12/28/2008

உழைப்பு


ஒன்னு ஒன்னா பொறுக்கி வந்தேன்
ஒன்னுமொன்னா பின்னி வெச்சேன்
பார்த்துப் பார்த்துக் க‌ட்டி வெச்சேன்
ப‌க்குவ‌மா ஊஞ்சல் ஆட‌‌ வெச்சேன்
வாகா வாச‌ல் விட்டு வெச்சேன்
ந‌னையாம‌ ந‌ய‌மா இறுக்கி வெச்சேன்
ந‌ல்ல‌ நாள்ல‌ அவ‌ளைக் கூட்டி வந்தேன்
வெளிச்ச‌த்துக்கு மின்மினிய‌ கோர்த்து வெச்சேன்!



கொசுறு: ஆண் குருவிதான் கூடு கட்டுமாமுங்க. நல்ல விதமாக் கட்டி முடிச்ச அப்புறம், துணையில்லாம இருக்குற பெண் குருவிய அழைச்சிட்டு வந்து, கட்டின கூட்டைக் காண்பிக்குமாம் இந்த ஆண் குருவி. பெண் குருவி வீட்டை நல்லா சுத்தி பார்த்துட்டு, பிடிச்சிருந்தா கட்டின வீட்ல ஆண் குருவியோட குடி இருக்குமாம். இல்லைன்னா, கட்டின ஆண் குருவியயும் சேர்த்துக் கை கழுவிடுமாம்.

ஒருவர் பொறுமை இருவர் நட்பு!

27 comments:

  1. புது வீடு கட்ட போறீங்களா

    ReplyDelete
  2. குறும் படம் நல்லா இருக்கு

    ReplyDelete
  3. மிகப்பழைய நினைவுகளை கிளறிவிட்டீர்கள் நண்பரே..

    சத்தியமங்கலம் (இது செஞ்சியை அடுத்துள்ளது), மைலம் இந்த ஊர்களில் படித்த போது, இந்த மாதிரி குருவிக்கூட்டைப் பார்த்து அதிசயத்தது உண்டு.

    பள்ளி நாட்களை நினைவுக்கு கொண்டுவந்த உமக்கு நன்றிகள் பல.

    ReplyDelete
  4. //நசரேயன் said...
    புது வீடு கட்ட போறீங்களா
    //

    இருக்குற வீடல் இருக்குறவிங்க அவ்வளவு சுலுவுல வுட்டுடுவாங்களா?

    ReplyDelete
  5. //இராகவன் நைஜிரியா said...
    மிகப்பழைய நினைவுகளை கிளறிவிட்டீர்கள் நண்பரே..
    //

    இஃகிஃகி!

    ReplyDelete
  6. //
    ஆண் குருவிதான் கூடு கட்டுமாமுங்க. நல்ல விதமாக் கட்டி முடிச்ச அப்புறம், துணையில்லாம இருக்குற பெண் குருவிய அழைச்சிட்டு வந்து, கட்டின கூட்டைக் காண்பிக்குமாம் இந்த ஆண் குருவி. பெண் குருவி வீட்டை நல்லா சுத்தி பார்த்துட்டு, பிடிச்சிருந்தா கட்டின வீட்ல ஆண் குருவியோட குடி இருக்குமாம். இல்லைன்னா, கட்டின ஆண் குருவியயும் சேர்த்துக் கை கழுவிடுமாம்.
    //

    குருவிக்கு மட்டுமல்ல.. குட்டிக்கும் (சும்மா ரைமிங்குகாக) இது பொருந்துமாம்ல.. உண்மையா?

    ReplyDelete
  7. முடிச்சு மாதிரியே முடிச்சு போடுதே,,,,

    எப்படியோ கூட்டையும் முடிச்சுப் போடிச்சு

    ReplyDelete
  8. அப்படியா அசத்தலா இருக்கு...

    ReplyDelete
  9. //ஒருவர் பொறுமை இருவர் நட்பு!//
    :) nice

    ReplyDelete
  10. இந்த குருவி கதை நல்ல இருக்கு!!

    ReplyDelete
  11. குறும்படம்.. அருமையோ அருமை..
    தேடி கண்டுபிடிப்பீங்களோ ??

    ReplyDelete
  12. //பிடிச்சிருந்தா கட்டின வீட்ல ஆண் குருவியோட குடி இருக்குமாம். இல்லைன்னா, கட்டின ஆண் குருவியயும் சேர்த்துக் கை கழுவிடுமாம். ///


    பெண்ணாதிக்கம் ????

    ReplyDelete
  13. வெளிச்ச‌த்துக்கு மின்மினிய‌ கோர்த்து வெச்சேன்!

    தங்கமணி : யாரு அவ மின்மினி!

    ReplyDelete
  14. //ஆளவந்தான் said...

    குருவிக்கு மட்டுமல்ல.. குட்டிக்கும் (சும்மா ரைமிங்குகாக) இது பொருந்துமாம்ல.. உண்மையா?
    //

    வாங்க, அப்ப்டித்தானுங்கோ...

    ReplyDelete
  15. //SUREஷ் said...
    முடிச்சு மாதிரியே முடிச்சு போடுதே,,,,

    எப்படியோ கூட்டையும் முடிச்சுப் போடிச்சு
    //

    முடிச்சுலதான் அல்லாரும் முடியுறதுன்னு சொல்ல வர்றீங்க... இஃகிஃகி!

    ReplyDelete
  16. //ஆட்காட்டி said...
    kaiyila enna kaayamaa?
    //

    இல்லங்க....பூங்காவுக்குள்ள நுழையிறதுக்கான நுழைவுப் பட்டைங்க‌ அது.

    ReplyDelete
  17. //அமிர்தவர்ஷினி அம்மா said...
    அப்படியா அசத்தலா இருக்கு...
    //

    நன்றிங்க‌...

    ReplyDelete
  18. //Viji said...
    //ஒருவர் பொறுமை இருவர் நட்பு!//
    :) nice
    //

    நன்றிங்க‌!

    ReplyDelete
  19. //Bhuvanesh said...
    இந்த குருவி கதை நல்ல இருக்கு!!
    //

    தூக்கணாங்குருவிங்க அது!

    ReplyDelete
  20. //உருப்புடாதது_அணிமா said...
    உள்ளேன் ஐயா..
    //

    வாங்க மலைக்கோட்டையார், வணக்கம்!

    ReplyDelete
  21. //வருங்கால முதல்வர் said...
    வெளிச்ச‌த்துக்கு மின்மினிய‌ கோர்த்து வெச்சேன்!

    தங்கமணி : யாரு அவ மின்மினி!
    //

    :-o)

    ReplyDelete
  22. இந்தத் தடவை ஊருக்கு பொயிருந்தப்போ இந்தத் தூக்கணாங்குருவிக் கூட்டத்தான் தேடு தேடுன்னு தேடியும் ஒண்ணுகூடக் கிடைக்கல.. ஒரு பத்து வருஷத்துக்கு முன்னாடியெல்லாம் எல்லாப் பனமரங்களிலும் இருந்துச்சு..

    அசத்தலான கட்டமைப்பு.. இந்தக் கூடு மாதிரி மனிதனாலும் சுலுவாக் கட்டமுடியாது...

    ReplyDelete
  23. இது என்ன கொண்டவளத்தான் கூடான்னு தப்பா கேட்கிறதுக்கு முன்னாடியே தூக்கணாங்குருவிக் கூடுன்னு சரியா நினைவு படுத்தினீங்க!

    ReplyDelete
  24. //சூர்யா said...
    இந்தத் தடவை ஊருக்கு பொயிருந்தப்போ இந்தத் தூக்கணாங்குருவிக் கூட்டத்தான் தேடு தேடுன்னு தேடியும் ஒண்ணுகூடக் கிடைக்கல.. ஒரு பத்து வருஷத்துக்கு முன்னாடியெல்லாம் எல்லாப் பனமரங்களிலும் இருந்துச்சு..

    அசத்தலான கட்டமைப்பு.. இந்தக் கூடு மாதிரி மனிதனாலும் சுலுவாக் கட்டமுடியாது...
    //

    மனசுக்கு நெம்ப சங்க்கடமா இருக்கு.... இனி என்னென்ன காணாமப் போகுதோ? ஞேஏஏஏஏஏஏஏஏஏஏஎ........ஃக்ம்!!

    ReplyDelete
  25. //ராஜ நடராஜன் said...
    இது என்ன கொண்டவளத்தான் கூடான்னு தப்பா கேட்கிறதுக்கு முன்னாடியே தூக்கணாங்குருவிக் கூடுன்னு சரியா நினைவு படுத்தினீங்க!
    //

    ச்சும்மா, உட்டுப் பாத்தேன்...யாராவது பேரு சொல்வாங்களான்னு....யாரும் சொல்லலையே?! ஆனா சூர்யா சொல்லியிருப்பாரு! இஃகிஃகி!!

    ReplyDelete