12/06/2008

மாங்கா மடையன் யாரு?

1. வாத்து மடையன்

இது சம்பந்தமா ரெண்டு விளக்கம் சொல்லுறாங்க. முதலாவது, நம்ப ஊர்ல கோழி, சேவல அந்திசாயும் நேரத்துல அடைக்கப் போனா, நாலும் நாலு திசைல ஓடி, வேலை வாங்குமாம். அந்த அளவுக்கு சாதுரியமானது அதுக. ஆனா, ஒரு வாத்தப் புடிச்சு சாக்குப் பைல போட்டா, அடுத்தடுத்த வாத்துக, தானா வந்து கோணிப்பை (சாக்குப்பை)ல விழுமாம். அந்த அளவுக்கு மடம் கொண்டதாம் வாத்து. அதனால, புத்திக்கூர்மை இல்லாதவங்களை வாத்து மடையன்னு சொல்லுவாங்களாம்.

ரெண்டாவது விளக்கம், தங்க முட்டை இடும் வாத்தை, பேராசைப்பட்டு வயித்த அறுத்த மடையனை ஒப்பிட்டு சொல்லுற மாதிரி, வாத்தை அறுத்த மடையன் வாத்து மடையன்னும் சொல்லுறாங்க.

2. மாங்கா மடையன்

சிவன் கோயில் பெரிய பூசாரி, உச்சி நேர பூசைக்கு முக்கனிகளை வெச்சி பூசை செய்யணும்னு பிரயத்தனப்பட்டு, அது குறிச்சு மடத்துல இருந்த திருவாத்தான்கிட்ட சொன்னாரு, 'டேய் திரு, பலாவும் வாழையும் இருக்கு. மாங்காய் தான் இல்ல. போயி, மாங்கா பறிச்சிட்டு அப்படியே அதுல கொஞ்சம் இலையும் பறிச்சிட்டு வா' னு சொன்னாரு. கொஞ்ச நேரத்துல மாங்காய்களோட திருவாத்தானும் வந்தான். 'எங்கடா, மாவிலையக் காணோம்'னு பூசாரி கேக்க, திருவாத்தான் சொன்னான்,'நீங்க காய்களப் பறிச்சிட்டு, அதுல கொஞ்சம் இலையும் பறிச்‌சிட்டு வர சொன்னீங்க. ஆனா, எந்தக் காய்லயும் இலைக இல்லை'னு சொன்னான். உடனே பூசாரி திருவாத்தானை கடுமையா திட்டிகினு இருந்தாரு.

அந்த நேரம் கோயிலுக்கு வந்த ஜமீன் (ஊர்த் தலைவர்), என்ன பூசாரி திருவாத்தானை திட்டிகினு இருக்கீங்கன்னு கேக்க, 'அவன் மாங்காய்ல இலை தேடுன மாங்கா மடையன்'னு சொல்லிட்டு, நடந்ததை ஜமீன் கிட்ட சொன்னாரு பூசாரி. இப்படித்தாங்க, 'மாங்கா மடையன்'ங்ற அடை சொல்லு பொழக்கத்துக்கு வந்தது. குறிப்பா, 'மாங்கா மடையன், திருவாத்தான்'ங்ற வார்த்தைகள கொங்குச் சீமைல அடிக்கடி பொழங்குவாங்க.

ரெண்டாவது விளக்கம்: மாங்கா மடையன் என்ற சொற்றொடருக்கு நன்னன் அவர்கள் ஒருமுறை மக்கள் தொலைக்காட்சியில் விளக்கம் அளித்தார். மாங்காயை மா என்றும் அழைப்போம் அல்லவா, அதனால் மாங்காய் மடையன் என்றால் மாமடையன் என்று பொருள் என்றார். நன்றி: பாலராஜன்கீதா

3. மடச்சாம்பிராணி

அந்தக் காலத்துல மடம், கோயில் கூடம், சத்திரம்னு சனங்க கூடுற பொது இடங்கள்ல பெரிய சாம்பிராணிக் கட்டிய வெச்சிருப்பாங்களாம். இது தணல்ல போட்டு தூபம் போடுற சாம்பிராணி இல்லங்க. இருந்த இடத்துல இருந்து நல்ல வாசம் குடுத்து, காத்துல இருக்குற கிருமிகளநீக்குற சாம்பிராணி. இருந்த இடத்துல இருந்து, காத்துல கரைஞ்சு உருமாறி, நாளடைவுல இது அரை குறையா ஆயிடுமாம். அத வெச்சி, அரை குறையா புத்திக்கூறு இல்லாம இருக்கறவங்கள 'மடச்சாம்பிராணி'னு திட்ற பழக்கம் பொழக்கத்துல வந்தது. மடையன் சாம்பிராணினு ஒரு செடி இருக்குதுங்க. ஆனா, அதுக்கும் இந்த சொல்லுக்கும் எந்த சம்பந்தமும் இல்லீங்களாம். அது ஒரு மூலிக மருந்தாம்.

4.பல வண்ணங்கள் இருக்க, நம் ஊர்களில் சுவர்களுக்கு வெண்மை நிறம் அடிப்பதேன்?


வீடு குளிர்ச்சியா இருக்கவும், கூட வெளிசசமா இருக்கவும் பெரியவங்க வெண்மை நெறத்தை தேர்வு செஞ்சாங்க. அதே சமயம், கரியும் சில தாவரங்களும் கலந்து பூசின கருப்பு நெற வீடுகளும், கட்டிடங்களும் இருந்ததாம். இனப் பெருக்கம் சம்பந்தப்பட்ட இடங்களான கோழிப் பண்ணை, கால்நடைக் கொத்தளங்கள், பட்டுப்பூச்சி வளர்ப்புனு கொஞ்ச இடங்கள், அப்புறம் பார்வைக்கு எட்டக் கூடாத இடங்கலான கோட்டை, பதுங்கு குழிகள், அமைதி வேண்டிய இடங்கள்னு இருக்குற இடங்கள, கருப்பு நெறத்துல பூச்சு பூசி இருப்பாங்களாம்.

5.பல வண்ணங்கள் இருக்க, குடைகள் கருப்பு நிறத்தில் இருப்பதேன்?

குடைகள் கருப்பு நெறம்னு சொன்ன உடனே, கருப்பு நெறம் ஒளி வீச்சுக் கதிர்களை கவரக் கூடியதுனு சரியா சொல்லுவாங்க. அப்ப, பெரியவங்க ஏன் ஒளி வீச்சுக் கதிர்களை உடனே திருப்பி அனுப்புற வெள்ளை நெறத்தை தெரிவு செய்யல? பெருசு சொன்னது, 'கொடை தலைக்கு மேல அரை அடி ஒசரத்துல கருப்பு துணியோட இருக்கும். ஆனா, ஆறு அடி மனுசனை சுத்தி இருக்குற சூட்டையும் உறிஞ்சீரும்'னு. அதே சமயத்துல வயசுல மூத்தவங்க, கௌரவத்துல மூத்தவங்க, வெள்ளை நெற கொடைகள வெச்சிக்கறதும் பழக்கத்துல இருந்ததாம். இந்தப் பழக்கம் தன்னை தனிச்சுக் காமிக்கறதுக்காக இருந்து இருக்கலாம். இன்னைக்கும் நூறு வருசப் பழமையான லக்ஷ்மாபுரம் விநாயகர் கோயில் கல்வெட்டுல, 'மிராசுதார் வெண்குடை சுப்பையா'னு தான் போட்டிருக்கு.

6.பரிணாம வளர்ச்சி என்று கூறினாலும்,இறைவனின் ஒவ்வொரு படைப்புக்கு பின்னும் ஒரு அர்த்தம் பொதிந்து இருக்கிறது என்று நம்புகிறேன். நீங்களும் அதே கட்சியா? அப்படியானால், பிறப்பில் தலை மயிர் கருப்பாகவும் பின் (சிலருக்கு)வெள்ளை நிறமாகவும் மாறுகிறது. அது ஏன்?

கிட்டத்தட்ட மேல சொன்ன பதில் தான் இதுக்கும். ஆனா, ஒரு சிறு வித்தியாசம். அடர்ந்து இருக்குற கருப்பு நிற தலை முடி, சூட்டை உறிஞ்சி மேல் புறமாத்தான் வெச்சு இருக்கும். தலைக்கு உள்ள விடாதாம். ஆக, வெப்பம் நெறஞ்ச பூமியில உடலை சுத்தி இருக்குற சூட்டை கிரகிச்சு, அதைத்தணிக்க கருப்புத் தலை முடி ஒதவுது. வயசான காலத்துல தலையில் மயிரின் அடர்த்தி கொறயக் கொறய, ஒளி வீச்ச திருப்பி அனுப்புற மாதிரி வெள்ளை நெறமா நரைக்க ஆரம்பிக்கும், மண்டைல சூடு உள்ள போகக் கூடாதுன்னு. ஆனா, இந்த வயசுல உடல சுத்தி இருக்குற சூட்டை தணிக்க தலை முடி ஒதவறதது இல்ல. அதான் சூட்டை உறிஞ்சுற கருப்பு நெறம் இல்லையே?!

குறிப்பு: இது ஒரு மீள்பதிவு!

42 comments:

  1. பழமைபேசி,

    விளக்கங்கள் அருமை. எங்கேயிருந்து இதெல்லாம் தேடிப்பிடிக்கறீங்க. ஒரு ஒரு (பழமைச்)சொல்லுக்குள்ளும் ஓராயிரம் கதைகள் இருக்குது போல.

    தொடர்ந்து விளக்கங்கள் சொல்ல வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. //சதங்கா (Sathanga) said...
    பழமைபேசி,

    விளக்கங்கள் அருமை. எங்கேயிருந்து இதெல்லாம் தேடிப்பிடிக்கறீங்க. ஒரு ஒரு (பழமைச்)சொல்லுக்குள்ளும் ஓராயிரம் கதைகள் இருக்குது போல.

    தொடர்ந்து விளக்கங்கள் சொல்ல வாழ்த்துக்கள்.
    //

    வாங்க சதங்கா! வணக்கம்!!

    எங்க அம்மாவோட தாத்தா, நான் எட்டாம் வகுப்பு படிக்கிற வரையிலும் உயிரோட இருந்தாரு. நிறய விளக்கங்கள், கதைகள், மந்திரங்கள் எல்லாம் சொல்வாரு. பாதிக்கு மேல மறந்து போச்சு இப்ப. அப்புறம் எங்க அம்மா. தேவநேயப் பாவாணர் புத்தகங்கள், இப்ப வலைன்னு நாலும் கலந்துதாங்க. நன்றி!

    ReplyDelete
  3. ஆமா... இந்த விளக்கம் எல்லாம் எங்க இருந்து புடிக்கிறீங்க... இல்ல கலந்து கட்டி அடிச்சு உடுற்தா ( ஏன் இத சொல்றேன்னா... எங்க பக்கத்து ஊரு அதுக்கு பக்கத்து ஊரோட .. இந்த ஊருகெல்லம் ஏன் அப்படி பேரு வந்துச்சு ஒருத்தன் ஒரு நாளிதளோட ஆன்மிக மலர்ல போன வாக்குல கலந்து கட்டி அடிச்சு வுட்டு இருந்தான்.. அவன தான் ரொம்ப நாளா தேடிட்டு இருக்கேன்) ... நீங்க அவன் இல்லயே...

    ReplyDelete
  4. //வசந்த் கதிரவன் said...
    ஆமா... இந்த விளக்கம் எல்லாம் எங்க இருந்து புடிக்கிறீங்க... இல்ல கலந்து கட்டி அடிச்சு உடுற்தா ( ஏன் இத சொல்றேன்னா... எங்க பக்கத்து ஊரு அதுக்கு பக்கத்து ஊரோட .. இந்த ஊருகெல்லம் ஏன் அப்படி பேரு வந்துச்சு ஒருத்தன் ஒரு நாளிதளோட ஆன்மிக மலர்ல போன வாக்குல கலந்து கட்டி அடிச்சு வுட்டு இருந்தான்.. அவன தான் ரொம்ப நாளா தேடிட்டு இருக்கேன்) ... நீங்க அவன் இல்லயே...
    //

    மேல் பின்னூட்டம்தான் இதுக்கும் பதில். அது எந்த ஆன்மீக மலர்னு சொல்லுங்க, நானும் முயற்சி செய்து பாக்குறேன்.

    ReplyDelete
  5. எல்லா விளக்கமும் பொருள் பொதிந்ததாக இருக்கிறது நண்பரே! நன்றி!

    ReplyDelete
  6. தினகரனோட ஆன்மிக மலர். தேதி நினைவுல இல்ல... ஈரோடு... அதற்கு அருகில் உள்ல சித்தோடு .. வெள்ளோடு.. பேரோடு இதுக்கு எல்லாம் எப்படி பெரு வந்துச்சி நு அவன் அந்த ஆன்மிக மலர்ல புராணம் என்ற பெயரில் கதை சொல்லி இருந்தான்... அதாவது ஒரு காலத்துல சிவன் பிரம்மனுக்கு சாபம் குடுததானாம்... அதனால ப்ரம்மனோட தல நான்கு பாகமா போச்சாம்... அதுல அந்த தலையோட ஈரமான பகுது விழுந்த இடம் ஈரோடாம்... பெரிய பகுதி விழுந்த இடல் பேரொடாம்... சிறிய பகுதி விழுந்த இடம் சித்தோடாம்.. வெண்மையானா பகுதி விழுந்த இடம் வெள்ளோடாம்... புராணம் என்ற பெயரில் எப்படி எல்லாம் கதைய அவுத்து உடுரானுங்க பாருங்க...


    உண்மை என்னவெனில்... இந்த நான்கு ஊர்களிலும் வற்றாத ஓடைகள் இன்றும் உண்டு... ஈரோட்டின் மைய பகுதியில் இன்றும் ஒரு ஓடை உண்டு .. சென்னை கூவத்திர்க்கு இணையாக இன்று அது மாறிவிட்டது... அது போலவெ... ஈர்ரோட்டிற்கு அருகில் உள்ள சித்தொடு.... ஈரோடு - கோபிசெட்டிபாளையம் செல்லும் பாதையில் உள்ள ஊர்... இன்றும் அங்கு ஒரு சிற்றோடை உண்டு ... எனக்கு தெரிந்து 15 ஆண்டுகளுக்கு முன் தெள்ளத் தெளிந்த நீர் அதில் ஓடிக் கொண்டிருந்தது...இப்போ அதுவும் நாறிப் போச்சு.. அது போல வெள்ளோடு... இங்கும் ஒரு ஒட்டை உண்டு.. அதன் கரைகள் சுண்ணாம்பு படிவங்களால் ஆனதால் வெண்மையாக இருக்கும்... இந்த ஒடை வெள்ளோடு பெரிய குளத்தில் சென்று கலக்கும்... இன்று வெள்ளோடு பெரிய குளம் ஒரு பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டு உள்ளது... ஆக.. ஈர ஓடை - ஈரோடு , சிற்றோடை - சித்தோடு , வெள்ளை ஓடை - வெள்ளோடு என காலப்போக்கில் மருவி விட்டது... உண்மை இப்படி இருக்கிறது... ஆனா இதுல சிவனையும் பிரம்மனையும் கொண்டாந்து... புராணம் என்ற பெயரில்... ஏன்னா புராணம் என்றால் நம்பிக்கையாம்... சொல்றதுக்கு எதிர் கேள்வி கேட்க கூடாதாம் ... கலந்து கட்டி அடிச்சு உட்டுருக்கான் ஒருத்தன்... அதான் கேட்டேனப்பு... செரியா..

    ReplyDelete
  7. எங்கியோ படிச்ச மாதிரி இருக்கேன்னு பாத்தேன். மீள் பதிவா :)

    ReplyDelete
  8. ரொம்ப நன்றிங்க, என்னோட பல திருநாமங்களுக்கு விளக்கம் சொன்னதுக்கு. இன்னும் கொஞ்சம் பேருங்கள சொல்லவா?

    ReplyDelete
  9. விளக்கம் குடுத்த பொறவும்... பறாந்தாட்டோ குறுக்கா மறுக்கா பாக்குறதப் பார்த்தா.. சந்தேகமா இருக்குதா... அப்பொ ஈரோட்டுல பிரமனோட மண்ட உளுந்துச்சினு எலுதுன அந்தாளு நீ தானா அப்புனு...

    ReplyDelete
  10. இனப் பெருக்கம் சம்பந்தப்பட்ட இடங்களான கோழிப் பண்ணை, கால்நடைக் கொத்தளங்கள், பட்டுப்பூச்சி வளர்ப்புனு கொஞ்ச இடங்கள், அப்புறம் பார்வைக்கு எட்டக் கூடாத இடங்கலான கோட்டை, பதுங்கு குழிகள், அமைதி வேண்டிய இடங்கள்னு இருக்குற இடங்கள, கருப்பு நெறத்துல பூச்சு பூசி இருப்பாங்களாம்.//

    வெள்ளை பெயிண்ட் அடிட்ச்ச சில வீட்ல 16 பிள்ளைக்க இருக்கு, அப்ப கருப்பு அடிச்சிருந்தா? அய்யா உங்கள லல்லையா கூப்புடுறார் பீகாருக்கு

    ReplyDelete
  11. கடைசிப் பத்தி மட்டும் கொஞ்சம் எடறுது. மத்ததெல்லாம் நம்புற மாதிரி இருக்கு விளக்கம். நம்புற மாதிரி மட்டும் இல்லை; அருமையாவும் இருக்கு. :-)

    ReplyDelete
  12. என்னைய திட்டும் பொது எல்லாம் விளக்கம் தெரியலை, இப்பதானே தெரியுது

    ReplyDelete
  13. பழமைபேசி பழசை போட்டாலும் சொகுசாத்தான் இருக்கு, நிறைய போட்டுங்க

    ReplyDelete
  14. மணீ மாமனை போட்டோவுலே பாத்தாலும் சித்தோட்டு மாப்ளே கணக்காத்தான் இருக்குறாரு

    ReplyDelete
  15. நல்லா எழுதியிரிக்கிய அப்பு! தொடர்ந்து எழுதுங்க.
    தேவா.

    ReplyDelete
  16. //SP.VR. SUBBIAH said...
    எல்லா விளக்கமும் பொருள் பொதிந்ததாக இருக்கிறது நண்பரே! நன்றி!
    //

    வணக்கம்!!நன்றி!

    ReplyDelete
  17. //சின்ன அம்மிணி said...
    எங்கியோ படிச்ச மாதிரி இருக்கேன்னு பாத்தேன். மீள் பதிவா :)
    //

    ஆமுங்க, நன்றிங்க!!!

    ReplyDelete
  18. //கபீஷ் said...
    ரொம்ப நன்றிங்க, என்னோட பல திருநாமங்களுக்கு விளக்கம் சொன்னதுக்கு. இன்னும் கொஞ்சம் பேருங்கள சொல்லவா?
    //

    சொல்லுங்க, தெரிஞ்சாப் போடுவோம், தெரியலைன்னா தேடுவோம்!!!

    ReplyDelete
  19. //வசந்த் கதிரவன் said...
    விளக்கம் குடுத்த பொறவும்... பறாந்தாட்டோ குறுக்கா மறுக்கா பாக்குறதப் பார்த்தா.. சந்தேகமா இருக்குதா... அப்பொ ஈரோட்டுல பிரமனோட மண்ட உளுந்துச்சினு எலுதுன அந்தாளு நீ தானா அப்புனு...
    //

    யெப்பா சாமி, ஆளை விடு!

    ReplyDelete
  20. //குடுகுடுப்பை said...
    வெள்ளை பெயிண்ட் அடிட்ச்ச சில வீட்ல 16 பிள்ளைக்க இருக்கு, அப்ப கருப்பு அடிச்சிருந்தா? அய்யா உங்கள லல்லையா கூப்புடுறார் பீகாருக்கு
    //

    அஃக!ஃகா!!

    ReplyDelete
  21. //குமரன் (Kumaran) said...
    கடைசிப் பத்தி மட்டும் கொஞ்சம் எடறுது. மத்ததெல்லாம் நம்புற மாதிரி இருக்கு விளக்கம். நம்புற மாதிரி மட்டும் இல்லை; அருமையாவும் இருக்கு. :-)
    //

    வாங்க குமரன்! ஆமா, எனக்கும் அதுல அவ்வளவு ஒப்புதல் இல்லதான். இது எங்க குழுமத்துல ஓடின இழையின் சாராம்சம். நன்றிங்க!

    ReplyDelete
  22. //நசரேயன் said...
    பழமைபேசி பழசை போட்டாலும் சொகுசாத்தான் இருக்கு, நிறைய போட்டுங்க
    //

    தளபதி துணை எனக்கும் போது, சும்மா விட்டுடுவேனா?

    ReplyDelete
  23. //திகழ்மிளிர் said...
    அருமை
    //

    நன்றிங்க!

    ReplyDelete
  24. //thevanmayam said...
    நல்லா எழுதியிரிக்கிய அப்பு! தொடர்ந்து எழுதுங்க.
    தேவா.
    //

    நன்றிங்க, நீங்க அடிக்கடி வாங்க!

    ReplyDelete
  25. //பெருசு said...
    மணீ மாமனை போட்டோவுலே பாத்தாலும் சித்தோட்டு மாப்ளே கணக்காத்தான் இருக்குறாரு
    //

    இஃகி!ஃகி!!

    ReplyDelete
  26. மணிவாசகம்னு நல்லாத்தான் பேரு வச்சாங்க. நல்ல விஷயங்களைப் புரிய வைக்கிறீங்க.
    எங்க பக்கம் திருவாழத்தான் னு ஒருத்தரைச் சொல்லுவாங்க.
    அரைகுறையாக் காரியம் முடிக்கிறவங்களுக்கு சொல்கிற அட மொழி:)

    ReplyDelete
  27. எல்லாஞ் செரி... இந்த மீள் பதிவுன்னா என்னங்க? புரியவே மாட்டிங்குது... எல்லாரும் மீள்பதிவு போடறாங்களே... அதுக்கும் அர்த்தம் சொல்லுங்க.

    ReplyDelete
  28. இரண்டு நாளா இங்கே ஆடு வெட்டுறேன்னு லீவு விட்டுட்டாங்க.ஊரெல்லாம் சுத்திப்புட்டு இன்னைக்குத்தான் பழம பேசலாமுன்னு வந்தேன்:)

    ReplyDelete
  29. வாத்து மடையன் இரண்டாவதுதானுங்க பிரபலம்.

    ReplyDelete
  30. //எங்க அம்மாவோட தாத்தா, நான் எட்டாம் வகுப்பு படிக்கிற வரையிலும் உயிரோட இருந்தாரு. நிறய விளக்கங்கள், கதைகள், மந்திரங்கள் எல்லாம் சொல்வாரு. பாதிக்கு மேல மறந்து போச்சு இப்ப. அப்புறம் எங்க அம்மா. தேவநேயப் பாவாணர் புத்தகங்கள், இப்ப வலைன்னு நாலும் கலந்துதாங்க//

    என்னது பாதிக்கு மேலே மறந்து போச்சா?

    49 மார்க்கு கீழேயே இந்தப் போடுன்னா!!!

    ReplyDelete
  31. ஒண்ணுமா சொல்லுறதுக்கில்லை..

    ReplyDelete
  32. //வல்லிசிம்ஹன் said...
    மணிவாசகம்னு நல்லாத்தான் பேரு வச்சாங்க. நல்ல விஷயங்களைப் புரிய வைக்கிறீங்க.
    எங்க பக்கம் திருவாழத்தான் னு ஒருத்தரைச் சொல்லுவாங்க.
    அரைகுறையாக் காரியம் முடிக்கிறவங்களுக்கு சொல்கிற அட மொழி:)
    //

    வணக்கங்க அம்மா! ந்ன்றிங்க!!
    ஆமாங்க, நானும் கேள்விப்பட்டு இருக்கிறேன்!!

    ReplyDelete
  33. //Mahesh said...
    எல்லாஞ் செரி... இந்த மீள் பதிவுன்னா என்னங்க? புரியவே மாட்டிங்குது... எல்லாரும் மீள்பதிவு போடறாங்களே... அதுக்கும் அர்த்தம் சொல்லுங்க.
    //

    மீள்பதிவுன்னா ஏற்கனவே பதிஞ்சதை மீண்டும் பதியறதுன்னு நான் நினைச்சுட்டு இருக்கேன். மத்தவங்க எல்லாரும் போடுறாங்கன்னா, புரியலை உங்க கேள்வி...

    ReplyDelete
  34. //ராஜ நடராஜன் said...
    என்னது பாதிக்கு மேலே மறந்து போச்சா?

    49 மார்க்கு கீழேயே இந்தப் போடுன்னா!!!
    //

    ஐயா, வாங்க! ரெண்டு நாளும் நல்லா பொழுது போச்சுங்களா?

    ReplyDelete
  35. //ஆட்காட்டி said...
    ஒண்ணுமா சொல்லுறதுக்கில்லை..
    //

    ச்சும்மாவாச்சும் கதைக்குறிங்களே, நன்றிங்க!

    ReplyDelete
  36. //மீள்பதிவுன்னா ஏற்கனவே பதிஞ்சதை மீண்டும் பதியறது//

    நானு இது கோடத் தெரியாத மாங்கா மடயனாட்ருக்கு.

    ReplyDelete
  37. குடை மேட்டருல மட்டும் நமக்கு ஒரு டவுட்டு...

    குடை கறுப்பா இருக்கிறதுக்கு காரணம் வசதி...கறுப்புன்னா அடிக்கடி தொவைக்க வேணாம் பாருங்க...இந்த மழைல அழுக்கானா அடுத்த மழை பெஞ்சா தானா கழுவிடும்...ஆனா வெள்ளைக் கொடை? எதுனா கறை படிஞ்சா அசிங்கமா தெரியுமே?

    (இதுக்கும் நான் கறுப்பு ஜீன்ஸ் போட்றதுக்கும் சம்பந்தமில்லீங்கோ!)

    ReplyDelete
  38. //அது சரி said...
    (இதுக்கும் நான் கறுப்பு ஜீன்ஸ் போட்றதுக்கும் சம்பந்தமில்லீங்கோ!)
    //

    எங்கப்பஞ் சட்டி குதுருல இல்லையாம்! அஃக!ஃகா!!

    ReplyDelete
  39. கேக்க மறந்து போச்சு... "வெண்குடை சுப்பையா"ன்னு சொன்னீங்கல்ல... அது "வன்கொடை"யா இருக்கலாமோன்னு முன்னொரு தடவை படிச்சபோது தோணுச்சு. கோயிலுக்கு நிறைய கொடை (தானம்) குடுத்தவங்களை "வன்கொடை வள்ளல்"னு சொல்றதுண்டுங்கறாங்க. இது சரியா?

    ReplyDelete
  40. //Mahesh said...
    கேக்க மறந்து போச்சு... "வெண்குடை சுப்பையா"ன்னு சொன்னீங்கல்ல... அது "வன்கொடை"யா இருக்கலாமோன்னு முன்னொரு தடவை படிச்சபோது தோணுச்சு. கோயிலுக்கு நிறைய கொடை (தானம்) குடுத்தவங்களை "வன்கொடை வள்ளல்"னு சொல்றதுண்டுங்கறாங்க. இது சரியா?
    //

    வாங்க மகேசு, வன்கொடுமை வேணுமின்னாக் கேட்டு இருக்குறன். பயங்கரக் கொடுமைங்ற அர்த்தம் அதுக்கு. ஆனா, வன்கொடை நான் கேள்விப் பட்டது இல்லை. ஒருவேளை, நன்கொடை மாதிரி வன்கொடை இருக்குமோ என்னவோ? அகராதில தேடினேன், கிடைக்கல.

    ஆனா, இவர் எங்க தாத்தாதான். ஆகவே, கொடையில வள்ளலா இருக்க வாய்ப்பே இல்ல. இஃகி!இஃகி!!

    ReplyDelete
  41. //ராஜ நடராஜன் said...
    இரண்டு நாளா இங்கே ஆடு வெட்டுறேன்னு லீவு விட்டுட்டாங்க.ஊரெல்லாம் சுத்திப்புட்டு இன்னைக்குத்தான் பழம பேசலாமுன்னு வந்தேன்:)
    //

    வாங்க, ஒக்காருங்கோ, பாடு பழமயப் பேசுலாம்!

    ReplyDelete