12/09/2008

வெக்க‌க் கேடு நான் போறேன்!

வணக்கம் அன்பர்களே! பாருங்க, நாங்கெல்லாம் பள்ளிக்கூடம் விட்டு சரியா நாலு மணிக்கு ஊட்டுக்கு ஓடி வருவோம். வந்ததும் வராததுமா பைக்கட்டத் தூக்கி மூலைல போட்டுட்டு நேரா சமையக் கொட்டத்துக்கு போயி, நாம சொல்லுறது, "அம்மா, எனக்குத் திங்றதுக்கு எதனாச்சும் வேணும்!".

அவிங்க, பொரி கடலை, நிலக்கடலை உருண்டை, மாம்பழம், கொய்யாப் பழம், பலாப் பழம், வெள்ளரிப் பிஞ்சு, தோசைக் காய், வேக வெச்ச மக்காணிக் கருதுன்னு எதனாச்சும், அந்த அந்த பருவத்துக்கு ஏத்த மாதர, இருக்குறதக் குடுப்பாங்க. அவசர கதியில தின்னுந் திங்காம‌, பக்கத்துல இருக்குற கோய்ந்தன் ஊட்டுக்குப் போவோம். அவிங்க வீட்லயும், எங்க ஊட்ல இருக்குற மாதரயே மூணு பையங்க. அவிங்களுக்கு நெசவுத் தொழில். அதனால், அவிங்க வீடு ஒரே பரபரப்பா இருக்கும். ரெண்டு தறியில அவிங்க அப்பாவும், மாமான் மகனும் நெய்துட்டு இருப்பாங்க. ஊட்டுப் பொம்பளைங்க இராட்டைல கழி சுத்திட்டு இருப்பாங்க.

வீட்டு வாசல்ல நாங்க எல்லாம் எதனா விளையாடிட்டு இருப்போம். அப்ப சின்ன சின்னச் சண்டை எல்லாம் வந்திரும். அப்ப விளையாட்டுல இருந்து ச்சும்மா விலகி வந்துட்டா, நம்ம கெளரதை என்னாவறது?! அப்ப, அங்க‌ அவிங்களுக்கு எரிச்சல் வர்ற மாதர எதனாச்சும் செஞ்சிட்டுதான் எடத்தைக் காலி பண்ணுறது. அப்பிடி எரிச்சல் ஊட்ட, இதையும் பாடுவம் அப்பப்ப:


பூனைக்கும் பூனைக்கும் கல்யாணமாம்
ஒலகம் எல்லாம் கொண்டாட்டமாம்
யானை மேல ஊர்கோலமாம்
ஒட்டகச் சிவிங்கி நாட்டியமாம்
குடு குடு கெழவி பிம்பாட்டாம்
தடல்புடலான சாப்பாடாம்
தாலிகட்ட மேடையில‌,
மாப்பிள்ளைப் பூனைய‌ காணோமாம்
ச‌ந்த‌டி ச‌ந்த‌டி செய்யாம‌
ச‌ய்ய‌க் காட்டுல‌ தொலைஞ்சானாம்
வாங்கி வெச்ச‌ பாலெல்லாம்
ஒரே மூச்சுல‌ குடிச்சாளாம்
பாட்டி ஊட்டுப் புள்ளைக‌ளாம்
வேணாம் இந்த‌ ச‌க‌வாச‌ம்
வெக்க‌க் கேடு நான் போறேன்!

சும்மா இருக்குற சிட்டுக்குருவிக்குச்
சோத்தைப் போடுவானேன் - அது
கொண்டயக் கொண்டய ஆட்டிகிட்டு
கொத்த வருவானேன்?!

49 comments:

  1. இன்னிக்கு நான் தான் மொதல்ல

    ReplyDelete
  2. திரு நசரேயன் அவர்களுக்கு ஆப்பு

    ReplyDelete
  3. என்னங்க இன்னும் சொல்லவே இல்ல?? நான் மொதல் தானே ??

    ReplyDelete
  4. பதிவ படிக்காமல் பின்னூட்டம் இட்டதால் "வெக்க‌க் கேடு நான் போறேன்!"

    ReplyDelete
  5. //உருப்புடாதது_அணிமா said...
    என்னங்க இன்னும் சொல்லவே இல்ல?? நான் மொதல் தானே ??
    //

    ஆமா, ஆமா! வாங்க! வாங்க!! நான் கொஞ்சம் பிழை திருத்தம் செய்துட்டு இருந்தேன்.

    ReplyDelete
  6. //உருப்புடாதது_அணிமா said...
    பதிவ படிக்காமல் பின்னூட்டம் இட்டதால் "வெக்க‌க் கேடு நான் போறேன்!"
    //

    நிறையப் பேரு பதிவு படிக்க வர்றதில்லையாம்...ச்சும்மா திணையில ஒக்காந்து பழம பேசிட்டுப் போகத்தான் வாராங்களாம். நான் உங்களச் சொல்லலை. தப்பா நினைச்சுகாதீங்க என்ன?!

    ReplyDelete
  7. //தோசைக் காய், வேக வெச்ச மக்காணிக் கருதுன்னு//

    இதெல்லாம் என்ன?

    ReplyDelete
  8. மன்னிச்சுக்கோங்க பதிவ படிச்சிட்டு வரேன்

    ReplyDelete
  9. நல்லாருக்கு எஸ்கேப் பாட்டு!

    ReplyDelete
  10. ///பழமைபேசி said..

    நிறையப் பேரு பதிவு படிக்க வர்றதில்லையாம்...ச்சும்மா திணையில ஒக்காந்து பழம பேசிட்டுப் போகத்தான் வாராங்களாம். நான் உங்களச் சொல்லலை. தப்பா நினைச்சுகாதீங்க என்ன?!///

    நான் ஒத்துக்க மாட்டேன்.. இது என்னை பற்றி தான்..
    நான் கோபமாக வெளிநடப்பு செய்க்கிறேன்

    ReplyDelete
  11. உங்களைப் பாத்தா பொறாமையா இருக்கு. நான் பள்ளிகூடம் முடிஞ்சு வந்து அம்மா பள்ளிக்கூடத்திலருந்து வர்றதுக்காக வாசப்படியில காத்திட்டுருப்பேன். அதுக்குள்ளாடி காஃபி போட்டு ஃப்ளாஸ்க்ல அம்மாக்கு வச்சிருப்பேன்.

    ReplyDelete
  12. //கபீஷ் said...
    //தோசைக் காய், வேக வெச்ச மக்காணிக் கருதுன்னு//

    இதெல்லாம் என்ன?
    //

    தோசைக் காய்: தோசைப்பழம்னு சொல்வாங்க.

    மக்காணி: ‍ மக்காச் சோளம்

    ReplyDelete
  13. உ.அ, நீங்க என்னிக்கு பதிவ படிச்சிருக்கீங்க, இதென்ன புது பழக்கம்

    ReplyDelete
  14. // உருப்புடாதது_அணிமா said...

    நான் ஒத்துக்க மாட்டேன்.. இது என்னை பற்றி தான்..
    நான் கோபமாக வெளிநடப்பு செய்க்கிறேன்
    //

    எனக்குத் தெரியும், நீங்க ச்சும்மா உலுலாயிக்குச் சொல்றீங்க!!

    ReplyDelete
  15. கும்மி தான் எங்கள் சொத்து என்பதை இங்கு சொல்லிக்கொள்வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்

    ReplyDelete
  16. //கபீஷ் said...
    நல்லாருக்கு எஸ்கேப் பாட்டு!
    //

    நன்றிங்க‌!

    ReplyDelete
  17. மானஸ்தன் உ_அ வாழ்க!!!

    ReplyDelete
  18. //கபீஷ் said...
    உங்களைப் பாத்தா பொறாமையா இருக்கு. நான் பள்ளிகூடம் முடிஞ்சு வந்து அம்மா பள்ளிக்கூடத்திலருந்து வர்றதுக்காக வாசப்படியில காத்திட்டுருப்பேன். அதுக்குள்ளாடி காஃபி போட்டு ஃப்ளாஸ்க்ல அம்மாக்கு வச்சிருப்பேன்.
    //

    பயங்கர பொறுப்பா இருந்து இருப்பீங்க போலிருக்கு!!!

    ReplyDelete
  19. ///கபீஷ் said...

    உ.அ, நீங்க என்னிக்கு பதிவ படிச்சிருக்கீங்க, இதென்ன புது பழக்கம்///

    எல்லோருக்கும் இந்த உண்மை தெரிஞ்சி போச்சா? இனி என் கதி அதோ கதிதானா??
    அவ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  20. வேற வழியில்லாட்டி தானா பொறுப்பு வந்துடும் :-):-)

    ReplyDelete
  21. ///////// கபீஷ் said...

    மானஸ்தன் உ_அ வாழ்க!!!///////////


    உண்மைய சொல்லுங்க, இதுல எதுனா உள்க்குத்து இல்லியே??





    ஒன்னுமே புரியல உலகத்துல,!!!!!

    ReplyDelete
  22. பின்ன நீங்க என் பதிவில வந்து அருமையா எழுதியிருக்கேன்னு கொஞ்சமும் மனசாட்சி இல்லாம சொன்னப்புறமும் கண்டுபிடிக்காம இருப்பேனா

    ReplyDelete
  23. ///பழமைபேசி said...

    எனக்குத் தெரியும், நீங்க ச்சும்மா உலுலாயிக்குச் சொல்றீங்க!!///

    இதை நான் உண்மையாக இந்த GREEN LABELமேல் சத்தியமாக சொல்கிறேன்..



    ஆமாம், நான் என்ன சொல்ல வந்தேன்.. எதுக்கு இந்த பின்னூட்டம் ?

    ReplyDelete
  24. ஆகா, நல்லாத்தான் பழம பேசுறீங்க.... நான் இப்பப் போய்ட்டு அப்புறமா வாறேன்! கொஞ்சம் வேலை இருக்கு, அதான்!

    ReplyDelete
  25. //////////கபீஷ் said...

    பின்ன நீங்க என் பதிவில வந்து அருமையா எழுதியிருக்கேன்னு கொஞ்சமும் மனசாட்சி இல்லாம சொன்னப்புறமும் கண்டுபிடிக்காம இருப்பேனா/////////

    FBIஆப்பிசெர் அண்ணன் கபீஷ் வாழ்க.. ( உண்மையிலே அது அருமையான பதிவு தான் )

    அண்ணே பழமைபேசி மன்னிச்சிக்கோங்க..

    உங்க பதிவுல நாங்க பேசிகிட்டு இருக்கோம் !!!!!!!!!!!11

    ReplyDelete
  26. இவ்வளவு அப்பாவியா இருப்பீங்களா?
    உ-அ! என்னமோ வெளிநடப்புன்னு ஒரு பேச்சு கேட்டுச்சு

    ReplyDelete
  27. //உருப்புடாதது_அணிமா said...

    அண்ணே பழமைபேசி மன்னிச்சிக்கோங்க..

    உங்க பதிவுல நாங்க பேசிகிட்டு இருக்கோம் !!!!!!!!!!!11
    //

    நீங்கதான் என்னை மன்னிக்கோனும்...தொட‌ர முடியாம கழண்டுகிறதுக்கு...

    ReplyDelete
  28. அப்போ நான் இல்லியா 25????????

    ReplyDelete
  29. /// கபீஷ் said...

    இவ்வளவு அப்பாவியா இருப்பீங்களா?
    உ-அ! என்னமோ வெளிநடப்புன்னு ஒரு பேச்சு கேட்டுச்சு///

    நாங்க எல்லாம் வருங்கால முதல்வர் லிஸ்ட்ல இருக்குறவங்க, அப்படி தான் சொல்லுவோம்..

    ReplyDelete
  30. சரி இப்போ மைய்யாளுமே அப்பீட்டு

    ReplyDelete
  31. //muru has left a new comment on your post "வெக்க‌க் கேடு நான் போறேன்!":

    அண்ணே, தோசைக்காய், களாக்காய் எல்லாம் இருக்கட்டும், உங்க பழைய போட்டோ எங்கே? அதே இல்லைனாலும் வேற எதாச்சும் பழைய போட்டோ வைங்கண்ணே அப்பத்தான் நாம பழமைபேசி. //


    வாங்க முருகேசு.... சரிங்க, அப்பிடியே செஞ்சுடலாம்.

    ReplyDelete
  32. தலைப்பை பாத்துட்டு படிச்சுட்டு வருங்குள்ளையும் இவ்வளவு நடந்து போச்சா?

    ReplyDelete
  33. /*
    தாலிகட்ட மேடையில‌,
    மாப்பிள்ளைப் பூனைய‌ காணோமாம்
    */
    நான் இங்க தான் இருக்கேன்

    ReplyDelete
  34. //நசரேயன் said...
    நான் இங்க தான் இருக்கேன்
    //

    நன்றிங்க ஐயா!

    ReplyDelete
  35. மறுக்கா சமாதானமாமப் போறதுக்கு எதாச்சும் பாட்டு வெச்சிருக்கீங்களா?

    ReplyDelete
  36. சும்மா இருக்குற சிட்டுக்குருவிக்குச்
    சோத்தைப் போடுவானேன் - அது
    கொண்டயக் கொண்டய ஆட்டிகிட்டு
    கொத்த வருவானேன்?!//

    அதானே.....

    ReplyDelete
  37. மறுக்கா சமாதானமாமப் போறதுக்கு எதாச்சும் பாட்டு வெச்சிருக்கீங்களா?

    ரிப்பீட்ட்டேஏஏஏஏஎ

    ReplyDelete
  38. //Viji said...
    மறுக்கா சமாதானமாமப் போறதுக்கு எதாச்சும் பாட்டு வெச்சிருக்கீங்களா?
    //

    வாங்க விஜி! வணக்கம்!! இப்பெல்லாம் நான் அடுத்த பதிவைப் பத்தி யோசிக்கிறதே இல்ல. அதான், வாசகர்கள் நீங்கள்லாம் இருக்கீங்களே? அடுத்த பதிவுக்கு யோசனை சொல்ல.... நொம்ப நன்றிங்க... போட்ருவோம்.

    ReplyDelete
  39. //அமிர்தவர்ஷினி அம்மா said...
    சும்மா இருக்குற சிட்டுக்குருவிக்குச்
    சோத்தைப் போடுவானேன் - அது
    கொண்டயக் கொண்டய ஆட்டிகிட்டு
    கொத்த வருவானேன்?!//

    அதானே.....
    //

    இஃகி!இஃகி!!

    ReplyDelete
  40. உங்கள் பழைய போட்டோ
    நன்றாக உள்ளது!!!
    தேவா.

    ReplyDelete
  41. சிட்டுக் குருவிக்கு கொண்டை இருக்குமா.. அப்ப சிலர் வலைப்பதிவுகளில் கொண்டை தெரிகிறது என்று சொல்கிறார்களே அவர்கள் குறிப்பிடுவது சிட்டுக் குருவியின் கொண்டையையா அல்லது வேறா...

    ReplyDelete
  42. //
    வசந்த் கதிரவன் said...
    சிட்டுக் குருவிக்கு கொண்டை இருக்குமா.. அப்ப சிலர் வலைப்பதிவுகளில் கொண்டை தெரிகிறது என்று சொல்கிறார்களே அவர்கள் குறிப்பிடுவது சிட்டுக் குருவியின் கொண்டையையா அல்லது வேறா...
    //

    வாங்க வசந்த். சிட்டுக் குருவிக்கு, கொண்டை இருக்குன்னு, ச்சும்மா அதனோட தலையத்தான் சொல்லுறது. மத்தபடி பதிவுகளைப் பத்தி ஒன்னும் தெரியலங்க...

    ReplyDelete
  43. சும்மா இருக்குற சிட்டுக்குருவிக்குச்
    சோத்தைப் போடுவானேன் - அது
    கொண்டயக் கொண்டய ஆட்டிகிட்டு
    கொத்த வருவானேன்?!

    //
    பிடிச்சு ரசம் வைக்க வேண்டியதுதானே

    ReplyDelete
  44. //குடுகுடுப்பை said...
    பிடிச்சு ரசம் வைக்க வேண்டியதுதானே?
    //


    அதான் டெக்சாசுல குருவிகல்லாம் காணாமக் கானாமப் போகுதா?

    ReplyDelete
  45. //thevanmayam said...
    உங்கள் பழைய போட்டோ
    நன்றாக உள்ளது!!!
    தேவா.
    //

    வாங்க தேவா! நன்றிங்க!!

    ReplyDelete
  46. \\....வாங்க வசந்த். சிட்டுக் குருவிக்கு, கொண்டை இருக்குன்னு, ச்சும்மா அதனோட தலையத்தான் சொல்லுறது. மத்தபடி பதிவுகளைப் பத்தி ஒன்னும் தெரியலங்க.//''''

    நீங்க ரொம்ப நல்லவருங்கோய்ய்ய்ய்ய்ய்ய்...

    ReplyDelete
  47. //வசந்த் கதிரவன் said...

    நீங்க ரொம்ப நல்லவருங்கோய்ய்ய்ய்ய்ய்ய்...
    //

    :-o{)

    ReplyDelete