11/30/2008

இந்தப் பதிவுடன் நிறைவு செய்து கொள்கிறேன்!

தரக் குறைவான சொற்களோட தாக்கம் கொஞ்சமா, நஞ்சமா? போங்க, நம்ப வாசகர்கள் ரொம்பவே கடுப்பாயிட்டாங்க. அதுவும் தலைப்பைப் பாத்துட்டு எங்க நவசக்தி தமிழ் பண்பாட்டுக் குழுவினர் மத்தியில நமக்கு நல்லாக் குட்டு விழுந்துச்சு. சரியான பொருள் தெரிஞ்சுக்கணும்னு ஆசைப்பட்டோம், தெரிஞ்சுகிட்டோம், தெரிஞ்சுகிட்டதை அப்பிடியே மத்தவங்களுக்கும் போட்டுக் காமிச்சோம், அவ்வளவுதான்! மத்தபடி அதுல ஒரு உள் நோக்கமும் இல்லைங்க அன்பர்களே!! சரி, சரி, பீடிகை நொம்ப இருக்குன்னு நீங்க நெளியுறது தெரியுது, விசயத்துக்கு வருவோம்.

எடுபட்ட பய: நாம அடிக்கடி சொல்லுறதும், சொல்லக் கேட்டதுந்தான் இது. எடுபட்ட நாதாரின்னுவோம், எடுபட்ட சிறுக்கின்னுவோம், எடுபட்ட பயலைக் காணோம்னு சொல்லுவோம். எடுபட்டன்னா என்ன? நீங்க சொன்னா அது எடுபடும்ன்னு சொல்லுறோம். அதாவது, நீங்க சொன்னா அந்த சொல்லை சபையினர் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வாங்கங்றதுதான் அது. நான் சொன்னா எடுபடாதுன்னா, என்னோட பேச்சை கூட்டத்துல கேக்க மாட்டாங்க, எடுத்துக்க மாட்டாங்கன்னு அர்த்தம் வருதுங்ளா? அந்த மாதிரிதாங்க, இந்த எடுபட்ட பயலும். சமுதாயத்துல இருந்து விலக்கி விடப்பட்ட, ஊராரால் தீய செயல்களின் காரணம் கருதி ஊரில் இருந்து எடுக்கப்பட்ட பயல்ங்றதுதான் எடுபட்ட பய ஆயிடுச்சு.

பொறம்போக்கு: புறம்போக்கு நிலம்ன்னா, யாருக்கும் சொந்தமில்லாத, எவரும் சொந்தம் கொண்டாடுகிற, எல்லாருக்கும் பொதுவான நிலம். அதுக்கு ஒப்பிட்டு, இழிவா சொல்லுற சொல்லுதாங்க இது. இது வரைக்கும் பாத்ததுல இது தாங்க ரொம்ப இழிவான சொல், எந்த சமயத்துலயும் இதைப் பாவிக்காதீங்க.

பொறுக்கி: இதை நாம நொம்ப சுலபமா யூகிச்சுகிடலாம், ஆமுங்க, இங்கயும் அங்கயும் பொறுக்கித் தின்னுகிறவன்ங்ற அர்த்தத்துல பொழங்குற ஒரு சொல்லு. பலான, பலான மேலதிக (டங்குவார், தாராந்துடுவே, சாவுகிராக்கி, பாடு, ....) சொல்லுகளுக்கு உண்டான விளக்கத்துக்கு, இந்தத் தொடுப்பை சொடுக்குங்க! மேலும் பல சொற்கள்!!

இதுக்கு மேலயும் இதுகளைப் பத்தி எழுத வேணாம்ங்ற ஒரு முடிவுக்கு வந்துட்டேன். அதான், பதிவோட தலைப்பே சொல்லுதே! ஆமுங்க, ஏச்சுப் பேச்சுகளுக்கு விளக்கம் எழுதறதை, இந்த பதிவோட நிறைவு செஞ்சுகிடுறேன்! பதிவுலகத்தை விட்டே ஒழிஞ்சான் இவன், இனி நமக்கு நிம்மதின்னு நினைச்சு வந்தீங்ளா?! இஃகி! இஃகி!!


அடாது செய்தவன் படாது படுவான்!

26 comments:

  1. என்னங்க ரொம்பவே நொந்துட்டீங்களா? நல்லது கெட்டது ரெண்டும் சேந்ததுதானே மொழி. அப்பறம் எப்பிடித்தான் கெட்டதை தெரிஞ்சுக்கறது?

    இருந்தாலும் சொன்னவரை போதுங்க. பின்னால பாத்துக்கிடலாம்.

    ReplyDelete
  2. //பதிவுலகத்தை விட்டே ஒழிஞ்சான் இவன், இனி நமக்கு நிம்மதின்னு நினைச்சு வந்தீங்ளா?! இஃகி! இஃகி!!

    //

    ஹி ஹி ஏமாந்தது நீங்கதான்(நாங்க அப்படி நினைச்சுட்டு வருவோம்னு நினைச்சு)

    இவ்ளோவே திட்டறதுக்கு போதும்ங்க. அப்புறம் இந்த வார்த்தைங்க அலுத்துப் போச்சுன்னா, சொல்றோம், புதுசா சொல்லித்தாங்க

    ReplyDelete
  3. // பதிவுலகத்தை விட்டே ஒழிஞ்சான் இவன், இனி நமக்கு நிம்மதின்னு நினைச்சு வந்தீங்ளா?! இஃகி! இஃகி!! //

    என்னா ஒரு வில்லத்தனம்!!!

    ஆமா, இந்த "இஃகி! இஃகி!"-க்கு அர்த்தம் என்ன???

    ReplyDelete
  4. //Mahesh said... //

    வாங்க மகேசு... நீங்க சொன்னாச் சரியா இருக்கும்.

    ReplyDelete
  5. //கபீஷ் said...
    ஹி ஹி ஏமாந்தது நீங்கதான்(நாங்க அப்படி நினைச்சுட்டு வருவோம்னு நினைச்சு)
    //

    வாங்க கபீஷ்! நீங்க தூங்கினீங்களா இல்லியா? நானும் உங்களமாரித்தான்... :-o))

    ReplyDelete
  6. //விஜய் ஆனந்த் said...

    என்னா ஒரு வில்லத்தனம்!!!
    ஆமா, இந்த "இஃகி! இஃகி!"-க்கு அர்த்தம் என்ன???
    //

    இஃகி! இஃகி!!
    தமிழ்ச் சிரிப்பு சிரிக்கறனுங்க நானு!!

    இஃகி! இஃகி!! :-o)

    ReplyDelete
  7. இதுக்கு மேலயும் இதுகளைப் பத்தி எழுத வேணாம்ங்ற ஒரு முடிவுக்கு வந்துட்டேன். அதான், பதிவோட தலைப்பே சொல்லுதே! ஆமுங்க, ஏச்சுப் பேச்சுகளுக்கு விளக்கம் எழுதறதை, இந்த பதிவோட நிறைவு செஞ்சுகிடுறேன்! பதிவுலகத்தை விட்டே ஒழிஞ்சான் இவன், இனி நமக்கு நிம்மதின்னு நினைச்சு வந்தீங்ளா?! இஃகி! இஃகி!!
    ///

    ஏனுங்கோவ் , அத்தன சுளுவா உங்கள போகவுட்டுருவமா?

    நல்லாத்தான் எழுதறீங்க.

    "கொய்யால" இதுக்கு அருத்தமென்னுங்கோ?

    ReplyDelete
  8. //மதிபாலா said...

    நல்லாத்தான் எழுதறீங்க.

    "கொய்யால" இதுக்கு அருத்தமென்னுங்கோ?
    //

    ஆகா, கோயமுத்தூரு பொன்னானுங்ளா நீங்க?
    பதிவுல போடமுடியாத சொல்லுல இதுவும் ஒன்னுங்க....

    ReplyDelete
  9. வாழ்க்கையில இதுல்லாம் சகஜம்ப்பா. போற்றுவார் போற்றுதலும் தூற்றுவார் தூற்றுதலும் உலக நடப்பு. அதுக்காக எல்லாம் கவலைப்பட்டால் ஆகாதுங்க..

    ReplyDelete
  10. //
    இராகவன், நைஜிரியா said...
    //

    எல்லாம் அரசியல்லா சர்வ சாதாரணம்ன்னு சொல்லுங்க!

    ReplyDelete
  11. //பதிவுலகத்தை விட்டே ஒழிஞ்சான் இவன், இனி நமக்கு நிம்மதின்னு நினைச்சு வந்தீங்ளா?! இஃகி! இஃகி!!//

    என்ன ஆச்சு இவருக்குன்னு பார்க்க வந்தேன்:-)

    ReplyDelete
  12. //துளசி கோபால் said...
    என்ன ஆச்சு இவருக்குன்னு பார்க்க வந்தேன்:-)
    //

    இஃகி! இஃகி!! :-o))

    ReplyDelete
  13. நா...

    நெம்ப நல்லா சொல்லிப் போட்டீங்கனா..

    அடங்கொன்னியா அப்பிடின்னா எண்ணங்க்னா?

    ReplyDelete
  14. பதிவுலகத்தை விட்டே ஒழிஞ்சான் இவன், இனி நமக்கு நிம்மதின்னு நினைச்சு வந்தீங்ளா?! இஃகி! இஃகி!!
    //

    ச்சே... மனுஷன் சந்தோஷம் நீடிக்காமப் போச்சே :))

    joke apartஅண்ணே நீங்களே நினைச்சாலும் நாங்க விடுவோமா??

    ReplyDelete
  15. //
    பதிவுலகத்தை விட்டே ஒழிஞ்சான் இவன், இனி நமக்கு நிம்மதின்னு நினைச்சு வந்தீங்ளா?!
    //

    அப்ப இல்லியா?? என்னாங்க பழமைபேசி.. இப்படியா ஆசை காட்டி ஏமாத்துறது!! உங்களுக்கு கடும் கண்டனம் தெரிவிச்சிக்கிறேன்.. :)))))

    ReplyDelete
  16. //
    பதிவுலகத்தை விட்டே ஒழிஞ்சான் இவன், இனி நமக்கு நிம்மதின்னு நினைச்சு வந்தீங்ளா?!
    //

    அப்ப இல்லியா?? என்னாங்க பழமைபேசி.. இப்படியா ஆசை காட்டி ஏமாத்துறது!! உங்களுக்கு கடும் கண்டனம் தெரிவிச்சிக்கிறேன்.. :)))))

    ReplyDelete
  17. //இஃகி! இஃகி!!
    தமிழ்ச் சிரிப்பு சிரிக்கறனுங்க நானு!!//


    இஃகி! இஃகி!! புதுச் சிரிப்பு:)

    ReplyDelete
  18. //Rangs said...
    அடங்கொன்னியா அப்பிடின்னா எண்ணங்க்னா?
    //



    ஆகா, கோயம்பத்தூர்ல இருந்து தங்சு, பொன்சு, ரங்சு, திர்ரான், ராசு, ச்சின்சு எல்லாரும் வர ஆரம்பிச்சுட்டீங்க... இனியொரு பதிவு போட்டுடுறேன்.

    தங்சு: ‍ தங்கவேல், தங்கராசு
    பொன்சு: பொன்னுச்சாமி, பொன்னுத்துரை
    ரங்சு: ‍ரங்கசாமி, ர‌ங்க‌நாத‌ன்
    திர்ரான்: திருமூர்த்தி
    ந‌ல்சு: ந‌ல்ல‌சிவ‌ம்
    ராசு: ராச‌மாணிக்க‌ம், ராச‌கோபாலு
    ச்சின்சு: சின்ன‌துரை

    ReplyDelete
  19. //புதுகை.அப்துல்லா said...
    நீங்களே நினைச்சாலும் நாங்க விடுவோமா??
    //

    அண்ணே வணக்கம்! நொம்ப நன்றிங்க, அதான் எல்லாரும் சேர்ந்து நட்சத்திரப் பதிவர் ஆக்கிட்டீங்ளே?! நொம்ப நன்றிங்க!!

    ReplyDelete
  20. //வெண்பூ said...

    அப்ப இல்லியா?? என்னாங்க பழமைபேசி.. இப்படியா ஆசை காட்டி ஏமாத்துறது!! உங்களுக்கு கடும் கண்டனம் தெரிவிச்சிக்கிறேன்.. :)))))
    //

    வெண்பூ அண்ணே வணக்கம்! நொம்ப நன்றிங்க, அதான் எல்லாரும் சேர்ந்து நட்சத்திரப் பதிவர் ஆக்கிட்டீங்ளே?! அப்புறம் எங்க போகுறது?? :-o))

    ReplyDelete
  21. //ராஜ நடராஜன் said...

    இஃகி! இஃகி!! புதுச் சிரிப்பு:)
    //

    வணக்கம், வாங்க!!

    ReplyDelete
  22. ஆஹா.. இந்த வார நட்சத்திரம் நீங்கதானா?

    தல.. நாங்க தமிழ்மணம் பக்கம் அடிக்கடி போறதில்லை. முக்கியமா நானெல்லாம் ரீடரை வெச்சே ஓட்டிட்டு இருக்கேன்.. அதனாலதான் கவனிக்கல..

    தமிழ்மண நட்சத்திரம் ஆனதற்கு வாழ்த்துக்கள்.. நட்சத்திரப் பதிவுகளுக்கு அட்வான்ஸ் பாராட்டுக்கள்..

    ReplyDelete
  23. //வெண்பூ said...
    தமிழ்மண நட்சத்திரம் ஆனதற்கு வாழ்த்துக்கள்.. நட்சத்திரப் பதிவுகளுக்கு அட்வான்ஸ் பாராட்டுக்கள்..
    //


    நன்றிங்க வெண்பூ! வந்து போங்க அப்பப்ப!! :-o)

    ReplyDelete
  24. //கிரி said...
    :-))
    //

    கிரி ஐயா வாங்க, சிங்கப்பூர்ல என்ன விசேசம்? ஜலன் பஜார் போவோம்... கெம்பாங்கன், கேளாங்கெல்லாம் போவோம்.... ச்சும்மா வேடிக்கை பாக்கத்தான்.... :-o)

    ReplyDelete