1/16/2009

மீசைய முறுக்கி விட்டா இரத்தம் வரும்!

அட்டைக்கு ஆயிரங்கண்ணு
முட்டைக்கு மூனு கண்ணு
நான் வளத்த தம்பலம்பூச்சிக்கு
ஒத்தக்கண்ணு!
இது மூனும் என்ன?

கல்கத்தாவை ரெண்டா மடிச்சி
திண்டுக்கல்லை ரெண்டாவெட்டி
வெள்ளக்காரனை உள்ளவெச்சி
மீசையமுறுக்கி விட்டா இரத்தம் வரும்!
அதுக என்ன?

இன்னைக்கி இந்த விடுகதைகளோட பதிவை முடிச்சிக்கிறேனுங்க. அந்தக் கடையில விசேடப் பதிவு ஓடிகிட்டு இருக்கு, அதைப் போயிப் பாருங்க. இஃகிஃகி!


குடிக்கிறது கூழுத்தண்ணி,
கொப்புளிக்கிறது பன்னீராம்?!

18 comments:

KarthigaVasudevan said...

//அட்டைக்கு ஆயிரங்கண்ணு
முட்டைக்கு மூனு கண்ணு
நான் வளத்த தம்பலம்பூச்சிக்கு
ஒத்தக்கண்ணு!
இது மூனும் என்ன?

கல்கத்தாவை ரெண்டா மடிச்சி
திண்டுக்கல்லை ரெண்டாவெட்டி
வெள்ளக்காரனை உள்ளவெச்சி
மீசையமுறுக்கி விட்டா இரத்தம் வரும்!
அதுக என்ன?//


முட்டைக்கு மூணு கண்ணுனா தேங்காயா இருக்குமோ?
கல்கத்தா தான் இடிக்குது ...வெற்றிலையச் சொல்றீங்களோ?கும்பகோணம் வெற்றிலை மாதிரி கல்கத்தா வெற்றிலை கூட உண்டோ?
தம்பலம்பூச்சி நா வெண்குழல்வத்தியா இருக்குமோ? ஒண்ணுமே சரியாப் புரியலையே !

SUREஷ்(பழனியிலிருந்து) said...

கல் லவச்சு குத்தப் போறீங்களா..

SUREஷ்(பழனியிலிருந்து) said...

அட்டைக்கு ஆயிரங்கண்.. விண்டோஸ்..../

பழமைபேசி said...

//மிஸஸ்.டவுட் said...
ஒண்ணுமே சரியாப் புரியலையே !
//

பாதி சரியா இருக்கு...இன்னும் யோசிங்க, பிடிச்சிடுவீங்க!

Mahesh said...

மொதலாவது தெரியல...

ரெண்டாவது கல்கத்தா வெத்தல, திண்டுக்கல் கொட்டப்பாக்கு, சுண்ணாம்பு வெச்சு முறுக்கி உள்ள தள்ளுனா நாக்கு செவப்பாகும்.

பழமைபேசி said...

// Mahesh said...
மொதலாவது தெரியல...

ரெண்டாவது கல்கத்தா வெத்தல, திண்டுக்கல் கொட்டப்பாக்கு, சுண்ணாம்பு வெச்சு முறுக்கி உள்ள தள்ளுனா நாக்கு செவப்பாகும்.
//

போடு, வலது பொறமா ஒரு சபாசு!
ஒன்னுக்கு மட்டுஞ் சொன்னதுனால, ஒரு பக்கந்தேன்.... இஃகிஃகி!

பழமைபேசி said...

//SUREஷ் said...
அட்டைக்கு ஆயிரங்கண்.. விண்டோஸ்..../
//

இன்னும் நாம இந்தக் காலத்துக்கு வந்து சேரலைங்ளே?! இஃகிஃகி!!

குடுகுடுப்பை said...

அட்டைக்கு ஆயிரங்கண்ணு
முட்டைக்கு மூனு கண்ணு
நான் வளத்த தம்பலம்பூச்சிக்கு
ஒத்தக்கண்ணு!
இது மூனும் என்ன?//

விடுகதை

Anonymous said...

முட்டைன்னா தேங்காயா, நாங்கூட நிசமாலுமே முட்டைக்கு 3 கண்ணோன்னு யோசிச்சேன். பின்னூட்டம் பாத்து விடை தெரிஞ்சுக்கிட்டேன்

Anonymous said...

மீசையை முறுக்கி விட்டா ரத்தம் வரும்- இது வெத்தலை பாக்கு சுண்ணாம்புன்னு நல்லாத்தெரியுது

அது சரி(18185106603874041862) said...

//
கல்கத்தாவை ரெண்டா மடிச்சி
திண்டுக்கல்லை ரெண்டாவெட்டி
வெள்ளக்காரனை உள்ளவெச்சி
மீசையமுறுக்கி விட்டா இரத்தம் வரும்!
அதுக என்ன?
//

இது எனக்கு தெரியுமே...

கல்கத்தா வெத்தலை, திண்டுக்கல்லு பாக்கு, சுண்ணாம்பு

ராஜ நடராஜன் said...

விடுகதையெல்லாம் எனக்கு முட்டைதான் கிடைக்கும்.இதெல்லாம் அம்மணிகளுக்குத்தான் சரிப்பட்டு வரும்.


நேற்றைக்கு ஹட்ஸன் தண்ணின்னு சங்கேத வார்த்தையில உங்கூரு ஆளுக கிட்ட பேசிகிட்டு இருக்கும்போது புரியல.பறக்கிற விமானம் மிதக்குற போதுதான் தெரிஞ்சது என்ன சொல்றீங்கன்னு.ஹட்ஸன் தண்ணி குடிக்காம தப்பிச்சதுக்கு வாழ்த்துக்கள்.

பழமைபேசி said...

//குடுகுடுப்பை said...
அட்டைக்கு ஆயிரங்கண்ணு
முட்டைக்கு மூனு கண்ணு
நான் வளத்த தம்பலம்பூச்சிக்கு
ஒத்தக்கண்ணு!
இது மூனும் என்ன?//

விடுகதை
//

என்னா ஒரு கண்டுபிடிப்பு?

வேத்தியன் said...

//முட்டைக்கு மூனு கண்ணு//

நான் வெஜிடேரியனுங்க...
முட்டையைப்பத்தி தெரியாதுங்களே...
:)

நசரேயன் said...

இது புதுசு.. இது புதுசு

நான் நரேந்திரன்... said...

/// அட்டைக்கு ஆயிரங்கண்ணு /// -- வானம் இல்லேனா இரவு ?
/// முட்டைக்கு மூனு கண்ணு /// -- தேங்காய்
/// நான் வளத்த தம்பலம்பூச்சிக்கு ஒத்தக்கண்ணு /// --- ?

பழமைபேசி said...

வணக்கம்! வந்து கைய நனச்சிட்டுப் போன எல்லார்த்துக்கும் நன்றி!

1.

அட்டைக்கு ஆயிரங்கண்ணு - வலை
முட்டைக்கு மூனு கண்ணு - தேங்காய்
நான் வளத்த தம்பலம்பூச்சிக்கு ஒத்தக்கண்ணு - ஊசி


2.

கல்கத்தா வெத்தல, திண்டுக்கல் கொட்டப்பாக்கு, சுண்ணாம்பு வெச்சு முறுக்கி உள்ள தள்ளுனா நாக்கு செவப்பாகும்.

Unknown said...

எப்புடிங்க.. கலக்குரிங்க பொங்க...