10/06/2008

சாமான்யன்


அந்தக் கூடத்துச் சுவரோரம்
சிறு சர்க்கரைக் கட்டியை
சுமந்தபடி சென்றன
எறும்புகள்!
சுமை சுமக்கிறோம்
என்ற சலிப்பும் இல்லை;
விருந்து உண்ணப்
போகிறோம் என்ற
செருக்கும் இல்லை அவற்றுக்கு!!
----------------------------------------------------

கால் கடுக்க நின்றிருந்தேன்,
வரிசை வரிசையாய்ச்
சென்றன பேருந்துகள்
எதிர்த் திசையில்!

--------------------------------------------------

ஓடோடிச் சென்றேன்
பள்ளியில் மணி அடித்ததும்,
புதுப் புத்தகங்கள் பார்க்க!
அம்மா சொன்னாள்,
கடைக்கு இனியும்
வரவில்லை
இவ்வருட புத்தகங்கள்!!

22 comments:

  1. நானும் படிச்சிட்டேன் , சாமான்யன் கவிதை படிக்க மட்டும் தெரியும்

    ReplyDelete
  2. மூணும் தனித்தனி கவிதைகளா? இல்ல மூணுக்கும் தொடர்பு இருக்கா? புரியலிங்களே !!

    ReplyDelete
  3. //குடுகுடுப்பை said...
    நானும் படிச்சிட்டேன் , சாமான்யன் கவிதை படிக்க மட்டும் தெரியும்
    //

    வாங்க குடுகுடுப்பையார், வருகைக்கு நன்றி! உங்க கவிதைகளை நானும் படிச்சு இருக்குறேனே....
    தன்னடக்கம்?! நடத்துங்க, நடத்துங்க....

    ReplyDelete
  4. //Mahesh said...
    மூணும் தனித்தனி கவிதைகளா? இல்ல மூணுக்கும் தொடர்பு இருக்கா? புரியலிங்களே !!
    //
    வாங்க மகேசு! தனித் தனிதாங்க..... கோடு கிழிச்சு விட்டுட்டேன் இப்ப....

    ReplyDelete
  5. என்னது மூனும் தனித்தனியா??

    ReplyDelete
  6. எனக்கு என்னவோ மூனுக்கும் தொடர்ப்பு இருப்பது போல உணர்ந்தேன்..

    ReplyDelete
  7. நல்ல வேளை சொன்னீக ... நான் பாட்டுக்கு இது எல்லாம் சேர்ந்து தான் ஒரு கவுஜைன்னு ரைட்டா தப்பா புரிஞ்சிருப்பேன்.

    ReplyDelete
  8. //
    உருப்புடாதது_அணிமா said...
    எனக்கு என்னவோ மூனுக்கும் தொடர்ப்பு இருப்பது போல உணர்ந்தேன்..

    //
    வாங்க மலைக்கோட்டையார்! நீங்க உணர்வது என் உணர்வோடு ஒத்துப் போகிறது. கதம்ப மாலைல மூனு மணிகள். கதம்பம் சொல்லுது சாமானியனைப் பத்தி. ஆனா, அதுல தனித் தனியா மூனு மணிகள்.

    ReplyDelete
  9. //////அந்தக் கூடத்துச் சுவரோரம்
    சிறு சர்க்கரைக் கட்டியை
    சுமந்தபடி சென்றன
    எறும்புகள்!
    சுமை சுமக்கிறோம்
    என்ற சலிப்பும் இல்லை;
    விருந்து உண்ணப்
    போகிறோம் என்ற
    செருக்கும் இல்லை அவற்றுக்கு!! //////


    மன்னிச்சுக்கோங்க..
    ஆமா, இதுல என்ன சொல்ல வரீங்க..
    ??
    இதுல எதுனா உள்குத்து இருக்கா?? யாரையாவது சொல்றீங்களா??

    ReplyDelete
  10. //
    இதுல எதுனா உள்குத்து இருக்கா?? யாரையாவது சொல்றீங்களா??

    //
    சாமான்யன் அந்த எறும்பு மாதிரின்னு சொல்ல வர்றேன். வேற ஒண்ணும் இல்லை. அய்யா, நான் நிரபராதி!
    கூண்டுல நிக்க வெச்சுடாதீங்க.

    ReplyDelete
  11. இல்லை எனக்கு உண்மையாகவே மூனுக்கும் தொடர்பு இருப்பது போலவே படுகிறது..
    அதாவது முதலில் எறும்புகள், பின்பு பேருந்து நிலையத்தில் காத்திருத்தல், பிறகு வீட்டில் தாய் மகன் உறவு... கண்டிப்பாக தொடர்பு இருப்பது போல உணர்கிறேன்..

    ReplyDelete
  12. @@உருப்புடாதது_அணிமா
    //
    சித்த நேரத்துல வந்துடறேன். மன்னிச்சுக்கோங்க!

    ReplyDelete
  13. சாமான்யன் அந்த எறும்பு மாதிரின்னு சொல்ல வர்றேன். வேற ஒண்ணும் இல்லை. ///////


    இது நம்பற மாதிரி இல்லியே??
    எனக்கு என்னவோ நீங்க அவர தான் சொல்றீங்கன்னு நினைக்குறேன்..
    அவருக்கு தெரியுமா நீங்க இப்படி கலாய்ச்சி ஒரு கவுஜ எழுதுனது??

    ReplyDelete
  14. //உருப்புடாதது_அணிமா said...
    இது நம்பற மாதிரி இல்லியே??
    எனக்கு என்னவோ நீங்க அவர தான் சொல்றீங்கன்னு நினைக்குறேன்..
    அவருக்கு தெரியுமா நீங்க இப்படி கலாய்ச்சி ஒரு கவுஜ எழுதுனது??
    //
    டேய், அணிமா அண்ணன் வர்றாரு.... எல்லாரும் ஓடுங்கடா....

    ReplyDelete
  15. அதாருங்க அந்த "அவுரு" ? நம்ம கலைஞரா?

    ReplyDelete
  16. //Mahesh said...
    அதாருங்க அந்த "அவுரு" ? நம்ம கலைஞரா?
    //

    எனக்கு ஒன்னும் புரியலை.... :0)

    ReplyDelete
  17. ம்ம்ம்... புரியாது....புரியாது... வாய்ல வெரல வெச்சா கடிக்கத் தெரியுமா?

    ReplyDelete
  18. மகேசு,

    அவர் யார்னு எனக்குத் தெரியலை,
    யாரா இருந்தாலும், அவர் பாவம்!

    போறவங்க, வர்றவங்க, எழுதறவங்க
    இந்த வீட்ல, அந்தவீட்லன்னு எல்லாரும் யாரோ ஒருத்தரை வம்புக்கு இழுத்துகினே இருக்காங்க!!
    அவர் யார்னு எனக்குத் தெரியலை,
    யாரா இருந்தாலும், அவர் பாவம்!

    ReplyDelete
  19. எழுதறவங்க, படிக்கறவங்க, பேசறவங்க, ரசிக்கறவங்க..... எல்லாரும் கலைஞர்தாங்க.... நான், நீங், நம்ம அணிமா... எல்லாரும் கலைஞர்கள்தாங்க... என்ன சொல்றீங்க?

    ReplyDelete
  20. //
    Mahesh said...
    எழுதறவங்க, படிக்கறவங்க, பேசறவங்க, ரசிக்கறவங்க..... எல்லாரும் கலைஞர்தாங்க.... நான், நீங், நம்ம அணிமா... எல்லாரும் கலைஞர்கள்தாங்க... என்ன சொல்றீங்க?
    //
    இது சத்தியத்துல ஒரு வார்த்தை! சரியாச் சொன்னீங்க!!

    ReplyDelete
  21. டேய், அணிமா அண்ணன் மறுபடியும் வர்றாரு.... எல்லாரும் ஓடுங்கடா....

    ReplyDelete
  22. //உருப்புடாதது_அணிமா

    என்ன அண்ணே, கோவிச்சுட்டு திரும்பிப் போயிட்டீங்களா? :-(

    ReplyDelete