10/15/2008

கவி காளமேகத்தின் தாக்கம் - 9

கவி காளமேகத்தின் தாக்கம்ங்ற தலைப்புல நாம ஆசுகவி வகைல ஒட்டியம், நீரோட்டகம், மாலைமாற்றுன்னு பல வகையான பாடல்களைப் பாத்துட்டு வர்றோம். இன்னும் அந்த முயற்சி முடியலை. ஆனாப் பாருங்க நம்ம நண்பர் குடுகுடுப்பையார் ஒரு சின்ன அன்பு அறிவுறுத்தல் செய்தாரு. அதாவது பழசே எழுதினா எப்படின்னு. அவருக்கு மதிப்பு குடுக்குற வகையில, இன்றைய சூழ்நிலைய மனசுல வெச்சி, அதே சமயத்துல, கவி காளமேகத்தின் தாக்கத்துலயே ஒரு சிலேடைப் பாட்டு.

நமக்கு உடனே நினைவுக்கு வந்தது நடப்புப் பங்குச் சந்தையும், ரெண்டு நாளைக்கு முன்னாடி பூங்காவுல பெத்த மகளோட விட்ட பட்டமுந்தாங்க. அந்த ரெண்டுக்கும் பொருந்தற மாதிரி எழுதினதுதான் இந்தப் பாடல்.

மேலும்கீழும் ஏறியிறங்கித் தானடைவார் உச்சிதனை
கூடுசந்தைதான் பார்க்கப் பார்மகிழ‌! - பாய்ந்திடுமாம்
தாழ்மண்ணடி நோக்கியு மதுகண்டுப் பதறிடுவார்
நடவாதது நடந்ததென உளம்!!


பொருள்-1: சந்தை போல் கூடியிருக்கிற மக்கள் பார்க்க, பார்த்து மகிழ மேலும் கீழும் ஆடியாடிச் சென்று உயரத்தை அடையும் பட்டம். காற்றின் தாக்கத்தின் விளைவாக, திடுமென எதிர்பாரா விதமாகக் கீழே வந்து மண்ணில் விழ, மனம் பதறிடுவார் மகிழ்ந்த கூட்டம்.

பொருள்-2: பங்குச் சந்தையில் கூடியிருப்போரும் உலகளாவிய மக்களும், பங்குச் சந்தையில் போட்ட முதலீடு மெல்லக் கீழே இறங்குவதும் ஏறுவதுமாக உச்சத்தில் இருக்க மகிழ்ந்துடுவர். திடீரென அதள பாதாளத்தை வந்தடைய, நடக்கக் கூடாதது நடந்ததெனப் பதறிடுவர்.

நாம ஆசுகவி வகையில எஞ்சி இருக்குற வகைகளைப் பாத்த பொறகு, இன்னும் நிறைய சிலேடை வகைப் பாடல்களை எதிர்வரும் காலங்கள்ல பாக்கலாங்க.

தீட்டத் தீட்டத்தான் வைரம்! எழுத எழுதத்தான் நயம்!!

32 comments:

  1. காலத்திற்கு ஏற்ற காளமேகம், அருமை வருங்கால முதல்வர் பழமை பேசி.

    ReplyDelete
  2. அடேங்கப்பா... கெளப்புறீங்க!

    ReplyDelete
  3. வந்தா பிரிச்சி மேயுவோம்ல/....

    ReplyDelete
  4. கொஞ்சம் சரக்கு ரொம்ப ஏறி போச்சு.. ஒன்னிமே தெரில..

    ReplyDelete
  5. கொஞ்சம் சரக்கு ரொம்ப ஏறி போச்சு.. ஒன்னிமே தெரில..

    ReplyDelete
  6. மன்னிச்சிகோங்க.. மேல போட்ட நாலு பின்னூட்டமும் உங்க மூணு பேர்த்துக்கும் சேர்த்து போட்டுட்டேன் , போதையில தெரியாம நடந்த தவருங்கோ.. யாருக்கு எது வேணுமோ அவங் அவங்க அத தெரிவு செஞ்சுக்கோங்க..

    ( அந்த மூணு பேர், முரண்தொடை, குடுகுடுப்பை, மற்றும் பழமைபேசி..)
    i am வெரி வெரி சாரி )

    ReplyDelete
  7. கனுவுல வந்தாலும் பதிவு போடுறீங்க.. தாக்கம் இருந்தாலும் பதிவு போடுறீங்க.. என்ன தான் உங்க கணக்கு ??

    ReplyDelete
  8. உருப்புடாதது_அணிமா said...
    வந்துடோம்ல...
    //
    வாங்யா, வாங்யா, வாங்யா, வாங்க‌

    ReplyDelete
  9. //
    அது சரி said...
    அடேங்கப்பா... கெளப்புறீங்க!
    //
    அண்ணாச்சி வாங்க‌

    ReplyDelete
  10. //
    வருங்கால முதல்வர் said...
    காலத்திற்கு ஏற்ற காளமேகம், அருமை வருங்கால முதல்வர் பழமை பேசி.
    //
    முதல்வருக்கு முதல்வரே வாங்க! வாங்க!!

    ReplyDelete
  11. //
    உருப்புடாதது_அணிமா said...
    மன்னிச்சிகோங்க.. மேல போட்ட நாலு பின்னூட்டமும் உங்க மூணு பேர்த்துக்கும் சேர்த்து போட்டுட்டேன் , போதையில தெரியாம நடந்த தவருங்கோ.. யாருக்கு எது வேணுமோ அவங் அவங்க அத தெரிவு செஞ்சுக்கோங்க..

    ( அந்த மூணு பேர், முரண்தொடை, குடுகுடுப்பை, மற்றும் பழமைபேசி..)
    i am வெரி வெரி சாரி )
    //

    நீங்க கெளப்புங்க...

    ReplyDelete
  12. //
    உருப்புடாதது_அணிமா said...
    கனுவுல வந்தாலும் பதிவு போடுறீங்க.. தாக்கம் இருந்தாலும் பதிவு போடுறீங்க.. என்ன தான் உங்க கணக்கு ??

    //

    பின்ன எப்படி, நீங்கல்லாம் எங்க வீட்டுத் திண்ணைக்கு வர்றது?

    ReplyDelete
  13. உருப்புடாதது_அணிமா said...
    வந்துடோம்ல...
    //
    வாங்யா, வாங்யா, வாங்யா, வாங்க‌///


    அது தான் வரோம்ல.. அப்புறம் என்ன??

    ReplyDelete
  14. //
    மன்னிச்சிகோங்க.. மேல போட்ட நாலு பின்னூட்டமும் உங்க மூணு பேர்த்துக்கும் சேர்த்து போட்டுட்டேன் , போதையில தெரியாம நடந்த தவருங்கோ.. யாருக்கு எது வேணுமோ அவங் அவங்க அத தெரிவு செஞ்சுக்கோங்க..

    ( அந்த மூணு பேர், முரண்தொடை, குடுகுடுப்பை, மற்றும் பழமைபேசி..)
    i am வெரி வெரி சாரி )
    //

    இது நல்லா இருக்கு.... ஒரே பலகாரம், எல்லா ஊட்டுக்குமா? இது அநியாயம்.

    ReplyDelete
  15. பழமைபேசி said..

    நீங்க கெளப்புங்க...///


    என்னங்க இது ஏதோ டபுள் மீனிங்ல சொல்ற மாதிரி இருக்கு ??

    ReplyDelete
  16. உருப்புடாதது_அணிமா said...
    வந்துடோம்ல...
    //
    வாங்யா, வாங்யா, வாங்யா, வாங்க‌///


    அது தான் வரோம்ல.. அப்புறம் என்ன??

    அப்ப படுத்து தூங்குங்க....

    ReplyDelete
  17. பழமைபேசி said...

    பின்ன எப்படி, நீங்கல்லாம் எங்க வீட்டுத் திண்ணைக்கு வர்றது?////\


    திண்ணைக்கு வந்தாலும், தொன்னைக்கு போக மாட்டேன் . .

    ReplyDelete
  18. Blogger பழமைபேசி said...

    இது நல்லா இருக்கு.... ஒரே பலகாரம், எல்லா ஊட்டுக்குமா? இது அநியாயம்.இதுவும் அநியாயம்... உங்க பதிவுல நீங்களே போட்டுட்டு இங்க வந்து,, எந்த ஊரு நியாயம் ??


    இதுவும் அநியாயம்... உங்க பதிவுல நீங்களே போட்டுட்டு இங்க வந்து,, எந்த ஊரு நியாயம் ??

    ReplyDelete
  19. பழமைபேசி said...

    அப்ப படுத்து தூங்குங்க....///


    நீங்களே சொன்னதக்கு அப்புறம் நான் என்ன சொல்ல போறேன்..

    அதனால இப்போதைக்கு குட் நைட்

    ReplyDelete
  20. சரிங்க.. நாளைக்கு பாக்கலாம்.. இப்போ இங்க மணி நள்ளிரவு 12.30 மணி ஆகுது

    ReplyDelete
  21. உருப்புடாதது_அணிமா said...

    நீங்களே சொன்னதக்கு அப்புறம் நான் என்ன சொல்ல போறேன்..

    அதனால இப்போதைக்கு குட் நைட்

    //நான் ஒபாமா, மெக்கயின் வாதம்‍ விவாதம் பாக்கப் போறேன்.

    ReplyDelete
  22. உருப்புடாதது_அணிமா said...
    சரிங்க.. நாளைக்கு பாக்கலாம்..

    //வணக்கம்! நாளைக்குமா? :-0(

    ReplyDelete
  23. //
    பழமைபேசி said..

    நீங்க கெளப்புங்க...///


    என்னங்க இது ஏதோ டபுள் மீனிங்ல சொல்ற மாதிரி இருக்கு ??
    //
    அப்படின்னா?

    ReplyDelete
  24. பொருளும் பாட்டும் நல்ல இருக்குங்க

    ReplyDelete
  25. //
    நசரேயன் said...
    பொருளும் பாட்டும் நல்ல இருக்குங்க
    //

    நன்றிங்க‌ நசரேயன்!

    ReplyDelete
  26. வந்துட்டங்கய்யா... வந்துட்டாங்க... நல்லா இருக்குய்யா....

    இது வெண்பா வகைதானே.... எதுகை இருந்திருந்தா இன்னும் நல்லா இருக்கும் !!!

    ReplyDelete
  27. //Mahesh said...
    வந்துட்டங்கய்யா... வந்துட்டாங்க... நல்லா இருக்குய்யா....

    இது வெண்பா வகைதானே.... எதுகை இருந்திருந்தா இன்னும் நல்லா இருக்கும் !!!
    //

    நன்றிங்க‌!

    ReplyDelete
  28. ரொம்ப நல்லா இருக்குங்க.

    அமெரிக்க பட்டம், தான் மேலயும் கீழயும் பறந்து மண்ணுல விழுவது மட்டுமில்லாம, புடிச்சுகிட்டு இருக்கரவனுகளையும் சேர்த்தில்ல தள்ளுது

    ReplyDelete
  29. சனிக்கிழமை எனக்கு ( உண்மையிலே )

    அப்ப்ரைசல் இருப்பதால்,

    மேலும் இரண்டு நாட்களுக்கு நோ பின்னூட்டம்.. பொருத்துகொள்ளுங்கள்..

    ( நான் போட மாட்டேன்... பட் எனக்கு நீங்க போடலாம் )

    ReplyDelete
  30. இப்பத்தான புரியுது காளமேகம் அப்புச்சி நம்ம கனவுல ஏன் வரமாட்டேங்குறாருன்னு.கவிதைக் கற்பூர வாசம் நமக்கு சுத்தமா வாராதுங்க.

    ReplyDelete