9/06/2010

நிச்சயமாப் பாருங்க மக்கா!!!


US$ 15000 விலை மதிப்புமிக்க சந்தனச் சிற்பம்.... இதில் மொத்த மகாபாரதக் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன என்பது சிறப்பு.

==============

கட்டாயமா, அவசியமா, நிச்சயமா, கண்டிப்பா முதலான சொற்களைப் பெருமளவில யாருமே சரியாப் புழங்குறது இல்லைங்க வருத்தம் யாருக்கோ இருக்காம். Buzz(உசுலு) மற்றும் மின்னஞ்சல்ல புலம்பிட்டு இருந்ததை இங்கயும் பதிஞ்சிடலாமே??

கட்டாயம் அப்படின்னா, நிபந்தனையின் பேரில் செய்வது.
அவசியம்ன்னா, தவிர்க்க முடியாமையினால் செய்வது
நிச்சயம்ன்னா, நிர்ணயத்தின் பேரில் செய்வது
கண்டிப்பான்னா, நிர்ப்பந்தத்தின் பேரில் செய்வது....

உதாரணம்: ஒருத்தர் ஒரு நிகழ்ச்சிக்கு வரவேண்டியதைத் தவிர்க்க முடியாது அப்படின்னா, அவசியம் நீங்க வந்தே ஆகணும் அப்படின்னு சொல்ணும்.... அதைவுட்டுபிட்டு, கண்டிப்பா வரணும்னோ, நிச்சயமா வரணும்னோ சொல்லப்படாது....

compulsorily, necessarily, certainly, surelyன்னு ஆங்கிலத்துல மட்டும் சரியாப் பாவிக்கிறீங்களே மக்கா?? அவ்வ்வ்......

============

சரிங்க மக்கா, நிச்சயமாப் பாருங்க என்ன? என்னத்த?? நண்பர்கள் சிலர் நம்மை ஜெயா தொலைக்காட்சியில ஏத்திவுட்டு இருக்காங்க.... செப்டம்பர் 7ந் தேதி காலை 8 மணிக்குக் காலைக் கதிர் நிகழ்ச்சியில ஒளிபரப்பு ஆகப் போகுதாம் நிகழ்ச்சி... நிச்சயமாப் பார்த்துட்டு, உங்க கருத்தைச் சொல்லுங்க மக்கா....




பகிர்வுக்கு நன்றி வெயிலான்!!!

19 comments:

vasu balaji said...

வாழ்த்துகள்:). அவசியம் பார்க்கிறேன்.

அகல்விளக்கு said...

கட்டாயமா, அவசியமா, நிச்சயமா, கண்டிப்பா பார்க்கிறேன் அண்ணா....

:-)

Kumky said...

கண்டிப்பா பாக்றேனுங் சாமி..

Thekkikattan|தெகா said...

இனிமே நிச்சயமாகவும், கட்டாயமாகவும் மிகச் சரியா இந்த வார்த்தைகளை பயன் படுத்துவேணுங்க. பகிர்தலுக்கு நன்றி, பழம!

க.பாலாசி said...

பார்க்க முயற்சி செய்கிறேன்.... வாழ்த்துக்களும், மகிழ்ச்சியும்...

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

வாழ்த்துகள்:)

அபி அப்பா said...

கண்டிப்பா பார்த்திட்டா போச்சு!

Anonymous said...

சந்தன சிற்பம் அருமை....

எங்கள மாதிரி வெளி நாட்டில வசிக்கும் மக்கள் பாக்குறதுக்கு வழிவகை செஞ்சீங்கன்னா ரொம்ப நல்லா இருக்கும்....

sakthi said...

கண்டிப்பாக பார்கின்றோம் பழமைபேசியாரே!!!!

ஈரோடு கதிர் said...

மாப்பு எப்படியாவது வலையில ஏத்துங்க

புண்ணியமாப் போகும்

a said...

//
ஈரோடு கதிர் சைட்...
மாப்பு எப்படியாவது வலையில ஏத்துங்க

புண்ணியமாப் போகும்

//

ஆமண்ணே.......

பழமைபேசி said...

//sakthi said...
கண்டிப்பாக பார்கின்றோம் பழமைபேசியாரே!!!!
//

நன்றிங்க... நீங்க உறுதியாச் சொல்றாப்ல இருக்கு....

ஆகவே. “உறுதியாகப் பார்க்கிறோம்” அப்படின்னு சொல்ணும்....

சிநேகிதன் அக்பர் said...

வாழ்த்துகள்.

priyamudanprabu said...

SORRY WE CANNOT WATCH IN SINGAI
SO PLZ SEND LINK BY MAIL

பழமைபேசி said...

// பிரியமுடன் பிரபு said...
SORRY WE CANNOT WATCH IN SINGAI
SO PLZ SEND LINK BY MAIL//

yes buddy, even I want to watch... I have asked our friends to help in this regard... let's see..

ஈரோடு கதிர் said...

மாப்பு நிகழ்ச்சி

கலக்கலா போய்ட்டிருக்கு

படம் பார்க்க முடியல / வசனம் மட்டும் கேட்கிறேன்

பெருமையாக, மகிழ்ச்சியாக இருக்கிறது

ஈரோடு கதிர் said...

அரசியல்வாதியா வருவதற்கான எல்லாத் தகுதியும் பேச்சுல இருக்குதப்போ!!!!

Anonymous said...

பார்த்தாச்சு, பகிர்ந்தாச்சு :))

பவள சங்கரி said...

உபயோகமான பதிவுங்க.....இன்று ஜெயா டிவியில் உங்களுடைய நிகழ்ச்சி பார்த்தேனுங்க....நல்லா இருந்ததுங்க.....அழகு தமிழில் உரையாடல் அருமைங்க தம்பி......வாழ்த்துக்கள்.