2/07/2010

யாதெனினும்!

காதலினினும் மேலான உணர்வு வேறாக எது இருக்க முடியும்? விளையாட்டின் மீது காதல்... தான் வளர்க்கும் பூனையின் மீது காதல்... நாட்டின் மீது காதல்.... எழுதும் எழுத்தின் மீது காதல்.... வீட்டுச் சாளரத்தின் வாயிலாகத் தெரியும் மலைமுகட்டின் மீது காதல்... தாழ்வாரத்தின் ஓரத்தில் கூடு கட்டிக் கொண்டு இருக்கும் அந்த சிட்டுக் குருவியின் மீது காதல்... கட்டுத்தறியில் மண் தின்றுவிடாமல் இருக்க வாய்மூடி போட்டிருக்கும் அந்த இளங்கன்றின் மீது காதல்....

ஊரோரம் இருக்கும் தனிவீட்டில் குடியிருக்கும் கோவில் பூசாரி மகள் இரத்தினத்தின் மீது காதல்... தான் படித்த பள்ளியின் மீது காதல்.... பெற்ற பிள்ளையின் மீது காதல்... முதன்முதலாய் அப்பன் வாங்கித் தந்து இன்னமும் ஒன்றோடு ஒன்றாய், ஆயிரத்து சொச்சப் பொருட்களின் ஊடாகக் கிடக்கும் அந்த அறுந்து போன பழுப்பு நாடாவில் உயிரைத் தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கிற கைக்கடிகாரத்தின் மீது காதல்....


மாரியம்மன் கோவில் வளாகக் கிணற்றின் மீது காதல்... ஊரின் எல்லையில் இருக்கும் அய்யனார் மீது காதல்... ஏரியில் உட்கார்ந்து கணம் உருளுவது தெரியாது மெய் மறக்கும் கண்மாயின் மீது காதல்... தோட்டத்துக் கிணற்றில் இருக்கும் ஒரே ஒரு ஆமையின் மீது காதல்.... தள்ளாத வயதிலும் பச்சிலை வைத்துப் பாங்காய் மருத்துவம் பார்க்கும் கனகவல்லி ஆத்தாவின் மீது காதல்...

எங்கும் காதல்... எதிலும் காதல்.... ஒவ்வொருவனுக்குள்ளும் எதிலோ, எதன் மீதோ, யாரொருவர் மீதோ இன்னும் தணியாத காதல்....

அப்படியாகத்தான் இந்த மேற்கத்தியவனுக்கும் அவள் மீது காதல்... அந்தக் காதல் இனியும் வேண்டும்... இன்னமும் அதிகமாக வேண்டும்... அவளைப் பார்த்து உள்ளார்ந்து ஊக்கத்துடன் சொல்கிறான்.... You have two options my dear....

one you grow more, or
you grow one more!

ஒன்று நீ வளர்க மேலாக, அல்லது

38 comments:

*இயற்கை ராஜி* said...

பூனையையும் பொண்ணையும் ஒண்ணா சொல்லிட்டீங்களே:-))

ரோகிணிசிவா said...

ஒவ்வொருவனுக்குள்ளும் எதிலோ, எதன் மீதோ, யாரொருவர் மீதோ இன்னும் தணியாத காதல்.... Agreed ,to live every moment or to die , the best way is to fall in love !

priyamudanprabu said...

காதலினினும் மேலான உணர்வு வேறாக எது இருக்க முடியும்?
///

ஆமாங்க ஆமா

ஈரோடு கதிர் said...

மாப்பு இத்தன காதல் இருந்ததோ...

அதுல அந்த இரத்தினம் மேல சொன்ன காதல் பத்தி எதுவுமே சொல்லலையே

நிலாமதி said...

ஆதலினால் காதல் செய்வீர்......பதிவு மிக மிக அருமை.....

ஈரோடு கதிர் said...

//பிரியமுடன் பிரபு said...
காதலினினும் மேலான உணர்வு வேறாக எது இருக்க முடியும்?
///

ஆமாங்க ஆமா
//

ரிப்பீட்டேய்...

தம்பி பாலாசி (டிஸ்கி.. பின்னூட்டப் புயல்) எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

ஆகா.. நாம் செய்யும் ஒவ்வொரு விசயத்தின் மீதும் காதல் இருந்தால் தான் வாழ்க்கை இனிக்கும் :)

முதல் பத்தில இருந்தே எதிர்பார்த்தது ரெண்டாவது பத்தில தான் வருது... ;)

நிலாமதி said...

one you grow more, or
you grow one more!
ஒன்று நீ வளர்க மேலாக, அல்லது
நீ வளர்க மேலாக ஒன்று!!..........


....இதன் அர்த்தம்............சரியா. ?


ஒன்றில் நீ வளர்ச்சியடைந்து , கொள் அல்லது நீ இன்னும் மேலாக வளர்ச்சியடைந்து கொள்

பழமைபேசி said...

ஆகா...மக்களே...கீழ நான் சாப்பாட்டுக்கு போயிட்டு இப்பதான் வர்றேன்....

அதை மட்டும் சொன்னா, நல்லாவா இருக்கும்? இஃகிஃகி!

பழமைபேசி said...

@@நிலாமதி

நீ வளர்க மேலாக ஒன்று... அப்படின்னா, நீயே மேலதிகமான ஒன்றாக வளர்... அப்படின்னு நெனைக்கணும்ங்க.... இஃகிஃகி!

ஈரோடு கதிர் said...

எல்லாக் காதலையும் விட சீமாச்சுவின் காதலுக்கு பெரியதொரு வணக்கம்

க.பாலாசி said...

//காதலினினும் மேலான உணர்வு வேறாக எது இருக்க முடியும்?//

அதுசரி... யாரத்தான் விட்டுது இந்த காதல்....ம்ம்ம்....

ஆனாலும் அந்த பூசாரிப்பொண்ணப்பத்தி நீங்க சொல்லவேயில்ல பாத்தீங்களா.......

பழமைபேசி said...

ஆமாங்க... அவரு, பள்ளிக்கூடம் பள்ளிக்கூடம்னு உருகுறாரு... ஏங்குறாரு.... இதுல வேற, காமராஜர் படத்தைப் போட்டு பாக்க வெச்சி.... நேத்து தூக்கமே போச்சி....

ஒரே அழுகை அழுகையா வருது இன்னும்....

பழமைபேசி said...

//க.பாலாசி said...
//காதலினினும் மேலான உணர்வு வேறாக எது இருக்க முடியும்?//

அதுசரி... யாரத்தான் விட்டுது இந்த காதல்....ம்ம்ம்....

ஆனாலும் அந்த பூசாரிப்பொண்ணப்பத்தி நீங்க சொல்லவேயில்ல பாத்தீங்களா......//

அமைதியா குண்டாவைத் தூக்கிட்டு வரும், போகும்.... அமைதின்னா அமைதி அப்படியொரு அமைதி.... ஏழ்மை இருக்கும் இடத்துலதாங்க அன்பே....

ஈரோடு கதிர் said...

//பழமைபேசி said...
காமராஜர் படத்தைப் போட்டு பாக்க வெச்சி.... நேத்து தூக்கமே போச்சி....
ஒரே அழுகை அழுகையா வருது இன்னும்....//

காமராஜர் படம் பார்த்து சில இடங்களில் நானும் அழுதிருக்கிறேன்

க.பாலாசி said...

//அப்படியாகத்தான் இந்த மேற்கத்தியவனுக்கும் அவள் மீது காதல்...//

அது யாருங்க தலைவரே...

பழமைபேசி said...

//க.பாலாசி said...
//அப்படியாகத்தான் இந்த மேற்கத்தியவனுக்கும் அவள் மீது காதல்...//

அது யாருங்க தலைவரே..//

Tim Pienskyனு ஒருத்தன்.... நான் மேற்கத்தியவனா? அவ்வ்வ்வ்வ்வ்....

பழமைபேசி said...

//ஈரோடு கதிர் said..

காமராஜர் படம் பார்த்து சில இடங்களில் //

எத்தனை பேர் இப்படிக் கிளம்பி இருக்கீங்க... முன்னாடியே சொல்லி இருந்தா, பாக்காம இருந்திருப்பன் அல்ல? தூக்கமே போச்சி....

க.பாலாசி said...

//பழமைபேசி said...
Tim Pienskyனு ஒருத்தன்.... நான் மேற்கத்தியவனா? அவ்வ்வ்வ்வ்வ்....//

ஓ... அப்படியா சங்கதி...

பழமைபேசி said...

//க.பாலாசி said...
//பழமைபேசி said...
Tim Pienskyனு ஒருத்தன்.... நான் மேற்கத்தியவனா? அவ்வ்வ்வ்வ்வ்....//

ஓ... அப்படியா சங்கதி..//

ஆமா, நீங்க உங்க ஆள்ட்ட பேசினீங்களா இன்னைக்கு?

பழமைபேசி said...

@@இய‌ற்கை

அன்புக்கு முன்னாடி எல்லாரும் சர்வ சமம்ங்க...இஃகி!

@@rohinisiva

நன்றிங்க!

@@பிரியமுடன் பிரபு

வாங்க தம்பி!

@@ச.செந்தில்வேலன்

இஃகிஃகி.... ஓரமா, பவ்யமா நின்னுட்டு இருக்கும்...

பழமைபேசி said...

அது சரி அண்ணாச்சி, வாங்க, வணக்கம்!

vasu balaji said...

/எங்கும் காதல்... எதிலும் காதல்.... ஒவ்வொருவனுக்குள்ளும் எதிலோ, எதன் மீதோ, யாரொருவர் மீதோ இன்னும் தணியாத காதல்....
/

இது படுத்துற பாடும் இதுக்கு படுற பாடும். :)

Admin said...

பழமைபேசி அவர்களை உங்கள் தனி பயன் டொமைனை ரீடைரக்ட் செய்யாமல் dns செட்டிங் மூலம் மாற்றம் செய்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்... மேலும் ப்ளாக்கர் நேவ் பார் எடுத்து விடுங்கள்...

ஈரோடு கதிர் said...

//வானம்பாடிகள் said...
இது படுத்துற பாடும் இதுக்கு படுற பாடும். :)//

ம்ம்ம்ம்... ஆமா...ஆமா....

- இரவீ - said...

//one you grow more, or
you grow one more!//
Superb :)

சீமாச்சு.. said...

ஐயா, உடனேயே இடுகையைப் போட்டுத் தாக்கிட்டீங்க..

“பொட்ட புள்ளைப் பெத்துக்கொடு “ என்பதைத்தான் அந்த ஆளு இங்கிலீஷில சொல்லியிருக்காரு...


“மூலம்: சீமாச்சு” என்பதைத் தூக்கிட்டு.. “தகவல் உதவி : சீமாச்சு” அன்று எழுதினால் நான் கொஞ்சம் வசதியா உக்காந்துக்கிடுவேன் :)

Paleo God said...

கிட்டத்தட்ட தண்ணில நீச்சல் தெரியாம விழுந்தவன

ஒண்ணு நீயா மேலவா
இல்ல நீ மேல போய்டு

-ன்னு சொல்றா மாதிரி கிர்ர்ர் னு இருக்குங்க..:))

ILA (a) இளா said...

ஆமாங்க ஆமா

butterfly Surya said...

இணைப்புக்கு மிக்க நன்றி பழைமைபேசி.

பழமைபேசி said...

@@வானம்பாடிகள்

இப்படிச் சொன்னா எப்படிங்க பாலாண்ணே?

@@sakthivel

நன்றிங்க சக்திவேல்!

@@- இரவீ -

THanks Buddy!

@@Seemachu

ஆச்சுங்க ஐயா!

@@ ஷங்கர்..

இஃகி

@@ILA(@)இளா

நன்றிங்க!

நசரேயன் said...

அண்ணே துண்டு போடலாமுன்னு சொல்லுறீங்களா ?

Thekkikattan|தெகா said...

:)) superb!

Anonymous said...

எதையும் எளிதாக்கும் இறுக்கவுமாக்கும் காதல்..எதிலோ எதன் மீதோ காதல் உண்மைதாங்க....

தாராபுரத்தான் said...

காதல் மேல் காதல் கொள்ள செய்து விட்ட பதிவு.

பழமைபேசி said...

@@நசரேயன்
@@ Thekkikattan|தெகா
@@தமிழரசி
@@தாராபுரத்தான்

நன்றிங்க, நன்றிங்க!

Anonymous said...

நான் மேற்கத்தியவனா? அவ்வ்வ்வ்வ்வ்....

you know in Tamilnadu மேற்கத்தியவனா Udumalaipatti palladam annur mettupalam west side of the road.

அரசூரான் said...

ஹும்... மூன்று பத்தியில் சொன்ன இவ்வளவு காதலையும் "இரத்தின" சுருக்கமா இரண்டு வரியில் சொல்லிடலாமா? அருமை.