3/04/2009

அமெரிக்கக் கனவு கானல் நீராகிறதா?

நானும் என்னால முடிஞ்ச அளவு, பிறழ்ந்த செய்திகள்ன்னு பதிவு போட்டுப் போட்டுப் பாத்தேன்? எவ்வளவு நாளைக்குத்தான் நானும் போட்டுகிட்டே இருப்பேன்? பதினோரு பத்திரிகை இல்லை, இந்தியா முச்சூடும் இருக்குறவிக எல்லாம், அவங்க அவங்க செளரியத்துக்குப் போட்டு நொங்கு எடுக்குறாங்க?! அவ்வ்வ்........

இந்த ஊடகங்கள் ஏத்திச் சொல்லுற செய்திகளை மெய்ப்பிக்கிற மாதிரியே, திட்டக்குழுத் தலைவர் அலுவாலியா ஊடகத்துல வந்து பேசினாரு. போனாப் போகுதுன்னு பாத்தா, நிதி அமைச்சர்(இப்போதைய வெளியுறவு) அதையும் தாண்டி அழுதே போடுவார் போல இருக்கே?! உங்களுக்கு எல்லாம், தூதரகம்ன்னு ஒன்னு அமெரிக்காவில இல்லையா? அவங்ககிட்ட உண்மை நிலை என்னன்னு கேட்டு, அதுக்குத் தகுந்த மாதிரி பேசக் கூடாதா?? ஊடகங்கள்ல வர்ற செய்திதான் பிரதானமா??

இப்ப்ப் புதுசா, ஒரு இலட்சம் பேர் மூனு வருசத்துக்குள்ள திரும்பி வரப் போறாங்கன்னு புலம்பல். வந்தவங்க இங்க(US)யே இருந்துக்கணும்ன்னு எதிர்பாக்கறாங்களோ?? அதை விடுங்க, வருசம் 65000 பேர், அது போக இதர உள்நுழைவு(L1, B1...)ல எண்ணிலடங்காத பேர் உள்ள வருவாங்களே? அது கண்ணுக்குத் தெரியலையா?? நீங்க எல்லாம் நிர்வாகிகள்தானா?? அவ்வளவு கடுமையான சவால்கள் இருந்தும், தன்னம்பிக்கை ஊட்டுற பேச்சு, என்னா சுறுசுறுப்பு?? ஒபாமாவைப் பாத்தாவது தெரிஞ்சுக்குங்க... வேலியே பயிரை மேயலாமா?? தன்னம்பிக்கை ஊட்ட வேண்டிய அரசாங்கமே, தகர்ந்து போகலாமா??? கொஞ்ச‌ம் எதிர்ம‌றையாப் பேசுற‌தை, ம‌க்க‌ள்தான் அல‌ட்சிய‌ம் செய்ய‌ணும் இந்த‌ இக்க‌ட்டான‌ சூழ்நிலைல‌!!!

ம‌க்கா, மென்பொருள் ப‌டைப்பாளிக‌ளுக்கு எப்ப‌வும் எதிர்கால‌ம் இருக்கு. இந்த‌ப் புல‌ம்ப‌ல்க‌ளைக் க‌ண்டுகிடாதீங்க‌... இது த‌ற்காலிக‌மான‌ தொய்வுதான்!இள‌நிலைல‌ இருக்குற‌ மாண‌வ‌ர்க‌ள், இளைஞ‌ர்க‌ள் இய‌ற்கை(
green collar jobs) எரிச‌க்திக்கான‌ தொழில்நுட்ப படிப்பு/வேலைக‌ள்ல‌ க‌வ‌ன‌ம் செலுத்த‌லாம். காற்றாலை, சூரிய‌ எரி/மின் ச‌க்தி, சாண‌வாயு எரிச‌க்தி, இப்ப‌டி இய‌ற்கைய‌ ஒட்டின‌ எதுக்கும் எதிர்கால‌ம் இருக்கு. அது மீளாக்கத்(renewable)துக்கு ஏதுவா இருக்கணும். இந்த‌ அர‌சாங்க‌ம் அதுக‌ளை ஆராய்ஞ்சி, வ‌ழிகாட்டணும். ச்சும்மா, எடுத்தேன் க‌விழ்த்தேன்னு பீதிய‌க் கிள‌ப்புற‌துக்குத் துணை போக‌க் கூடாது.

மக்கா, நான் இது தொடர்பான படிப்புகள், மேலதிகத் தகவல்களை இனிதான் சேகரிக்கணும். எனக்குத் தெரிஞ்சதை எதிர்வரும் காலங்கள்ல பதியுறேன்...

காலத்துக்கேற்ற மழை வேண்டும்!

29 comments:

  1. http://www.greenforall.org/green-collar-jobs

    ReplyDelete
  2. //அவ்வளவு கடுமையான சவால்கள் இருந்தும், தன்னம்பிக்கை ஊட்டுற பேச்சு, என்னா சுறுசுறுப்பு?? ஒபாமாவைப் பாத்தாவது தெரிஞ்சுக்குங்க... //

    அவ்வளவு புத்திசாலிகளா இருந்தா எங்களை எல்லாம் கைல பிடிக்க முடியுமா???

    ReplyDelete
  3. //Poornima Saravana kumar said...
    அவ்வளவு புத்திசாலிகளா இருந்தா எங்களை எல்லாம் கைல பிடிக்க முடியுமா???
    //

    புலம்பலுக்கு எதுக்கு ஒரு மந்திரி.... முடியலையா? திறமைசாலிங்க ஊர்ல நிறைய இருக்காங்க... கொடுத்துட்டுப் போகலாம்....

    ReplyDelete
  4. 100 கோடி பேர வெச்சுக்கிட்டு வேலை வாய்ப்பை எப்படி உருவாக்கிறதுன்னு தெரியாம, ஊருக்கெல்லாம் கூலிக்கு ஆள் எப்படி அனுப்பறதுன்னு சிந்திச்சா அப்படிதான் புலம்புவாங்க.

    ReplyDelete
  5. //ம‌க்கா, மென்பொருள் ப‌டைப்பாளிக‌ளுக்கு எப்ப‌வும் எதிர்கால‌ம் இருக்கு. இந்த‌ப் புல‌ம்ப‌ல்க‌ளைக் க‌ண்டுகிடாதீங்க‌... இது த‌ற்காலிக‌மான‌ தொய்வுதான்!//

    boost oh boost!

    ReplyDelete
  6. அட ப்ளாக் டைட்டில் மாத்தியாச்சு.
    கலக்கலான உங்க படம் வேற...
    ம், ரெண்டு நாள் வேலையா வராம விட்டதுக்குள்ள இவ்ளோ மாற்றங்களா???
    கலக்குங்க பாஸு...
    :-)

    ReplyDelete
  7. நல்லா சொன்னீங்க தம்பி! வாய தொறக்க முன்னாடி அதோட தாக்கம் என்னனே யோசிக்க மாட்டானுவ. மைக்கு கைல கிடைச்சா போதும். பாருங்க வேடிக்கய. இந்த வருசம் பொறியியல் கல்லூரில கம்ப்யூடர் சயின்சும் இன்பர்மேசன் டெக்னாலஜியும் கூவி கூவி விப்பாங்க. உங்கள மாதிரி கொஞ்ச பேரு யதார்த்தம் சொன்னாதான் சரி.

    ReplyDelete
  8. Well said.... our "leaders" have always been negative ever since this recession started. The first thing we need to do is to IGNORE these stupid opinions.

    (from airport lounge... no tamil typing possible :( )

    ReplyDelete
  9. //போனாப் போகுதுன்னு பாத்தா, நிதி அமைச்சர் அதையும் தாண்டி அழுதே போடுவார் போல இருக்கே?! //

    அழுகிற போட்டில ஜெயிக்கப் போவது யாருங்கிற மாதிரி வெளியுறவும்,உள்துறையும் போட்டி போட்டு அறிக்கை விடுறாங்க பாகிஸ்தானுக்கு.

    ஒரு போரை தவிர்க்கும் யுக்தியாக பாகிஸ்தானுடன் செயல்பட்டாலும் விடும் அறிக்கைகள் பார்க்க சகிக்கவில்லை.

    உங்களுக்கு நிதிப் புலம்பல்.எனக்கு தேசப் புலம்பல்.

    ReplyDelete
  10. குடுகுடுப்பை , பின்றீங்களே..

    ReplyDelete
  11. வேலை வாய்ப்பை நம்ம ஊர்ல உருவாக்க எந்த .... முன் வர்றது இல்லீங்க. பாருங்க, எல்லாருமே அமெரிக்கா, இங்கிலாந்துல இருந்துதான் பிராஜக்ட் எடுத்துட்டு வரனும்னு கம்பேனி ஆரம்பிக்கிறாங்க. நாமளே ஒன்ன பண்ணுவோம்னு ஆரம்பிக்கிறாங்களா?

    ReplyDelete
  12. //குடுகுடுப்பை said...
    100 கோடி பேர வெச்சுக்கிட்டு வேலை வாய்ப்பை எப்படி உருவாக்கிறதுன்னு தெரியாம, ஊருக்கெல்லாம் கூலிக்கு ஆள் எப்படி அனுப்பறதுன்னு சிந்திச்சா அப்படிதான் புலம்புவாங்க.
    //

    நல்லாச் சொன்னீங்க.... பிறழ்ந்த செய்தியின் அடிப்படையில பேசுறது சரியானதல்ல... அப்படியே அது உண்மையான செய்தியாயிருந்தாலும், பொறுப்புல இருக்குறவங்க நுகர்வோரட நம்பிக்கைய குலைக்குற மாதிரி பேசக் கூடாது. அடுத்து, வெளிநாட்டு வேலைய நம்பியா இந்திய நிர்வாகம் இருக்கு?? இந்த இடத்துல நீங்க சொல்றது 100% சரியான கருத்து.

    ReplyDelete
  13. This comment has been removed by the author.

    ReplyDelete
  14. சமிபத்திய அமெரிக்க தொழிலர் நல அமைப்பின் படி அடுத்து பத்து ஆண்டின் வேலை வாய்ப்புகளின் ஆசிரியர் மற்றும் மருத்துவ சம்பந்த பட்ட வேலை வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளன. மேலதிக விவரங்களுக்கு இந்த இனைய தளங்களில் காணவும் .


    http://www.fastcompany.com/articles/2009/01/best-green-jobs.html

    http://hotjobs.yahoo.com/career-articles-10_hot_professions_for_2009-633

    http://money.cnn.com/2008/12/08/news/economy/strong_industries/index.htm?postversion=2008120810

    ReplyDelete
  15. //முச்சந்தி said...
    சமிபத்திய அமெரிக்க தொழிலர் நல அமைப்பின் படி அடுத்து பத்து ஆண்டின் வேலை வாய்ப்புகளின் ஆசிரியர் மற்றும் மருத்துவ சம்பந்த பட்ட வேலை வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளன. மேலதிக விவரங்களுக்கு இந்த இனைய தளங்களில் காணவும் .
    //

    அருண் அண்ணே, வாங்க வணக்கம்! புரிஞ்சுட்டு, அப்பப்ப வந்து மேலதிகத் தகவல்களைத் தந்துட்டுப் போறீங்க. நொம்ப நன்றிங்க!!

    ReplyDelete
  16. ILA said...

    வேலை வாய்ப்பை நம்ம ஊர்ல உருவாக்க எந்த .... முன் வர்றது இல்லீங்க. பாருங்க, எல்லாருமே அமெரிக்கா, இங்கிலாந்துல இருந்துதான் பிராஜக்ட் எடுத்துட்டு வரனும்னு கம்பேனி ஆரம்பிக்கிறாங்க. நாமளே ஒன்ன பண்ணுவோம்னு ஆரம்பிக்கிறாங்களா?
    //
    கல்வியே கூலியாக்கதான் உதவுது.மக்கள் சக்தியை நமக்கு பயன்படுத்தும் திட்டமிடல் இல்லாதவரை நாம் ஊர் ஊராகப்போவோம், 100 வருடம் கழித்து நம் சந்ததி உதை வாங்கும்.

    ReplyDelete
  17. //குடுகுடுப்பை said...
    கல்வியே கூலியாக்கதான் உதவுது.மக்கள் சக்தியை நமக்கு பயன்படுத்தும் திட்டமிடல் இல்லாதவரை நாம் ஊர் ஊராகப்போவோம், 100 வருடம் கழித்து நம் சந்ததி உதை வாங்கும்.
    //

    மக்கா, அண்ணன் இன்னைக்கு நல்ல, வலுவான‌ சுதியில இருக்கார் போலிருக்கே? பின்னிப் படல் எடு எடுன்னு, எடுக்குறார் பாருங்க!!!

    ஒரு பயலும் இதை மறுக்க முடியாது அண்ணே!

    போடுங்கப்பா அண்ணனுக்கு ஒரு சபாசு!!

    ReplyDelete
  18. //ராஜ நடராஜன் said...//

    //வேத்தியன் said... //

    // ILA said... //

    நன்றிங்க! நன்றிங்க!! நன்றிங்க!!!

    ReplyDelete
  19. //Mahesh said...
    Well said.... our "leaders" have always been negative ever since this recession started. The first thing we need to do is to IGNORE these stupid opinions.
    //

    Anne, Wish you happy journey!!!

    ReplyDelete
  20. ரொம்ப சரி. தப்பா சொல்லுறவனுக எல்லாருக்கும் வெய்யுங்க ஆப்பு.

    -Venki

    ReplyDelete
  21. // எரிச‌க்திக்கான‌ தொழில்நுட்ப படிப்பு/வேலைக‌ள்ல‌ க‌வ‌ன‌ம் செலுத்த‌லாம். காற்றாலை, சூரிய‌ எரி/மின் ச‌க்தி, சாண‌வாயு எரிச‌க்தி, இப்ப‌டி //

    இது தவிர பயோ- டெக்னாலஜி படிப்புக்கும், அக்கௌண்ட்ஸ் படிப்புகளான சி.ஏ வுக்கும் மதிப்பு கூடுதலாகும்.

    நானோ டெக்னாலஜிக்கு நல்ல எதிர்காலம் உண்டு என்றும் சொல்லுகின்றார்கள்.

    ReplyDelete
  22. // பதினோரு பத்திரிகை இல்லை, இந்தியா முச்சூடும் இருக்குறவிக எல்லாம், அவங்க அவங்க செளரியத்துக்குப் போட்டு நொங்கு எடுக்குறாங்க?! அவ்வ்வ்........//

    இதுல கூட அரசியல் பண்றாங்க அப்படின்னு நினைக்கின்றேன்.

    ReplyDelete
  23. //Bala said...
    இந்த வருசம் பொறியியல் கல்லூரில கம்ப்யூடர் சயின்சும் இன்பர்மேசன் டெக்னாலஜியும் கூவி கூவி விப்பாங்க.
    //

    பாலாண்ணே, வாங்க! இது வேறயா? அடக் கடவுளே?! நான் இந்தக் கோணத்துல யோசிக்கவே இல்ல..அவ்வ்......

    ReplyDelete
  24. //இப்ப‌டி இய‌ற்கைய‌ ஒட்டின‌ எதுக்கும் எதிர்கால‌ம் இருக்கு. அது மீளாக்கத்(renewable)துக்கு ஏதுவா இருக்கணும். இந்த‌ அர‌சாங்க‌ம் அதுக‌ளை ஆராய்ஞ்சி, வ‌ழிகாட்டணும். //
    அட இது நல்ல சிந்தனையா இருக்குப்பா!! குறிப்பாக கிராமத்துல இருந்து வர்ற மாணவர்களுக்கு இயற்க்கை சார்ந்த படிப்புகள்ள நல்ல ஆர்வம் இருக்கும்... எல்லாரும் ஒரே துறைலையே போய் குவியரதுக்கு பதிலா இது மாதரி எதிகாலத்துல பயன்படற துறைகள்ல ஈடுபட்ட நாட்டுக்கும் நல்லது.. வீட்டுக்கும் நல்லது... அருமை அருமை..

    ReplyDelete
  25. """"உங்களோட இந்த பதிவு இக்காலகட்டத்துக்கு அவசியமான இந்த அரசியல்வாதிகளுக்கு எப்பவும் மக்களை தங்கள் பக்கம் கவன ஈர்ப்புக்காக ஏதாவது செய்து கொண்டே இருக்கணும் என்பதுதான் எண்ணம்.
    என்னை பொருத்தவரையிலும் நான் அறிந்தவரையிலும் எல்லா தொழில் நுட்ப படிப்புக்கும் மதிப்பு எப்பவும் உண்டு."""
    நம்ப பக்கம் சொல்வதுபோல 'உதவி செய்யலேனாலும் பர வாயில்ல! உபத்திரவம் செய்யவேண்டாமே' அப்படீன்னு இந்த அரசியல்வாதிகள் கிட்ட சொல்லணும்.

    ReplyDelete
  26. ஒரு புது பதிவு போட்டுள்ளேன்...
    வந்து பார்க்கவும்...

    ReplyDelete
  27. /* //Poornima Saravana kumar said...
    அவ்வளவு புத்திசாலிகளா இருந்தா எங்களை எல்லாம் கைல பிடிக்க முடியுமா???
    //

    புலம்பலுக்கு எதுக்கு ஒரு மந்திரி.... முடியலையா? திறமைசாலிங்க ஊர்ல நிறைய இருக்காங்க... கொடுத்துட்டுப் போகலாம்.... */

    அவ்ளோ நல்லவங்க இ(வ)ங்க இல்லங்க..

    ReplyDelete
  28. நன்றி நன்றி. இது போல பாசிடிவ் எழுத்துகள் நிறைய பதிவிடுங்கள்.
    வலையுலகமாவது பிழைத்துப் போகட்டும்.

    ReplyDelete
  29. பதிவை எல்லாம் படிச்சு கிட்டுத்தான் இருக்கேன் ன்னு சொல்லுறேன்

    ReplyDelete