3/06/2009

கோவை நொய்யலாற்றுக் குருவியின் தேவையில்லாத வேலை!!!

கோயம்பத்தூர் நொய்யலாற்றுக்கு அருகாமையில் தழைத்தோங்கி வளர்ந்திருந்த ஒரு ஆலமரத்தின் பேரில் ஒரு ஊர்க்குருவி இருந்தது. அம்மார்க்கமாய் அத்தருணத்தில் ஆகாயத்திடமாக சிலகுருவிகள் பறந்து வரக்கண்டதை அம்மரத்தின் பேரிலிருந்த குருவியானது பார்த்து, “ஒ, ஓ, கோகளிப்பாக ஆகாயத்தினிடமாகப் பறந்து கொண்டு வருகிற நூறு குருவிகளா, எங்கே போகிறீர்கள்?” என்று வினவியதைக் கேட்டுக் ககனமார்க்கமாய்ப் பறந்து கொண்டு வந்த குருவிகள் சொன்னதாவது, நாங்கள் மாத்திரமே நூறு குருவிகளல்ல, நாங்களும் எங்களினமும் எங்களினத்திற்பாதியும் மேற்படி பாதியிற்பாதியும் நீயுஞ்சேர்ந்தால் நூறு குருவிகளாகுமென்று சொன்னதுகள்.

அப்படியானால், வந்த குருவிகள் எத்துனை?

==========================================

புனமூன்றில் மேய்ந்து நெறியைந்திற்சென்று
இனமான வேழ்குள்நீருண்டு - கனமான
காவொன்பது தன்னிற் கட்டுண்டுநிற்கவே
கோமன்னர் கூட்டக் களிது!


பொழிப்புரை:திருமூர்த்திமலைப் புனத்தில் ஒற்றைப்படையாக மேய்ந்து, வழியில் ஒற்றைப் படையாகப் பிரிந்து, உடுமலை அருகேயுள்ள ஏழுகுளத்தில் ஒற்றைப்படையாகத் தண்ணீரருந்தி ஒன்பது கம்பத்தில் ஒற்றைப்பட கட்டுண்ட யானைகள் எத்தனை?

==========================================

நீர்வளம் பொருந்திய ஒரு தடாகத்தினடமாகச் சிறிது தாமரைப் புட்பங்கள் மலர்ந்திருந்தது. அப்புட்பங்களின் பேரில் சில வண்டுகள் வந்து பூ ஒன்றுக்கு வண்டுகள் ஒன்று இறங்கி, ஒரு வண்டுக்கு இறங்க மலர்களில்லாமையால் வந்த வண்டுகளெல்லாம் எழுந்திருந்து பூ ஒன்றுக்கு இரண்டு வண்டுகளாக இறங்கின போது ஒரு பூவு மீந்தது. ஆதலால் வந்த வண்டுகள் எத்தனை?

39 comments:

  1. //Mahesh said...
    36 குருவிக !!
    //

    அப்ப இதுக்கும் சொல்லுங்க... இஃகிஃகி!!

    நீர்வளம் பொருந்திய ஒரு தடாகத்தினடமாகச் சிறிது தாமரைப் புட்பங்கள் மலர்ந்திருந்தது. அப்புட்பங்களின் பேரில் சில வண்டுகள் வந்து பூ ஒன்றுக்கு வண்டுகள் ஒன்று இறங்கி, ஒரு வண்டுக்கு இறங்க மலர்களில்லாமையால் வந்த வண்டுகளெல்லாம் எழுந்திருந்து பூ ஒன்றுக்கு இரண்டு வண்டுகளாக இறங்கின போது ஒரு பூவு மீந்தது. ஆதலால் வந்த வண்டுகள் எத்தனை?

    ReplyDelete
  2. அட... 4 வண்டு 3 பூ !!

    ReplyDelete
  3. ஆகாயம், ககனம், மார்க்கம்... இதெல்லாம் தமிழா?

    வான வீதி சரியா?

    ReplyDelete
  4. அப்படியா, நீங்க இப்ப திண்ணைப் பள்ளிக்கூடத்துல இருந்து கோயப் பள்ளிக்கூடத்துக்கு போற தகுதி வந்தாச்சு...அப்ப இதுக்கு சொல்லுங்க:

    புனமூன்றில் மேய்ந்து நெறியைந்திற்சென்று
    இனமான வேழ்குள்நீருண்டு - கனமான
    காவொன்பது தன்னிற் கட்டுண்டுநிற்கவே
    கோமன்னர் கூட்டக் களிது!

    அப்ப, கட்டுண்ட யானைகள் எத்துனை?

    ReplyDelete
  5. இஃகி !! இஃகி !! நானே மூக்கொழுக்கீட்ருக்கேன்.... கோயப் பள்ளிகூடமாமா :)))))))))

    ReplyDelete
  6. //Mahesh said...
    ஆகாயம், ககனம், மார்க்கம்... இதெல்லாம் தமிழா?

    வான வீதி சரியா?
    //

    தமிழ்தானுங்கோ.... நிறைய பொது சொற்கள் இருக்கு...ஒன்றுக்கு மேற்பட்ட இந்திய மொழிகள்ல அதுக வரும்!

    ReplyDelete
  7. நான் இன்னும் குருவி படம் பார்க்கவில்லை

    ReplyDelete
  8. அந்த வெண்பாவுக்கு பொழிப்புரை:

    திருமூர்த்திமலைப் புனத்தில் ஒற்றைப்படையாக மேய்ந்து, வழியில் ஒற்றைப் படையாகப் பிரிந்து, உடுமலை அருகேயுள்ள ஏழுகுளத்தில் ஒற்றைப்படையாகத் தண்ணீரருந்தி ஒன்பது கம்பத்தில் ஒற்றைப்பட கட்டுண்ட யானைகள் எத்தனை?

    ReplyDelete
  9. // ILA said...
    33
    //

    விவசாயி அண்ணே வாங்க... மகேசு அண்ணஞ் சரியா சொன்னதைப் பாத்துட்டு, ச்சும்மாதானே இதைச் சொல்லுறீக?

    ReplyDelete
  10. இந்த பக்கம் வந்தா கேள்வியெல்லாம் கேப்பிங்களா என்னங்க இது?

    ReplyDelete
  11. இன்னிக்கு காலையில பேரூர் போயிட்டு வந்தேன். நொய்யலாத்துல தண்ணி இல்லைங்க. ஆலமரத்தை பாத்தேன். அங்க குருவியும் காணோம். திருமூர்த்தி மலைக்கு வேணுமின்னா ஞாயித்துக்கிழமை போயிட்டு வரேனுங்க. நான் போற வரைக்கும் அங்க யானை இருக்குமிங்களா

    ReplyDelete
  12. விடை தெரியலைன்னா என்ன எல்லாம் சொல்ல வேண்டி இருக்கு பாருங்க :)

    ReplyDelete
  13. யாராச்சும் விடை சொல்லுங்க. நான் வந்து பாத்துட்டு எங்க ஆபிசில எல்லார்கிட்டயும் இந்த கேள்வியை கேட்கிறேன்.

    நான் நோகமா நோம்பி கும்புடற ஆளுங்க :)

    ReplyDelete
  14. 1) x + x/2 + 1 = 100
    3x + 1 = 100
    3x = 99
    x = 33

    2) 9 யானைகள்

    3) 4 வண்டுகள், 3 பூக்கள்

    இரண்டாவது விடை ஒரு கெஸ்ஸிங் தாங்க.. 9 கம்பத்தில் கட்டுண்ட யானைகள் - 9 யானைகள் என்று ஒரு கெஸ்ஸிங்தாங்க

    ReplyDelete
  15. எங்க வீட்டுகிட்டே ஆலமரமே இல்லையே.

    எப்படி நான் குருவியை பாக்கறது
    ஒண்ணுமே புரியலையே??

    அண்ணா ராத்திரி நேரத்துலே
    வந்தா ஒருத்தர் பேய் கதை
    சொல்லி பயமுரத்தறார்.

    நீங்க என்னான்னா கணக்கு எல்லாம்
    கேக்கறீங்க நியாமா ???

    மகேஷ் வந்து நல்ல மாட்டி இருக்காரு போல செமையா கலைச்சு இருக்கீங்க
    பாவம் மகேஷ்.

    மகேஷ் பயப்படாதீங்க, நாம்ப எல்லாரும் சேர்ந்து இந்த அண்ணாவை கேள்வி கேட்டு ஒரு வழி பண்ணலாம்.

    ReplyDelete
  16. ராகவன் அண்ணா தான் குருவி படம் பாக்கவேணாம்னு சொன்னாரு.

    ஒருவேளை பார்த்து இருந்தா இந்த கேள்விக்கு பதில் தெரிஞ்சி இருக்குமோ??

    ராகவன் அண்ணாவும் ஏதோ கணக்கு எல்லாம் போட்டு பார்த்து இருக்காரு
    சரியா வரலை போல!!!

    ReplyDelete
  17. //இராகவன் நைஜிரியா said...
    1) x + x/2 + 1 = 100
    3x + 1 = 100
    3x = 99
    x = 33
    //

    வணக்கம் ஐயா!

    மகேசு சரியாச் சொல்லிட்டாரே?
    X+X+X/2+X/4+1=100

    36+36+18+9+1 = 100

    2) இஃகிஃகி! இன்னும் முயற்சி செய்யுங்க!!

    3)சரி

    நன்றிங்க ஐயா!

    ReplyDelete
  18. //RAMYA said...
    ராகவன் அண்ணா தான் குருவி படம் பாக்கவேணாம்னு சொன்னாரு
    //

    வாங்க வணக்கம் இரம்யா!

    ReplyDelete
  19. //தாரணி பிரியா said...
    இந்த பக்கம் வந்தா கேள்வியெல்லாம் கேப்பிங்களா என்னங்க இது?
    //

    நம்மூரு அம்மணி வாங்க, வணக்கம்!

    ReplyDelete
  20. நல்லா இருங்கப்பு.
    இந்த சோலிக்கு நான் வரலை

    ReplyDelete
  21. ஆகா! இதில ஏதோ வில்லங்கமிருக்கே. வகை வகையா விழிக்கறத பத்தி ஒரு இடுகை போட்டிங்கள்ள. அப்புரம் விரிவா மத்ததெல்லாம் அலசி காய போட்ரதா வாக்குறுதி வேற. இப்பிடி கணக்கெல்லாம் போட்டு ஆளாளுக்கு விழிக்கிறத வகைப்படுத்த போறீங்களா தம்பி. தமிழொரு பக்கம் கணக்கொரு பக்கம்னு நம்ம பெருசுங்கள் நினைச்சா பெருமையா தான் இருக்கு. இப்பிடி எல்லாம் கேக்கறதுன்னா ஒரு சயின்டிஃபிக் கால்குலேடர் (தமிழ்ல இதுக்கு பேரென்னா?) பக்கத்துல வெச்சா வசதி. ஆமாம். குருவி 36ஆ 33ஆ

    ReplyDelete
  22. //
    புனமூன்றில் மேய்ந்து நெறியைந்திற்சென்று
    இனமான வேழ்குள்நீருண்டு - கனமான
    காவொன்பது தன்னிற் கட்டுண்டுநிற்கவே
    கோமன்னர் கூட்டக் களிது!
    //

    சங்கத் தமிழ்! அழகா இருக்கு....


    ஆனா தல, கணக்குக்கு விடை சொல்லாம விட்டுட்டீங்களே!

    ReplyDelete
  23. //
    வருங்கால முதல்வர் said...
    நல்லா இருங்கப்பு.
    இந்த சோலிக்கு நான் வரலை

    March 6, 2009 4:05 PM
    //

    இதை நான் முழுமனதுடன் வழிமொழிகிறேன் :0)))

    ReplyDelete
  24. ஒத்தை யானை தானுங் மணி

    ReplyDelete
  25. //வருங்கால முதல்வர் said...
    நல்லா இருங்கப்பு.
    இந்த சோலிக்கு நான் வரலை
    //

    இஃகிஃகி!!

    ReplyDelete
  26. //Bala said...
    ஒரு சயின்டிஃபிக் கால்குலேடர் (தமிழ்ல இதுக்கு பேரென்னா?) பக்கத்துல வெச்சா வசதி.//

    நுட்பக் கணிப்பான்


    //ஆமாம். குருவி 36ஆ 33ஆ
    //

    நாங்களும் எங்களினமும் எங்களினத்திற்பாதியும் மேற்படி பாதியிற்பாதியும் நீயுஞ்சேர்ந்தால் நூறு குருவிகளாகும்!

    நாங்களும்: X

    எங்களினமும்: X

    எங்களினத்திற்பாதியும்: X/2

    மேற்படி பாதியிற்பாதியும்: X/4

    நீயுஞ்சேர்ந்தால் : +1

    ஆக விடை:

    X+X+X/2+X/4+1=100

    36+36+18+9+1 = 100

    ReplyDelete
  27. //அது சரி said...
    ஆனா தல, கணக்குக்கு விடை சொல்லாம விட்டுட்டீங்களே!
    //

    வணக்கம் அண்ணாச்சி, நாளை காலையில! இஃகிஃகி!!

    ReplyDelete
  28. //Naren said...
    ஒத்தை யானை தானுங் மணி
    //

    வாங்க கண்ணு! இல்லைங்க கண்ணூ, நல்லாப் பாட்டைக் கவனியுங்க.... மூனு வனத்துல மேஞ்சு, அதுக அஞ்சு வழில பிரிஞ்சு, ஏழு குளத்துல தண்ணி குடிச்சி, ஒன்பது கம்புல கட்டுண்டுதாம்! ஒரு யானை எப்படி மூனு வனத்துல ஒரு சேர மேயும்?? இஃகிஃகி! நன்றிங்க!!!

    ReplyDelete
  29. // Naren said...
    945
    //

    வாழ்த்துகளும் நன்றியும்!! இஃகிஃகி!!!

    ReplyDelete
  30. ஏமண்டி... 3 5 7 9க்கு மீச்சிறு பொது மடங்கு (LCM) போட்டா 315 வருதே... அம்புட்டு ஆனைகளா?

    ReplyDelete
  31. //Mahesh said...
    ஏமண்டி... 3 5 7 9க்கு மீச்சிறு பொது மடங்கு (LCM) போட்டா 315 வருதே... அம்புட்டு ஆனைகளா?
    //

    அதிகாதண்டி! மீச்சிறு மடங்கு போட்டாக்க, சரியாப் பிரியாதுங்கோய்! ஒன்பது கம்புல இருந்து பொறவால பிரிச்சிப் பாருங்க...

    அந்தக் காலத்துல இருந்திருக்கும்...கொஞ்ச வருசத்துக்கு முன்னாடி, கோயமுத்தூர்ல கூட சுலுவுல 101 கச பூசை நடந்துச்சுங்ளே?!

    ReplyDelete
  32. //muru said...
    33
    //

    வாங்க முருகேசுத் தம்பீ! 33க்கு விளக்கம் சொல்லுங்கோ!!

    ReplyDelete
  33. எல்லொருக்கும் வண்க்கம்,

    நான் தூங்கி எந்திருச்சு வர்ரதுக்குள்ள இங்க எல்லா வேலையும்( விடை சொல்லுறது, கும்மி அடிக்கிறது...) முடிஞ்சிருச்சு.
    நான் ப.பேசி அண்ணனை அடுத்த பதிவுல பாத்துகிறேன்.

    மீ எச்கேப்பு

    ReplyDelete
  34. 1. வந்த குருவிகள் = x என்க.
    x + x + x/2 + x/4 + 1 = 100.
    ஃ x = 36.

    2. கவிதையில சொன்னா மாதிரி எல்லா யானைகளும் எல்லா சந்தர்ப்பங்களிலும் சமமாக பிரிக்கப்படுகின்றன எனில்,
    63 யானைகள்.
    அப்பிடியிலையெனில் 9 யானைகள் போதும்.
    (6 குளத்துக்கு ஒரு யானையும் ஏழாவது குளத்துக்கு 3 யானைகளும்)

    3. 3 பூக்கள், 4 வண்டுகள்...
    நண்பரே இது நாங்க மூனாம் வகுப்பில செய்ததாக்கும்...
    :-)))

    ReplyDelete
  35. மாத்தி யோசி வேத்தி ராசா ..வாத்தி...
    இப்போ தான் மகேஷ் அண்ணனை ஒண்ணாப்புக்கு அனுப்பறாரு..
    நீங்க என்னடான்னா மூணாப்புல தான் பண்ணி இருக்கேன்னு சொல்றீங்க..

    ReplyDelete
  36. வித்த காமிக்கிறாங்கன்னு அங்க போனா அங்கேயும் கணக்கு வாத்தியாரு.நொய்யலாற்றுப் பக்கம் வந்தா இங்கேயும் கணக்கு வாத்தியாரு.ஏனுங்க தெரிஞ்சா சொல்லமாட்டோமா?கச கசன்னு மூளைய கசக்கிப் பிழிகிற வேலயெல்லாம் சரிப்பட்டு வராது.நான் வர்ரேன் ஆளை விடுங்க.

    ReplyDelete