1/12/2009

அரசனம் பட்டியார், அரசனம்!!

வாய் கழுவு பட்டியார், வாய் கழுவு!
அரசனம் பட்டியார், அரசனம்!!
கை கழுவு பட்டியார், கை கழுவு!!!


வணக்கம்! பொங்கல் நல்வாழ்த்துகள்!! பாருங்க இன்னைக்கு சார்லட்ல இருந்து ஃபிலடெல்பியா வந்துட்டு இருக்கும் போது, பொங்கல் பத்தின யோசனையாவே இருந்துச்சு. மாட்டுப் பொங்கல் அன்னைக்கு, பட்டி தொட்டியெல்லாம் மறுமலர்ச்சியோட இருக்கும். கால்நடைகள் கட்டி இருக்குற பட்டிக்கு நடுப்புல, தொட்டி கட்டி, அலங்கரிச்சி, பொங்கல் படைப்பாங்க. கடைசியா, பசுவோட கன்றை விட்டு குலுவையும் வாத்தியமுமா அந்தத் தொட்டிய மிதிக்க விட்டு, கன்றை மிரள விட்டு குதூகலம் அடையுறது வழக்கம்.

இது நடக்கறதுக்கு முன்னாடி, ஒருத்தர் பாத்திரத்தில இருக்குற தண்ணிய மாவிலையால தெளிச்சிட்டே சொல்லிட்டுப் போவாரு, "வாய் கழுவு பட்டியார் வாய் கழுவு!"ன்னு. பின்னாடி வர்றவரு, கால்நடையோட வாயைக் கழுவி விடுவாரு.

அடுத்தவர், அதே மாதர, மாவிலையால தண்ணியத் தெளிச்சிட்டே சொல்வாரு, "அரசனம் பட்டியார் அரசனம்!". அவருக்குப் பின்னாடி வர்றவரு, கையில இருக்குற பொங்கல்ல ஒரு கவளத்த எடுத்து, அந்த கால்நடைக்கு ஊட்டி விடுவாரு.

இவருக்குப் பின்னாடி வர்றவர் சொல்லுறது, "கை கழுவு பட்டியார், கை கழுவு!". உடனே, கால்நடைக்கு பொங்கல் ஊட்டின கைய, ஊட்டினவர் கழுவிக்கிடுவாருங்க. இப்படி பட்டி தொட்டி முழுக்க சொல்லிட்டே வந்து, இருக்குற எல்லா கால்நடைகளுக்கும் பொங்கல் ஊட்டுறது ஒரு வழக்கம்.

ஆகக்கூடி, இங்க சொல்லுற அரசனம் பட்டியார் அரசனம்ன்னா என்ன? ஒன்னும் புரியல. விமானம் உட்டு இறங்கின உடனே, ஊர்ல இருக்குற எங்கம்மாவிங்களுக்கு ஒரு தாக்கல் போட்டுக் கேட்டும் பாத்தேன். அவிங்களும் அதுக்கு அர்த்தம் தெரியாதுன்னுட்டாங்க. உங்களுக்குத் தெரியுமாங்க? தெரிஞ்சா சித்த சொல்லுங்க...புண்ணியமாப் போகட்டும்!!! மண்டையே வெடிச்சிடும் போல இருக்கு?!

மேலதிகத் தகவல்: அரசனம் = அரசு + அன்னம் (ராஜ-போசனம்), நம் உணவைப் பட்டியாருக்கு ஊட்டுவது. அன்னம் அனம் என்று குறுகிற்று

போங்க, அல்லாரும் நல்லபடியாப் போயி, அரசனம் பட்டியார் அரசனம் போடுங்கோ!

தை பிறந்தால், வழி பிறக்கும்!

19 comments:

  1. me the firstu...

    பதில் தெரியவில்லை...

    அப்புறம் வந்து தெரின்சுகிறேன்.

    ReplyDelete
  2. எனக்கும் தெரியாது, ஏன்னா எங்கூர்ல வேற மாதிரி

    குகு

    ReplyDelete
  3. ஒருத்தர் கிட்ட கேட்டுருக்கேன்.. தெரிஞ்சதும் சொல்றேன்...

    ReplyDelete
  4. அட... மட்டுறுத்தல எடுத்து உட்டுட்டீங்க... பாத்து சூதானமா இருந்துக்கோங்க....

    ReplyDelete
  5. வாய் கழுவிய பின்னர், கைகழுவும் முன்னர்.. என்ன நடக்கும்...


    ஏதாவது ஆவன்னா.. அனா ஆயிருச்சா.........

    ReplyDelete
  6. வணக்கம்ணே!தம்பி புதுசு,அருமையான விஷயம் ஆனா புரியல.தெரிஞ்சுகிட்டு சொல்றேன் .

    ReplyDelete
  7. எனக்குஞ் செரியாத் தெரீலிங்க..

    ஒரு வேள.. சோறு, சீறு, செனத்தியெல்லாம் அந்தக் காலத்துல அரசருங்க தான குடுப்பாங்க.. அதனால.. சோறு குடுக்கறப்போ இப்புடி சொல்றாங்களோ.. வேற ஆராச்சுக்கும் நல்லாத் தெரிஞ்சா சொல்லுங் சாமி..!!

    ReplyDelete
  8. Neengale sollidunga anne...

    ReplyDelete
  9. பதில் கொடைச்ச உடனே சொல்லுங்க

    ReplyDelete
  10. பாஸ்.. .மாட்டுப்பொங்கல் வாழ்த்துக்கள்.... எங்க ஊர்ல வேற மாதிரி... மாட்டுப்பொங்கல் அன்னைக்கு டீ.வி. ல சிறப்பு நிகழ்ச்சிகள் பார்ப்போம் ;) அத பத்தி ஏதாச்சும் டவுட் இருந்தா கேளுங்க... சொல்றோம்

    ReplyDelete
  11. இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. நன்றி ஐயா. அப்படியே இன்னொரு வெளக்கம் தேவை. "வந்தான் வரதட்டி" அப்படின்னா என்ன சார்.

    ReplyDelete
  13. ஆமா இங்க நீங்க எப்படி மாட்டு பொங்கல் கொண்டாட போறீங்க?

    மாட்ட பாக்குறதே ரொம்ப கஷ்டமாச்சே.

    அப்புறம் எங்க போயி

    வாய் கழுவு பட்டியார், வாய் கழுவு!
    அரசணம் பட்டியார், அரசணம்!!
    கை கழுவு பட்டியார், கை கழுவு!!!

    ன்னு பாட??????????????????????????????????????????????????????.

    ReplyDelete
  14. அர்ச்சனம் பட்டியாரா? அப்படின்னா??

    எங்க ஊர்ல மாட்டுக்கு பெயின்ட் அடிப்பாங்க (கொம்புக்கு தாங்க), அப்புறம் அதுக்கு பொங்கல் குடுப்பாங்க...காளை மாடுன்னா ஒரு பாட்டில் பட்ட சரக்கு...ஆனா நீங்க சொல்றது புதுசா இருக்கே...

    பட்டின்னா தொழுவம்...அரசுன்னா கோ...ஒரு வேளை தொழுவில் இருக்கும் அரசனுக்கு என்ற பொருளில் அரசினம் என்பது அரசனம் ஆயிடுச்சா??

    ReplyDelete
  15. அட... நம்ம நண்பர்ட்ட கேட்டபோது அர்ச்சனையா இருக்கலாமோ என்னவோன்னாரு. இருந்தாலும் பாத்து சொல்றேன்னு சொன்னாரு. அதேதான் போல.

    ReplyDelete
  16. பொங்கல் வாழ்த்துக்கள் பழமையண்ணா!

    ReplyDelete
  17. இனிய பொங்கல் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகள்

    ReplyDelete
  18. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  19. @@Mahesh
    @@ அது சரி
    @@ராஜ நடராஜன்
    @@திகழ்மிளிர்
    @@தெய்வசுகந்தி
    @@muru
    @@வருங்கால முதல்வர்
    @@SUREஷ்
    @@அருண்
    @@மதன்
    @@Sriram
    @@நசரேயன்
    @@Natty
    @@Viji
    @@வில்லன்


    வந்து வாழ்த்துச் சொன்ன யெல்லார்த்துக்கும் நன்றிங்கோ...

    ReplyDelete