9/10/2008

தமிழா, இது நியாயமா?

அக்கௌன்டட், மல்டி ட்ரெக் தெரபி, ஹீல் செருப்பு, டிகிரி, சர்டிபிகேட், பியர், சிகரெட், கேரிங் அண்ட் சேரிங், இன்ட்டர், ஸாரி

நான் தமிழ் ஆர்வலன்ந்தான். அதே சமயத்துல தீவிரமான பற்றாளன்னு சொல்ல முடியாது. தமிழ் தமிழ்னு சொல்லி தீவிரமா இருக்குறவங்களைப் பாத்து எரிச்சல் அடைஞ்சது கூட உண்டு. கூடவே, தமிழ்ப் பற்றுள்ளவர்கள்னு நம்பி ஏமாந்ததும் உண்டு. எதுக்கு எடுத்தாலும் தமிழர்களை, தமிழ்நாடு அரசைக் கொற சொல்லிக் கத்தித் தீர்க்க வேண்டியதுதான் இவனுகளோட வேலைன்னு கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி வரைக்கும் நெனச்சுட்டு இருந்தேன்.

யாரோ ஒரு நல்ல பதிவர், தமிழ்நாடு அரசு பள்ளிப் புத்தகங்களை தரவிறக்கம் செய்யும்படியா வலையகத்துல வெளியிட்டு இருக்காங்கன்னு சொல்லவே, ஒரு தமிழ் வேட்கைல, பதினொன்றாம் வகுப்பு தமிழ் புத்தகத்துல, ஒரே ஒரு பாடத்தை தரவிறக்கம் செஞ்சி, படிச்ச பாடத்துல பார்த்த சொல்லுகதான் மேல நீங்க பாத்தது! நாங்க படிக்கும்போது, ஒரு பதினஞ்சு வருசத்துக்கு முன்னாடி, இப்படி எல்லாம் இல்லை! இல்லவே, இல்லை!!

beer, cigaretteக்கும் தமிழுக்கும் என்ன தொடர்பு? இல்ல, அதெல்லாம் தமிழ் படிக்குற மாணவர்களுக்கு, அவசியம் தெரிஞ்சு இருக்கணுமா??

தமிழுக்காகக் குரல் கொடுக்கறவங்களை தப்பா நெனச்ச நான், தலை குனியறதைத் தவிர வேற என்ன செய்ய முடியும்?

17 comments:

  1. ஏன் கடைசி வரிய கடைசி நிமிசத்துல மாத்திட்டீங்க? ரொம்ப சூட இருந்துச்சுன்னா? அய்ய... அந்த சூடெல்லாம் அவிங்களுக்கு ஒறைக்காதுங்க... அவிங்கதான் தமிழ வாழ வெக்கிறவங்க...

    தமிழ் வாழ்க... "-----" நாமம் வாழ்க... ரெண்டும் வாழாது.. நம்ம நெத்தியில அவிங்க போட்ட நாமம் இருக்கு பாருங்க அதுதான் என்னிக்கும் வாழும்

    ReplyDelete
  2. அது என்ன பாடம், பகுதி? தொடுப்பு குடுங்க... நாங்களும் படிச்சு புல்லரிச்சு புளகாங்கிதம் அடயறோம் :(

    ReplyDelete
  3. //
    ஏன் கடைசி வரிய கடைசி நிமிசத்துல மாத்திட்டீங்க? ரொம்ப சூட இருந்துச்சுன்னா? அய்ய... அந்த சூடெல்லாம் அவிங்களுக்கு ஒறைக்காதுங்க... அவிங்கதான் தமிழ வாழ வெக்கிறவங்க...

    //மகேசு, இது ரொம்ப அநியாயமுங்க.... தமிழ் புத்தகத்துல இப்படி போடலாமா? மனசு ரொம்ப வலிக்குதுங்க....

    ReplyDelete
  4. //Mahesh said...
    அது என்ன பாடம், பகுதி? தொடுப்பு குடுங்க... நாங்களும் படிச்சு புல்லரிச்சு புளகாங்கிதம் அடயறோம் :(
    //

    தொடுப்புக் கொடுத்து விட்டேன்.... விட்டா பொம்பளை எப்பிடி பிடிக்கலாம்னு கூட சொல்லித் தருவாங்க போல... நான் முழுசா படிக்கலை... ஒரு வேளை, அதுவும் சொல்லப்பட்டு இருக்கோ?

    ReplyDelete
  5. நான், தமிழ்த் துணைப் பாடமா, காந்தியின் சத்தியசோதனை, அரிச்சந்திரன் கதை படிச்சதா ஒரு நினைவு...

    ReplyDelete
  6. என்னய்யா கொடுமை இது! தமிழ்ப் பாடநூலில் அதுவும் தமிழ்நாட்டில் போய் இப்படியா?

    எங்கள் பாடநூல்களில் மருந்துக்கூட ஆங்கிலச் சொற்களைக் (உரோமனைசு தமிழில்) காண முடியாது.

    தக்கார் இந்த கொடுமையைக் களைவதற்கு எதேனும் செய்ய வேண்டும்.

    ReplyDelete
  7. டென்ஷன் நஹி ...

    ஹி ஹி ...

    ReplyDelete
  8. //
    உருப்புடாதது_அணிமா said...
    டென்ஷன் நஹி ...

    ஹி ஹி ...


    //कोन्जाम कूटा नल्ला इल्ला!

    ReplyDelete
  9. //
    குடுகுடுப்பை said...
    என்னத்த சொல்றது
    //

    சொல்லி ஆதங்கப்பட்டுக்க வேண்டியதுதான்... வேறென்ன?? :-)

    வருகைக்கு நன்றிங்க!

    ReplyDelete
  10. துவக்கப்பள்ளி பாடநூல்களில் தேவையின்றி ஆங்கிலச் சொற்கள் இருந்ததாக வேறு ஏதோ பதிவில் படித்த நினைவு. அப்படி சிறு விழுக்காடேனும் இருப்பது தவறு தான்.

    ஆனால் நீங்கள் குறை காண வேண்டும் என்ற நோக்கில் தவறான எடுத்துக்காட்டைத் தந்துள்ளீர்கள் எனத் தோன்றுகிறது.

    குறிப்பிட்ட நூற்பகுதி துணைப்பாடநூலில் வரும் ஒரு சிறுகதை. இந்தச் சிறுகதையை எழுதியவர் எழுத்தாளர் சிவசங்கரி. இதன் உள்ளடக்கத்துக்கோ மொழிநடைக்கோ பாடநூல் கழகம் எப்படி பொறுப்பாகும்? அவற்றைத் திருத்தும் உரிமை எழுத்தாளருக்கு மட்டுமே உண்டு. ஆங்கிலச் சொல்லே இடம்பெறாத சிறுகதையைத் தான் பாடநூல் கழகம் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றால் தற்கால சிறுகதை இலக்கியத்தை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்த இயலாது. 1900க்கு முன்பு யாரேனும் சிறுகதை எழுதி இருந்தால் வாய்ப்புண்டு.

    மொழிநடைக்காக விமர்சிப்பது என்றால் தாராளமாக எல்லா எழுத்தாளர்களையும், ஆங்கிலத்துக்காக மட்டுமல்ல, வட மொழி உள்ளிட்ட பிற மொழிச் சொல் கலப்புக்காகவும் விமர்சிக்கலாம்.

    beer, cigarette என்ற சொல் உள்ள ஒரு கதையைப் படிப்பதால் மாணவர்கள் கெட்டு விடுவார்கள் என்று நான் நம்பவில்லை. பள்ளி, கதையில் வராவிட்டாலும் பள்ளிக்கு வெளியே இடங்களிலும் கண்டு கொண்டு தான் இருக்கிறார்கள். 15 வயது நிரம்பிய பதினொன்றாம் வகுப்பு மாணவர்கள் சமூகத்தின் இயல்பு நிலையை அறிந்து செயற்படக்கூடிய வயது தான். இல்லாவிட்டால், பாட்டி வடை சுட்ட கதை தான் சொல்லித் தர வேண்டி இருக்கும்.

    ReplyDelete
  11. //ஆனால் நீங்கள் குறை காண வேண்டும் என்ற நோக்கில் தவறான எடுத்துக்காட்டைத் தந்துள்ளீர்கள் எனத் தோன்றுகிறது.
    //
    குறை காணுவதால் எனக்கு ஆவது என்ன? தொடுப்பும் அளித்துள்ளேன். அதில் குறிப்பிட்ட சொற்கள் இருக்கிறதா? இல்லையா??

    //இதன் உள்ளடக்கத்துக்கோ மொழிநடைக்கோ பாடநூல் கழகம் எப்படி பொறுப்பாகும்?
    //

    சிறுகதையைத் தேர்ந்து எடுக்கும் உரிமை பாடநூல் கழகத்திற்கு உள்ளது என்பது தானே உண்மை.

    //குறிப்பிட்ட நூற்பகுதி துணைப்பாடநூலில் வரும் ஒரு சிறுகதை.//

    //beer, cigarette என்ற சொல் உள்ள ஒரு கதையைப் படிப்பதால் மாணவர்கள் கெட்டு விடுவார்கள் என்று நான் நம்பவில்லை. பள்ளி, கதையில் வராவிட்டாலும் பள்ளிக்கு வெளியே இடங்களிலும் கண்டு கொண்டு தான் இருக்கிறார்கள். 15 வயது நிரம்பிய பதினொன்றாம் வகுப்பு மாணவர்கள் சமூகத்தின் இயல்பு நிலையை அறிந்து செயற்படக்கூடிய வயது தான். இல்லாவிட்டால், பாட்டி வடை சுட்ட கதை தான் சொல்லித் தர வேண்டி இருக்கும்.//

    வணிக ரீதியான வார இதழில் பிறமொழிச் சொற்கள் இவ்வளவு விகிதம் இருக்கிறதென்று ஆதங்கப்படும் நீங்கள் இப்படியொரு கருத்தை சொல்வது எனக்கு வியப்பாக உள்ளது.
    தமிழில் சிறுகதைகளே இல்லையா? தூங்குபவனை எழுப்பி விடலாம். தூங்குபவன் போல் நடிப்பவனை எழுப்புவது கடினமே!!

    ReplyDelete
  12. இரவி,

    உமது மற்ற பதிவுகளையும் விவாதங்களையும் இப்போதுதான் படிக்கும் வாய்ப்பு கிட்டியது. நீர் (எதிர் அணிக்காக) போட்டு வாங்கும் ஆள் போலத் தெரிகிறது. வாழ்த்துக்களும், நன்றியும்!!

    ReplyDelete
  13. தமிழ் நாடு பாட நூல் கழகம் 'சன்' TV ன் தாக்கத்தில் இருக்குதுன்னு தோணுது. :-( ஆங்கில தாக்கம் இதில் மிக அதிகம். தமிழ் வழியில் படித்ததால் இப்போது தமிழ் பாடநூல்களில் உள்ள ஆங்கில தாக்கம் தெரிகிறது. (நான் ஒரு சில பாடங்களை தரவிரக்கம் செய்து படித்த போது அறிந்து கொண்டது.)

    ReplyDelete
  14. @@குறும்பன்


    வாங்க! ரொம்ப நன்றி!!

    தமிழ்ப் புத்தகமே பிற மொழிச் சொற்களை எளிதாகத் தாங்கி இருப்பதுதான் நம் வேதனை. நல்ல தமிழ்ச் சிறுகதைகள் இடம் பெற வேண்டும். அவை நீதி போதனையாக இருக்க வேண்டும் என்பதே நம் ஆவல். இதில் யாரையும் குறிப்பிட்டுக் குறை காண்பது எமது விருப்பம் அல்ல.

    ReplyDelete
  15. அக்கதையை நானும் படித்தேன். பொறுப்பில்லாமல் திரிந்த ஒரு படித்த இளைஞன் மெதுவாக பொறுப்புணர்ந்த நிலைக்கு மாறுவதற்கான ஆரம்பத்தை ஆசிரியை அழகாகவே படம் பிடித்துள்ளார்.

    11-ஆம் வகுப்பு மாணவர்களில் பலர் அடுத்த ஆண்டு தேர்வு முடிந்ததும் வேலைக்கு போகவிருப்பவர்கள். வாழ்க்கை என்றால் என்ன என்ற உண்மை அவர்களுக்கு கன்னத்தில் அறைவது போல இக்கதை தெரிவிக்கிறது.

    மற்றப்படி பியர் சிகரெட் என்ற வார்த்தைகள் உறுத்தவில்லை.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  16. //dondu(#11168674346665545885) said... //

    //11-ஆம் வகுப்பு மாணவர்களில் பலர் அடுத்த ஆண்டு தேர்வு முடிந்ததும் வேலைக்கு போகவிருப்பவர்கள். வாழ்க்கை என்றால் என்ன என்ற உண்மை அவர்களுக்கு கன்னத்தில் அறைவது போல இக்கதை தெரிவிக்கிறது.//

    வணக்கங்க ஐயா! நிசசயமா, பெரும்பாலான கிராமப்புற மாணவர்களுக்கு இந்த் கால கட்டத்துலயும் அந்த பாதார்த்தங்கள் தெரிஞ்சிரிக்க வாய்ப்பே இல்லை...

    அடுத்து, மொழியை ஒட்டிய துணைப்பாடத்தில் அடுத்த மொழியின் ஆதிக்கம் இருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை... தாங்கள் சொல்வது எதோ சமூகப்பாடத்தின் அடிப்படையில் இருக்கிறது.

    ReplyDelete