12/08/2008

தாட்டு பூட்டு தஞ்சாவூரு!

வணக்கம்! பாருங்க நண்பர் குடுகுடுப்பையார் தஞ்சாவூர் குறிச்சு நல்ல நல்ல தகவல்களைப் பதிவா எழுதி, நமக்கெல்லாம் தெரியப் படுத்திகிட்டு வர்றாரு. தஞ்சாவூர் அப்பிடீன்னா, நமக்கு உடனே நினைவுக்கு வர்றது "தாட்டு, பூட்டு தஞ்சாவூரு!"ங்க. எங்க ஊர்ப் பக்கம் யாராவது வந்து அலப்பறை செய்துட்டு போனாங்கன்னா சொல்லுறது, "தாட்டு பூட்டு தஞ்சாவூருன்னான்! போய்ட்டான்!!".

தமிழ்ல தாட்டுன்னா வீழ்த்துறதாமுங்க. பூட்டுன்னா இறுக்கறதுங்க. ஆக இதுக்கு அர்த்தம், "வீழ்த்தணும் இறுக்கணும்!" ன்னு வருமா? இல்ல, அதுக்கான வேற விளக்கம் இருந்தா சொல்லுங்க. அப்புறம் ஏன் தஞ்சாவூர் பேரு அந்த சொலவடைல வருது? இதைத் தலைப்பா வெச்சி ஒரு திரைப்படமும் இருக்கு. நான் நேற்றைக்கு நடந்த சார்லட் பதிவர் சந்திப்புல கலந்துகிட்ட எங்க தஞ்சாவூர்க்காரர்கிட்ட கேட்டேன், அவரு நகைச்சுவையா, ச்சும்மா ஒரு யூகத்துல, வெள்ளக்காரன் நினைச்சான்(thought), சப்பாத்து(boot) எடுத்துப் போட்டான், போய்ட்டான்னு ஒரு நவீன விள்க்கம் குடுத்தாரு. இஃகி!ஃகி!! சரியான விபரந் தெரிஞ்சா சொல்லுங்க!! மத்தபடி இதுல ஏதாவது பொடி இருந்தா, என்னை மன்னிச்சு உட்டுடுங்க, நான் பொழச்சிப் போறேன், தெரிஞ்சுக்கலாம்ங்ற ஒரு ஆர்வத்துலதான் கேக்குறேன்!


வாங்கிறதைப் போலிருக்க வேண்டும், கொடுக்கிறதும்!

25 comments:

  1. நான் தான் முதலாவது பின்னூட்டம்..

    ReplyDelete
  2. ஆஹா... ரொம்ப நாளைக்கு அப்பறம் "சப்பாத்து"ங்கற வார்த்தையப் பாக்கறேன். உருதுல "சப்பா"ன்னா காலடி. அதுல இருந்து வந்துருக்கலாமோ?

    ReplyDelete
  3. //இராகவன், நைஜிரியா said...
    நான் தான் முதலாவது பின்னூட்டம்..
    //
    வாங்கோ, வணக்கம்!

    ReplyDelete
  4. //Mahesh said...
    ஆஹா... ரொம்ப நாளைக்கு அப்பறம் "சப்பாத்து"ங்கற வார்த்தையப் பாக்கறேன். உருதுல "சப்பா"ன்னா காலடி. அதுல இருந்து வந்துருக்கலாமோ?
    //

    ஆமாங்க மகேசு! தனித்தமிழ்ல அதுக்கு இரட்சை!

    ReplyDelete
  5. "இரட்சை" கூட எதுக்கு வேணும்னாலும் இருக்கலாம். செருப்புக்கு "பாதரட்சை" அல்லது "கால்ரட்சை". (ல்+ர = ??)

    ReplyDelete
  6. //Mahesh said...
    "இரட்சை" கூட எதுக்கு வேணும்னாலும் இருக்கலாம். செருப்புக்கு "பாதரட்சை" அல்லது "கால்ரட்சை". (ல்+ர = ??)
    //

    ஆமுங்க! இரட்சைன்னா பொதுவான சொல்தான். சொருகு இரட்சைன்னு ஈழத்தமிழ்ல பாவிக்குறதுங்க.

    ReplyDelete
  7. பாதரட்சை == cheppal
    சொருகு இரட்சை = shoe
    கிறிச்சுச் செருப்பு = creaking shoes

    ReplyDelete
  8. இதுக்கெல்லாம் விளக்கம் கேட்டா நாங்க எண்ண பண்றது.

    ReplyDelete
  9. //வாங்கிறதைப் போலிருக்க வேண்டும், கொடுக்கிறதும்!//

    இதுல அடியும் சேர்த்திங்களா?

    ReplyDelete
  10. //குடுகுடுப்பை said...
    இதுக்கெல்லாம் விளக்கம் கேட்டா நாங்க எண்ண பண்றது?
    //

    தஞ்சாவூரைப் பத்தி நாலுஞ் சொல்லுறவங்க இதுக்கும் விளக்கம் சொல்லணும். யாருகிட்டயாவது கேட்டாவது சொல்லுங்க ஐயா! சித்த புண்ணியமாப் போகட்டும்!!!

    ReplyDelete
  11. //கபீஷ் said...
    //வாங்கிறதைப் போலிருக்க வேண்டும், கொடுக்கிறதும்!//

    இதுல அடியும் சேர்த்திங்களா?
    //

    அஃக!ஃகா!! சகலதுந்தான்!!

    ReplyDelete
  12. தாட்டு பூட்டு பதிவு

    ReplyDelete
  13. இஃகி!ஃகி!!???

    ஆம்மா இது என்னங்க புது சிரிப்பு ??

    ReplyDelete
  14. //நசரேயன் said...
    தாட்டு பூட்டு பதிவு
    //
    அதெல்லாம் இருக்கட்டும், விளக்கஞ் சொல்லிட்டுப் போங்க!

    ReplyDelete
  15. //உருப்புடாதது_அணிமா said...
    இஃகி!ஃகி!!???

    ஆம்மா இது என்னங்க புது சிரிப்பு ??
    //


    இஃகி!ஃகி!! இங்க பாருங்க விளக்கத்தை:
    http://maniyinpakkam.blogspot.com/2008/12/blog-post_04.html

    ReplyDelete
  16. ஒரு மாதிரி எதுகை மோனையோட ரிதமிக்கா இருக்குன்னு சொல்லியிருப்பாங்களோ?

    ReplyDelete
  17. //அது சரி said...
    ஒரு மாதிரி எதுகை மோனையோட ரிதமிக்கா இருக்குன்னு சொல்லியிருப்பாங்களோ?
    //

    வாங்க அது சரி அண்ணாச்சி! அப்பிடித்தான் எதோ இருக்கும் போல இருக்கு....

    ReplyDelete
  18. வழக்கமா நீங்கதேன் விளக்கம் சொல்லறது, நாங்க கேக்கறது, இது என்ன புதுப்பழக்கம், எங்க கிட்ட விளக்கம் கேக்கறீங்க :)

    ReplyDelete
  19. வெள்ளைக்காரனை வச்சு ஏகப்பட்டப் பழமொழிகள் உருவாகி இருக்குல்லெ:-)

    எங்க கொள்ளுப்பாட்டி இங்கிலீசு பாட்டு பாடுமாம்.

    'ஸார் ஸார் கச்சாலீஸ்வ்ரன் கோயில் ஸார்.

    ஹைங் கொய்ங் பீப்பிள் ஸார்'ன்னு.


    அது இருக்கட்டும். நொரைநாட்டியமுன்னா என்ன? அதுக்கு விளக்கம் சொல்லி ஒரு பதிவு போடுங்க.

    ReplyDelete
  20. கிழிஞ்சது கிருஷ்ணகிரி...
    தச்சு விட்டது தருமபுரி...

    இதுக்கும் விளக்கம் கொடுங்கள்...

    ReplyDelete
  21. //சின்ன அம்மிணி said...
    வழக்கமா நீங்கதேன் விளக்கம் சொல்லறது, நாங்க கேக்கறது, இது என்ன புதுப்பழக்கம், எங்க கிட்ட விளக்கம் கேக்கறீங்க :)
    //

    இஃகி!ஃகி!! ஆமுங்க அந்த சுப்ரமணியா கொப்புரவாயாங்ற பாட்டு கொஞ்சம் கேட்டு சொல்ல முடியுமா?

    ReplyDelete
  22. //Sriram said...
    கிழிஞ்சது கிருஷ்ணகிரி...
    தச்சு விட்டது தருமபுரி...

    இதுக்கும் விளக்கம் கொடுங்கள்...
    //

    ஆகா, இனிதான் இதைப் பத்தி ஆராயணும்ங்க!!

    ReplyDelete
  23. // உருப்புடாதது_அணிமா said...
    இஃகி!ஃகி!!???

    ஆம்மா இது என்னங்க புது சிரிப்பு ??
    //


    //
    சின்ன அம்மிணி said...
    வழக்கமா நீங்கதேன் விளக்கம் சொல்லறது, நாங்க கேக்கறது, இது என்ன புதுப்பழக்கம், எங்க கிட்ட விளக்கம் கேக்கறீங்க :)
    //

    நான் டபுள் ரிப்பீட்டு போட்டுக்கிறனுங்க..

    ReplyDelete
  24. //இளைய பல்லவன் said...
    நான் டபுள் ரிப்பீட்டு போட்டுக்கிறனுங்க..
    //

    வாங்க, வணக்கம்! நன்றி!!

    ReplyDelete