1/24/2009

சிங்கம் - புலி - அமாவாசை

சீதாதேவி மாய மானோட‌ அழகுல மயங்கின வனமுங்க அது. பெரிய வனம், எங்க பாத்தாலும் காடும், பசுமையும், சோலையும், பசுங்கிளிகளும்ன்னு, சொல்லவொண்ணா எழில் பொதிஞ்ச வனாந்தரம். அதுல நாலே நாலு புலிக, இங்க ஒன்னும் அங்க ஒன்னுமா இருந்துச்சாம். மூலைக்கொன்னா உலாத்திகிட்டு, அதுபாட்டுல அதனோட எல்லைக்குள்ள ஓடியாடித் திரிஞ்சுட்டு இருந்ததாம்.

அதே மாதிரி, ப‌க்க‌த்து வ‌ன‌த்துல‌ நிறைய‌ சிங்க‌ங்க‌ளும் இருந்துச்சாம். ந‌ல்ல‌ நாள் பாத்து, சிங்க‌ங்க‌ எல்லாம் ஒன்னு கூடுச்சாம். கூடி ஒரு முடிவெடுத்தாங்க‌ளாம். கூட்ட‌த்துல‌ எடுத்த‌ முடிவின்ப‌டி, புலிக‌ளோட‌ வ‌ன‌த்துக்கு ரெண்டு மூனு சிங்க‌ங்க‌ போச்சாம். போயி எப்ப‌டியும் புலிக‌ள‌ விர‌ட்டிட்டு, அந்த‌ வ‌ன‌த்தைப் பிடிச்சிட‌ணும்ங்ற‌து சிங்க‌ங்க‌ளோட‌ எண்ண‌ம்.

வ‌ன‌த்தோட‌ எல்லையில‌ இருந்த‌ அந்த‌ ஒத்தைப் புலி, சிங்க‌ங்க‌ வ‌ர்ற‌தை தூர‌த்துல‌ வ‌ரும் போதே க‌வ‌னிச்சிடுச்சாம். கூப்பிட்டா காது கேக்குற‌ தூர‌ம் வ‌ந்த‌துமே, புலி கீழ‌ கிட‌ந்த‌ எலும்புத் துண்டுக‌ளை ந‌க்கிகிட்டே உர‌த்த‌ குர‌ல்ல‌ பேச‌ ஆர‌ம்பிச்ச‌தாம், "இன்னும் எனக்கு ப‌சி ஆற‌லை, இனியும் ஒரு ரெண்டு சிங்க‌ம் இருந்தா, வ‌யித்துப் ப‌சி ஆறிடும்!"ன்னு சொல்லுச்சாம். அதைக் கேட்டு, வ‌ந்த‌ சிங்க‌ங்க‌ எல்லாம் ஒரே ஓட்ட‌மா திரும்பி ஓட‌ ஆர‌ம்பிச்ச‌து.

அந்த சிங்கங்கள் எல்லாம் ஓடுறதப் பாத்த குரங்கு, மரத்து மேல இருந்து பலமா சிரிச்சுட்டே பேச ஆரம்பிச்சது, சிங்கங்களே, புலியோட நடிப்பையும் சாமர்த்தியமான பேச்சையும் நம்பி இப்பிடி ஓடி வர்றீங்களே? வெக்கமா இல்லையா, உங்களுக்கு??ன்னு கேட்டுச்சாம்.

அதைக் கேட்ட சிங்கம், நீயும் எங்ககூட வா, எல்லாருமாப் போயி, அந்த குறும்புக்காரப் புலிய வேட்டையாடுவம்ன்னு சொல்லி, அந்தக் குரங்கையும் முதுகில ஏத்திட்டு வந்ததுகளாம் சிங்கங்க. புலி அந்த இடத்தை விட்டு உள்வாங்கி, உள்ள கொஞ்ச தூரமாப் போயி நின்னுகிட்டு இருந்துச்சாம். சிங்கங்களும் குரங்கோட குதூகலமா முன்னேறிப் போச்சுதுகளாம்.

போனதடவை செய்த மாதிரியே, இந்தத்தடவையும் புலி உரத்த குரல்ல பேச ஆரம்பிச்சுதாம், 'இன்னும் எனக்குப் பசி ஆறவே இல்லை. இந்தக் குரங்குகிட்ட சொல்லி, ரெண்டு மூனு சிங்கங்களை அனுப்பச் சொல்லியும், இனியும் எதுவும் மாட்ட மாட்டனுங்குதுகளே?!'ன்னு சொல்லி உறுமுச்சாம். அதுக்கப்புறமும் அதுக அந்தக் காட்டுல இருக்குமா என்ன?

வந்த சிங்ககெங்கல்லாம் ஒரே ஓட்டமா, திரும்பிப் போயிருச்சாம். மறுபடியும், ஏமாந்த கதைய அலசி ஆராஞ்சி, கூடி பேசுச்சுகளாம் சிங்கங்க. போதாக்குறைக்கு ஏழு விற்பன்னர்களும் ஆலோசனைக்கு. இந்தத் தடவை எப்பிடியும் ஏமாந்திடக் கூடாதுன்னு, ஒரு ந்ல்ல நாள் பாத்து மறுபடியும், சிங்ககெல்லாம் சேந்து புலிகளோட வனத்துக்குப் போச்சுதுகளாம். புலி அந்த இடத்துல இல்லையாமுங்க!

மறுபடியும் கொஞ்ச தூரம் உள்வாங்கிப் போயிடுச்சாம். சிங்கங்களுக்கா வனத்தைக் கொண்டுட்டமே, இனி புலிகளை வேட்டை ஆடுறதுதான் மிச்சம்ங்ற நெனப்பு. உள்ள, இன்னும் கொஞ்சம் உள்ளன்னு போய்ட்டே இருந்ததுகளாம். ஆனாப் பாருங்க இந்த்த் தடவை, புலி உள் வாங்கி, உள் வாங்கி உள்ள போனதால, நாலும் ஒன்னு கூடிடுச்சாம். அது மட்டுமா, இந்த சிங்கக் கூட்டம் அமாவசை அன்னைக்கு, வனத்துல கண் தெரியாதுங்ற நேக்க‌த் தெரிஞ்சு வெச்சிருக்கலையாம்.


அது மட்டுமா? அமாவாசை அன்னைக்குத்தான் புலிகளுக்கு சிறப்புக் கண் பார்வையும், கூடுதல் பலமும் இருக்குங்ற விசயத்தையும் சிங்கங்க மட்டுமில்ல, மத்த மத்த வனத்தாரும் அறிஞ்சு வெச்சிருக்கலையாம்!! வேறென்ன? நாலு புலிகளும் சேந்து கண் அவிஞ்சு போன சிங்கங்களை சுலுவுல போட்டுத் தள்ளிருச்சாம்!!!

வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்!

51 comments:

  1. அய்யா! என்னா நக்கலு சாமி உமக்கு! வயிறு குலுங்க சிரிச்சி எனக்கு விக்கலே வந்திருச்சி,

    அப்படியே! விக்கல் நிக்க ஒரு வழியையும் சொல்லிடுங்க.

    ReplyDelete
  2. நல்ல புனைகதை சந்தர்பத்துக்கு உகந்தது புலிகளுக்கு தண்ணியும் ஆயுதம் என்பதை சொல்லாமல் சொல்லியிருக்றீர்கள்

    ReplyDelete
  3. சரியான நேரத்துல போட்ட சரியான கதைதான் . :)

    ReplyDelete
  4. அட நான் என்னமோ படவிமர்சனம்ன்னு வந்தேன்

    ReplyDelete
  5. யாரை தாக்க இந்த கதைன்னு சொல்லவே இல்லிய

    ReplyDelete
  6. \\\ந‌ல்ல‌ நாள் பாத்து, சிங்க‌ங்க‌ எல்லாம் ஒன்னு கூடுச்சாம்.\\\


    நல்ல நாள்ன்னா எப்படி .நல்ல குளிச்சி என்ன தேச்சி பௌடெர் போட்டு "நாள்" இருக்குமோ

    ReplyDelete
  7. \\\போதாக்குறைக்கு ஏழு விற்பன்னர்களும் ஆலோசனைக்கு. \\\


    அதுல சாரும் ஒரு ஆளா

    ReplyDelete
  8. இன்றைக்கு தை அமாவாசை, கோயிலுக்குப் போகணும், எல்லாருக்கும் நன்றி!

    ReplyDelete
  9. \\புலி அந்த இடத்துல இல்லையாமுங்க\\


    ஏன்னா அது உமக்கு பயந்து போய் ஓடிபோயிருக்கும்

    ReplyDelete
  10. கதை நல்லா இருக்குதுங்கோ .குறிப்பா மனப்பாட பகுதி ஏதும் இல்லாம இருக்குது

    ReplyDelete
  11. \\நாலு புலிகளும் சேந்து கண் அவிஞ்சு போன சிங்கங்களை சுலுவுல போட்டுத் தள்ளிருச்சாம்!!!\\\\




    அடடா கடைசில கதை சோகத்துல முடிஞ்சிருச்சே !!!!!!

    ReplyDelete
  12. \\வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்\\



    நம்ம மாப்பிள்ளை கோணத்துல சொன்னா

    "வல்லவனுக்கு 'புல்' தான் ஆயுதம்"

    ReplyDelete
  13. \\\இன்றைக்கு தை அமாவாசை, கோயிலுக்குப் போகணும், எல்லாருக்கும் நன்றி!\\\



    அப்படியே எங்க எல்லாத்துக்கும் சேத்து சாமி கும்பிட்டு வாங்க

    ReplyDelete
  14. //மோகன் கந்தசாமி said...
    அய்யா! என்னா நக்கலு சாமி உமக்கு! வயிறு குலுங்க சிரிச்சி எனக்கு விக்கலே வந்திருச்சி,
    //

    வாங்க மோகன்! சிரிச்சீங்க சரி... நக்கலுங்றீங்களே? புரியலையே ஒன்னும்!

    ReplyDelete
  15. இதனால் சகலமானவர்களும் அறியக் கடவது என்னவென்றால்..நம்ம பழமைபேசி அண்ணா நிறைய சிந்திச்சு ...சிந்திச்சு இப்படி உருப்படிய ஏதாச்சும் எழுதி படிக்கறவங்களை எல்லாம் கவர்ந்துடறார்.அண்ணா உண்மையச் சொல்லுங்க இது"கதையல்ல நிஜம் தானே?!"
    சென்ற பின்னூட்டத்துல நான் சொன்னது 100/100 நிஜம் தான் பழமைபேசி அண்ணா.
    நீங்க அறிவாளி...அறிவாளி...அறிவாளி !!!(இன்னிக்கு இவ்ளோ போதும் இல்ல!!!)

    ReplyDelete
  16. /////வாங்க மோகன்! சிரிச்சீங்க சரி... நக்கலுங்றீங்களே? புரியலையே ஒன்னும்!////

    லங்காபுரியில் தற்போது நடப்பவற்றை மேட்டாபோரிக்களாக ஒரு நக்கல் செய்துள்ளீர்களே! அருமை!!!!

    ReplyDelete
  17. //மண்ணின் மைந்தன் said...
    நல்ல புனைகதை சந்தர்பத்துக்கு உகந்தது புலிகளுக்கு தண்ணியும் ஆயுதம் என்பதை சொல்லாமல் சொல்லியிருக்றீர்கள்
    //

    நன்றிங்க மண்ணின் மைந்தன்!!!

    ReplyDelete
  18. அட இது என்ன நியாயம்? நான் தானா முதல்ல கமென்ட் போட்டேன்.நீங்க மண்ணின் மைந்தனுக்கு மட்டும் பதில் சொல்லி இருக்கீங்க? இது என்ன கொடுமை பழமைபேசி...நியாயம் என்று ஒன்று இருக்கிறதா இல்லையா?! ஆஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  19. //மிஸஸ்.டவுட் said...
    அட இது என்ன நியாயம்? நான் தானா முதல்ல கமென்ட் போட்டேன்.நீங்க மண்ணின் மைந்தனுக்கு மட்டும் பதில் சொல்லி இருக்கீங்க? இது என்ன கொடுமை பழமைபேசி...நியாயம் என்று ஒன்று இருக்கிறதா இல்லையா?! ஆஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
    //

    வாங்க வாங்க, நான் வரிசையா பதில் சொல்லிட்டு வர்றேன்... இஃகிஃகி. நலமாக இருக்குறீர்களா?

    ReplyDelete
  20. //சின்ன அம்மிணி said...
    சரியான நேரத்துல போட்ட சரியான கதைதான் . :)
    //

    நன்றிங்க‌ சின்ன அம்மிணி!!

    ReplyDelete
  21. அருமை நண்பரே

    "வல்லவனுக்கு 'புல்' தான் ஆயுதம்"

    ReplyDelete
  22. // S.R.ராஜசேகரன் said...
    கதை நல்லா இருக்குதுங்கோ .குறிப்பா மனப்பாட பகுதி ஏதும் இல்லாம இருக்குது
    //

    வாங்க புளியங்குடியார், வணக்கம்! உங்ககூட, இருந்து எசப்பாட்டு பாட முடியலை.... தப்பா நினைச்சிடாதீங்க என்ன?!

    ReplyDelete
  23. //மிஸஸ்.டவுட் said...
    இதனால் சகலமானவர்களும் அறியக் கடவது என்னவென்றால்..நம்ம பழமைபேசி அண்ணா நிறைய சிந்திச்சு ...சிந்திச்சு இப்படி உருப்படிய ஏதாச்சும் எழுதி படிக்கறவங்களை எல்லாம் கவர்ந்துடறார்.
    //

    நன்றிங்க...ஆனா, எனக்கு இது அதிகம்...இஃகிஃகி!

    ReplyDelete
  24. //திகழ்மிளிர் said...
    அருமை நண்பரே
    "வல்லவனுக்கு 'புல்' தான் ஆயுதம்"
    //

    வருகைக்கு நன்றிங்க... இஃகிஃகி!

    ReplyDelete
  25. //மோகன் கந்தசாமி said...

    லங்காபுரியில் தற்போது நடப்பவற்றை மேட்டாபோரிக்களாக ஒரு நக்கல் செய்துள்ளீர்களே! அருமை!!!!
    //

    நன்றிங்க மோகன், ச்சும்மா உங்ககிட்ட ஒரு பாசாங்குதான்.... இஃகிஃகி!

    ReplyDelete
  26. அப்பா! மகாராஜா நீ நல்லா இருக்கோணும் !!

    ReplyDelete
  27. ம்ம்ம்... நடத்துங்க... நடத்துங்க....
    புரிய வேண்டியவங்களுக்கு புரியுமா?

    ReplyDelete
  28. பழமையாரே நக்கல் அதிகம்தான்
    மொத்ததிலே மனுசங்க எல்லாரும் சண்டை இல்லாம இருந்தா சரி.

    ReplyDelete
  29. நிறைய உள் குத்து இருக்கும் போல, ஆனாலும் என் மாப்ள ராஜசேகர் தான் என்னைய ரெம்ப சிரிக்க வச்சான்

    ReplyDelete
  30. காடெல்லாம் அலஞ்சிட்டு தாமதமா வருகிறேன்.புலி ஒண்ணு சொல்லுது,சிங்கம் ஒண்ணு சொல்லுது.எனக்குத்தான் எதுவும் புரியல.

    ReplyDelete
  31. //appan said...
    அப்பா! மகாராஜா நீ நல்லா இருக்கோணும் !!
    //

    நன்றிங்க, எல்லாரும் நல்லா இருக்கணும்னு சொல்லுங்க.... இஃகிஃகி!

    ReplyDelete
  32. //Mahesh said...
    ம்ம்ம்... நடத்துங்க... நடத்துங்க....
    புரிய வேண்டியவங்களுக்கு புரியுமா?
    //

    வாங்க மகேசு, வணக்கம்! எல்லாரும் நல்லா இருந்தாச் சரி...

    ReplyDelete
  33. //குடுகுடுப்பை said...
    பழமையாரே நக்கல் அதிகம்தான்
    மொத்ததிலே மனுசங்க எல்லாரும் சண்டை இல்லாம இருந்தா சரி.
    //

    வாங்கண்ணே! நானும் உங்க கட்சிதான்!!

    ReplyDelete
  34. //நசரேயன் said...
    நிறைய உள் குத்து இருக்கும் போல, ஆனாலும் என் மாப்ள ராஜசேகர் தான் என்னைய ரெம்ப சிரிக்க வச்சான்
    //

    மாப்ள, மச்சானை மாதிரித்தான இருப்பாரு...இஃகிஃகி!

    ReplyDelete
  35. //ராஜ நடராஜன் said...
    காடெல்லாம் அலஞ்சிட்டு தாமதமா வருகிறேன்.புலி ஒண்ணு சொல்லுது,சிங்கம் ஒண்ணு சொல்லுது.எனக்குத்தான் எதுவும் புரியல.
    //

    வாங்ண்ணா, எனக்குந்தானுங்க...

    ReplyDelete
  36. நல்லாயிருக்கு

    ReplyDelete
  37. //பிரபு said...
    நல்லாயிருக்கு
    //

    நன்றிங்க பிரபு !!!

    //கபீஷ் said...
    அடிபொளி!!!!!!!!!
    //

    இதென்னங்க? ஒன்னும் புரியலையே?!

    ReplyDelete
  38. //கபீஷ் said...
    //எனக்கு இது முன்னாடியே தெரியும். நேத்து ஒரு பேச்சு, இன்னைக்கு ஒரு பேச்சு கிடையாது, அதே பேச்சுத்தான்! இஃகிஃகி!! வாழ்க, மேன்மேலும் வளர்க!!//

    பழமைபேசி,
    இது எனக்குப் பயந்து போட்ட பின்னூட்டமாட்டமிருக்குது. அது ....
    //

    ஆகா...எப்பிடி உண்மையக் கண்டுபிடிச்சீங்க?

    ReplyDelete
  39. //கபீஷ் said...
    அடிபொளி!!!!!!!!!
    //

    இதென்னங்க? ஒன்னும் புரியலையே?!//


    ரொம்ப ரொம்ப நல்லாருந்துச்சா அதனால உ.வ பட்டு மலயாளத்துல அருமைன்னு சொன்னேன்.

    ReplyDelete
  40. \\\உங்ககூட, இருந்து எசப்பாட்டு பாட முடியலை.... தப்பா நினைச்சிடாதீங்க \\\


    அட என்னங்க இது இன்னொரு நாள் மாட்டாமலா போய்ருவிங்க,எனக்கும் சேத்து சாமி கும்பிட்டிங்களா

    ReplyDelete
  41. \\\அடிபொளி!!!\\\


    அட பாருய்யா எங்க ஊரு சினிமா கொட்டகைலதான் இடைவேளைக்கு போளி விப்பாங்க இங்க நம்ம கபீஷ் போளி விக்கிறாரு,என்ன ஒரு பொது சேவை !!!!!!!!!!!!!

    ReplyDelete
  42. //ராஜ நடராஜன் said...
    காடெல்லாம் அலஞ்சிட்டு தாமதமா வருகிறேன்.புலி ஒண்ணு சொல்லுது,சிங்கம் ஒண்ணு சொல்லுது.எனக்குத்தான் எதுவும் புரியல\\\


    அக நானூறு பக்கம் என்:105 படிச்சு பாருங்க தெளிவா புரியும்

    ReplyDelete
  43. \\\மாப்ள, மச்சானை மாதிரித்தான இருப்பாரு...இஃகிஃகி!\\\



    உண்மைதான் மாப்பிள்ள இருந்தாலும் உங்க லெவலுக்கு வர முடியாது

    ReplyDelete
  44. \\சென்ற பின்னூட்டத்துல நான் சொன்னது 100/100 நிஜம் தான் பழமைபேசி அண்ணா.
    நீங்க அறிவாளி...அறிவாளி...அறிவாள\\


    ஆகா பழமைபேசி கதைய முடிக்க கெளம்பிட்டாங்க போலிருக்குதே

    ReplyDelete
  45. 50......................................................................................,

    ஒரு வழியா 50 போட்டாச்சி இதுக்கே 500 போட்ட மாதிரி இருக்கே

    ReplyDelete
  46. //S.R.ராஜசேகரன் said...
    50

    ஒரு வழியா 50 போட்டாச்சி இதுக்கே 500 போட்ட மாதிரி இருக்கே
    //

    தவறாம வந்து திண்ணையில ஒக்காந்து பழமை பேசிட்டுப் போன புளியங்குடியாருக்கு போடு ஒரு சபாசு!

    ReplyDelete