
  10. கணக்காதான் திரிகிறீக! கடைசியில விடையையும் நீங்களே சொல்லிடுங்களேன்! சோழியன் குடுமி எங்க தமிழ் வாத்தியார் சொல்லிக்கொடுத்தி்ட்டாருங்கோ.....!

    ReplyDelete
  11. //ஒன்றாங் கல்லே ஒருதனி முதல்வன்
    இரண்டாங்கல்லே இமையவர் பெருமான்//

    நம்மூரு அம்மணிக இப்படியெல்லாம் பாடுதா!எங்காதுல "வெள்ளரிக்கா தோட்டத்தில வெளையாட நேரமில்ல"ங்கிற மாதிரி பாட்டுகளைத்தான் தெளிச்சாங்க.

    ReplyDelete
  12. மணியண்ணா.,

    மாம்பழக் கணக்கோட விடை மொத்தம் - 2096128 பேர் முதல் வாசலில் நுழைந்து, பாதி, பாதியாக் குறைந்து பத்தாவது கேட்டில் 2047 பேர் தோட்டத்தில் நுழைந்தார்கள்.

    அவர்கள் மொத்தம் எடுத்த பழம் - 2096128.

    அண்ணே சரியா?

    ReplyDelete
  13. எல்லா மோதிரமும் ஒரே எடைங்களாண்ணா? விடை தப்புன்னா வெளிய நிக்க வைக்க மாட்டிங்கள்ள? 6 வராகனா? இந்த சோழியன் குடுமி சும்மாடு விடயம் நமக்கு புதுசு. ஒரு வேள சோணாட்டில முன்குடுமி வச்சிருப்பாங்களோ? இந்த மாம்பழக் கணக்குக்கு முரு சொல்லுற விடைய பார்த்தா அவ்ளோ பேர வேலைக்கு வெச்ச அரசன் ஆண்டியா போமாட்டானா?(விடைக்கு முயற்சிக்கிறோம்)

    ReplyDelete
  14. வராகன் கணக்குல ஏதும் உள்குத்து இல்லியே...நேர் கணக்கு தானா..
    ஏன்னா இது தாசி கணக்கு வேறயா..அதான் கொஞ்சம் சந்தேகமா இருக்கு...

    ReplyDelete
  15. //Naren said...
    1023+ராசா//

    நரேன்., 1024 பேர் மொத கதவுல நுழைந்து பாதியாகி, பாதியாகி பத்தாவது கதவைத்தாண்டி தோட்ட்த்தில் ஒருத்தர் மட்டுமே நுழையமுடியும். அப்புறம எப்படி 1024 பழம் கிடைக்கும்

    ReplyDelete
  16. மொத கதவுல 1023 இல்ல...பத்தாவது கதவுல 1023+ராசா ..ஆனா அதுவும் தப்ப தான் தெரியுது...
    முரு ரொம்ப ஸ்பீடா இருக்கீங்க..இப்போ தான் delete பண்றேன்..மறுபடி வரதுக்குள்ளே எதிர் பாட்டு போட்டுட்டீங்க

    ReplyDelete
  17. // Naren said...
    மொத கதவுல 1023 இல்ல...பத்தாவது கதவுல 1023+ராசா ..ஆனா அதுவும் தப்ப தான் தெரியுது...
    முரு ரொம்ப ஸ்பீடா இருக்கீங்க..இப்போ தான் delete பண்றேன்..மறுபடி வரதுக்குள்ளே எதிர் பாட்டு போட்டுட்டீங்க//

    வாங்க நரேன்.,
    என்னோட விடை சரின்னு நினைக்கிறேன். சரிபாத்து சொல்லுங்களேன். ரொம்ப கஷ்ட்டப்பட்டு கண்டுபிடித்தது

    ReplyDelete
  18. //Naren said...
    ரொம்பச் சரி முரு்/

    நீங்க ஒத்துகிட்டீங்க., ஆனால் மணியண்ணன் ஒத்துக்கவில்லையே?

    ReplyDelete
  19. அய்யா பழைய கணக்கப்பிள்ளை, கொஞ்சம் கால்குலேட்டர், கம்பியூட்டர் கொடுங்க

    ReplyDelete
  20. தோடா.. என்ன சொல்ல வாராங்கன்னு புரியறதுக்குள்ள மண்ட காஞ்சு போச்சு.. அதாவது அந்த ஐயா எப்போ கிளம்பினாலும் அந்த மோதிரம் கணக்கு பார்த்து கொடுக்கற மாதிரி இருக்கோணும்.. 1 - 30 ... அப்டித்தானே.. அப்டின்னாக்க..ஒரு வராகன் ல ஒண்ணு, ரெண்டு வராகன்ல ஒண்ணு, நாலு வராகன்ல ஒண்ணு, எட்டு வராகன்ல ஒண்ணு அப்புறம் பதினைஞ்சு வராகன்ல ஒண்ணு (எல்லாத்லயும் ஒண்ணு :p)

    ReplyDelete
  21. கொஸ்டீன் பேப்பர் ஈசியா இருந்தால் தான் இனிமேல் இந்த பக்கம் எட்டி பார்க்கறதுனு முடிவு பண்ணிட்டேன்.

    ReplyDelete
  22. //நாம, நாளைக்கு புது இடத்துக்கு பொட்டி அடிக்கப் போறமுங்க//

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  23. Muru & Eezhapriya,

    Answers are correct, Thank u!!!

    ReplyDelete
  24. வருகை புரிந்து, பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் நன்றி!

    முருகேசம், ஈழப்பிரியா ஆகியோரது ஆர்வத்துக்கும் நன்றி!!

    பின்னூட்டம் இட்டு, அதை மீண்டும் நீக்கிய ஈழப்பிரியா அவர்களுக்கு மேலும் ஒரு நன்றி!! இஃகிஃகி!! தம்பி முருகேசன் சரியாத்தான சொல்லி இருக்காரு.... நீங்க கவனிக்கலை போல? இஃகிஃகி!!

    ReplyDelete
  25. சோழியன் குடுமி மேட்டர் புரிஞ்சிடுச்சி....ஆனா, சோழியன்னா யாரு? அத மொதல்ல சொல்லுங்க தல :0))

    ReplyDelete
  26. அப்புறம் இந்த மாதிரி கன்னாபின்னான்னு கணக்கெல்லாம் கேக்கப்படாது...கணக்கு கேட்டு தான் ஒரு கட்சியே ஒடஞ்சிது...

    (ஆமா, கன்னாபின்னான்னா என்ன??)

    ReplyDelete
  27. //அது சரி said...
    அப்புறம் இந்த மாதிரி கன்னாபின்னான்னு கணக்கெல்லாம் கேக்கப்படாது...கணக்கு கேட்டு தான் ஒரு கட்சியே ஒடஞ்சிது...

    (ஆமா, கன்னாபின்னான்னா என்ன??)
    //

    வாங்க அண்ணாச்சி!

    சோழியன் -- அந்தணன்
    கன்னா --- கயமைத்தனமாக
    பின்னா -- சின்னத்தனமாக

    ReplyDelete
  28. உங்க கேள்விக்கு நன்றி! எங்க பதிலுக்கான உங்க பதிலுக்கு நன்றி! உங்க நன்றிக்கு நன்றி..! (நான் அந்த முருவின் விடையைக் கவனிக்கல.. அதனால 1023 எப்டி சரியாகும்னு ஸ்டிரைக் பண்ற அளவுக்கு போயிட்டேன், அப்புறம்தான் நம்ம நலன்விரும்பி ஒருத்தங்க, தோ அங்க முரு வேற பதில் போட்டிருக்காப்ல நு எடுதுரைச்சாங்க.. மேட்டர் பத்திரிக்கைல ஏறி சந்திக்கு வர முன்னாடி நாம பாய்ஞ்சு கான்சல் பண்ணோம்..) இத போயீ பிறழ்ந்த செய்தில சேர்க்க பார்க்கிறீரே.. ஹ்ம்ம்.. கொஞ்சம் அசந்தா ஆள முழுங்கி ஏப்பம் விட்டுடுவாங்கப்பு.. நம்ம கிட்டயேவா... வேணாம் தலிவா.. நம்ம ஜனங்க கஷ்டம்.. நம்ம சோகம்.. இதர பிற காரணங்களால கொஞ்சம் அடக்கி வாசிக்கறதால.. மஹிந்தா மாதிரி தப்பு கணக்கு போடா வேணாம் கேட்டோ...

    ReplyDelete
  29. // Eezhapriya said...
    மஹிந்தா மாதிரி தப்பு கணக்கு போடா வேணாம் கேட்டோ...
    //

    பொழச்சிப் போறேன் விட்டுடுங்க என்ன?! இஃகிஃகி!!

    ReplyDelete
  30. நம்ம கடைக்கு வந்து பாருங்க...
    உங்களுக்கு இன்னொரு வேலை இருக்கு...
    :-)

    ReplyDelete