9/03/2008

கனவில் கவி காளமேகம் - 4

வணக்கம்! நாம எதிர்பார்த்தது மாதிரியே கவி காளமேகம் இன்னைக்கும் கனவுல வந்து, என்னடா பேரான்டி நல்ல சுகமானு விசாரிச்சுட்டு, ஓரெழுத்துச் சொற்கள எல்லாம் சொல்லுடான்னாரு. "போங்க தாத்தா, உங்களுக்கு இதே வேலையாப் போச்சு. நீங்களே சொல்லுங்க!"ன்னு நாஞ்சொல்ல அவரு சொல்ல ஆரம்பிச்சாரு.... சொல்லிகிட்டே இருக்காரு... ஆனா பாருங்க, எனக்கு பாதியிலயே கனவு கலைஞ்சு போச்சு. எனக்கு ஞாபகம் இருக்குறத கீழ குடுத்து இருக்குறேன். மிச்சத்தை அவரு அடுத்த தடவை வரும் போது கேட்டு சொல்லுறேன்.

ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ
ஆ -பசு, எருது, ஆச்சா மரம்
ஈ -பறக்கும் பூச்சி, வண்டு, அழிவு, தேனீ, அம்பு, அரைநாள், பாம்பு, கொடு
ஊ -இறைச்சி, உணவு, விகுதி
ஏ -அம்பு, எய்யும் தொழில், இறுமாப்பு, அடுக்கு
ஐ -அழகு, ஐந்து, ஐயம், அசை, தலைவன், அரசன்
ஓ -சென்று தாக்குதல், மதகு நீர், ஒழிவு, தங்கும் பலகை

மா, மீ, மூ, மே, மை, மோ
மா -பெரிய, நிலம், விலங்கு, மாமரம்
மீ -மேலே, ஆகாயம், மேன்மை, உயர்வு
மூ -மூப்பு (முதுமை), மூன்று
மே -மேல், மேன்மை
மை -கண் மை (கருமை), இருள், செம்மறி ஆடு, அஞ்சனம்
மோ -முகர்தல்


தா, தீ, தூ, தே, தை
தா -கொடு, குறை, கேடு, குற்றம், பகை
தீ -நெருப்பு, இனிமை, அறிவு, இடம்
தூ -வெண்மை, இறைச்சி, பறவை இறகு
தே -கடவுள்
தை -தமிழ் மாதம், தையல், திங்கள்


பா, பூ, பே, பை, போ
பா -அழகு, பாட்டு, நிழல்
பூ -மலர், சூதகம்
பே -அச்சம், நுரை, வேகம்
பை -கைப்பை, பாம்பு படம், கொள்கலம், பசுமை
போ -செல்

(......கனவுல இன்னும் வருவார்......)

4 comments:

  1. உங்க வலைப்பக்கத்தை மோந்து பார்க்கும்போது எனக்குக் கூட தீந்தமிழ்ல உலகம் மேன்மை அடைய ஒரு வாழ்த்துப்பா ஒண்ணும் பாடணும் போல இருக்கு.

    ஆனா நல்லா ண் சாப்டுட்டு படுத்தா சீ தான் வருது :)))))))))))))))

    ReplyDelete
  2. // Mahesh said...
    உங்க வலைப்பக்கத்தை மோந்து பார்க்கும்போது எனக்குக் கூட தீந்தமிழ்ல உலகம் மேன்மை அடைய ஒரு வாழ்த்துப்பா ஒண்ணும் பாடணும் போல இருக்கு.

    ஆனா நல்லா ஊண் சாப்டுட்டு படுத்தா சீ தான் வருது :)))))))))))))))

    //மகேசு, நாம என்ன இருந்தாலும் நாராயணகவி, புலவர் பழனிவேலனார் வாழ்ந்த ஊரு ஆச்சுங்களே.... அந்த பாதிப்பு உங்களுக்கும் இருக்கு பாத்தீகளா?!
    சீக்கிரம் ஒன்னு பாடுங்க...

    ReplyDelete
  3. அட ஏங்க காமெடி பண்ணிக்கிட்டு.... நானெல்லாம் பாட்டெழுதுனா அப்ப்றம் ஜே.கே.ரித்தீஷ் படமெல்லாம் சூப்பர் ஹிட்டாயிரும்.

    ReplyDelete