6/15/2010

குடுகுடுப்பை இளஞ்சோழர் வாழிய வாழியவே!!

அமெரிக்காவில் பிறந்தாலென்ன?
அயனாவரத்தில் பிறந்தாலென்ன??
குடுகுடுப்பைச் சோழனுக்கு
வாய்த்த மைந்தன் நீர்
தமிழுக்கு உயிர்த்த
இளஞ்சோழனே!

அவனியாள வந்தாய் நீர்
இளஞ்சோழா
பாரெங்கும் தமிழ் தழைத்தோங்க
நீர் வாழ்க! நின் கொற்றம் வாழ்க!!

பொதிகை நின்னைத் தவழ்ந்துவர
நின்பெற்றோர் பெருமை உய்த்திட
அவர்தம்பெயர் சொல்லிவருவாய் நீயே
உம்பிறப்பால் தமிழ் எழுச்சிகொள்ளும்!
தென்பாங்குத் தமிழே நீர் வாழ்க!
செழிப்பும் செம்மையும் நினதாக!!

19 comments:

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

இனிய வாழ்த்துகள்!

vasu balaji said...

சின்னக் குடுகுடுப்பையாருக்கு வாழ்த்துகள்.

vasu balaji said...

/இளஞ்சோழனே!/

அது சரிக்கு வேலை வந்திருச்சேய்.:))

ILA (a) இளா said...

இனிய வாழ்த்துகள்

Ravichandran Somu said...

குடுகுடுப்பையாருக்கு வாழ்த்துகள்!

அன்புடன்,
-ரவிச்சந்திரன்

அபி அப்பா said...

குட்டி குடுகுடுப்பையாருக்கு இந்த சோழனின் ஆசிகளும், பெரிய குடுகுடுப்பைக்கு வாழ்த்துக்களும்!!!!

Unknown said...

எதிரி பிறந்தாலும் வாழ்த்துவது பாண்டியர்களின் வழமை..

வாழ்த்துகள் சோழரே...

பனித்துளி சங்கர் said...

வாழ்த்துகள் !

கலகலப்ரியா said...

கவிக்குக் கவி பாடும் குடுகுடுப்பைச் சோழர்தம் குலம் கொழிக்க வாழ்த்துகள்..

எம்.எம்.அப்துல்லா said...

வாழ்க தமிழ்ப் பரிதி :)

sathishsangkavi.blogspot.com said...

//அமெரிக்காவில் பிறந்தாலென்ன?
அயனாவரத்தில் பிறந்தாலென்ன??
குடுகுடுப்பைச் சோழனுக்கு
வாய்த்த மைந்தன் நீர்
தமிழுக்கு உயிர்த்த
இளஞ்சோழனே!//

வாழ்த்துகள்.....

Mahesh said...

கு.கு.கு க்கு வாழ்த்துகள் !!!

கு.கு க்கு வாத்துகள்!!

தாராபுரத்தான் said...

தென்பாங்குத் தமிழே நீர் வாழ்க!

Vijiskitchencreations said...

நல்ல கவிதை. வாழ்த்துக்கள்.

க.பாலாசி said...

அடடா... இனிய செய்தி.. குடுகுடுப்பையாருக்கு வாழ்த்துக்கள்...

Anonymous said...

வாழ்த்துகள் குடுகுடுப்பையாரே

ராஜ நடராஜன் said...

குடுகுடுப்பை சோழனுக்கு சேரநாட்டு புலவர் பாட்டா?வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்.

அதென்ன வானம்பாடி புலவர் பாட்டுக்கு உள்குத்து வைக்கிறார்?

Unknown said...

மகிழ்வான செய்தி.. வாழ்த்துகள்..

நாடோடி இலக்கியன் said...

குடுகுடுப்பையாருக்கு வாழ்த்துக‌ள்.

க‌வினுக்கு சித்த‌ப்பாவின் இனிய‌ அன்புக‌ள்.