11/08/2008

புலிகள் பற்றிய இந்த விபரம் உண்மையா?

அன்பர்களே வணக்கம்! இன்னைக்கு கிடைச்ச கால அவகாசத்துல, நம்ம பெரியவங்க என்ன சொல்லி வெச்சி இருக்குறாங்கங்ற ஒரு ஆர்வத்துல, புறநானூறு படிச்சிட்டு இருந்தேன். அதுல ஒரு விசயம் ரொம்ப ஆச்சர்யமா இருந்த்துச்சு.

அதாவது வேட்டைக்குப் போய் உணவு தேடும் போது, இடது பக்கம் விழற உணவைத் தொடாதாம். அதுக்கு பதிலா, நேரமும் சிரமும் அதிகமானாலும் வலது பக்கம் விழறதையே சாப்பிடுமாம் புலி இனம். இது சரியான தகவலா?

கடுங்கண் கேழல் இடம்பட வீழ்ந்தென
அன்று அவண் உண்ணா தாகி, வழிநாள்
பெருமலை விடரகம் புலம்ப, வேட்டெழுந்து
இருங்களிற்று ஒருத்தல் நல்வலம் படுக்கும்!


மேல‌ சொன்ன‌ பாட்டு, சோழ‌ன் ந‌ல்லுருத்திர‌ன் பாடின‌து. புற‌நானூறுல‌ 190வ‌து பாட்டு இதுங்க‌. ச‌ரின்னு இது ப‌த்தி மேல‌திக‌த் த‌க‌வ‌ல் எடுக்க‌லாம்னு வ‌லையில‌ மேயும் போது அக‌ப்ப‌ட்ட‌து என்ன‌ன்னா, இதே க‌ருத்தை வேற‌ வேற‌ புல‌வ‌ர்க‌ளும் அக‌நானூறு, ந‌ற்றினைன்னு பாடி வெச்சு இருக்காங்க‌ளாம். பெரிய‌வ‌ங்க‌ சொல்லி இருந்தா, அதுல‌ ஏதாவ‌து விச‌ய‌ம் இருக்கும். உங்க‌ள்ல‌ யாருக்காவ‌து மேல‌திக‌த் த‌க‌வ‌ல் தெரிஞ்சா சொல்லுங்க‌.

35 comments:

  1. கொட்ட எடுத்த புலியா கொட்டை புலியா ?

    ReplyDelete
  2. //
    நசரேயன் said...
    கொட்ட எடுத்த புலியா கொட்டை புலியா ?
    //
    நானே, உங்ககிட்ட சந்தேகங் கேக்குறன். திருப்பி என்னக் கேட்டா என்ன சொல்லுவேன்? ஆனா, வந்து ஒரு எட்டு என்னான்னு படிச்சீங்ளே. நொம்ப நன்றி!

    ReplyDelete
  3. இது பற்றி முன்னால படிச்சிருக்கேன். ஆனால் இப்ப முழுதா நினைவில்லை. கூகிளிட்டதில்: http://www.nilacharal.com/tamil/research/tamil_literature_228.html

    நசரேயன் வீட்டுல அவர் தான் பு"லி"க்குழம்பு செய்வாரோ?

    ReplyDelete
  4. இது என்னடா தலைப்புன்னு பதறி ஓடிவந்தா.... ஆமா... புலி எப்பிடி இருக்கும்? நான் பாத்ததே இல்லயே... :))))))))))

    ReplyDelete
  5. முடி கொட்டுதா ?

    ஜான்ஸன்ஸ் அண்ட் ஜான்ஸன் பேபி ஆயிலை தொடர்ந்து தலையில் தேய்த்துவர முடி கருகருவென வளரும்...இது பொய்யில்லை உண்மை..திருவள்ளுவரே ஜான்ஸன்ஸ் அண்ட் ஜான்ஸன்ஸ் பேபி ஆயில் தடவியவர் தான்...
    ஆதாரமாக பல குறள்கள் உள்ளன...

    நீங்க தலைப்பையும் மேட்டரையும் வெச்சு டருஜாக்கினீங்க இல்லையா ? அதனால இந்த பின்னூட்டம்...ஆனா மேட்டர் உண்மை..!!

    ReplyDelete
  6. இது கற்பனைதான்; உண்மை என்று கொள்ள இயலாது. சான்றுகள் இல்லை.

    விலங்கியல் அறிஞர்கள் இக்கூற்றை ஏற்றுக்கொள்வர் எனச் சொல்ல முடியாது.

    ஒரு கற்பனைச் செய்தியைப் பயன்படுத்தி நம் புலவர்கள் எப்பொருளை விளக்கிச் சொல்கிறார்கள் என்று பார்த்தால் போதும்.

    இக்கால அறிவியல் சொல்லும் பல செய்திகள் நம் பழம்பாடல்களில் உள்ளன என்பது உண்மை. ஆனால் எல்லாப் பாடல்களிலும் அறிவியலைத் தேட வேண்டுவதில்லை.

    ReplyDelete
  7. // கெக்கேபிக்குணி (05430279483680105313!) said...
    இது பற்றி முன்னால படிச்சிருக்கேன். ஆனால் இப்ப முழுதா நினைவில்லை. கூகிளிட்டதில்: http://www.nilacharal.com/tamil/research/tamil_literature_228.html//

    தகவலுக்கும் வருகைக்கும் நன்றிங்க!

    //நசரேயன் வீட்டுல அவர் தான் பு"லி"க்குழம்பு செய்வாரோ?//

    :-o)

    ReplyDelete
  8. //Mahesh said...
    இது என்னடா தலைப்புன்னு பதறி ஓடிவந்தா.... ஆமா... புலி எப்பிடி இருக்கும்? நான் பாத்ததே இல்லயே... :))))))))))
    //

    வாங்க மகேசு! நானுந்தான்!!

    ReplyDelete
  9. //செந்தழல் ரவி said...

    நீங்க தலைப்பையும் மேட்டரையும் வெச்சு டருஜாக்கினீங்க இல்லையா ? அதனால இந்த பின்னூட்டம்...ஆனா மேட்டர் உண்மை..!!
    //

    வாங்க செந்தழல் ரவி அண்ணே!

    சுவராசியமாவும் சுருக்குன்னும் பொழுது கழியனுமா?! அண்ணனோட பின்னூட்டங்களப் படிச்சாலே போதுமானதுன்னு எப்பவோ எனக்குத் தெரியுமே?! :-0)

    ReplyDelete
  10. //அ. நம்பி said...
    இது கற்பனைதான்; உண்மை என்று கொள்ள இயலாது. சான்றுகள் இல்லை.

    இக்கால அறிவியல் சொல்லும் பல செய்திகள் நம் பழம்பாடல்களில் உள்ளன என்பது உண்மை. ஆனால் எல்லாப் பாடல்களிலும் அறிவியலைத் தேட வேண்டுவதில்லை.
    //

    வாங்க அ. நம்பி ஐயா, வணக்கம்! ஆமாங்க!!

    ReplyDelete
  11. நல்ல கவிதை.. முடிவு மிகவும் அருமை..

    ReplyDelete
  12. வணக்கம் பழம:) பாடல்களின் வரிகளை மீண்டும் ஒரு முறை பார்க்கும்போது தமிழ் எவ்வளவு தூரம் ஓடிவந்திருக்கு இன்னும் எவ்வளவு தூரம் ஓடுமோன்னு ஒரு யோசனை.நீங்கள் சொல்லும் பொருளடக்கம் பார்க்கும் போது இந்த டிஸ்கவரி சேனல் மாதிரி டாக்குகளைப் பார்த்தால் பெரும்பாலும் புலிகள் மான் போன்ற இனங்களை வலதுபுறமிருந்துதான் தாக்குவது போல் தெரிகிறது.

    பின்னுட்டம் போட வரும்போது யோகா ன்னு என்னமோ கண்ணுல பட்டது.நான் அங்கே போகிறேன்.

    ReplyDelete
  13. // பொடியன்-|-SanJai said...
    நல்ல கவிதை.. முடிவு மிகவும் அருமை..
    //

    வருகைக்கு நன்றிங்க SanJai!

    ReplyDelete
  14. //ராஜ நடராஜன் said... //

    வணக்கம்! வாங்க‌ ராஜ நடராஜன்!!

    ReplyDelete
  15. வருகையை மட்டும் பதிவு செய்கிறேன்...

    ( இன்னும் நாள் அழைத்த தொடர் பதிவை போட வில்லை.. அதனால் கோபம்..
    உன் பேச்சு கா ))

    ReplyDelete
  16. //
    உருப்புடாதது_அணிமா said...

    ( இன்னும் நாள் அழைத்த தொடர் பதிவை போட வில்லை.. அதனால் கோபம்..
    உன் பேச்சு கா ))//

    நீங்க எந்த ஊர்ல இருந்து அதுக்கு கொக்கி போட்டீங்களோ, அங்க இருந்து கேளுங்க...சொல்லுறோம் ஊர்மாறி!

    ReplyDelete
  17. /*
    //
    நசரேயன் said...
    கொட்ட எடுத்த புலியா கொட்டை புலியா ?
    //
    நானே, உங்ககிட்ட சந்தேகங் கேக்குறன். திருப்பி என்னக் கேட்டா என்ன சொல்லுவேன்? ஆனா, வந்து ஒரு எட்டு என்னான்னு படிச்சீங்ளே. நொம்ப நன்றி!


    */
    சட்டியிலே இருந்தா தானே ஆப்பையிலே வரும்

    ReplyDelete
  18. /*
    நசரேயன் வீட்டுல அவர் தான் பு"லி"க்குழம்பு செய்வாரோ?
    */

    நம்ம ஊருல குறைஞ்சது 5 வருஷம், ஆனா இங்க இப்படின்னு தெரியலை .

    கம்பி எண்ணத்தான்

    ReplyDelete
  19. //நசரேயன் said...
    /*
    நம்ம ஊருல குறைஞ்சது 5 வருஷம், ஆனா இங்க இப்படின்னு தெரியலை .

    கம்பி எண்ணத்தான்
    //

    ஒன்னும் புரியல‌!

    ReplyDelete
  20. அண்ணே நாளைக்கு காலையில அங்க தான் இருப்பேன்..

    அங்க இருந்தே மறுபடியும் கூப்புடுறேன்..

    நல்லா மாட்டுனீங்களா ???

    ReplyDelete
  21. பழமைபேசி said...

    கம்பி எண்ணத்தான்
    //

    ஒன்னும் புரியல‌!////

    உமக்கு என்னைக்கு தான் புரிஞ்சி இருக்கு???
    இது புரிய???

    ஐயா புலிய கொன்னா அஞ்சு வருஷம் உள்ள இருக்கணும்...

    ReplyDelete
  22. //உருப்புடாதது_அணிமா said...
    அண்ணே நாளைக்கு காலையில அங்க தான் இருப்பேன்..

    நல்லா மாட்டுனீங்களா ???
    //

    அட ச்சே...இப்படி நாளுக்கொரு நாடோடியா இருப்பீங்கன்னு சொல்லவே இல்ல? பயங்க்ரமான சதி இது! :-o(

    ReplyDelete
  23. //உருப்புடாதது_அணிமா said...

    உமக்கு என்னைக்கு தான் புரிஞ்சி இருக்கு??? இது புரிய???
    //

    உங்களோட எல்லாம் பேசிப்பேசி இப்பெல்லாம் ஒன்னும் புரியறதே இல்ல...

    //ஐயா புலிய கொன்னா//
    ஆமா, புலிய எதுக்கு கொல்ணும்?

    ReplyDelete
  24. பழமைபேசி, //ஆமா, புலிய எதுக்கு கொல்ணும்?// உங்களுக்கு புலிக் குழம்பு செஞ்சு பழக்கமில்லை, அதான். நசரேயன் சொல்றாப்போல், புலியைக் கொல்லாம குழம்பு செய்யப் பாத்தீங்கன்னா, புலி குழம்பு இல்லாமயே உங்களை சாப்பிட்டுடும். "குசும்பு, எள்ளல்" - உங்க ப்ரொஃபைலிலிருந்து:‍-)

    நசரேயன், //நம்ம ஊருல குறைஞ்சது 5 வருஷம்// எத்தினி 5 வருஷம் எண்ணியிருக்கீங்க?

    ReplyDelete
  25. //@@@கெக்கேபிக்குணி (
    //


    கலக்குறீங்களே! நொம்ப நன்றிங்க‌!!

    ReplyDelete
  26. நீங்க பழமைபேசுறவரா ஆச்சே..ஒரு வேளை விடுதலைப்புலிகளைப் பத்தி 1980கள்ல இருந்த ரெக்கார்ட் எதுனா கண்டுபிடிச்சிட்டீங்களான்னு நெனச்சேன்..

    உங்களை நெஜமான புலியோட ஒரே கூண்டுல அடைச்சா என்ன? :0)

    ReplyDelete
  27. /*
    பழமைபேசி, //ஆமா, புலிய எதுக்கு கொல்ணும்?// உங்களுக்கு புலிக் குழம்பு செஞ்சு பழக்கமில்லை, அதான். நசரேயன் சொல்றாப்போல், புலியைக் கொல்லாம குழம்பு செய்யப் பாத்தீங்கன்னா, புலி குழம்பு இல்லாமயே உங்களை சாப்பிட்டுடும். "குசும்பு, எள்ளல்" - உங்க ப்ரொஃபைலிலிருந்து:‍-)

    நசரேயன், //நம்ம ஊருல குறைஞ்சது 5 வருஷம்// எத்தினி 5 வருஷம் எண்ணியிருக்கீங்க?
    */
    ஏங்க, ஒரு அப்பாவி/பச்சபுள்ள நல்ல இருக்கிறது பிடிகலையா?

    ReplyDelete
  28. //உங்களை நெஜமான புலியோட ஒரே கூண்டுல அடைச்சா என்ன? - அது சரி//

    அதுதான் சரி.

    ReplyDelete
  29. //அது சரி said...
    உங்களை நெஜமான புலியோட ஒரே கூண்டுல அடைச்சா என்ன? :0)
    //

    வாங்க அது சரி அண்ணாச்சி! ஆளையே காணோம்!!
    ஏங்க, சந்தேகத்தை தீர்த்து வெக்கச் சொன்னா, இப்படி சொல்றீங்ளே?!

    ReplyDelete
  30. //அ. நம்பி said...
    //உங்களை நெஜமான புலியோட ஒரே கூண்டுல அடைச்சா என்ன? - அது சரி//

    அதுதான் சரி.
    //

    ஆகா, கூட்டணியா? :-o)

    ReplyDelete
  31. பழமைபேசி said...
    அட ச்சே...இப்படி நாளுக்கொரு நாடோடியா இருப்பீங்கன்னு சொல்லவே இல்ல? பயங்க்ரமான சதி இது! :-o(
    /////



    என்ன பண்றது...??

    இப்போ பாருங்க... தான் சானியா வில் இருந்து உங்கள் அணிமா...

    இப்போ ஒழுங்காக நான் அழைச்ச தொடர் பதிவ போடுங்க...

    ReplyDelete
  32. ////பழமைபேசி said...

    உங்களோட எல்லாம் பேசிப்பேசி இப்பெல்லாம் ஒன்னும் புரியறதே இல்ல...////



    என் கூட பேசி பேசியா?
    நல்லா இருக்கே இந்த கதை??
    நான் பாட்டுக்கு சிவனே தான்னு இருக்கேன் .. என்னை போயி ??

    ReplyDelete
  33. //உருப்புடாதது_அணிமா said... //

    சரி, இனியென்ன செய்ய....போட்டு வெக்குறேன். :-o(

    ReplyDelete
  34. ஏன் எல்லார் மனமும் ரணமாய் இருக்கும் இவ்வேளையில்
    இதுபோன்ற தலைப்பில் ஒரு பதிவிட்டீர்கள்.

    நான் எதிர்பார்க்கவே இல்லை.

    ReplyDelete
  35. //அமிர்தவர்ஷினி அம்மா said...
    ஏன் எல்லார் மனமும் ரணமாய் இருக்கும் இவ்வேளையில் //

    வாங்க அமிர்தவர்ஷினி அம்மா, வணக்கம்! எனக்கும் அதே உணர்வே!!

    ReplyDelete