12/19/2008

உண்மைச் சம்பவம்: மிரட்டலுக்குப் பணிந்த பதிவர்!

வணக்கம்! இந்த பதிவர், சமீப காலமா வீட்ல இருந்தபடியே பொழப்பு பார்த்துட்டு இருந்தாரு. அவர் வேலை செய்யுற நிறுவனத்துல, "நீங்க இந்த ஆண்டு கடுமையா உழைச்சு இருக்கீங்க! போயி குடும்பத்தையும் பாத்துக்குங்க, இந்தாங்க உங்களுக்கு மூணு வாரம் ஊதியத்தோட விடுமுறை, போயி அனுபவிங்க!"ன்னு சொல்லவே, அந்த பதிவரும், முடிஞ்ச வரைக்கும் பதிவுகள எழுதி பொழுதைப் போக்கினாரு.

அந்த நேரத்துலதான் வந்தது ஒரு மிரட்டல்! என்ன இது? வீட்ல ஒக்காந்து பொட்டி தட்டிட்டு இருக்கறதுக்கா, வேலைல உங்களுக்கு விடுப்பு குடுத்து இருக்காங்கன்னு கேட்டு மிரட்டவே, அவரும் பணிஞ்சு, அவிங்களயெல்லாம் அழைச்சிட்டு வெளியூர் கிளம்ப ஆயத்தமாயிட்டாரு. இனி வீடு வந்த சேர்ற வரைக்கும் எத்துனை இடி விழுகுதோ? அடி விழுகுதோ?? அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்! அடச் சே... நாக்குத் தப்புது!! அந்த ஆள்பவளுக்கே வெளிச்சம்!!!


வீட்டுத் தலைவன், வீட்டைப் பார்த்துக் கொள்ளும்படி கூற எதிர்த்த வீட்டுத் தலைவனிடம் சென்று சொல்வது:

சண்டையில்லா ஊருக்கு சண்டைக்குப் போறேன்!
எதிர்த்த வீட்டு வாயிலி, என் வீட்டைப் பாத்துக்கோ!!

வீட்டுத் தலைவனின் பரபரப்பைப் பார்த்த எதிர்த்த வீட்டுத் தலைவன்:

கத்தாளப் பொட்டி கத்திரிக்கா,
மத்தாளம் போடுது குட்டியப்பா!

எதிர்த்த வீட்டுக்குச் சென்றவனின் தமாதத்தைப் பார்த்த தலைவி:

வாரான் வாராண்ணு வழியப்பாத்து
வர்ற சமயத்துல வழிச்சிநக்கி
என்னையடிச்சான் புள்ளயடிச்சான்
வகுத்துக்குட்டிய நழுங்கடிச்சான்
எள்ளுக்காட்டுல இழுத்தடிச்சான்!

தலைவனின் பரபரப்பைப் நினைத்த, எதிர்த்த வீட்டுத் தலைவன்:

பகல்லயே பசு மாடு தெரியாது;
இருட்டுல‌ எருமைமாடு தெரியுமா இவ‌னுக்கு?

தலைவியின் சீற்றத்தை நினைத்தவாறு வீட்டுத் தலைவன்(பதிவர்) உங்களிடம் சொல்வது:

மானாம் ப‌த்தினி த‌ண்ணிக்குப் போனா!
மான‌ம் ப‌த்திகிச்சாம்!! அட‌
அந்த‌ ம‌யிலாப்பூரும் ப‌த்திகிச்சாம்!
அதுல‌யிருந்து திரும்பிப்பாத்தா
ஆல‌ம‌ர‌மும் ப‌த்திகிச்சாம்! அது
ந‌ல்லா இருக்குது ஞாய‌ம்!
வெளுத்துப் போச்சு சாய‌ம்!!
நான் வாறேன் அப்ப‌!!! இஃகி!ஃகி!!

30 comments:

  1. ம்ம்ம்... இப்பிடி மெரட்னாத்தான் வூட்ட வுட்டு கெளம்புவீக போல...

    போய் நல்லா மகிழ்ச்சியா சுத்திப் பாத்துட்டு போட்டாவெல்லாம் புடிச்சுட்டு வருவீகளாமா...

    ReplyDelete
  2. உண்மைச் சம்பவம்: பதிவு போட்டு மூணே நிமுசத்துல பின்னூட்டம் போட்ட பதிவர்... நாந்தே.

    ReplyDelete
  3. //இனி வீடு வந்த சேர்ற வரைக்கும் எத்துனை இடி விழுகுதோ? அடி விழுகுதோ?? அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்!!//

    வாழ்த்துகள்!

    ReplyDelete
  4. எத்துனை இடி விழுகுதோ?

    Take care of you cheeks

    Periathambi

    ReplyDelete
  5. Happy Journey and Best wishes to get nice beats,kicks :-):-)

    ReplyDelete
  6. நல்லா சுத்தி பாத்துட்டு வாங்கப்பு.

    ReplyDelete
  7. விலாசம் கொடுத்திட்டு போங்க, நான் வீட்டை பத்திரமா பாத்துகிறேன்

    ReplyDelete
  8. /*
    பகல்லயே பசு மாடு தெரியாது;
    இருட்டுல‌ எருமைமாடு தெரியுமா இவ‌னுக்கு?
    */
    குடுகுடுப்பைக்கா?

    ReplyDelete
  9. //பகல்லயே பசு மாடு தெரியாது;
    இருட்டுல‌ எருமைமாடு தெரியுமா//

    இஃகி!இஃகி (பத்திகிச்சி இஃகி!இஃகி)
    செம எதுக மோன!

    ReplyDelete
  10. நல்லா ஊரு சுத்தி பாத்துட்டு வாங்க

    ReplyDelete
  11. உங்க வூட்டு உண்மைய உண்மையா சொல்ல தில் வேணுமையா

    ReplyDelete
  12. நீங்க இருந்தாலும் இவ்ளோ பயந்த சுபாவம் உள்ளவரா ??

    ReplyDelete
  13. //Mahesh said...
    உண்மைச் சம்பவம்: பதிவு போட்டு மூணே நிமுசத்துல பின்னூட்டம் போட்ட பதிவர்... நாந்தே.
    //

    வணக்கம்! நன்றிங்க!!

    ReplyDelete
  14. அப்ப இன்னும் கொஞ்ச நாளைக்கு பதிவு வராதா?

    ஹைய்யா, கிறிஸ்துமஸ் வந்துடுச்சி :)))

    ReplyDelete
  15. சந்தோசமா ஊர் சுத்திப்பாருங்க, ஊர் சுத்திட்டு வந்தவுடன் உங்க தலைப்பு : உண்மைச்சம்பவம்-1000 அடிகள் வாங்கிய அபூர்வ சிகாமணி

    ReplyDelete
  16. சொல்லிப்பார்க்க நன்றாக உள்ளது இந்த வட்டார வழக்கு பாடல்!

    ஆனா context -தான் புரியமாட்டேங்குது.

    இருவர் மாறி மாறி பேசிக்கொள்வது போல் உள்ள பாட்டா இது?

    ஐந்து பத்திகளும் ஒரே சூழலில் பாடப்படுவதா? அல்லது பதிவிற்காக ஒன்றாக இடப்பட்டதா?

    வழக்கம் போல் சுவாரசியம் குன்றாத பதிவு!

    ReplyDelete
  17. அப்ப லீவுல போய் பார்த்துட்டு வருவதை பத்தி ஒரு பதிவை உங்க ஸ்டைல போடுங்க...
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  18. @@Mahesh
    @@அ நம்பி
    @@கபீஷ்
    @@குடுகுடுப்பை
    @@நசரேயன்
    @@செந்தழல் ரவி
    @@உருப்புடாதது_அணிமா
    @@அது சரி
    @@ viji
    @@@பொடியன்-|-SanJai
    @@சின்ன அம்மிணி
    @@நான் ஆதவன்

    அன்பர்களே, பயணம் இனிதே தொடர்கிறது. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete
  19. //நசரேயன் said...
    /*
    பகல்லயே பசு மாடு தெரியாது;
    இருட்டுல‌ எருமைமாடு தெரியுமா இவ‌னுக்கு?
    */
    குடுகுடுப்பைக்கா?
    //

    பகல்ல மட்டுமே மேய்ப்பாரோ?

    ReplyDelete
  20. //ராஜ நடராஜன் said...
    //பகல்லயே பசு மாடு தெரியாது;
    இருட்டுல‌ எருமைமாடு தெரியுமா//

    இஃகி!இஃகி (பத்திகிச்சி இஃகி!இஃகி)
    செம எதுக மோன!
    //
    இஃகி!இஃகி

    ReplyDelete
  21. //உருப்புடாதது_அணிமா said...
    உங்க வூட்டு உண்மைய உண்மையா சொல்ல தில் வேணுமையா
    //

    நாளைக்கி நீங்களும் இப்படியே இருங்க அப்பு...

    ReplyDelete
  22. //மோகன் கந்தசாமி said...

    ஆனா context -தான் புரியமாட்டேங்குது.//

    சேலத்துச் செம்மல் வாங்க! நன்றி!!

    அவசரத்தில் இட்ட இடுகை இது. இப்பொழுது இடம்பொருள் பற்றிய குறிப்பு தரப்பட்டு உள்ளது.

    ReplyDelete
  23. \\\சண்டையில்லா ஊருக்கு சண்டைக்குப் போறேன்!
    எதிர்த்த வீட்டு வாயிலி, என் வீட்டைப் பாத்துக்கோ\\\

    அண்ண நீங்க பெரிய வீரந்தான்னே

    ReplyDelete
  24. //S.R.ராஜசேகரன் said...
    \\\சண்டையில்லா ஊருக்கு சண்டைக்குப் போறேன்!
    எதிர்த்த வீட்டு வாயிலி, என் வீட்டைப் பாத்துக்கோ\\\

    அண்ண நீங்க பெரிய வீரந்தான்னே
    //

    இஃகி!இஃகி!!

    ReplyDelete
  25. அண்ணே உங்களைக் கேட்காமல் உங்களை மையப் படுத்தி ஒரு தொடர் பதிவை ஆரம்பித்து வைத்திருக்கிறேன் (நல்ல விஷயமாகத்தான்). இருப்பினும் மன்னிக்க.
    நல்ல விஷயங்களை தள்ளிப் போடுவதில் எனக்கு உடன் பாடு இல்லை.

    இதற்கு தூண்டிய உங்கள் பதிவுகளுக்கு என் நன்றிகள்..

    ReplyDelete
  26. //Sriram said...
    அண்ணே உங்களைக் கேட்காமல் உங்களை மையப் படுத்தி ஒரு தொடர் பதிவை ஆரம்பித்து வைத்திருக்கிறேன் (நல்ல விஷயமாகத்தான்). இருப்பினும் மன்னிக்க.
    நல்ல விஷயங்களை தள்ளிப் போடுவதில் எனக்கு உடன் பாடு இல்லை.

    இதற்கு தூண்டிய உங்கள் பதிவுகளுக்கு என் நன்றிகள்..
    //

    நன்றிங்க! நீங்க கொக்கி போட்டவங்களோட வலைப்பூவுக்கு தொடுப்பும் குடுங்க. நாங்க போயிப் பார்த்து பலனடையத்தான்!

    ReplyDelete
  27. ம்ம்ம்... இப்பிடி மெரட்னாத்தான் வூட்ட வுட்டு கெளம்புவீக போல...

    போய் நல்லா மகிழ்ச்சியா சுத்திப் பாத்துட்டு போட்டாவெல்லாம் புடிச்சுட்டு வருவீகளாமா...//

    ரிப்பீட்ட்டேஏஏஏஎ

    ReplyDelete
  28. //அமிர்தவர்ஷினி அம்மா said...
    ம்ம்ம்... இப்பிடி மெரட்னாத்தான் வூட்ட வுட்டு கெளம்புவீக போல...

    போய் நல்லா மகிழ்ச்சியா சுத்திப் பாத்துட்டு போட்டாவெல்லாம் புடிச்சுட்டு வருவீகளாமா...//

    ரிப்பீட்ட்டேஏஏஏஎ
    //

    இஃகி!இஃகி!!

    ReplyDelete