2/01/2009

சும்மா இல்ல‌, நாராசம் சிங்கிநாதம்!

வணக்கம்! தம்பி Sriram அவிங்க அப்பப்ப நம்ம பக்கத்துக்கு வந்து போவாரு. இப்பக் கொஞ்ச நாளாக் காணோம்! என்ன விசயமின்னு தெரியலை? நம்ம பக்கத்துக்கு வந்து போற தாக்கத்துல, வழக்கொழிந்த சொற்கள்ன்னு சொல்லி ஒரு தொடரைத் துவங்கி வெச்சு, அது நல்லபடியாப் போய்கிட்டு இருக்கு. அவருக்கும், தொடர்ல கலந்துக்குறவிங்களுக்கும் வாழ்த்துகளும் நன்றியும்.

அந்தத் தொடர்ல சந்தனமுல்லை நினைவுகூர்ந்த சொல்தாங்க, இந்த நாராசம். கேக்கவே நாராசமா இருக்குன்னு பொழங்குறது உண்டு. நாராசத்தை சலாகைன்னும் சொல்லுறது உண்டு. வைத்தியன் பாவிக்கிற சிறு கூரான இரும்புத் தண்டு (Needle-like tool of steel)தானுங்க இந்த சலாகை, நாராசம். அப்ப, இதைக் காதுல விட்டா எப்பிடி துன்பமும் வலியும் இருக்குமோ, அப்படியாக இந்தப் பேச்சு இருக்குங்றதை, நாராசமேத்துற மாதிரி இருக்குன்னு சொல்லுறது, அதாங்க நாராசமாயிருக்குன்னும் ஆயிடுச்சி. இஃகிஃகி!

அடுத்து, யாராவ‌து அக்க‌ப்போர் செய்திட்டு இருக்கும் போது, ஏம்ப்பா சிங்கிநாத‌ம் செய்துட்டு இருக்கேன்னு கேட்கிற‌து வ‌ழ‌க்க‌ம். சிணுங்க‌ல் நாத‌ம்ங்ற‌துதான் சிங்கிநாத‌ம்ன்னு ஆயிடுச்சுன்னும் சொல்லி இருந்தாங்க‌. சிங்கிநாத‌ம்ங்ற‌தே ஒரு சொல்தானுங்க‌. எதையும் மேம்போக்கா எடுத்துட்டு, லேசுபாசா, சிர‌த்தை இல்லாம‌ ந‌ட‌ந்துக்குற‌ ப‌ழ‌க்க‌ந்தானுங்க‌ இந்த‌ சிங்கிநாத‌ம்ங்ற‌து. இந்த‌ சொல், சிங்கியிலிருந்து வ‌ந்த‌ ஒரு தொடுப்புச் சொல். வ‌ர்ற‌ கால‌ங்க‌ள்ல‌, சிங்கி, சிங்க‌ன், சிங்கிய‌டிக்குற‌து ப‌த்தி பாக்க‌லாமுங்க‌.

ச்சும்மா, Sriram அவிங்க சும்மா இருந்தா ஆகாதுன்னு, சும்மா இருக்குற நேரத்துல நீங்களும் தொடர்ல கலந்துக்குங்கன்னு, சும்மா இல்லாம‌ ஒரு தொடர் எடுத்து விட்டதுல, சும்மா பல தகவல் கிடைக்குதில்ல?! அதான், இந்த தொடுப்பைச் சொடுக்கி, சும்மா பத்தின அருமையான பதிவையும் படிங்க, சும்மா படிங்க நல்லா இருக்கும். இஃகிஃகி!!

20 comments:

  1. அது சரி, சும்மா பின்னூட்டம் போட்டுகிட்டு இருந்தவனை சும்மா உசுப்பிவிட்டு, இன்னிக்கு என்ன பதிவு போடறதுன்னு தெரியாம், சும்மா முழி முழின்னு முழிச்சிகிட்டு இருக்கிறது எனக்குதானே தெரியும்.

    அது சரி புலிய பாத்து பூனை சூடு போட்டுகிட்ட மாதிரி ஆயிடுச்சுங்க நம்ம நிலம...

    ReplyDelete
  2. ஹைய்யா...

    ரொம்ப நாள் கழித்து

    பழமைபேசி அவர்களின் பதிவில்

    நான் தான் முதல் பின்னூட்டம்...

    ReplyDelete
  3. //இராகவன் நைஜிரியா said...
    ஹைய்யா...

    ரொம்ப நாள் கழித்து
    பழமைபேசி அவர்களின் பதிவில்
    நான் தான் முதல் பின்னூட்டம்...
    //

    நன்றிங்க ஐயா, நன்றிங்க!!

    ReplyDelete
  4. //இராகவன் நைஜிரியா said...

    அது சரி புலிய பாத்து பூனை சூடு போட்டுகிட்ட மாதிரி ஆயிடுச்சுங்க நம்ம நிலம...
    //

    சும்மா சொல்லுறீங்க...இஃகிஃகி!

    ReplyDelete
  5. முதல்முறையா கேள்விப்படுறேன்... சிங்கிநாதம் !!

    உங்களுக்கு என் நன்றிகள் !!!

    அப்பறம்... நாராசம்... இதுக்கு சம்ஸ்க்ருதம் வழியாவும் அர்த்தம் சொல்லலாம். ரசம்-னா நல்ல, ருசியான, சுவையான-அப்பிடின்னு அர்த்தம். சம்ஸ்க்ருதத்துல 'அல்லாத' அப்பிடிங்கற பதத்துக்கு 'ந' அல்லது 'அ' சேத்து சொல்லற வழக்கம். அப்ப சுவையானது 'ரசம்'. சுவை அல்லாதது, கொள்ள உகந்தது அல்லாதது 'ந-ரசம்'. அதுவே சொல்லும்போது 'நாராசம்' ஆச்சு.

    ReplyDelete
  6. @@Mahesh

    வாங்க மகேசு, வணக்கம்! மேலதிகத் தகவலுக்கு நன்றிங்க....

    ReplyDelete
  7. நல்ல பதிவு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. 'சிங்கிநாதத்'தை புரிஞ்சுக்கிட்டேன்...
    நல்ல பதிவு...

    ReplyDelete
  9. //பிரபு said... //
    //வேத்தியன் said... //


    நன்றிங்க, நன்றிங்க!!

    ReplyDelete
  10. சிங்கிநாதம் சிணுங்கல் நாதமாகவே இருந்திருக்கலாம்.கேட்கவும் நன்றாயிருக்கிறது.

    ReplyDelete
  11. ஆமா எப்படீங்க இவ்ளோ நல்லா தமிழ் வார்த்தைகளைப் பற்றி சொல்லறீங்க !!!

    ReplyDelete
  12. ஆய் சிங்கா!ஆய் சிங்கிக்கு காத்திருக்கிறேன்.

    சிங்கிள் டீக்கு சிங்கி அடிச்ச காலம் நினைவுக்கு வருதுங்கோ!

    ReplyDelete
  13. எப்பவுமே ஒரு எதிர்பார்ப்போட தான் உங்க பதிவை படிப்பேன். நல்லா இருந்துச்சுங்க உங்க பதிவு.

    ReplyDelete
  14. பயன் படுத்துவேன் இந்த வார்த்தை எல்லாம்

    ReplyDelete
  15. //ராஜ நடராஜன் said...
    சிங்கிநாதம் சிணுங்கல் நாதமாகவே இருந்திருக்கலாம்.கேட்கவும் நன்றாயிருக்கிறது.
    //

    இப்பென்ன கேட்டுப் போச்சு...நாம அப்படியே பொழக்கத்துல விட்டாப் போச்சு.... இஃகிஃகி!!

    ReplyDelete
  16. //PoornimaSaran said...
    ஆமா எப்படீங்க இவ்ளோ நல்லா தமிழ் வார்த்தைகளைப் பற்றி சொல்லறீங்க !!!
    //

    வாங்க நம்மூர் அம்மினி....நம்ம ஊர், கோயமுத்தூர் அல்லோ...எல்லாம், நம்ம ஐயன், பெரியய்யனவிங்க பேசுற பழமதானுங்க அம்மினி?!

    ReplyDelete
  17. //ராஜ நடராஜன் said...
    ஆய் சிங்கா!ஆய் சிங்கிக்கு காத்திருக்கிறேன்.

    சிங்கிள் டீக்கு சிங்கி அடிச்ச காலம் நினைவுக்கு வருதுங்கோ!
    //

    பாத்தீகல்லோ...பழமயிக எல்லாந்தெரியும்....பொழங்குறதில்ல...காலவக்கிரம்...நாமென்ன சொல்லுறது? ஏனுங்...அப்பிடித்தானுங்?!

    ReplyDelete
  18. //அமுதா said...
    எப்பவுமே ஒரு எதிர்பார்ப்போட தான் உங்க பதிவை படிப்பேன். நல்லா இருந்துச்சுங்க உங்க பதிவு.
    //

    ஆகா, வாங்... எதிர்பார்ப்போட இருக்குற மாதிரி எழுதுங்றதை, சொல்லாமச் சொல்லுறீங்க தாயி, அப்படித்தானுங்கோ? இஃகிஃகி!! அடிக்கொருக்கா, நம்மூட்டுத் திண்ணையில வந்து நல்ல பழம சொல்லிட்டுப் போகோனும்...சரீங்ளா தாயி?

    ReplyDelete
  19. //நசரேயன் said...
    பயன் படுத்துவேன் இந்த வார்த்தை எல்லாம்
    //

    தளபதி அய்யா வாங்... சீசாவுல இருக்குறதக் கண்டா, பழமயிக வரத்தானுங்க செய்யும்... இஃகிஃகிஃகி!!

    ReplyDelete
  20. அண்ணே வந்துட்டோம்ல...
    கொஞ்சம் ஹ்ம்ம் ஹ்ம்ம் நெறைய வேலை கொடுத்துட்டாங்க எங்க அலுவலகத்தில்... அதான் கொஞ்ச நாள் வன வாசம் போயிட்டேன்.

    ReplyDelete