2/04/2009

கனவில் கவி காளமேகம் - 13

வணக்கமுங்க! நாம குப்பை கொட்டிட்டு இருக்குற சார்லட்டைத் தலைமையிடமா வெச்சிருக்குற அமெரிக்க (bank of america) வங்கியோட நிலைமை பத்திதாங்க இன்னைக்கு எங்கயும் பேச்சு. ரெண்டு மாசத்துக்கு முன்னாடி, அல்லா வங்கியும் கீழவரம் போய்ட்டிருந்தப்ப, இது மாத்திரம் ஆலமரமா காட்சியளிச்சது. சரி, இருக்குற ஒரு விழுதை விட்டு, அடுத்த மரத்தையும் அணைச்சிக்குவோம்ன்னு மெரில் லின்ச்ச(Merrill Lynch) வாங்கினதுதாங்க தப்பாப் போச்சு. அணைச்சதுல, அந்த மரம் இந்த மரத்தையும் கீழ இழுக்குது. ஆமுங்க, அந்த மரத்தோட நிலைமை செரியில்லாமா, நிறையத் தொகை நட்டம் ஆயிடுச்சு.

ஆக மொத்தத்துல, ஒரு காலத்துல அம்பது வெள்ளிக்கு மேல இருந்த‌ பங்கு தொகை ஏழு வெள்ளிக்கு வந்துச்சு. சரி இனி இறங்காதுன்னு பாத்தா, இன்னைக்கு நாலு வெள்ளி எழுபது சதம் ஆயிடிச்சி. என்ன கூத்துன்னு கேட்டிங்கன்னா, அரசாங்கத்துகிட்ட அதிகப்படியா கையேந்தின நிறுவனங்கள்ல, அஞ்சு இலட்சம் வெள்ளிக்கு மேல யாருக்கும் ஊதியம் இருக்கப்படாதுன்னு சொல்லிட்டாங்களாம். ஆக, முக்கியப் புள்ளிகள் வெளில போயிடுவாங்கங்ற ஒரு இதுல, மறுபடியும் சரிவு. கெட்ட குடியே கெடும், பட்ட காலிலே படும்ங்றது இதுதானோ? அதை விடுங்க, நெம்ப நாளைக்கப்புறம் நேத்தைக்கு நம்ம கனவுல வந்த காளமேகம் அப்பிச்சி என்ன சொன்னாருன்னு பாக்கலாம் வாங்க!

"என்னடா பேராண்டி, பொங்கல் எல்லாம் நல்லாப் போச்சா? நல்லாதான இருக்கே?"

"வாங்க அப்பிச்சி, நெம்ப நாளா ஆளே காணோம்! எனக்கு உங்ககிட்ட கேக்க வேண்டியது ஒன்னு ரெண்டு இருக்குங் அப்பிச்சி!"

"கேள்டா, கேள்டா! அரை வேக்காடுக்கெல்லாம் ஆர்வம் வருதுன்னா, அது நல்ல விசியந்தான? கேளு, கேளு!!"

"அப்பிச்சி, இந்த செமக் கட்டைங்றாங்களே அது என்னுங்? செமையா இருக்குதுன்னு சொல்லுறாங்க, செமையா எழுதறன்னு சொல்லுறாங்க, செமையா அடிச்சிட்டன்னும் சொல்லுறாங்க. அந்த செமைன்னா என்ன?"

"ஆமாடா, அது தமிழ் வார்த்தைதேன்! உடகார்ங்றதை ஒக்காருன்னு சொல்றதில்லையா, அது மாதிரிதேன் இதுவும் மருவிப் போய்டிச்சி. தோட்டங் காட்ல இருக்குற பொழிய, கட்டைன்னும் சொல்லுறது உண்டு. கட்டை முறிஞ்சு, தண்ணி கடைப் போகுதுன்னெல்லாம் சொல்லக் கேட்டுருப்ப நீ! அப்ப மழைக் காலங்கள்ல போயி, இருக்குற கட்டைக எல்லாம் வலுவா இருக்கான்னு பாக்குறது உண்டு. அப்பச் சொல்லுறது, "இது செமக் கட்டை, ஒன்னும் முறியாதுன்னு!" அதாவது, இது செம்மையான கட்டை, ஒன்னும் சட்டை செய்யத் தேவையில்லன்னு. ஆக, நல்லா இருக்குற எதையும், செம்மையா, செமையா, செவ்வையான்னு சொல்லுறதும் வழக்கம் ஆயிடிச்சு. அதை ஒட்டி வாற சொலவடை ஒன்னு சொல்லுது, உக்கார்றவன் செமையா உக்காந்தா, செரைக்குறவனும் செமையாச் செரைப்பான்னு!"

"ஓ, அதானா இது? ஆமா, அந்தத் தொடையகராதின்னாங்?"

"நல்ல கேள்வியாத்தான் கேக்குற நீ இன்னைக்கி! தொடைன்னா, பாட்டோட ஒரு அங்கம். ஓசை குறிச்ச ஒன்னு. தமிழகராதிய வகைப்படுத்தும்போது சொல்லுறது, சதுரகராதின்னு. ஏன்னா, தமிழகராதிய நாலு வகையாப் பிரிக்கலாம். பெயரகராதி, the different signification of words. பொருளகராதி, containing words of the same signification. தொகையகராதி, containing collective nouns or generic words. தொடையகராதி, a rhyming dictionary. ஒத்த தொடை இருக்குற சொல்லுகளை வகைப்படுத்திச் சொல்லுறது தொடையராதின்னு."

"அப்பிடீங்களா அப்பிச்சி! இதுக்கு மேல நீங்க எதனாச்சியும் கேட்டு அக்கப்போர் செய்தாக்க, சுத்தமா எல்லாத்தையும் மறந்திடுவேன். நான் இப்ப தூங்கணும்!"

"ச‌ரிடா பேராண்டி, அப்ப இன்னைக்கு இது போதும். நீ தூங்கு, நான் வாறன்!"

இன்னைக்கு இதாங்க சொன்னாரு! அடுத்த தடவை என்ன சொல்லப் போறாரோ? வந்து, மனுசன் கேள்வி வேற கேப்பாரு. சும்மா, சொல்லிட்டுப் போகலாமில்ல?? எதுக்கும், மறுபடியும் வருவாருன்னு நம்புவோம்.


(......கனவுல இன்னும் வருவார்......)

26 comments:

  1. காளமேகம் ஐயா.. ஆங்கிலத்தில புளக்குறாரே! அமெரிக்காவுல செட்டில் ஆயிட்டாரா?

    ReplyDelete
  2. மக்களே பாருங்க... நம்ம பழமைபேசி... தூங்கறதுக்கு முன்னாடி செம கட்ட, தொடை இதெல்லாம் தான் யோசிக்கிறாரு... ;) இவரால கவி காளமேகம் கூட விளையாட்டு பையனாயிடுவார் போல இருக்கு ;)

    ReplyDelete
  3. //Natty said...
    காளமேகம் ஐயா.. ஆங்கிலத்தில புளக்குறாரே! அமெரிக்காவுல செட்டில் ஆயிட்டாரா?
    //

    எனக்கு தமிழ்ல சொன்னாப் புரியாதுன்னு, ஆங்கிலத்துல சொல்லியிருப்பாரு போல?! இஃகிஃகிஃ!

    ReplyDelete
  4. //Natty said...
    மக்களே பாருங்க... நம்ம பழமைபேசி... தூங்கறதுக்கு முன்னாடி செம கட்ட, தொடை இதெல்லாம் தான் யோசிக்கிறாரு... ;) இவரால கவி காளமேகம் கூட விளையாட்டு பையனாயிடுவார் போல இருக்கு ;)
    //

    உங்களுக்கு என்னோட முந்தைய பதிவுல டோண்டு இராகவன் ஐயா ஒரு தகவல் கொடுத்திருக்காரு...அதைப் பாருங்க...

    ReplyDelete
  5. என்னாண்ணே? கட்டை, தொடைன்னு காளமேகம் பொளக்கறாரு?அமெரிக்கா போய் ரொம்பக் கெட்டுப் போயிட்டாரு.

    வர வர காளமேகமே ரொம்ப தூங்கறார் போல... அவர் கனவுல போயி அண்ணன் கனவுல அடிக்கடி வாங்கன்னு சொல்லணும்... யார அனுப்பலாம்? குடுகுடுப்பை சரியான ஆளா இருப்பாரா?

    ReplyDelete
  6. இருக்குற ஒரு விழுதை விட்டு, அடுத்த மரத்தையும் அணைச்சிக்குவோம்ன்னு மெரில் லின்ச்ச(Merrill Lynch) வாங்கினதுதாங்க தப்பாப் போச்சு. அணைச்சதுல, அந்த மரம் இந்த மரத்தையும் கீழ இழுக்குது. ஆமுங்க, அந்த மரத்தோட நிலைமை செரியில்லாமா, நிறையத் தொகை நட்டம் ஆயிடுச்சு.///

    சேரிடம் அறிந்து சேர்னு சும்மாவா சொன்னான் சாமி...

    ReplyDelete
  7. //Mahesh said...
    என்னாண்ணே? கட்டை, தொடைன்னு காளமேகம் பொளக்கறாரு?அமெரிக்கா போய் ரொம்பக் கெட்டுப் போயிட்டாரு.//

    இஃகிஃகி!


    //வர வர காளமேகமே ரொம்ப தூங்கறார் போல... அவர் கனவுல போயி அண்ணன் கனவுல அடிக்கடி வாங்கன்னு சொல்லணும்... யார அனுப்பலாம்? குடுகுடுப்பை சரியான ஆளா இருப்பாரா?
    //

    குடுகுடுப்பையாரே கும்பகர்ணன் ஆயிட்டாரு போல இருக்கு...ஆளைக் காணோமுங்க அண்ணே!

    ReplyDelete
  8. //thevanmayam said...
    அந்த மரத்தோட நிலைமை செரியில்லாமா, நிறையத் தொகை நட்டம் ஆயிடுச்சு.///

    சேரிடம் அறிந்து சேர்னு சும்மாவா சொன்னான் சாமி...
    //

    ஆமுங்க ஆளோட அழகுல பின்னணிய சரியா விசாரிக்காம விட்டுட்டாங்க போல இருக்கு?! ஐயோ, பாவம்!!

    ReplyDelete
  9. ஏண்ணே... மெரில் லின்ச்சை வாங்குனது கூட கட்டாயத்தின் பேர்லதான்... அதுவும் ஒரு மாதிரியான பெயில் அவுட் அப்பிடிங்கறாங்களே... உண்மையா/

    ReplyDelete
  10. //Mahesh said...
    ஏண்ணே... மெரில் லின்ச்சை வாங்குனது கூட கட்டாயத்தின் பேர்லதான்... அதுவும் ஒரு மாதிரியான பெயில் அவுட் அப்பிடிங்கறாங்களே... உண்மையா/
    //

    ச்சேச்சே...அப்பிடியெல்லாம் இல்லீங்.... BOA கிட்டத்தட்ட நாப்பது நிறுவனங்களை இது வரையிலும் வாங்கித்தான் லாபம் பாத்தது... அதேமாதிரி இதையும் செப்டெம்பர்லயே வாங்கியாச்சு. வாங்கினதுக்கப்புறம், பொருளாதாரம் சந்தி சிரிச்சப்புறமா, பின்வாங்கலாமான்னு யோசிக்கிறப்பதான், அரசாங்கம் சொல்லுச்சு, நட்டத்துல 90% நாங்க உதவித்தொகை மூலமா ஏத்துகிடுறோம், நீங்க(boa) பின்வாங்க வேண்டாம்ன்னு!

    ReplyDelete
  11. ஓ... அப்பிடியா விசியம்? பின்வாங்க வேண்டாமுன்னு சொன்னதைத்தான் இப்பிடி திரிச்சுட்டாங்க போல... :)

    ReplyDelete
  12. //Mahesh said...
    ஓ... அப்பிடியா விசியம்? பின்வாங்க வேண்டாமுன்னு சொன்னதைத்தான் இப்பிடி திரிச்சுட்டாங்க போல... :)
    //

    அண்ணே, இப்ப இருக்குற கேள்வியெல்லாம் அரசே எடுத்துக்குமா? எடுத்துட்டா பொதுப் பங்(common shares)கெல்லாம் அம்புடுதேன்....

    ReplyDelete
  13. //காளமேகம் ஐயா.. ஆங்கிலத்தில புளக்குறாரே! அமெரிக்காவுல செட்டில் ஆயிட்டாரா?//

    ஹா..ஹா...ஹா.... இரசித்துச் சிரித்தேன் நட்டி :))

    ReplyDelete
  14. செம கட்டைக்கு செமையான விளக்கம் அண்ணே.
    அடுத்து நாட்டுக் கட்டைக்கும் உங்களிடம் இருந்து ஒரு பதிவை எதிர்பார்க்கும் உங்கள் அன்பு தம்பி.

    ReplyDelete
  15. //கேள்டா, கேள்டா! அரை வேக்காடுக்கெல்லாம் ஆர்வம் வருதுன்னா, அது நல்ல விசியந்தான? கேளு, கேளு!!//

    உங்களையவே இப்படி சொல்றாரே அப்போ எங்களை எல்லாம் முழு வேக்காடுனா சொல்லுவார்??

    முக்கியமான ஒன்ன கேட்க மறந்திட்டேன் "அரை வேக்காடு" அப்படினா இன்னா?

    ReplyDelete
  16. //எம்.எம்.அப்துல்லா said...
    //காளமேகம் ஐயா.. ஆங்கிலத்தில புளக்குறாரே! அமெரிக்காவுல செட்டில் ஆயிட்டாரா?//

    ஹா..ஹா...ஹா.... இரசித்துச் சிரித்தேன் நட்டி :))
    //

    வாங்கண்ணே, வாங்க! சிரிச்சீங்ளா...நல்லா சிரீங்க...

    ReplyDelete
  17. //Sriram said...
    செம கட்டைக்கு செமையான விளக்கம் அண்ணே.
    அடுத்து நாட்டுக் கட்டைக்கும் உங்களிடம் இருந்து ஒரு பதிவை எதிர்பார்க்கும் உங்கள் அன்பு தம்பி.
    //

    வாங்க தம்பி, போட்டுட்டாப் போச்சு...இஃகிஃகி!

    ReplyDelete
  18. //PoornimaSaran said...
    //உங்களையவே இப்படி சொல்றாரே அப்போ எங்களை எல்லாம் முழு வேக்காடுனா சொல்லுவார்?? //

    உங்களையெல்லாம் வைய மாட்டாருங்க!

    //முக்கியமான ஒன்ன கேட்க மறந்திட்டேன் "அரை வேக்காடு" அப்படினா இன்னா?
    //

    பாதி வெந்தும், பாதி வேகாததுந்தான்! என்னுங்க நீங்க, நம்மூர்ல இருந்துட்டு இதக் கேக்கலாமா? தெரிஞ்சி இருக்கணுமே??

    ReplyDelete
  19. //Natty said...
    மக்களே பாருங்க... நம்ம பழமைபேசி... தூங்கறதுக்கு முன்னாடி செம கட்ட, தொடை இதெல்லாம் தான் யோசிக்கிறாரு... ;)
    //

    இதைப்பார்த்த தங்சு, பிலடெல்பியால இருக்குற என்னைக் கூப்ட்டு....
    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....

    ReplyDelete
  20. //சந்தனமுல்லை said...
    செம..செம..செம!! :-)
    //

    நன்றி! நன்றி!! நன்றி!!!

    ReplyDelete
  21. நானும் காலையிலேயிருந்து இந்த செமக் கட்டை கிட்ட வரணுமுன்னு பார்க்கிறேன்.முடியல.

    (மெரில் லின்ச் பத்தியெல்லாம் சொன்னா யார் காதுல போட்டுக்கிறாங்க இல்ல:))

    ReplyDelete
  22. பழமை பேசின்னா,
    நானும் ஏதோ பெருசு, டைம் போகாம பொலம்புமுன்னு பாத்தா,கட்ட,தொடன்னு மன்மதனா கலக்கிறீங்களே.

    கலக்குங்க கலக்குங்க காசா,பணமா?

    ReplyDelete
  23. //ராஜ நடராஜன் said...
    நானும் காலையிலேயிருந்து இந்த செமக் கட்டை கிட்ட வரணுமுன்னு பார்க்கிறேன்.முடியல.//

    வாங்ண்ணா, உங்களுக்கு தீந்தபோது வந்து போங்க....இஃகிஃகி!

    //(மெரில் லின்ச் பத்தியெல்லாம் சொன்னா யார் காதுல போட்டுக்கிறாங்க இல்ல:))
    //

    அவிகளுக்கு அவிக பாடே பெரும்பாடு போல இருக்கு? இஃகிஃகி!

    ReplyDelete
  24. செம கட்டையா சொல்லுறீங்க

    ReplyDelete
  25. //
    "கேள்டா, கேள்டா! அரை வேக்காடுக்கெல்லாம் ஆர்வம் வருதுன்னா, அது நல்ல விசியந்தான? கேளு, கேளு!!"
    ///
    சரியாத்தான் சொல்லியிருக்காரு ஹி ஹி

    நல்லயிருக்கு

    ReplyDelete